Friday, 20 January 2017

கிட்ஸ் யூ ட்யூப்


குழந்தைகளுக்கு போன் ,ஐ பாட்  இவையெல்லாம் கொடுக்கலாமா கொடுக்க கூடாதா என்று எல்லா அம்மாக்களும் மாதிரி எல்லாத்தையும் ஒளித்துத்தான் வைத்திருந்தேன்.

ஆனால் குழந்தை வளப்பு சம்மந்தமாக ஒரு ப்ரோகிராமில் மீட்டிங்
போனபோது ,
சந்தேகம் குழப்பம் என்று பெற்றோர் கேட்ட முதல் கேள்வி அதுவாக இருந்தது.

குழந்தைகள் போன்,ஐபாட் க்கு மிகவும் ஆசைப்பட்டு அடம்பிடிக்கிறார்களே கொடுக்கலாமா????

அதற்கு அவர்கள் பதில்

ஆம் கொடுக்கலாம் .ஒரு நாளுக்கு 1 மணித்தியாலங்கள் வரை தாராளமாக அவர்களை உங்கள் கண்காணிப்பின் கீழ் அனுமதிக்கலாம்.


இப்போது விஷயத்திற்கு வருகிறேன்
குழந்தைகளுக்கு யூ ட்யூப் ல் நர்சரி ரைம்ஸ் பிளே பண்ணினால் முதலில் வழக்கம்போல விளம்பரங்களை கடக்க வேண்டியது உங்களை நிச்சயமாக எரிச்சலூட்டும்.அதுவும் சில விளம்பரங்கள் அருவருப்பானவையும் பயமூட்டுவனவாகவும் இருக்கும்.

என் மகளுக்கு ஒருநாள் விழுந்த காயத்திற்கு மருந்து போட வேண்டி இருந்தது அவளை அழாமல் திசை திருப்ப யூ ட்யூப் ல் ரைம்ஸ் பிளே பண்ணி விட்டு தொடங்குவோம் என யூ ட்யூப் ல் ஜானி ஜானி யெஸ் பாப்பாதான் பிளே பண்ணினேன்.ஆனால் அதற்கு முன்னர் ஒரு விளம்பரம் வந்திச்சே ஹோய் ஹோய் ஹோய் என ஒருவர் சத்தமாக முரட்டு குரலில் கத்திக்கொண்டு பாப்கோனை வாய் நிறைய அதாவது வாய்க்குள் அடங்காமல் வெளியே கொட்ட கொட்ட திணிப்பார்.

ஓ வென்று கதறி கதறி அழத்தொடங்கிவிட்டாள் மகள் .அடுத்த மகளும் ஓடி வந்து அதை பார்த்து விட்டு சேர்ந்து அழுது என்னை மூச்சு முட்ட வைத்ததும் இல்லாமல் தொடர்ந்து ஒரு 4 நாளா அதே மாதிரியே சாப்பாட்டை வாய்க்குள் திணிப்பாள்.

இது மட்டுமன்றி வீடியோ எடுத்து கொடுத்துவிட்டு குளிக்க போய் வந்தால் ஒருநாள் ரைம்ஸ் க்குள் யாரோ கூடாத வீடியோ வை அப்லோட் பண்ணி வைத்திருக்கிறார்கள் .அதை இவள் பிளே பண்ணவும் நான் ஐ பாட் ஐ வாங்கவும் சரியாக இருந்தது.
உடனே ரிப்போட் செய்து விட்டு குழந்தைகள் பார்க்க பாதுகாப்பாக என்ன வழிகள் இருக்கிறது என்று அதையெல்லாம் செய்து கொண்டு இருக்கையில் என் கண்ணில் பட்டது இந்த கிட்ஸ் யூ ட்டியூப்.




யெஸ்ஸ்ஸ் சாதரண வீடியோக்களுக்கு நாம் செய்யும் பெற்றோர் பாதுகாப்பு எல்லாம் செய்து
வடிகட்டி
வயது எல்லைகள் பிரித்து 
விளம்பரங்கள் இல்லாமல்
நேரம் கணிப்பிட்டு கொடுக்கக்கூடியதாக
வீடியோக்களை லிமிட் பண்ண கூடியதாக
பாஸ்வேர்ட் அமைக்க கூடியதாக
வீடியோக்கள் சம்மந்தமாக ஈமெயில் பெறக்கூடியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
பிள்ளைகள் அடிக்கடி பார்ப்பது எப்போதும் முன்னால் காண்பிக்கும் தேட தேவையில்லை.
அப்ப் பெயர் YT Kids.
ஒரு வருடமாக யூஸ் பண்ணுகிறேன் நிறைய கற்றுக்கொள்கிறார்கள் இதன் மூலம்.

6 comments:

  1. Good post surej ..yes those ads are always annoying ..shall share this post in my next blog post.

    ReplyDelete
  2. Oh..is it? Will check it. Thanks for the info.! 😊

    ReplyDelete
  3. ஆஹா வெல்கம் சுரேக்கா வெல்கம்... எனக்கு ....... நியூஸ் தந்ததாலயே இங்கு வந்தேன், இல்லாவிட்டால் தெரிந்திருக்காது.ஆர் தந்தது நியூஸ் எனக் கேட்கப்புடா:).. சந்தோசமாக இருக்கு தொடர்ந்து எழுதுங்கோ..

    ReplyDelete
  4. அதிகம் கவலைப்படாதீங்கோ... நல்ல புத்திமதிகள் சொல்லி வளங்கோ.. அவர்கள் நல்லா வருவார்கள்... “நிலவுக்குப் பயந்து பரதேசம் போக முடியாது”... அதனால ஓவரா கண்டிப்பாகவும் இருக்க வேண்டாம்ம்.. இக்காலத்துப் பிள்ளைகளும் அனைத்தையும் ரேக் இட் ஈசியாக எடுக்க கற்றுக்கொள்கிறார்கள்... உங்களைப்போல அம்மாக்கள் ஓவர் றியாக்ஸன் காட்டும்போதுதான் அவர்களும் பயந்து விடுகிறார்கள்... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    ஆனா உண்மைதான் நிறைய நல்ல நல்ல கிட்ஸ் வெப்சைட்டுக்கள் இருக்கு.. அப்பப்ப நானும் எழுதி வைத்ததுண்டு இப்போ எங்கே எனத் தெரியாது.. பாருங்கோ கொஞ்சக் காலத்தில் அவர்களுக்கே தெரியும் எதைப் பார்க்கலாம் எதைப் பார்க்கக்கூடாது என..

    எங்கட பிள்ளைகள் சின்னவர்களாக இருக்கும்போது இப்படி ஏதும் சில அட் கள் வரும்போது கையால் கண்ணைப் பொத்துவார்கள்.. ஹா ஹா ஹா..

    கண்காணிச்சுக்கொண்டுதான் இருக்கோணும் ஆனா அதிகம் பயப்படாதீங்க.

    ReplyDelete
  5. குழந்தைகளோடு இருப்போருக்கு உங்கள் தகவல் அதிகம் பயன்படும்.

    ReplyDelete
  6. அனுபவப் பகிர்வு.
    இன்னும் நிறைய ஷெயார் பண்ண வேணும் சுரேஜினி.

    ReplyDelete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...