வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
Showing posts with label மாத்தி யோசி. Show all posts
Showing posts with label மாத்தி யோசி. Show all posts
Monday, 30 January 2017
Sunday, 29 January 2017
தற்புகழ்ச்சியில் மட்டு வாசம் செய்யும் நாகரீகர்
அடுத்தவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் இடையூறு செய்தால் தவிர நீங்களும் அடுத்தவர்களின் பொதுவான நடைமுறைகளுக்கு வலிய வலிய கல்லெறியாமல் இருப்பது நாகரீகமான மனிதர்களுக்கு அழகு.
தவிர நீங்கள் எறியும் கற்கள் தகர்க்க போவது உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளையே
அன்றி அதிகம் பேசும் வாயும் இரவில் ஊளையிடும் நாயும் அடிவாங்காமல் போனதாக சரித்திரம் இல்லை என்பதுபோல் அவமானபடுவதை தவிர்க்க இயலாது.
Tuesday, 24 January 2017
நடிகர்கள்
நடிகர்கள் புகழை அடந்தவர்கள் மட்டுமல்ல .
அதன் பலனை அடையும் வழிகளையும் அறிந்தவர்கள்.
அரசியல்வாதிகளை புறக்கணிக்க முடியாத
கட்டாயத்தில் வாழ்பவர்கள்
எறால் போட்டு சுறா பிடிக்க மட்டுமல்ல
பாம்பிற்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டி
தப்பித்து கொள்ளும் வித்தையும் அறிந்தவர்கள்.
ஆதாயம் தேடி வரும்போது நீங்கள்
ஆகாரமாகவே அடிபணிந்தால்
அராஜகங்கள் உருவாகவே செய்யும்
வெறுமைகளை நிரப்ப
வெறும் சேதாரமே எஞ்சும்
வாக்கு எனும் ஆயுதத்தை வெறும் பேச்சுக்கு பலி கொடுத்தால் வரும்
ஆளுமை உங்களை பேச விடாமலே கொல்லும்
நின்று நிதானியுங்கள்
வென்று வாழுங்கள்

Monday, 23 January 2017
உறவுகள் கூடுமிடத்தில்
உறவுகளுக்குள் ஒன்றுகூடல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.திருமண விழா,சடங்கு,பிறந்தநாள்,நன்மை தீமைகள் என்று ஒன்று கூடுவது வழக்கம்.
இவ்வாறான ஒன்றுகூடலில் நன்மை சந்தோசம் என்பன எவ்வளவு அமைகிறதோ அதற்கு சமனான சச்சரவுகள் மனக்குறைகள் என்பனவும் தவிர்க்க முடியாத ஒன்று.
இவற்றை முடிந்தவரை நேர்த்தி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும்.
விழாவுக்கு உரியவர்களாக இருக்கும் பட்சத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் ,விழாவில் பங்கு பெறுபவராக இருக்கும் பட்சத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்குவோம்.
*விழா அமைப்பாளர்களாக இருக்கும் பட்சத்தில்
*முதலில் விழா பற்றி திட்டமிடல் வேண்டும்.
*முற்பகையை மறந்து அழைப்புக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
*பங்கு பெற முடியாத உறவுகளின் காரணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
*அனுசரிப்பில் வேற்றுமை காட்ட கூடாது.
*தரமான சுவையான உணவுகளால் விருந்தளிக்க வேண்டும்.
*குடும்ப விழாக்களில் முடிந்தளவு பேச்சைக்குறைப்பது நன்று .மேள நாயன இசைகளை திருமண நிகழ்ச்சிகளில் முன்னோர்கள் புகுத்தியதற்கான காரணம் இதுதான்.
உறவுகள் கூடுமிடத்தில் ஒருவர் பேச்சு இன்னொருவர் காதுக்கு எட்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் மணமக்களை ஒரு சேர பார்த்தவுடன் சொந்தங்கள் அவர்கள் குறை நிறைகளை பேச
அவை அவர்களின் அன்றைய நாளின் மகத்துவத்தை சீர்குலைத்து விடாமல் இருக்கவுமே.
இதற்கமைய பொது நிகழ்ச்சிகளை அதாவது எல்லோரும் சேர்ந்து ரசிக்ககூடிய ஆடல், பாடல் ,வாத்தியங்கள்,போட்டிகள், போன்றவற்றை ஒழுங்கு செய்யலாம்.
*வருகை தந்த யாரையுமே ஒரு தடவையாவது பார்த்து பேசி கைகுலுக்கி நலம் விசாரிக்க 1 நிமிடத்தை செலவிட தயங்கக்கூடாது.
*நம் விழாவிற்கு வருவோர் தங்களது முழுநாளை அல்லது சில மணித்தியாலங்களை நமக்காக செலவிடுகிறார்கள் அவர்கள் நம்முடன் செலவிடும் அந்த நாள் நேரங்களுக்கு
நாம் பொறுப்பாளியாக இருந்து அவர்களை உபசரித்து அனுப்பி வைக்க வேண்டும்.
*சிலர் செய்யும் சேட்டைகளை பொறுத்து பொருட்படுத்தாமல் விட்டுவிட வேண்டும்.
*விழாவில் உள்ள குறை குற்றங்களுக்கு செவிமடுத்து திருத்திக்கொள்ள முயல வேண்டும்.
அடுத்து நாம் விழாவில் பங்கு பெறுபவராக இருந்தால்
*அழைப்பு, விழா நேரம் போன்றவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும்.
*விழா அமைத்துள்ள குடும்பத்துக்கு சிரமத்தை கொடுக்காத வகையில் நம்முடைய பங்களிப்பு அமைய வேண்டும்.சிலர் விழா நடத்தும் குடும்பத்தினர் வீட்டுக்கு சில நாட்களின் முன்பாகவே சென்று
ஊரைச்சுற்றி பார்க்க கிளம்பிவிடுவார்கள்.இது அவர்கள் உங்களில் எவ்வளவு மதிப்பு வைத்திருந்தாலும் அந்த நேர வேலைப்பழுக்களில் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும்.
ஆகவே முடிந்தளவு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
*உணவுப்பழக்கவழக்கங்களை விழாவில் மாற்றிக்கொண்டு அவர்கள் உணவிற்கு ஏற்றால்போல் சமாளிக்க வேண்டும்.சிலர் விழாவில் சாப்பாடு சரியில்லை என்று அடம்பிடிப்பார்கள்.
விழாக்குடும்பத்தார்களுக்கே அதை போய் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.எந்த விழா ஏற்பாட்டாளர்களும் வேண்டுமென்றே தரமற்ற சுவையற்ற உணவுகளை அவர்கள் விழாவில் பரிமாற முனைய மாட்டார்கள்.
இருப்பினும் சந்தர்ப்ப வசத்தால் அப்படியும் அமைந்து விடுவதுண்டு. யாரும் விழாவில் சாப்பிட்ட இந்த உணவினால் ஒரே நாளில் உடல் வளர்ச்சி அடையப்போவதோ உடல் வளர்ச்சி குன்றப்போவதோ இல்லை.
அதனால் அந்த விழாவில் சில விடயங்களை பெரிதுபடுத்தாமல் மகிழ்ச்சியாக பங்களித்து விட்டு வரலாம்.
*பேச்சை அளவு படுத்த வேண்டும்.எல்லா உறவுகளும் கூடியுள்ள இடத்தில் நக்கல் விஷமப்பேச்சுகள் போன்றவற்றை தவிர்ப்பதே நல்லது.
*உறவினர்களிடத்தில் எல்லோர்முன்னும் வைத்து சில தனிப்பட்ட குடும்ப விடயங்களை நலம் விசாரிக்கிறோம் என்ற பெயரில் கேள்வி தொடுப்பது நல்லதல்ல.
*விழாவில் முடிந்தளவு நல்ல விடயங்கள் பொதுவிடயங்கள் போன்றவற்றை பேசுவதும் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் புன்னகையுடன் சந்தோசமாக கூடிக்குலவி சிரித்து மகிழ்ந்து அந்த இடத்தை நிரப்புவதுமே நமக்கு சிறப்பைதரும்.
*தேவைக்கதிகமாக உரிமை எடுத்து எதையாவது செய்து நம் மதிப்பை கெடுத்துக்கொள்ளக்கூடாது.நமது வரையறை தெரிந்து செயல்பட வேண்டும்.
*குற்றம் குறைகளையே பேசுவதும் குறைகளை சுட்டிக்காட்டுவதும் நம்மீது அவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தி நம்மைபார்த்தாலே அருவருப்பு ஏற்படுவதை தவிர்க்க நம்மால் முடிந்தளவு மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும்.
*நம்முடைய பங்களிப்பால் விழாவாளர்கள் எந்த தீமையும் இடையூறுகளையும் எதிர் கொள்ளாமல் இருக்கும்படி நடந்து கொள்ள வேண்டும்.
*உபசரிப்பில் ஏற்படும் தவறுகளை பெரிது படுத்தாமல் அவர்கள் பரபரப்புக்கும் வேலைப்பழுவுக்கும் மதிப்பளித்து மன்னிக்க வேண்டும்.
பூமணி மகள்
அநாவசிய பேச்சுக்களை தவிர்க்க
1.தேவையற்ற வார்த்தைகளை கட்டுப்படுத்த முதலில் செய்ய வேண்டியது நம்மை நாம் பிஸி யாக வைத்துக்கொள்ள வேண்டும்.காரணம் ஆரோக்கியமற்ற சிந்தனைகளின் வெளிப்பாடே ஆரோக்கியமற்ற வார்த்தைகள்.
2. இந்த பரந்த உலகில் எவ்வளவோ பொழுதுபோக்குகள் கொட்டிக்கிடக்கிறது.அவற்றில் நமக்கு ஏற்றதுபோல் ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்கை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுத்துக்கொள்வது.
3.அடுத்தவர்களது நியாயமற்ற தனிப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பேச்சை திசைதிருப்புவது.
4.அடுத்தவர்களைப்பற்றிய பேச்சை தவிர்ப்பது அநாவசியப்பேச்சுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முதற்படி.எப்படி அடுத்தவர் சொந்த விடயங்களில் குறுக்கிட நமக்கு உரிமை இல்லையோ அதாவது 18வயதுக்கு மேற்பட்டால்
5.நம்மிடத்திடத்தில் பேசும்போது யார் யாருக்கு எவ்வளவு பேச்சு எல்லை என்று மனதளவில் வரையறை செய்து அடுத்தவர்கள் அநாவசியப்பேச்சு எல்லை மீறி போகுமுன் தெளிவாக ஆரோக்கியமான முறையில் அந்த சந்தர்ப்பத்தை விலக்குவது.
6.நண்பர்களை கட்டுப்படுத்துவது.நண்பர்களை பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை.காதலில் எப்படி உண்மை பொய் இருக்கிறதோ அதே போல் நட்பு என்பதும் ஒரு நிலையற்ற உறவு.சூழ்நிலைக்கு ஏற்றால்போல் சுழலும் இந்த நட்பு வட்டத்தை நாம்
அநாவசிய பேச்சுக்களை களையெடுக்க
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
இல்லையேல் அவர் சொன்ன சொற்களே அவர் துன்பங்களுக்கு காரணமாகி விடும்.
நல்ல வார்த்தைகள் நல்ல உரையாடல்கள் மனிதனின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவுவதால் நல்ல சிந்தனை சொற்கள் செயல்கள் என்பன நம்மை நாமே அமைதியுள்ளவர்களாக தெளிவுள்ளவர்களாக மனத்திடம் உள்ளவர்களாக
மேலோங்க வைக்கிறது.
இவ்வாறு ஏகப்பட்ட தடங்கல்களை தொடர்ந்து செல்லும் அணுகுமுறைகளில் ஏற்படுத்த வல்லது இந்த வார்த்தைகள்.
வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தவை.உறவுகளுக்கு பாலமாக விளங்குபவை.
ஆகவே உடைத்தெறியும் இந்த வார்த்தைகளில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு நம் வாழ்வை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
இந்த விடயம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த வார்த்தைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே நமக்கு தெரியாத விடயமாகிப்போகிறது.
ஒருவரோடு என்ன வேண்டுமாயினும் பேசலாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என்ற வரயறையற்ற மனித உறவு இல்லை அவ்வாறு இருப்பது மாயை மேலும் அது நல்லதும் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
அம்மா மகள் ,கணவன் மனைவி போன்ற எல்லா உறவுகளுக்குமே தவிர்க்கவேண்டிய வார்த்தைகள் உரையாடல்கள் என்ற வரயறை இருக்கிறது.இதுதான் மனித வாழக்கை.
அது தனிப்பட்ட பொழுதுபோக்கோ அல்லது குடும்பத்துடன் சேர்ந்து மேற்கொள்ளக்கூடிய பொழுதுபோக்குகளாகவோ இருக்கலாம்.
இதன்மூலம் சிந்தனை இந்தப்பக்கமாக திரும்பும்போது அதுபற்றி புதிய புதிய நல்ல சிந்தனைகள் உருவாகும் போது தீய சிந்தனைகள் வேர்விட இடமின்றி மடிகிறது.
ஒவ்வொருவருக்கும் ரகசியங்கள் இருக்கிறது.அதை எல்லோருடனும் பகிர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
தேவையில்லாமல் சிலர் தங்களுடைய ரகசியங்களை பகிர்ந்து கொண்டிருந்தால் கூட பதிலுக்கு உங்கள் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
இலவச போன் இணைப்புக்கள் அதிகரித்த இந்த வேளையில் சிலர் அதையே பொழுதுபோக்காக கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.
எவ்வளவுதான் இலவசமாக இருந்துவிட்டுப்போகட்டும் இலவசம் என்பதற்காக வார்த்தைகளை கோர்த்து கோர்த்து வளர்த்துக்கொண்டே போகவேண்டும்
என்பதற்கில்லை .நல்ல விடயங்கள் பொது விடயங்கள் வாழ்க்கைக்கும் அறிவுக்கும் பலன் தரக்கூடிய உரையாடல்கள் அதிக நேரம் எடுப்பதில்லை.
ஆனால் இந்த தேவையற்ற வெடிப்பேச்சு என்பதற்கு முடிவே இருப்பதில்லை என்பதுதான் உண்மை.காரணம் முடிக்க வேண்டிய அவசியமில்லை
ஏனென்றால் முடித்துவிட்டு இந்த உரையாடல் மூலம் செயல்படுத்த இங்கு எதுவுமில்லை.
பெற்ற பிள்ளைகளின் சுய சிந்தனைகள் சுய முடிவுகளில் உரிமையெடுப்பதில் எப்படி இரண்டாம் பட்சத்தவர் ஆகிறோமோ அதேபோல் இன்னுமொருவருக்கு நாம் மூன்றாம்பட்சத்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.இதேபோலவே சுயமாக
சிந்திக்கும் செயல்படும் ஒருவரைப்பற்றி நாம் அநாவசியமான எண்ணங்களை வெளிப்படுத்துவது அவருக்கு மட்டுமன்றி நமக்கும் நாம் ஆசைப்படும் அமைதியான அழகான வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும்.
நாம் பேசிப்பழகும் எல்லோரைப்பற்றியும் ஒரு கணிப்பு வைத்திருப்போம் .அவர்கள் பேச்சின் எல்லை மீறல்கள் அநாவசியங்கள்.என்பனவெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் அதற்கேற்றால் போல் நமது பேச்சை நல்ல முறையில் தயார் செய்து
சுமூகமான ஒரு உரையாடல்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.சிலருக்கு நிறைய இடைவெளி கொடுத்து அளவாக பேசினால் மட்டுமே அந்த உறவை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது அவர்கள் பேச்சுக்கள்மூலம் நீங்கள் ஏற்கனவே கண்டுணர்ந்திருப்பீர்கள்.
சிலர் தங்கள் பேச்சால் நமது நிம்மதியையும் நேரத்தையும் சாகடிக்க முயல்வார்கள் அதற்கு இடம்கொடுக்காமல் தப்பிக்கொள்வதே நமக்கு நல்லது.காரணம் பிறர் கெட்டபழக்கங்களையெல்லாம் திருத்திக்கொண்டிக்க முடியாது.
வரையறுத்துக்கொள்ள வேண்டும் .எல்லோருக்கும் நண்பர்கள் அவசியம் என்ற கட்டாயம் கிடையாது.குடும்பத்தில் உள்ளவர்களையோ தாய் தந்தையர்களையோ உறவினர்களில் நம் வயதை ஒத்தவர்களையோ கூட நமக்கேற்றவர்கள் நம் சிந்தனைகளுக்கு ஒத்துழைப்பவர்களைக்கூட
நண்பர்களாக்கிக்கொள்ளலாம்.ஏன் நண்பர்களே இல்லை என்று கூட பெருமைப்பட்டுக்கொள்ளலாம் காரணம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் பல விஸ்வரூபம் எடுப்பதற்கு பல வீதத்தில் நண்பர்களே காரணமாகிறார்கள்.விதிவிலக்கானவர்களை பற்றி
நான் இங்கு பேசவில்லை.ஆகவே இந்த நண்பர்களை வட்டத்தை அளவோடு கட்டுப்படுத்துவதால் நாம் சுயமாக கருத்துக்களை உருவாக்கவும் பேச்சுக்களை நம் மனம் போல் தெளிவாக உருவெடுக்க வைக்கவும் முடியும்

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்.
சொல்லடக்கம் என்பதை பற்றி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான கருத்துக்கள் முன்மொழிகளை யாமறிவோம்.இருப்பினும் வார்த்தைகளை அடக்குவது என்பது ஒரு மிகப்பெரிய கலை.தேவை.அவசியம்.
முற்பேசிய வார்த்தைகள் பின்னால் ஏன் இப்படி பேசினோம் என்று எம்மையே நோகடிக்கலாம் அல்லது அடுத்தவரை நோகடித்த அதே வார்த்தை பிறிதொரு சந்தர்ப்பத்தில் நமக்கே பொருத்தமாகிப்போய் நம்மை கலங்க வைக்கலாம்.
உதவுதலும் உதவியை நாடுதலும்
உதவுதலும் உதவியை நாடுவதும்மனித வாழ்வு என்பது ஒரு சங்கிலி
.ஒருவரோடு ஒருவர் பின்னப்பட்டு ஒருவர் வாழ்வில் ஒருவர் தேவைகள் பிணைக்கப்பட்டுக்கிடக்கிறது.ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழ்வது என்பதுதொழில் ரீதியாக சமூக செயல்பாடுகளின் கீழாக என்று பல்வேறு வகைப்படும்
.ஆனால் நாம் பேசப்போவது குடும்பங்கள் உறவினர் நண்பர்கள் சுற்றம் போன்ற நடைமுறைகளை மட்டுமே.
அன்பர்களே
தனக்கு மிஞ்சித்தான் தானம், ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு,தர்மம் தலை காக்கும் என்பவன போன்றவற்றை அறிந்திருப்பீர்கள்.உதவி செய்தாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது .அது அவரவர் மனநிலையையும் தகுதியையும் பொறுத்தது.அதைவிட ஒருவர் தன் கடின உழைப்பால் கடின முயற்சியால் தன் பிரச்சனைகளை எவ்வளவு தீர்க்க முடியுமோ அவ்வளவு தீர்த்தாக வேண்டும் .அதையும் மீறி உதவி தேவைப்படும் தருணத்தில் சுமூகமான முறையில் அடுத்தவர்கள் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு உதவி கேட்டுக்கொள்ளலாம். அது அவர்கள் செய்யாத பட்சத்தில் அதை தப்பாக எடுத்துக்கொள்வது முட்டாள்தனம்.
அதற்குமுன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, பண உதவி என்பது மிக முக்கியமாக பரவலாக காணப்படும் ஒரு விடயம்.நம்மைப்போலதான் எல்லோருக்கும் பிரச்சனைகள் தேவைகள் விரிந்து செல்கிறதுஎன்பதை மனத்தில் வைக்க வேண்டும்.எந்த ஒரு உறவையும் நட்பையும் பிரிக்கும் சக்தி இந்த பணத்துக்கு உண்டு.ஆகவே முடிந்தளவு இந்த உதவியை நாடுவதை தவிர்ப்பதே நல்லது.உலகில் அதிக முறைகேடான சம்பவங்களும் கொலைகளுக்கும் அடித்தளமாக பணம் காரணமாக இருப்பதை அறிவீர்கள்.இந்த உதவியை நீங்கள் கூசாமல் கேட்பவர்களாக இருந்தால் உங்களைக்கண்டு மற்றவர்கள் அருவருப்படைவார்கள்.இத்தோடு கேட்பவர்களை பரிதாபபட வைக்க வேண்டும் என்பதற்காக சிலர் கவலைகள் சிரமங்களை மட்டும் ஒருவரோடு பகிர்ந்து கொள்வார்களானால்அந்த உரையாடலில் பிறருக்கு சலிப்பு ஏற்பட்டு விடும்அடுத்தவர்கள் தங்களிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் முன்கூட்டியே தங்களை தாழ்த்தி யாருக்கும் எந்த உதவியும் செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை என்பதை தெரியவைக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தம்மைஇயலாதவர்கள் போல் காட்டிக்கொள்ள கற்பனைக்கதைகள் சம்பவங்கள் என்பவற்றை உபயோகித்துக்கொள்வார்கள்.தங்கள் எந்தவொரு சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.பயப்படுவார்கள்.இவ்வாறு நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது உங்களோடு எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்திக்கொண்டிருக்கும் உறவுகளை நீங்கள் இடையூறுக்குள்ளாக்குவது போலாகும்.
தாரளமாக நீங்கள் உங்கள் மகிழ்ச்சிப்பக்கங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.அதை வைத்து அவர்கள் உங்களிடம் உதவிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் தேவையில்லை.அவ்வாறு உங்கள் மகிழ்ச்சிகளை வைத்து நீங்கள் பகிர்ந்து கொள்வதை வைத்து உங்களிடம் உங்களுக்கு செய்ய விருப்பமில்லாத, செய்யமுடியாத, உங்கள் தகுதிக்கு மீறிய, உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கக்கூடிய ,உங்களை வருத்தக்கூடிய உதவியை அந்த நபர் நாடுபவராக இருந்தால் அந்த உறவு சுமுகமான நல்ல உறவு கிடையாது நீங்கள் தாரளமாக மறுப்பு தெரிவித்து அளவோடு பழகிக்கொள்ளலாம்.
அடுத்து நம்மை விட தாழ்ந்தோர் படைப்பின் வசத்தால் உதவி தேவைப்படுபவர்கள் உழைத்துவாழ தகுதியிழந்தவர்கள் போன்றோருக்கு நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்வது என்பது நம் மனதிற்கும் வாழ்வுக்கும் சிறப்பையும் அமைதியையும் தரும்.
ஆனால் நம் போன்ற சக மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகளில் பங்கெடுத்து உதவி செய்வாதாக இருந்தால் பலனை எதிர்பார்க்காமல் உதவியை செய்வதே உறவைப்பிரிக்காமல் இருக்கும்.பிரதி பலனை எதிர்பார்த்து செய்வதாக இருந்தால் யாருக்கு செய்யப்போகிறோமோஅவர்களது செயற்பாடுகளைக்கவனித்து நம்பகத்தன்மையை பெற்ற பின் ஆழமறிந்து காலைவிடுவதே சிறப்பு.முக்கியமாக நல்ல மனத்தோடு ,உதவி பெறுவதில் உள்ள மனநிலையையே நாம் உதவி செய்வதிலும் பெற்றுவிட்டால் எந்தப்பிரச்சனையும் கிடையாது.
-பூமணி மகள்-
{சுரேஜினி பாலகுமாரன்}
மாத்தி யோசி
.நீங்கள் பேசுவதை எல்லாம் உங்களுடடைய உடலிள்ள செல்கள் பதிந்து வைத்திருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.நீங்கள் நல்லதையே பேசும்போது உங்கள் சிந்தனைகள் மாற்றம் பெறும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தெளிந்த மனம் உருவாகும்.உண்ணும் உணவை விட பேசும் பேச்சில் அதிக கவனம் வையுங்கள்.உதாரணமாக நீங்கள் பணக்கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் ஒரு பொருளோ வீடோ வாங்குகிறார் .அது உங்களுக்கு உறுத்தலாக இருக்கும்
.எதுவரை?????
நீங்கள் ,
””அப்படியா நல்ல விடயம். யாராக இருந்தாலும் நல்ல நிலையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்துவது நல்லதுதானே என்ற வார்த்தைகளை வாய்விட்டு உச்சரிக்கும் வரை.
ஆம் உங்கள் கஷ்டங்களை போக்க பாடுபட வேண்டியது நீங்கள்தான் அதைவிடுத்து அடுத்தவர் கஷ்டப்பட்டு முன்னேறும்போது அங்கலாய்ப்பது உங்கள் மனத்தூய்மையை நீங்களே கெடுத்துக்கொள்வதாகும். நாம் அடிக்கடி நம்மைப்பற்றி சொல்லும் பொயான வார்த்தைகள் உண்மையாவதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.அதனால் வாழ்வை மாற்ற வார்த்தைகளை மாற்றுங்கள்.
மாத்தி யோசி
/நாள்தோறும் நாள் தோறும் நான் எல்லாவிதத்திலும் முன்னேறி வருகிறேன் என்ற வாக்கியத்தை திரும்பத் திரும்ப சொன்ன காரணத்தால் பதின்மூன்று வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த நோயாளி ஒருவர் பூரண குணமாகி எழுந்து நடந்தார்//
ஒருவர் தனது ஆழ் மனதுக்கு இடும் கட்டளைகளே குணங்களாகவும் விருப்பங்களாகவும் எதிர்பார்ப்புக்களாகவும் உருவெடுக்கின்றன.
சாதரண உணவுப்பழக்கவழக்கங்களிலேயே இந்த உணவு எனக்கு ஒத்து வராது என்பது வேறு அது ஒவ்வாமை.ஆனால் இந்த உணவு எனக்கு பிடிக்காது என்பது வேறு .
95 வீதம்பிரச்சனைகள் நாமே உருவாக்கி பின்பற்றும் ஒரு கற்பனை.
இதே போன்று நமக்கு வரும் பிரச்சனைகளில் பாதிக்கு மேல் நாம் கற்பனை செய்து கொள்பவையே.
Subscribe to:
Posts (Atom)
youtube to usb converter
எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...
-
பாட்டியின் வீட்டு பழம் பானை - அந்தப் பானையில் ஓர்புறம் ஓட்டையடா ஓட்டை வழி ஓரு சுண்டெலியும் - அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே பு...
-
தேவையானவை சிவப்பு அரிசிமா 1/4 கப் அவித்த மைதா மா 1/4 கப் பயறு 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் 2 கப் சிறு தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ...
-
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு" (நா...