என்னை ஒருவர் நோகடிக்கிறார் என்பது தவறான குற்றச்சாட்டு.என் அனுமதி இன்றி என்னை யாரும் நோகடிக்க முடியாது என்பது காந்தி சொன்னது.நம்மை நோகடிக்கும் சந்தர்ப்பத்தை பல வழிககளில் நாமேதான் பிறருக்கு உருவாக்கிக்கொடுக்கிறோம்.அந்த உரிமையை நம்மிடம் இருந்துதான் அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது உண்மை.அடுத்தவரை நோகடிக்கும் அற்ப குணம் படைத்தவர்களின் தரத்திற்கு நாமும் பயணிக்கும் போதுதான் அவர்கள் வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் செவிமடுத்து மதிப்பளிக்கும் வேளையில்தான் நாம் வார்த்தைகளாலுல் செய்கைகளாலும் நோகடிக்கப்படுவோம்.இதையும் மீறி யார் யாருக்கு என்னென்ன இடம் யாருக்கு இவ்வளவு எல்லை யார் உறவை நெருக்கப்படுத்துவது யாருக்கு எவ்வளவு இடைவெளியை நம்மிலிருந்து ஏற்படுத்திக்கொள்ளவேண்டும் என்று பகுத்தறிந்துநல்லனவற்றில் அதிகம் கவனம் செலுத்தி முற்போக்குடன் சிந்தித்து அடுத்தவர் வாழ்வில் அநாவசியமாக உரிமையெடுத்து அவர்கள் தனிப்பட்ட விடயங்களை ஆராய்வதும் அறிந்து கொள்ள முற்படுவதிலும் தேவையற்ற வாக்குவாதங்களிலும் சிக்காமல் நடப்போமானால் நம்மை யாரும் நோகடிக்க முடியாது
நோகடிப்பவரைப்பற்றியோ புண்படும் அந்த வார்த்தைகளை சேர்த்து வைத்து நம்மில் மீட்பதற்கோ நம் மனங்களில் ஒரு இடத்தையோ நேரத்தையோ ஏற்படுத்திக்கொள்வது நாமேதான்நல்ல சொல் சிந்தனைகள் செயல்கள் நல்ல வார்த்தைகள் புறம் சொல்லாமை போன்ற நல்ல பழக்கவழக்கங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு நம்மில் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு நாமே நம்மை மகிழ்வாக வைத்திருக்க முடியும்.யார் வார்த்தைகளையும் கண்டு கொள்வதும் அதுபற்றியே நமக்கு மதிப்பளிப்பவர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பதுவும் நமது வேலையாக இருக்காது.அடுத்தவர்களைப்பற்றி தவறாக சிந்திப்பதும் பேசுவதும் நம் மனதை நாமே அழுக்கடையச்செய்வதாகும்.ஆகவே இதுவரை நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதை விட இனிமேல் நீங்கள் உங்கள் மனதையும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சந்தோசமாக வைத்திருக்க விரும்பினால் அடுத்தவர்களில் உள்ல நல்ல குணங்கள் செயல்களை மட்டுமே பேசுங்கள் .அவர்கள் தீய குணங்களை உங்களில் வரவிடாமல் விரட்டுங்கள்.
No comments:
Post a Comment