Monday, 23 January 2017

உதவுதலும் உதவியை நாடுதலும்



உதவுதலும் உதவியை நாடுவதும்மனித வாழ்வு என்பது ஒரு சங்கிலி

.ஒருவரோடு ஒருவர் பின்னப்பட்டு ஒருவர் வாழ்வில் ஒருவர் தேவைகள் பிணைக்கப்பட்டுக்கிடக்கிறது.ஒருவருக்கு ஒருவர் சார்ந்து வாழ்வது என்பதுதொழில் ரீதியாக சமூக செயல்பாடுகளின் கீழாக என்று பல்வேறு வகைப்படும்

.ஆனால் நாம் பேசப்போவது குடும்பங்கள் உறவினர் நண்பர்கள் சுற்றம் போன்ற நடைமுறைகளை மட்டுமே.

அன்பர்களே

 தனக்கு மிஞ்சித்தான் தானம், ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு,தர்மம் தலை காக்கும் என்பவன போன்றவற்றை அறிந்திருப்பீர்கள்.உதவி செய்தாக வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது .அது அவரவர் மனநிலையையும் தகுதியையும் பொறுத்தது.அதைவிட ஒருவர் தன் கடின உழைப்பால் கடின முயற்சியால் தன் பிரச்சனைகளை எவ்வளவு தீர்க்க முடியுமோ அவ்வளவு தீர்த்தாக வேண்டும் .அதையும் மீறி உதவி தேவைப்படும் தருணத்தில் சுமூகமான முறையில் அடுத்தவர்கள் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு உதவி கேட்டுக்கொள்ளலாம். அது அவர்கள் செய்யாத பட்சத்தில் அதை தப்பாக எடுத்துக்கொள்வது முட்டாள்தனம்.

அதற்குமுன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, பண உதவி என்பது மிக முக்கியமாக பரவலாக காணப்படும் ஒரு விடயம்.நம்மைப்போலதான் எல்லோருக்கும் பிரச்சனைகள் தேவைகள் விரிந்து செல்கிறதுஎன்பதை மனத்தில் வைக்க வேண்டும்.எந்த ஒரு உறவையும் நட்பையும் பிரிக்கும் சக்தி இந்த பணத்துக்கு உண்டு.ஆகவே முடிந்தளவு இந்த உதவியை நாடுவதை தவிர்ப்பதே நல்லது.உலகில் அதிக முறைகேடான சம்பவங்களும் கொலைகளுக்கும் அடித்தளமாக பணம் காரணமாக இருப்பதை அறிவீர்கள்.இந்த உதவியை நீங்கள் கூசாமல் கேட்பவர்களாக இருந்தால் உங்களைக்கண்டு மற்றவர்கள் அருவருப்படைவார்கள்.இத்தோடு கேட்பவர்களை பரிதாபபட வைக்க வேண்டும் என்பதற்காக  சிலர் கவலைகள் சிரமங்களை மட்டும் ஒருவரோடு பகிர்ந்து கொள்வார்களானால்அந்த  உரையாடலில் பிறருக்கு சலிப்பு ஏற்பட்டு விடும்அடுத்தவர்கள் தங்களிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் முன்கூட்டியே தங்களை தாழ்த்தி யாருக்கும் எந்த உதவியும் செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை என்பதை தெரியவைக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தம்மைஇயலாதவர்கள் போல் காட்டிக்கொள்ள கற்பனைக்கதைகள் சம்பவங்கள் என்பவற்றை உபயோகித்துக்கொள்வார்கள்.தங்கள் எந்தவொரு சந்தோசத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள்.பயப்படுவார்கள்.இவ்வாறு நீங்கள் வெளிப்படுத்திக்கொண்டிருப்பது உங்களோடு எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்திக்கொண்டிருக்கும் உறவுகளை நீங்கள் இடையூறுக்குள்ளாக்குவது போலாகும்.

தாரளமாக நீங்கள் உங்கள் மகிழ்ச்சிப்பக்கங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.அதை வைத்து அவர்கள் உங்களிடம் உதவிக்கு வந்துவிடுவார்கள் என்ற பயம் தேவையில்லை.அவ்வாறு உங்கள் மகிழ்ச்சிகளை வைத்து நீங்கள் பகிர்ந்து கொள்வதை வைத்து உங்களிடம் உங்களுக்கு செய்ய விருப்பமில்லாத, செய்யமுடியாத, உங்கள் தகுதிக்கு மீறிய, உங்களை சிரமத்துக்கு உள்ளாக்கக்கூடிய ,உங்களை வருத்தக்கூடிய உதவியை அந்த நபர் நாடுபவராக இருந்தால் அந்த உறவு சுமுகமான நல்ல உறவு கிடையாது நீங்கள் தாரளமாக மறுப்பு தெரிவித்து அளவோடு பழகிக்கொள்ளலாம்.

அடுத்து நம்மை விட தாழ்ந்தோர் படைப்பின் வசத்தால் உதவி தேவைப்படுபவர்கள் உழைத்துவாழ தகுதியிழந்தவர்கள் போன்றோருக்கு நம்மால் முடிந்த சிறிய உதவிகளை செய்வது என்பது நம் மனதிற்கும் வாழ்வுக்கும் சிறப்பையும் அமைதியையும் தரும்.

ஆனால் நம் போன்ற சக மனிதர்களின் ஏற்றத்தாழ்வுகளில் பங்கெடுத்து உதவி செய்வாதாக இருந்தால் பலனை எதிர்பார்க்காமல் உதவியை செய்வதே உறவைப்பிரிக்காமல் இருக்கும்.பிரதி பலனை எதிர்பார்த்து செய்வதாக இருந்தால் யாருக்கு செய்யப்போகிறோமோஅவர்களது செயற்பாடுகளைக்கவனித்து நம்பகத்தன்மையை பெற்ற பின் ஆழமறிந்து காலைவிடுவதே சிறப்பு.முக்கியமாக நல்ல மனத்தோடு ,உதவி பெறுவதில் உள்ள மனநிலையையே நாம் உதவி செய்வதிலும் பெற்றுவிட்டால் எந்தப்பிரச்சனையும் கிடையாது.

-பூமணி மகள்-

{சுரேஜினி பாலகுமாரன்}


No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...