Showing posts with label சோம்பேறி கிச்சன் https://www.facebook.com/somperykitchen/. Show all posts
Showing posts with label சோம்பேறி கிச்சன் https://www.facebook.com/somperykitchen/. Show all posts

Friday 6 October 2017

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல் பாட்டுக்களை சேகரிப்பது.
ஆனாலும் இன்று காரில் கேட்பதற்காக வழக்கம்போல் பாட்டுக்கள் டவுன்லோட்டிக்கொண்டு இருக்கும் போது ,
எங்கோ ஒரு மூலையில் ஒருவருக்குத் தெரியாமல் இருந்து ,என்பதிவில் தெரிந்து கொண்டால் நன்மையே என நினத்து
இதன் செய்ற்பாட்டைப் பதிவிடுகிறேன்.
...
1.முதலில்
கூகிள் விண்டோ ஒன்று
கூகிள் க்ரோம் {chrome}விண்டோ ஒன்று என இரண்டு விண்டோக்களை திறவுங்கள்


2.கூகிள் விண்டோவில் உங்களுக்குத் தேவையான பாடலை யூடியூப் இல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
3.கூகிள் க்ரோமில் youtube converter அல்லது youtube to mp3 converter என்று டைப் பண்ணுங்கள்
4.இப்போது கூகிள் விண்டோவில் உங்களுக்குப் பிடித்த பாடலை ப்ளே பண்ணி அதன் லிங் ஐ கொப்பி பண்ணுங்கள்.


5.கொப்பி பண்ணிய பாடல் லிங் ஐ கன்வேட்டர் பாக்ஸ் ல் பேஸ்ட் பண்ணூங்கள்
5.பேஸ்ட் பண்ணிவிட்டு converter என்பதை க்ளிக் பண்ணுங்கள்


6. தொடர்ந்து , அந்த பாக்ஸ் இன் அருகே கீழே இருக்கும் download ஐ க்ளிக் பண்ணுங்கள்


இப்போது பாடல் உங்கள் கம்யூட்டர் இல் உள்ல டவுன்லோட் என்ற ஃபைல் ற்குள் பதிவாகி இருக்கும்
7. usb ட்ரைவ் ஐ கம்யூட்டரில் பொருத்துங்கள்



8.download ஃபைல்ஸ் ஐ ஓபன் பண்ணி நீங்கள் டவுன்லோட் பண்ணிய பாடலைக்கண்டுபிடித்து அதில் ரைட் க்ளிக் பண்ணவும்
9.அதில் send to எனும் ஆப்ஷனை க்ளிக் பண்ணினால் usb drive{E:) ஐ காண்பிக்கும்
10 usb drive{E:) என்பதை க்ளிக் பண்ணினால் போதும் பாடல் சேமிக்கப்பட்டுவிடும் .


இதே போல் ஒவ்வொன்றாகா உங்களுக்குப் பிடித்த பாடல்களை சேமித்துக்கொள்ளலாம்.
சுரேஜினிபாலகுமாரன்





Tuesday 16 May 2017

ஐடியா பிடிச்சுக்கோங்கோ


நான் திருமணமாகி வந்த போது இந்த வீட்டில் தண்ணீர் குடிக்கிற க்ளாஸ் கூட இருக்கவில்லை.ஏன் ஸ்டவ் கூட இருக்கவில்லை அவ்வளவுதான்.வீட்டுடன் சேர்ந்து வரும் ப்ரிச் ,அடுப்பு எல்லாத்தையும் கூட பயபுள்ள 
குப்பைல தூக்கிப்போய் வச்சுட்டு கிச்சன் ஐ பப்பரபா நு வச்சிருந்ததை மறக்க முடியாது.

கேட்டால் எல்லாமே என் தெரிவா இருக்க வேணும் எங்கிறதுக்காக எதுவும் வாங்கவில்லையாம்.
பிறவு அடிக்கடி ஷொப்பிங் தான்.
அதிகமாக ஐக்கியா {ikea} அல்லது பியர் 1 (pier1 import} இரண்டும்தான் . அப்போது இந்த pier1 import இல் அடுக்கி வைத்திருக்கும் அழகு எனக்கு ரெம்ம்ம்ம்ம்ப பிடித்து போய்விட்டது.
அதாவது நிறத்தின் அடிப்படையில் பிரித்து அடுக்கி வைத்திருப்பார்கள்.
அதேபோலவே நானும் செய்து பார்த்தேன் கொள்ளை அழகாக இருந்தது.
பின்னர் சில வருடங்களில் பொருட்கள் அதிகரிக்கவும் ,பிஸி அதிகரிக்கவும் ,குழந்தைகள் வந்து தேரை இழுத்து தெருவில் விடவும் எல்லாம் தலைகீழாகாமாறியது.
சுமார் 3 வருடமாக இதை மறந்தும் போய்விட்டேன்.
சில நாட்களுக்கு முன் மறுபடியும் அதே ஆசை .அதனால், எனக்கு மதர்ஸ் டே க்கு எந்த கிஃப்ட் ம் வேண்டாம் ,பொக்கேவ் கூட வேண்டாம் நாள் முழுக்க வெளியே போகாமல் கிச்சன் ஐ பழைய ஸ்டைலுக்கு
மாத்த உதவ முடியுமோ? என்று ஹஸ் இடம் கேட்டிருந்தேன்.எதிர்பார்த்ததை விட அதிகமாகவே உதவி கிடைத்தது.
எல்லாம் வெளியே எடுத்து கழுவி துடைத்து நிறங்களை பிரித்து தர நான் அடுக்கி வைத்தேன்.வெள்ளைதான் மிக அதிகம் அதனால் அந்த கப்போர்ட் ஐ பின்னர் நானே செய்கிறேன் என 
அதைவிட்டு மற்ற நிறங்களை அடுக்கியுள்ளேன்.
உபயோகிக்கவும் சுலபமா இருக்கும் .பரிமாறும்போதுகூட பார்க்க அழகாக இருக்கும்.
எப்பிடி சுத்தி சுத்தி பாத்தாலும் அடிப்படை வண்ணங்கள் 6 க்குள் எல்லாவற்றையும் அடக்கிவிடலாம்.அதனால் நிறைய இடம் தேவை என்ற அவசியமில்லை. கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் ,கலைந்தாலும் கூட
அழகு மாறாது. தாராளமா செய்து பாருங்கோ.
இதோ சில க்ளிக்ஸ்.


































Thursday 11 May 2017

மறுபடியும் வெங்காயம்




இது நான் வளர்த்த வெங்கியேதான்.இந்த மெதேர்ட் ல் ஒரு தடவை வெங்காயம் நட்டு வளர்த்தேன் .மிகவும் பிடித்து போய் விட்டது .போத்தலில் துளைகள் இட்டு வெங்காயத்தை வெளியே முளையிடுமாறு வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மண் நிரப்பி வைக்க வேண்டும்.
ரெம்ப செழிப்பாகவே வளரும்.


இஞ்சி செடி




எவ்வளவு வளமான மண்ணில் நட்டு வைக்கிறோமோ அவ்வளவுக்கு பலன் கொடுக்கும்.என்னிடம் எல்லா சீஸன் க்கும் இவ்வாறு முளைக்க வைத்த இஞ்சி இருக்கும்.
இஞ்சி டீ க்கு இந்த இஞ்சி அளவுக்கு கடையில் கிடைக்கும் இஞ்சி டேஸ்ட் கொடுக்காது.நட்டுப்பாருங்கள் சில நாடுகளில் வளர்வதில்லை என்கிறார்கள் வளராவிட்டாலும் மண்ணுக்குள் வைத்து எடுத்தால் 
பழுதாகாமல் கூடுதல் சுவை.


வெங்காயம்



மிக ஈஸியாக எந்த சப்போர்ட் ம் இல்லாமலே முளைக்க கூடியது இந்த வெங்காயம் .அப்படி முளைவிடுவதில் சிலதை எடுத்து இப்படி நட்டு வைத்தால் உணவை அலங்கரிக்கவும்
வாசனைக்கு சேர்க்கவும் ,முட்டை பொரிக்கவும் என்று பலவற்றிற்கு கை கொடுக்கும்.அத்தோடு வெட்ட வெட்டவும் வளரும்.


இஞ்சி உள்ளி பேஸ்ட்



அவசரத்தில் சமைக்கும் போது இஞ்சி உள்ளி அரைத்துக்கொண்டிருப்பது ஒரு வேலையாக இருக்கும்.தவிர்க்கவும் இயலாது.மணமும் சட்டென்று விட்டுப்போகாது.
சோ இப்படி மாதத்திற்கு ஒரு தடவை இரண்டையும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ அரைத்து ஐஸ் கியூப் மோல்ட் ல் வைத்து பிரீஸர் ல் வைத்தால் வேலை சுலபம்.
ப்ரீஸ்ரில் வைப்பதால் சுவையிலும் எந்த மாற்றமும் இருக்காது.


மிளகாய் வெட்ட



மிளகாய் சிலர் கட்டிங்க் போர்ட் ல் வைத்து வெட்டுவதை பாத்திருக்கிறேன்.நான் ஒருநாளும் அப்படி வெட்டியதில்லை.
மிளகாய் காம்பில் பிடித்துக்கொண்டு கிச்சன் கத்தரிக்கோலால் வெட்டிவிடுவேன்.முக்கியமாக குழந்தைகளுடன் டீல் பண்ணுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
கத்தியால் வெட்டுவதை விட மிகவும் சுலபம்.


சாக்ஸ்{ socks}



மோர்னிங் பிஸி யில் ரெம்பவே கடுப்பேத்தக்கூடியது இந்த சாக்ஸ். அதிலும் வீட்டில் எல்லோருமே பிஸியானவர்களாகவும் 2 ற்கும் மேற்பட்டவர்களாகவும் இருப்பின் சொல்லவே வேண்டாம்.
வீடு ரணகளமாவதை யாராலும் தடுக்க முடியாது.
நம் வீட்ட்டில் திருமணமான புதிதில் ரெண்டு பேருமே போர் .சாக்ஸ் க்கு ஜோடி சேர்க்க கல்யாண ப்ரோக்கர் வைக்க வேணும்போல எங்கிற ரேஞ் க்கு இருந்தது.
இதனால் டைம் கில் பண்ணுபடுவதை தடுக்க ஆழமா ஜோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தேன்.
ம்ம்ம்ம்ம் சாக்ஸ் ஐ யூஸ் பண்ணி முடிய வாஷிங்க் மெஷின் ல போடுறதுக்கு பதிலா குப்பையில் போட்டேன்.
பதிலுக்கு ஆளுக்கு 30 ஜோடி ஒரே நிறம் .வெள்ளை.சமர் விண்டர் என 15 ஜோடி அரை சாக்ஸ் 15 ஜோடி நீள சாக்ஸ்.
இந்த 30 ஜோடியை தாண்டி ஒரு புது ஜோடி வாங்கினாலும் அதே சாக்ஸ்தான் வாங்க வேண்டும் என்பதும் .ஏற்கனவே பழசான ஒன்றை குப்பையில் போட வேண்டும் என்பதும் என் சட்டம்.
யெஸ்ஸ்ஸ்ஸ் அதிகமான சாக்ஸ் வைத்திருந்தால் கவனமில்லாமல் சிதறிப்போய் தேவைக்கு மாட்டாமல் கடுப்பாகும்.
அடுக்கவும் தேவையில்லை .ஜோடி மாறினாலும் டென்ஷன் இல்லை.திருடினாலும் கண்டு பிடிக்க முடியாது.
அப்பப்பா திருமணத்திற்கு முன்னம் தங்காவுகளிட்ட திருடுறதும் மாட்டுறதும் அது வேற.
கால்ல திருட்டு சாக்ஸ் தெரியுறமாதிரி இருக்கும்போதே நான் எடுக்கவே இல்ல என்பேன்.
இப்போ விஷயத்திற்கு வருவோம்
சிரமங்களை தவிர்க்க
1.மறந்தும் கூட வித்தியாசம் வித்தியாசமாகவோ கலர் கலராகவோ, சின்னன் பெரிசாகவோ,ப்ராண்ட் மாறியோ சாக்ஸ் வாங்க கூடாது .
2.தோய்த்து dryer machine இல் இருந்து எடுத்ததும் இவ்வாறான ஓப்பன் பாக்ஸ் ல் வெளியே தெரியாத அளவு நிரப்பி வைக்க வேண்டும்.
முதல் நாள் சுருட்டி மடித்து வைத்து மறுநாள் அதை கலைத்து மாட்டுவது வீண்வேலை
3.வீட்டில் 2 பேருக்கு ஒரே அளவு சாக்ஸ் ஆக இருந்தால் சேர்த்தே வைக்கலாம்.பிரச்சனை இல்லை தோய்த்தபின் தானே அணிகிறோம்.
அவ்வளவுதான்

முகப்பருவும் நானும்



முகப்பருக்கள் பல வகை. அதற்கு நெட் ல் தேடினால் ஏகப்பட்ட அட்வைஸ், home remedies,எல்லாம் கிடைக்கும். ஆனால் ஒவ்வொருத்தர் ஸ்கின் தன்மையை பொறுத்தே ஒவொன்றின் பலன் இருக்கும்
நான் சொல்லப்போவது அக்னே பற்றி

இது வருவதற்கான முக்கிய காரணம் ஹார்மோன் மாற்றங்கள்.ஹார்மோன் ஏற்றத்தாழ்வு 
இது கறுப்பு ,வெள்ளை ,சிவப்பு என மூன்றில் ஏதாவது ஒரு நிறத்தில் வரக்கூடும் . இந்த பருக்கள் கடினமானதாக இருக்கும்.
பிறந்த குழந்தைக்கு கூட வரலாம் இதை பேபி அக்னே என்பார்கள் .தன்னாலேயே சில மாதங்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.சில டாக்டர்கள் க்ரீம் எழுதுவார்கள்.பல டாக்டர்ஸ் 
பவுடர் போட வேண்டாம் மற்றும்படி எதுவும் தேவையில்லை என்பார்கள்.

அடுத்து டீனேஜ் க்கு வரும் இது காலப்போக்கில் இல்லாமல் போனாலும் எல்லோருக்கும் தடயங்கள் முழுதாக இல்லாமல் போகும் என்று சொல்ல முடியாது.

மூன்றாவது மேற்சொன்ன இரண்டு நிலைகளையும் கடந்த பெண்களுக்கு ஹார்மோன் இம்பலன்ஸ் காரணமாக வரும்.இதன் அடையாளம் அவ்வளவு சுலபமாக விட்டுப்போகாது.

எனக்கு ஒரு ஹார்மோன் மாத்திரை காரணமாக ஒரு கட்டத்தில் முகம் கழுத்து ,முக்கியமாக நெற்றி என்று வெறித்தனமாக அள்ளிப்போட்டதுமில்லாமல் அடையாளம் ம் போகாமாட்டேன் என்று ஒட்டிக்கொண்டு விட்டது.

எங்கே போனாலும் என்னை முன்னபின்ன தெரிந்த ஐசுவர்யா ராய்கள் இதைப்பற்றி விசாரித்து பரிதாபபடுவார்கள் பாவம் .

எனக்கே ஒரு கட்டத்தில் எப்பிடி இருந்த நான் இப்டி ஆகீட்டேன் ரேஞ் க்கு பீல் ஆக தொடங்கி விட்டது.

சரி இந்த dermatologist எல்லாம் எதுக்கு இருக்கிறார்கள் ?????
இங்கே நேரடியாக dermatologist இடம் போக முடியாது பமிலி டாக்டர் சிபாரிசு செய்ய வேண்டும்.

சரி போவோம் போவோம் என சொல்லிக்கொண்டே நாட்கள் கடந்து கொண்டிருந்தது .
ஹஸ் ஒருநாள் பிடிவாதமாக பமிலி டாக்டரிடம் கூட்டிச்சென்றார் .அவரும் ஒரு dermatologist இடம் அனுப்பினார்.

இந்த அக்னே மருத்துவம் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் செய்ய முடியாது.ப்ரக்னண்ட் வுமன் ஆகவோ,பீடிங் மதர் ஆகவோ ,அலேர்ஜிக் உள்ளவர்களாகவோ ,பெரிய நோய்களிற்கு மருந்துகள்
எடுத்துக்கொண்டு இருப்பவர்களுக்கோ நம்மால் எதுவும் பரிந்துரைக்க முடியாது என்று ,கடையில் ப்ரஸ்கிரிப்ஷன் இல்லாமலே எல்லோரும் வாங்க கூடிய cetaphil cream ஐ வாங்கி போட சொல்லி அனுப்பி விட்டார்.

ஆனால் மருத்துவ கிறீம் அல்லாத எதுவும் அக்னே க்கு பலன் அளிக்காது ப்ரெக்னன்சி எல்லாம் முடித்து வரும்படி அனுப்பினார்.

இப்படியே இந்த டொட் டொட் மூஞ்சியுடனேயே நானும் வாழ்ந்து வந்தேன்.

காரணம் dermatologist அப்பொயிண்ட்மண்ட் 3 மாசம் வெயிட் பண்ண வைத்துத்தான் தருவார்கள் .1 வருடம் அவர்களிடம் போகவில்லை என்றால் மீண்டும் பமிலி டாக்டர் சிபாரிசு செய்ய வேண்டும்.
அப்பொயிண்ட்மண்ட் கான்சல் பண்ணினால் மேலும் ஒரு மாசம் வெயிட்பண்ண வேண்டும்.

எனக்கோ முன்னைவிட இப்போது அழகில் அக்கறை வந்துவிட்டது.காரணம் முதல் முதலாக நீனாவை ஸ்கூல் ல் சேர்க்கப்போகிறேன்.நீனாவின் அம்மாவாக கொஞ்சம் அழகாக தெரிய வேண்டும் என ஆசை வந்துவிட்டது.

அதனால் 

எல்லா தடைகளையும் உடைத்து அடோரா வையும் நீனாவையும் அப்பா பொறுப்பில் விட்டு விட்டு டாக்டரிடம் போனேன். பருக்களை எல்லாம் அழகாக செக் பண்ணி டாக்டர் முதல் 3 மாசத்திற்கு ஒரு கிறீம் தருகிறேன்.அதற்கு
குறையாவிட்டால் அடுத்த 3 மாசத்திற்கு மாத்திரை தருகிறேன் என்று biacna gel என்பதை எழுதி கொடுத்தார்.

ஒழுங்காக போட்டுக்கொண்டு இருந்தேன் ,பிறகு பிரான்ஸ் போன இடத்தில் அக்கா வீட்டில் மறந்து வைத்து வந்துவிட்டேன்.
அதுவரை க்ரீம் ஐ ஒழுங்காக போட்டேனே தவிர முகத்தை ஒப்பிட்டு பார்க்கவோ கவனிப்பதிலோ அலட்சியமாக இருந்து விட்டேன்.
ஒருநாள் ஆசுவாசமாக முகத்தை ஆராய்ந்த பின் எனக்கு அதிசயம் என்னவென்றால் என் முகத்தில் இருந்த நிறைய அடையாளங்களை காணோம்.

மறுபடியும் டாக்டரிடம் ஓடிப்போய் அதே க்ரீம் வாங்கி போட்டுக்கொண்டு இருக்கிறேன்.அடிக்கடி கண்ணாடி பார்ப்பது ஒரு தொழிலாக மாறி இருக்கிறது.

சோ இதுல இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால் யார் யாரோ சொல்லும் க்ரீம்களை விட டாக்டரிடம் போய் அவர் உங்கள் ஸ்கின் டைப் ற்கு தரும் பிரத்தியேக க்றீம் ஐ வாங்கி
உபயோகித்து பலன் பெறுங்கள் என்பதைத்தான் இவளவு நேரமாக சுத்தி சுத்தி நீளமாக சொன்னேன்.

இது உருளை சிப்ஸ் இல்ல உருளை டிப்ஸ்சு



இந்த உருளைக்கிழங்கு ஸ்கின் கேர் க்கு எவளவு உதவும் எங்கிறது நிறைய தடவை ஸ்டேட்டஸ் ஆ பதிவு செய்திருந்தாலும் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

முகம் ப்ரஷ்ஷா இருக்க உருளைக்கிழங்கை வட்டமா வெட்டி முகத்தில நல்லா மசாஜ் செய்து 15 நிமிஷத்தில கழுவினால் முகம் ப்ரஷ் ஆ இருக்கும்.
உருளை அவிச்ச தண்ணியை வீணாக்காமல் கொஞ்சம் வெது வெதுப்பு இருக்கும்போது ஒரு பாத்திரத்தில் ஊத்தி அதற்குள் காலை 15 நிமிஷம் வைத்திருந்தால் பாதங்களில் உள்ள அழுக்குகள் போய் கால் அழகாக இருக்கும்.

நான் இரவு தூங்காவிட்டால் முகம் டல் ஆக இருப்பதை போக்க ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி சின்ன சின்னதா வெட்டி 2 டேபிள் ஸ்பூன் பால் ,அல்லது தயிர்,அல்லது ரோஸ் வாட்டர்
இப்பிடி கிடைக்கிற எதையாச்சும் சேர்த்து கிர்ர்ர்ர்ர்ர் நு மிக்ஸீல அரைச்சு முகத்திற்கு பூசி 15 நிமிஷம் விட்டு கழுவுவேன்.

என்னமோ ரெம்ப காலமா அதிகமா விரும்பி ஸ்கின் க்கு யூஸ் பண்ணுற கிச்சன் பொருள் இந்த உருளைக்கிழங்குதான்.

உருளையின் தோலைக்கூட நல்லா முகத்தில வச்சு சுத்தி சுத்தி தேய்ச்சுட்டுத்தான் குப்பைல போடுவேன்.

என்னோட ஸ்கின் க்கு ஹெல்ப் பண்ணுது நீங்களும் செய்து பாருங்கோ .

மஷ்ரூம் கீரை சூப்




காளான் 250 கிராம் 
கீரை 500 கிராம்
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 1
க்ரீம் சீஸ் 3 டேபிள் ஸ்பூன்
உப்பு
மிளகு
செய்முறை 



2 கப் தண்ணீரில் கீரை,காளான்,வெங்காயம் ,மிளகாய் எல்லாவற்றையும் உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
வெந்தபின் க்ரீம் சீஸ் சேர்த்து அரைகுறையாக ப்ளெண்டரால் அல்லது மிக்சியில் அரைக்கவும்
மிளகு தூவி சாப்பிடவும்.
இது மிக குறைந்த நேரத்தில் செய்துவிடலாம் .பசியும் அடங்கிவிடும்.
சில சூப் ரெண்டே நிமிசத்தில ரெடியாகிடும் என்பார்கள் .2 நிமிஷத்தில ரெடியாக்கலாம் பட் அது சைனீஷ் க்கு ஒத்துவரும் நமக்கு அல்ல .
முன்பெல்லாம் நாங்கள் ப்ரேக்ஃபாஸ்ட் க்கு சூப் எடுப்போம் இப்போ லஞ் ,டின்னர் எல்லாம் விதம் விதமான சூப் ல யே நகருது.


யெஸ்ஸ்ஸ் அழகுக்காக ஹெல்த ஐ கவனிக்காமல் விட்டாலும் வாழும் வரைக்கும் ஆரோக்கியமா நடமாடுறதுக்கு ஹெல்த் ஐ கவனிச்சுதானே ஆக வேணும்.
சோ சாப்பாட்டை சமைச்சு வச்சுட்டு பசிக்கு காத்திருக்காமல் பசி எடுத்ததுக்கு பிறகு சட்டென செய்யுற ஆரோக்கியமான சூப் தான் இது .இந்த க்ரீம் சீஸ் எனக்கு ரெம்ப பிடிக்கும் .
பட் இது கலோரி அதிகம் அப்டி நீங்கள் நினைத்தால் ஷவக்ரீம் {sour cream},Whipped Cream ,மில்க், ஏதாவது யூஸ் பண்ணலாம் .
விரும்பிய காய்கறிகளை நறுக்கி வெங்காயம் பச்சை மிளகாய் ,உப்பு சேர்த்து 2 கப் தண்ணீரில் வேக வைத்து 2 டேபிள் ஸ்பூன் க்ரீம் சேர்த்து ப்ளெண்டரால் கிர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்
அவளவுதான் மிளகு தூவி சாப்பிடவும் .



சின்ன மீனும் பெரிய கதையும்


என்னதான் சமையலில் ஆர்வம் இருந்தாலும் விஷேஷ நாட்கள் தவிர்த்து சாதாரண நாட்களில் இருபதில் இருந்து முப்பது நிமிடங்களுக்கு மேல் கிச்சனில் செலவிட பிடிப்பதில்லை.
அவசரமான திட்டமிட்ட ஆயத்தம் ,5 அடுப்புக்கள் பிளஸ் ஒவன் ,க்ளீனிங்க் என்று அமர்க்களப்படும் அந்த அரை மணி நேரமும் என் கிச்சன்.
இது தெரியாத சிலர் என்னை கேலி செய்வார்கள். உன்னைப்போல வெட்டியா இருந்தால் நாங்களும் செய்வோம் என்பார்கள்.
ஆனால் இந்த திட்டமிடல் , ஆர்வம் எல்லாவற்றையும் நான் கற்றுக்கொண்டது , தினமும் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறி ஒரு நாளுக்கு 8 மணித்தியாலங்கள் வெளியில் வேலை செய்து விட்டு வேலை முடிய 
2 மணிநேரம் கோர்ஸ் படிக்க க்ளாஸ் சென்று விட்டு , காலை 7 மணிக்கு ஸ்டார்ட் பண்ணிய காரை இரவு 8 மணிக்கு மேல் கொண்டுவந்து பார்க்கிங் ல் அடித்து விட்டு களைத்துப்போய் வீட்டுக்கு வந்து 
 ஹஸ் என்னை விட அதிக நேரம் கடின வேலை செய்கிறாரே என எவளவு திட்டினாலும் வீட்டிலுள்ள எந்த வேலையிலும் பங்கு கொடுக்காமல் நானே செய்தபோது வந்த ஆர்வமும் திட்டமிடல்களும்தான் இவை.
இன்னும் சொல்லப்போனால் பிஸியிலும் இதைவிட நேர்த்தியும் வேகமும் இருந்தது எல்லாவற்றிலும் .
யெஸ்ஸ்ஸ்ஸ் பிஸி லைஃப் ரெம்ப நல்லதாக்கும் .
அப்போதெல்லாம் வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்காததால்தான் எனக்கு வீட்டிலேயே குழந்தைகளுடன் செலவிட்ட இந்த 3 வருடங்கள் ஒரு நாளில் 48 மணித்தியாலங்கள் இருப்பது போலவும் 
உடம்பில் சுப்பர்மான் ரேஞ்ச் க்கு சக்தி இருப்பது போலவும்
காணும் எல்லாவற்றையும் முன்னைவிட 10 மடங்கு அதிகமாக ரசிக்க வைத்ததும் எனலாம்.
இதை ஏன் சொல்கிறேன் அவ்வ்வ்வ்வ்வ்வ் என்னுடைய வீட்ட்டு ராஜ்ஜியம் இந்த வருட செப்டம்பர் உடன் முடிவிற்கு வர இருக்கிறது.
இருக்கட்டும் இந்த நெத்திலி மீன் பொரியலையும் என் சோம்பேறி விளையாட்டையும் பாருங்களேன்.


மீனை சுத்தம் செய்து உப்பு, மஞ்சல் ,தனிமிளகாய்த்தூள் ,2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் பூசி ஒவன் ல் 400 டிகிரியில் 18 நிமிடம் பேக் அவளவுதான்.


இது என் தங்காவுக்கு ரெம்ப பிடிக்கும் என்பதால் அடிக்கடி செய்து நானே சாப்பிட்ருவேன்.
ஸூஊஊஊப்பரா இருக்கும் வித ப்ளேன் ரைஸ் அண்ட் தக்காளி சாலட்.





டிப்சு




குடும்பத்தில் யார் ஒருவருக்கு வீட்டில் செலவிட அதிக நேரம் கிடைக்கிறதோ அவர் மிகக் கடினமான வேலைகள் தவிர்ந்த மற்றைய வேலைகளை முடித்து வீட்டையும் சுத்தமாக்கி வைத்திருந்தால் 
வரும் லீவு நாட்களும், குடும்பத்தில் எல்லோரும் இணைந்த ஓய்வுப்பொழுதுகளும் மிகவும் ஆசுவாசமாக இருக்கும்.
நான் வேலை நாட்களில் வேலையோடு வேலையாக எல்லாவற்றையும் செய்துவிட்டு ஓய்வு நாளுக்கு ஆயத்தம் செய்வது அதிகம் .மிகவும் ரிலாக்ஸ் ஆக உணர்வேன்.
அடுத்து 
15 வருடங்களுக்கு முன் என்று நினைக்கிறேன் how clean is your house எனும் டி வி ப்ரோக்ராம் ஒன்று பார்ப்பேன்.
அதில் சிலர் பிஸியாகவும் அலட்சியமாகவும் இருந்துவிட்டு வீட்டை க்ளீன் பண்ண இந்த 2 லேடீஸ் உடன் உடன்படிக்கை செய்து வீட்டை ஒப்படைப்பார்கள்.
அப்போது வீடு ஒழுங்கற்றுபோக எல்லோரும் சொல்லும் காரணம்
வேலை நேரமில்லை
,குழந்தைகள் அழுக்காக்குகிறார்கள்,
வீட்டுக்கு வரும்போது களைப்பாக இருக்கிறது,
ஓய்வு நாட்களில் சுத்தம் பண்ணுவதற்கு நேரம் செலவிட விருப்பமில்லை,{வெளியில் போகிறோம்,வீட்டில் ஓய்வெடுக்கவே விரும்புகிறோம்}
செய்தால் நான் மட்டுமே செய்கிறேன் வீட்டில் உள்ள யாரும் ஒத்துழைப்பதில்லை அதனால் எனக்கும் அக்கறை இல்லாமல் போய்விட்டது
சிரமபட்டு சுத்தம் செய்தாலும் சட்டென்று கலைந்து விடுகிறது{ அது அதுக்கென்று இடமும் அந்த இடங்களில் மட்டும் பொருளும் வைத்தால் கலைந்தாலும் எளிதில் ஒழுங்குபடுத்தலாம்}
இருக்கட்டும் அப்பப்போ வேலைக்கு பணம் கொடுத்து செய்து கொள்ளலாம் என்று விட்டு விடுவோம்
இப்படி நிறைய ....
அப்போது அந்த 2 பெண்மணிகளும் கடினமான குரலில் சொன்னது
நோ ஒரு போதும் இதெல்லாம் ஒரு காரணமாக இருக்க முடியாது ,இருக்கவும் கூடாது கம் வித் மீ என கூட்டிப்போனார்கள் 
டைமர் ஐ ஆன் செய்து விட்டு டாய்லெட் ஐ கழுவ சொன்னார்கள் 2 நிமிடங்கள் எடுத்தது .மறுபடி கழுவச்சொன்னார்கள் 38 செக்கன் எடுத்தது.
இந்த 38 செக்கன் ஐ செலவழிக்க நீ சொல்லும் காரணம் சரியா என்பது அவர்கள் கேள்வி???
இதே போலவே சாண்ட் க்ளொக் வைத்து விட்டு எல்லா வேலைகளையும் செய்வித்தார்கள் எந்த வேலையும் 5 நிமிடங்களை தாண்டவில்லை.
எந்த வேலையும் இதில் டெய்லி செய்ய வேண்டியதில்லை டெய்லி டிஷ் வாஷர் ஐ யூஸ் பண்ணுங்கள் தண்ணீருக்கான பணத்தை சேமிக்கலாம் ,
வாரம் ஒருமுறை அதுவும் வேலையால் வந்தபின் ஒருநாள் எல்லா அழுக்குத்துணிகளையும் மஷின் ல் போட்டு எடுங்கள் .{ அழுக்காக்கிவிட்டு புதுசு புதுசா வாங்கி போட்டுக்கொண்டிருந்தார்கள்}
இப்படியெல்லாம் அறிவுரை சொல்லி சொல்லி எல்லோரும் சேர்ந்து செய்து வேலை முடிந்துவிட்டது
வீடு சுத்தமாகி விட்டது .
லைட் ஐ ஆஃப் பண்ணி அழகான மெழுகுவர்த்திகளை ஏற்றிவிட்டு எல்லோரும் அமர்ந்து கோப்பி ப்ரேக் எடுத்தபோது மொத்தக்குடும்பமும் அழுதுவிட்டார்கள்.
அதற்கு முன் அவர்கள் க்ளீன் ஹோம் ஐ எஞ்ஜோய் பண்ணியிருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.
சுத்தம் சுகம் தரும் என்பது அதுதான் போல

தற்கொலைத்தக்காளி upside down topsy turvy


தலைகீழாக தக்காளி வைப்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.




காலநிலையும் பராமரிப்பும் சரியாக இருக்கும்பட்சத்தில் சாதாரணமாக நிலத்தில் நடுவதை விட பன்மடங்கு காய்கள் கொடுக்கும் என்று ஆராய்ந்து இந்த முறையை பயன்படுத்துகிறார்கள்.
நமது இடவசதிக்கேற்ப நாங்களும் இதன் மூலம் பலன்பெறலாம்.குறிப்பாக இட வசதி குறைந்தவர்களுக்கு உகந்தது.
கடைகளில் இந்த upside down topsy turvy ஐ வாங்கியும் உபயோகிக்கலாம் .



சுலபமாக நாங்களே இந்த ஐடியாவை மட்டும் எடுத்துக்கொண்டு படத்தில் காட்டி இருக்கும் பாக் ஐ கொண்டோ பழைய பக்கெட் ஐ கொண்டோ வாளிகளை கொண்டோ,சாதாரண பூச்சாடிகளைக்கொண்டோ
இதை செய்து கொள்ளலாம்.
மிகவும் சுலபமாக செய்யலாம் .


சிலர் தண்ணி போத்தலில் செய்வதையும் பாத்திருக்கிறேன்.
1.நீங்கள் பாவிக்கப்போகும் உபகரணத்தின் அடிப்பாகத்தில் மிகச்சிறிய துளை ஒன்றை இட்டுக்கொள்ளுங்கள் 
2.ஒரு காட்டன் ,அல்லது வெல்வெட் பழைய துணி அல்லது நீரை வெளிவிடக்கூடிய ஃபோம் எடுத்து ஒரு வட்டமாக வெட்டி அதிலும் சிறிய துளை விடுங்கள்.
{நான் படத்தில் காட்டியதுபோல் நெட் இருந்தாலும் துணியை சின்னதாக வைத்து நெட் ஐயும் சேர்த்து வைக்கலாம் .பட் கட்டாயமில்லை}
3.இப்போது துணியை வாளிக்குள் வைத்து தக்காளியின் வேர் நம்மைப்பார்க்கக்கூடியதாகவும் தளிர் பூமியை பார்க்ககூடியதாகவும் உள் நுளைத்துவிடுங்கள்.
மிக முக்கியமான விடயம் செடி 3 வாரத்திற்கு உட்பட்ட அதாவது அதிகம் வேர்விடாததாக இருக்க வேண்டும்
4.ஓரளவு மண் நிரப்பியதும் உயரத்தில் ஏற்ற இடத்தில் மாட்டி விடுங்கள் 
மீதி மண்ணை மாட்டிய பின் நிரப்பலாம்.


அவ்வளவுதான்
எனக்கு போன வருடம் அவ்வளவாக காய்க்கவில்லை.காலநிலை சரியில்லை யூன் மாதம் ஸ்னோ கொட்டி மண்ணை மறைத்துக்கொண்டு ஸ்னோ படிந்திருந்தது.ஆனாலும் 2 அழகான குட்டிப் பழங்கள் தரவே செய்தது.
2015 நிறைய காய் தண்ணீர் கூட ஊற்றவில்லை டைப்பர் ல் தண்ணீர் நனைத்து மண்ணுக்குள் மூடி விட்டு டூர் போய்விட்டோம் .ஆனாலும் நிறைய காய்கள்.
கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள் காய்கள் தராவிட்டால்கூட பார்க்கும் நேரமெல்லாம். பிஸியும் மன இறுக்கங்களும் களைந்து மனதை மகிழ்விக்கும் 
இதானால் ஏதும் நட்டம் ஏற்படப்போவதில்லை.











youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...