Monday 23 January 2017

மாத்தி யோசி

.நீங்கள் பேசுவதை எல்லாம் உங்களுடடைய உடலிள்ள செல்கள் பதிந்து வைத்திருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.நீங்கள் நல்லதையே பேசும்போது உங்கள் சிந்தனைகள் மாற்றம் பெறும் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தெளிந்த மனம் உருவாகும்.உண்ணும் உணவை விட பேசும் பேச்சில் அதிக கவனம் வையுங்கள்.உதாரணமாக நீங்கள் பணக்கஷ்டத்தில் இருக்கும்போது உங்களுக்கு நெருக்கமான ஒருவர் ஒரு பொருளோ வீடோ வாங்குகிறார் .அது உங்களுக்கு உறுத்தலாக இருக்கும்

.எதுவரை?????

நீங்கள் ,

 ””அப்படியா நல்ல விடயம். யாராக இருந்தாலும் நல்ல நிலையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்துவது நல்லதுதானே என்ற வார்த்தைகளை வாய்விட்டு உச்சரிக்கும் வரை.

ஆம் உங்கள் கஷ்டங்களை போக்க பாடுபட வேண்டியது நீங்கள்தான் அதைவிடுத்து அடுத்தவர் கஷ்டப்பட்டு முன்னேறும்போது அங்கலாய்ப்பது உங்கள் மனத்தூய்மையை நீங்களே கெடுத்துக்கொள்வதாகும். நாம் அடிக்கடி நம்மைப்பற்றி சொல்லும் பொயான வார்த்தைகள் உண்மையாவதை நீங்களே உணர்ந்திருப்பீர்கள்.அதனால் வாழ்வை மாற்ற வார்த்தைகளை மாற்றுங்கள்.


No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...