Monday, 23 January 2017

அநாவசிய பேச்சுக்களை களையெடுக்க




யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
இல்லையேல் அவர் சொன்ன சொற்களே அவர் துன்பங்களுக்கு காரணமாகி விடும்.
நல்ல வார்த்தைகள் நல்ல உரையாடல்கள் மனிதனின் உள்ளுணர்வுக்குள் ஊடுருவுவதால் நல்ல சிந்தனை சொற்கள் செயல்கள் என்பன நம்மை நாமே அமைதியுள்ளவர்களாக தெளிவுள்ளவர்களாக மனத்திடம் உள்ளவர்களாக 
மேலோங்க வைக்கிறது.
இவ்வாறு ஏகப்பட்ட தடங்கல்களை தொடர்ந்து செல்லும் அணுகுமுறைகளில் ஏற்படுத்த வல்லது இந்த வார்த்தைகள்.
வார்த்தைகள் மிகவும் பலம் வாய்ந்தவை.உறவுகளுக்கு பாலமாக விளங்குபவை.
ஆகவே உடைத்தெறியும் இந்த வார்த்தைகளில் நாம் எவ்வளவுக்கெவ்வளவு கவனம் செலுத்துகிறோமோ அவ்வளவுக்கு நம் வாழ்வை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
இந்த விடயம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் இந்த வார்த்தைகளை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே நமக்கு தெரியாத விடயமாகிப்போகிறது.

ஒருவரோடு என்ன வேண்டுமாயினும் பேசலாம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம் என்ற வரயறையற்ற மனித உறவு இல்லை அவ்வாறு இருப்பது மாயை மேலும் அது நல்லதும் இல்லை என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
அம்மா மகள் ,கணவன் மனைவி போன்ற எல்லா உறவுகளுக்குமே தவிர்க்கவேண்டிய வார்த்தைகள் உரையாடல்கள் என்ற வரயறை இருக்கிறது.இதுதான் மனித வாழக்கை.
அது தனிப்பட்ட பொழுதுபோக்கோ அல்லது குடும்பத்துடன் சேர்ந்து மேற்கொள்ளக்கூடிய பொழுதுபோக்குகளாகவோ இருக்கலாம்.
இதன்மூலம் சிந்தனை இந்தப்பக்கமாக திரும்பும்போது அதுபற்றி புதிய புதிய நல்ல சிந்தனைகள் உருவாகும் போது தீய சிந்தனைகள் வேர்விட இடமின்றி மடிகிறது.
ஒவ்வொருவருக்கும் ரகசியங்கள் இருக்கிறது.அதை எல்லோருடனும் பகிர வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
தேவையில்லாமல் சிலர் தங்களுடைய ரகசியங்களை பகிர்ந்து கொண்டிருந்தால் கூட பதிலுக்கு உங்கள் ரகசியங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது.
இலவச போன் இணைப்புக்கள் அதிகரித்த இந்த வேளையில் சிலர் அதையே பொழுதுபோக்காக கையில் எடுத்துக்கொள்கிறார்கள்.
எவ்வளவுதான் இலவசமாக இருந்துவிட்டுப்போகட்டும் இலவசம் என்பதற்காக வார்த்தைகளை கோர்த்து கோர்த்து வளர்த்துக்கொண்டே போகவேண்டும்
என்பதற்கில்லை .நல்ல விடயங்கள் பொது விடயங்கள் வாழ்க்கைக்கும் அறிவுக்கும் பலன் தரக்கூடிய உரையாடல்கள் அதிக நேரம் எடுப்பதில்லை.
ஆனால் இந்த தேவையற்ற வெடிப்பேச்சு என்பதற்கு முடிவே இருப்பதில்லை என்பதுதான் உண்மை.காரணம் முடிக்க வேண்டிய அவசியமில்லை
ஏனென்றால் முடித்துவிட்டு இந்த உரையாடல் மூலம் செயல்படுத்த இங்கு எதுவுமில்லை.
பெற்ற பிள்ளைகளின் சுய சிந்தனைகள் சுய முடிவுகளில் உரிமையெடுப்பதில் எப்படி இரண்டாம் பட்சத்தவர் ஆகிறோமோ அதேபோல் இன்னுமொருவருக்கு நாம் மூன்றாம்பட்சத்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது.இதேபோலவே சுயமாக 
சிந்திக்கும் செயல்படும் ஒருவரைப்பற்றி நாம் அநாவசியமான எண்ணங்களை வெளிப்படுத்துவது அவருக்கு மட்டுமன்றி நமக்கும் நாம் ஆசைப்படும் அமைதியான அழகான வாழ்வுக்கும் கேடு விளைவிக்கும்.
நாம் பேசிப்பழகும் எல்லோரைப்பற்றியும் ஒரு கணிப்பு வைத்திருப்போம் .அவர்கள் பேச்சின் எல்லை மீறல்கள் அநாவசியங்கள்.என்பனவெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் அதற்கேற்றால் போல் நமது பேச்சை நல்ல முறையில் தயார் செய்து
சுமூகமான ஒரு உரையாடல்களை ஏற்படுத்திக்கொள்ளலாம்.சிலருக்கு நிறைய இடைவெளி கொடுத்து அளவாக பேசினால் மட்டுமே அந்த உறவை தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது அவர்கள் பேச்சுக்கள்மூலம் நீங்கள் ஏற்கனவே கண்டுணர்ந்திருப்பீர்கள்.
சிலர் தங்கள் பேச்சால் நமது நிம்மதியையும் நேரத்தையும் சாகடிக்க முயல்வார்கள் அதற்கு இடம்கொடுக்காமல் தப்பிக்கொள்வதே நமக்கு நல்லது.காரணம் பிறர் கெட்டபழக்கங்களையெல்லாம் திருத்திக்கொண்டிக்க முடியாது.
வரையறுத்துக்கொள்ள வேண்டும் .எல்லோருக்கும் நண்பர்கள் அவசியம் என்ற கட்டாயம் கிடையாது.குடும்பத்தில் உள்ளவர்களையோ தாய் தந்தையர்களையோ உறவினர்களில் நம் வயதை ஒத்தவர்களையோ கூட நமக்கேற்றவர்கள் நம் சிந்தனைகளுக்கு ஒத்துழைப்பவர்களைக்கூட
நண்பர்களாக்கிக்கொள்ளலாம்.ஏன் நண்பர்களே இல்லை என்று கூட பெருமைப்பட்டுக்கொள்ளலாம் காரணம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் பல விஸ்வரூபம் எடுப்பதற்கு பல வீதத்தில் நண்பர்களே காரணமாகிறார்கள்.விதிவிலக்கானவர்களை பற்றி
நான் இங்கு பேசவில்லை.ஆகவே இந்த நண்பர்களை வட்டத்தை அளவோடு கட்டுப்படுத்துவதால் நாம் சுயமாக கருத்துக்களை உருவாக்கவும் பேச்சுக்களை நம் மனம் போல் தெளிவாக உருவெடுக்க வைக்கவும் முடியும்

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். 

சொல்லடக்கம் என்பதை பற்றி ஒன்றல்ல இரண்டல்ல ஏராளமான கருத்துக்கள் முன்மொழிகளை யாமறிவோம்.இருப்பினும் வார்த்தைகளை அடக்குவது என்பது ஒரு மிகப்பெரிய கலை.தேவை.அவசியம்.

முற்பேசிய வார்த்தைகள் பின்னால் ஏன் இப்படி பேசினோம் என்று எம்மையே நோகடிக்கலாம் அல்லது அடுத்தவரை நோகடித்த அதே வார்த்தை பிறிதொரு சந்தர்ப்பத்தில் நமக்கே பொருத்தமாகிப்போய் நம்மை கலங்க வைக்கலாம்.


No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...