வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
இது ஐ வி எவ் போன்ற இன்னுமொரு குழந்தை இன்மைக்கான சிகிச்சை.
வெளியே எடுக்கப்பட்ட கருமுட்டையையும் விந்தையும் இணைத்து உடனேயே லாபரஸ்கொப்பி மூலம் கருப்பைக்குழாயில் பதிய வைப்பதாகும்.
கருப்பைக்கழுத்துச்சுரப்பில் கிருமித்தொற்றுள்ளவர்கள்,விந்தணுக்கள் எண்ணிக்கை மிகக்குறைந்தவர்கள் iui ,ivf முறைகளில் கருத்தரிக்க முடியாதவர்கள் போன்றோருக்கு இந்த சிகிச்சை 25வீதத்துக்கு மேற்பட்ட பலனை அளிக்கிறது.பெண்ணுக்கு கருத்தரித்தலுக்கான குறபாடுகள் இல்லாத பட்சத்தில் அல்லது அகற்றப்பட்ட பட்சத்தில் ஸ்பேம் கடன்பெற்று கருவை உருவாக்குபவர்களுக்கு இந்த மருத்துவமுறை நல்ல பலனைக்கொடுக்கும்.
Basal Body Temperature/பி பி டி
உடல் வெப்பநிலை உள் மாற்றங்களுக்கேற்ப கூடிக்குறைந்து கொண்டே இருக்கும் என்பது நாம் அறிந்ததே.
இந்த வெப்ப மாற்றத்தை வைத்து உடலில் ஏற்படும் மாற்றத்தை கணித்து நமக்கு சாதகமாக்கிக் கொள்ளவே கருவுறுதல் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த கணிப்பை உபயோகப்படுத்த விளைகிறோம்.
அதாவது கரு உருவாகும் சந்தர்ப்பத்தை குறைக்கவும் அதிகரிக்கச்செய்யவும் இதனை ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படும் ...முறை இருந்து வருகிறது.
உடல் வெப்பநிலையை தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்துகொள்வதற்கு முன்பு தினமும் ஒரே நேரத்தில் அதாவது காலை 6 மணியாக இருந்தால் தினமும் காலை 6 மணிக்கு அளவெடுத்து குறித்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரம் படுக்கையை விட்டு எழும்போதோ சிறிது தூரம் நடந்து சென்று இந்த பிபிடி யை எடுத்து வந்து சோதிப்பதோ தண்ணீர் குடித்து விட்டோ அல்லது சிறுநீர் கழித்து விட்டு வெப்ப அளவு எடுப்பதென்பதோ கூடாது.
இவ்வாறு செய்து அளவெடுப்பின் இதை செய்வதில் தரப்படும் வெப்பநிலை தரவு சரியானதாக இருக்காது
உடல் செய்கைகளிற்கு ஏற்ப வெப்பநிலை மாறுபடும்.
நாக்கிற்கு அடியில் வத்து வெப்பநிலை எடுத்துக்கொள்ளவேண்டும்.சிலருக்கு பிறப்புறுப்புக்களில் எடுக்கும்படி டாக்டரால் பரிந்துரைக்கப்படும்.ஆனால் எந்த முறையில் எடுக்கிறோமோ அதையே மாதம் முழுவதும் தொடர வேண்டும்.
அளவெடுத்தபின் உங்கள் பி பி டி ல் வெப்ப அளவு பதியப்பட்டிருக்கும் .பின்னர் அதை நீங்கள் குறித்து வத்துக்கொள்ளுங்கள்.
உபயோகிக்கும் முறை விளக்கம்***
1.தூங்கும் இடத்தில் பிபிடி யை மறக்காமல் வைத்திருக்கவும்
2.தினமும் காலையில் ஒரே நேரத்தில் பி பி டி யை நாக்கிற்கு அடியில் வைத்து அளவெடுங்கள்.
3.அளக்கப்பட அளவை அட்டவணையில் குறித்துக்கொள்ளுங்கள்
4. பின்னர் அதை கோடுகளால் இணைத்து வரை படமாக்குங்கள்.
5.இதை தொடர்ந்து 3, அல்லது 6 மாதங்களுக்கு செய்து கருமுட்டை முதிரும் நாளை அறிந்து உறவு கொள்ளுங்கள்.
6.சரியான நாளை அறிந்து கொள்ள ஒவ்வொரு மாதமும் செய்த அட்டவணையை ஒப்பீடு செய்யுங்கள்.
******
உடல் வெப்பநிலை மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் இன்றி இருந்தால் கருமுட்டை வெளியாகவில்லை.
வெப்பநிலை குறைந்து அதிகரிப்பதற்கு இடைப்பட்ட காலமே குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும்.
வெப்பநிலை அதிகரித்தபின் முயற்சி செய்வதில் பலனில்லை.
ovulation detector kits கருமுட்டை வெளியேறும் நாளை அதாவது ஹார்மோன் சுரப்பதை துல்லியமாக அறிந்து அதிலிருந்து 36 மணித்தியாலங்களுக்குள் உறவை ஏற்படுத்தி கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க வைக்கலாம்.
இது கிடத்தட்ட நமக்கு 14வது நாளில் கருமுட்டை வெளியேறுகிறது என்று வைத்தோமானால் 10வது நாளில் இருந்து தினமும் அதே நேரத்தில் யூரினில் பரிசோதனை செய்ய வேண்டும். கருமுட்டை வெளியாகாத வரை நெகட்டிவ் என்ற ஒரு கோட்ட...ையும் கருமுட்டை வெளியாகிவிட்டது என்பதற்கு பொசிட்டிவ் என்ற இரு கோடுகளையும் குறிக்கும்.
பொசிட்டிவ் என்ற கோடுகள் வந்ததும், 24 மணித்தியாலங்கள் வரை வெளியாகும் கருமுட்டை காத்திருப்பதால் அதற்குள் நீங்கள் உறவு கொள்ளும் போது கருத்தரித்தலுக்கான வாய்ப்பு ஏற்படுகிறது.
நெகட்டிவ் என்ற கோடு மாதம் முழுவது வந்தால் கருமுட்டை வெளியாகவில்லை என்பது அர்த்தம் அதற்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாயாக இருப்பின் முதலில் மாதவிடாயை டாக்டர்கள் உதவியுடன் சீர் செய்ய வேண்டும்.
இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் Predictor Kit போல் அல்லாமல் 5 ற்கு மேற்பட்டவை ஒரு box இல் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
கரு உருவாகி 12 வாரத்துக்குள் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் கருச்சிதைவு ஆரம்ப கட்ட கருச்சிதைவுக்குள் அடங்கும்.
1.கருப்பையில் சினை முட்டை சரியான முறையில் பதியம் பண்ணாமல் இருக்குமிடத்து நழுவி கருச்சிதைவு ஏற்படும்
... 2.மரபுவழிக்குறைபாடுகள்
3.கருப்பைக்கழுத்து திறந்த நிலையிலும் பலவீனமாகவும் இருத்தல்.
ஐ வி எவ் முறையிலான கருத்தரித்தலுக்கு ஒரு முட்டையை கருவாக்க ஒரு லட்சம் உயிரணுக்கள் வரை தேவைப்படும் 5 கருக்களை உருவாக்க 5 லட்சம் தொடங்கி அதற்கும் மேற்பட்டஉயிரணு தேவைப்படும்.காரணம் ஐ வி எவ் ல் குறைந்தது 5 கருக்களாவது பதப்படுத்துவதே முறை.40 சதவீதத்துக்கும் அதிகமான அணுக்கள் ஊர்ந்து செல்லும் திறனை இழந்தைவையாக இருக்கும் பட்சத்திலும்.பரம்பரையான அணுக்குறைபாடு அல்லது தொற்றுக்கிருமிகளின் தாக்கம் இருப்பினும் ஐ வி எவ் பெருமளவு பல்ன் தருவதில்லை
.இதற்கேற்ப விந்தணு இல்லாதவர்களுக்கு மறுபடியும் மறுபடியும் ஐ வி எவ் செய்தாலும் தோல்வியில் முடிவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.
இவ்வாறானவர்களும் பயன்பெறும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டதே இக்சி மருத்துவம் Icsi (Intra Cytoplasmic Sperm Injection)
ஒரு விந்தணு கிடைத்தாலும் அதை எடுத்து கருமுட்டைக்குள் துளையிட்டு விந்தணுவை செலுத்தி கரு உண்டாக வைப்பதற்கு எடுக்கும் முயற்சியே இந்த புதிய முறையிலான மருத்துவம்.
இது ஒரு பெண்ணுக்குள்ள குறகளை நிவர்த்தி செய்து விட்டு இந்த முறையில் கருவை உருவாக்கு உட் செலுத்தும் போது பெருமளவான வெற்றி வீதத்தை அளித்து குழந்தையில்லா பெரும் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுகிறது.