Showing posts with label அறுசுவை வலைப்பதிவு. Show all posts
Showing posts with label அறுசுவை வலைப்பதிவு. Show all posts

Thursday, 11 May 2017

Polycystic Ovarian Syndrome

1.சினைப்பைக்கட்டிகள் என்றால் என்ன?
சினைப்பையில் சுரக்கும் ஆன்ரோஜன் ஈஸ்ரோஜன் எனும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வினால் கருமுட்டை வளர்ச்சி ,கரு அணுக்கூட்டின் முதிர்ச்சி என்பன தடைப்பட்டு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகளாக தங்கிவிடுவதே சினைப்பைக்கட்டிகள் ஆகும்.
(இது ஒரு நீண்ட விளக்கம் .எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது .விபரமாக புரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் கிடையாது. நாம் என்ன பரீட்சைக்கா போகப்போகிறோம் .
அதனால் இங்கனம் மிகச்சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்}
2.சினைப்பைக்கட்டிகள் கருத்தரித்தலை தாமதப்படுத்துமா?
நிச்சயமாக. கருத்தரிப்பு தள்ளிப்போவதற்கு இதுவும் ஒரு காரணம்.ஆனால் நீர்க்கட்டிகள் இருக்கும் போது கருத்தரிக்கவே முடியாது என்றும் சொல்வதற்கில்லை.எண்பது வீதமான பெண்களுக்கு
கருத்தரிப்பு தள்ளிப்போகும் ஆயினும் 20 வீதமான பெண்கள் நீர்க்கட்டி இருக்கும்போதே கருத்தரிக்கிறார்கள்.
3.இது எவ்வாறு கருத்தரித்தலுக்கு இடையூறு செய்கிறது?
இந்த நீர்க்கட்டிகள் கருமுட்டை வளர வேண்டிய இடத்தில் வளர்வதால் கருமுட்டையை வளரவிடாமல் நசுக்கும்.இதனால் கருமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளியேறாது.
ஆரோக்கியமான கருமுட்டை வெளியேறாவிட்டால் கருத்தரித்தல் நிகழாது.
4.சினைப்பைக்கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எவை?
ஒழுங்கற்ற மாதவிடாய்
உடல் பருமன் ஏற்படுதல்
கழுத்து,மார்புப்பகுதி போன்ற இடங்களில் தோல் கருப்படைதல்
பருக்கள் தோன்றுதல்
ரோமம் வளர்தல் { ஆண் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் முகத்தில் ரோமங்கள் வளரும்}
5.சினைப்பைக்கட்டிகள் உருவாகுவதற்கான காரணங்கள் எவை?
இதற்கென்று திட்டவட்டமான காரணங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் பிரத்தியேகமான காரணங்களாக சிலவற்றை கண்டுபிடித்துள்ளார்கள்
அவையாவன
உணவுப்பழக்கவழக்கங்கள் அதாவது சமச்சீரான உணவுகளை உட்கொள்ளாமை.அதிக மாச்சத்துக்களை உட்கொள்வது
உடல் பருமன் .உடல் பருமன் காரணமாக ஹார்மோன்கள் சீரற்றுப்போவதால் உருவாகலாம்
மன அழுத்தம் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் ஏற்படலாம்
உடல் உழைப்பின்மை அல்லது அதிக உடலுழைப்பு
தைராயிட்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
Blog image
6.இதற்கான மருத்துவ ரீதியான தீர்வுகள் எவை?
இது உங்களுக்கு உருவாகி இருக்கும் கட்டிகளையும் அதன் தன்மைகளையும் பொறுத்தது.
இரத்தப்பரிசோதனை மற்றும் ஃபோலிக்குள் ஸ்கான் செய்து பார்த்து இதனை அளவீடு செய்வார்கள்
பின்னர் அதன் தன்மைக்கு ஏற்ப
.சிலருக்கு மிகச்சிறிய குறைவான எண்ணிக்கை கொண்ட நீர்க்கட்டிகள் இருப்பின் கருமுட்டை வளர்ச்சி அடைய வைக்கும் ஊக்க மாத்திரை கொடுப்பார்கள் இதில் நீர்க்கட்டிகளை மிஞ்சி கருமுட்டை
வளர்ச்சி அடைந்து வெளியேறும்போது கருத்தரிக்க வாய்ப்புண்டு
ஹார்மோன்களை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தி நீர்க்கட்டி உருவாகுவதை தடுப்பது { ப்ரோலாக்டின் ,ஆன்ரோஜன் அளவுகளைக்குறைத்தல்}
லாப்ரஸ்கொப்பி அல்லது எலக்ரோ சர்ஜிக்கல் முறையில் நீர்க்கட்டிகளை எரித்தல்.
7.லாப்ரஸ்கொப்பி இந்த பிரச்சனையை எவ்வாறு சரிசெய்யும்?
நமக்கு மயக்க மருந்து செலுத்தி நம்முடைய தொப்புளில் ஒரு சிறிய துளையிட்டு லேசர் மூலம் நீர்க்கட்டிகளை எரித்து விடுவார்கள்.
இதை பெரிய ஆபரேஷன் என்றெல்லாம் பயப்படத்தேவை இல்லை.இங்கு கனடாவில் 5 மணிநேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் .சில நாடுகளில் வேறுபடலாம்.
.3 நாட்களில் வலிகளில் இருந்து மீண்டு சாதாரண நிலைக்கு வந்துவிடலாம்
ஆபரேஷன் செய்த அடுத்த மாசமே கருத்தரிக்க முயசிக்கவேண்டும் .தொடர்ந்து 3 இல் இருந்து 6 மாதங்களுக்குள் கருத்தரிக்காவிட்டால் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
8. இந்த நீர்க்கட்டி பிரச்சனைக்கு மருத்துவம் சாராத தீர்வுகள் எவை?
உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் அதாவது அதிக மாப்பொருள் உண்ணக்கூடாது,சமச்சீரான ஊட்டத்த்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் பழங்களை அதிகம் உண்ண வேண்டும்
எடைக்கட்டுப்பாடு ,வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்ற எடைக்கு மாற வேண்டும்
உடற்பயிற்சி தினமும் நடைப்பயிற்சி செய்தல்
9. நீர்க்கட்டியை போக்கும் நாட்டு மருத்துவங்கள் எவை?
மலைவேம்புச்சாறு அதாவது மாதவிடாய் ஆனதில் இருந்து 3 வது நாள் தொடக்கம் 7 வது நாள் வரை காலையில் வெறும் வயிற்றில் மலை வேம்பு சாறு பருகினால் நீர்க்கட்டிகள் அற்றுப்போகும் என்கிறார்கள்.
இது அவரவர் விருப்பம்.
10 சினைப்பைக்கட்டிகள் என்பது ஒரு நோயா?
கிடையாது அதிகமானோர்களுக்கு இது இருப்பதே தெரியாது.சில நீர்க்கட்டிகளின் தன்மையை பொறுத்து உடல் உபாதைகள் இருக்கும் .அதற்கு மருத்துவர்களிடம் சென்று தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...