Monday, 25 April 2011

குழந்தையின்மையும் மருத்துவமும் 2

அடிப்படை பரிசோதனைகள் எடுத்து நாம் தெளிவு பெற்ற பின் விட்டமின் மாத்திரைகள் எடுத்து அதற்கும் கருத்தரிக்கவில்லை நமக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றால்
அதன் பெயர் - காரணம் தெரியாத கருத்தரிப்பின்மை-
Unexplained Infertility

இப்போது கருமுட்டையின் வளர்ச்சியும் அது வெளியேறும் நாளையும் கிட்டத்தட்ட தெரிந்து கொண்டு முயற்சி செய்து வாய்ப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்படுவோம்.அதாவது 28 நாள் மாதவிடாய் சுழற்சி உள்ள ஒருவருக்கு 14வது நாள் கருத்தங்குவதற்கு ஏற்ற நாளாக கணிக்கப்படுகிறது.
தேவைப்பட்டால் இண்டர் நெட்டில் கொடுக்கப்பட்டுள்ள Ovulation Calculator மூலம் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.நாட்கள் எண்ணும் போது மாதவிடாய் தொடங்கிய அன்றைய தினத்தை *நாள் 1
என எடுத்துக்கொள்ள வேண்டும்.


அடுத்து basal-body-temperature மூலம் தினமும் நாமே காலையில் எழுந்தவுடன் உடல் வெப்பத்தை கணித்து basal-body-temperature chart ல் எழுதி வைக்க வேண்டும்.உடல் வெப்பம் சரிவடைந்து அடுத்தநாள் நன்கு அதிகரிக்கிறது எனில் அந்த நாளில் நாம் முயற்சிக்க வேண்டும்.அத்துடன் தொடர்ந்து கணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.உடல் வெப்பம் ஏற்றத்திலேயே இருந்தால் நாம் கருத்தரித்து விட்டோம் .அது மீண்டும் சரிவடைந்து கொண்டே போனால் கருத்தரிக்காமல் கருமுட்டை வெளியேறிவிட்டது எனலாம்.இது நாமாகவே செய்தும் கொள்ளலாம் டாக்டர்களின் மேற்பார்வையிலும் செய்யலாம்.

அடுத்து டாக்டர்களிடம் சென்றால் கருமுட்டை வளர்ச்சியை கணிப்பதற்கான அல்ராசவுண்ட் எடுப்பதற்கு சிபாரிசு செய்வார்கள்.கருமுட்டை வளர்ச்சி என்பது நாள் ஒன்றுக்கு 1-2 மில்லிமீட்டராக இருக்கும்.17 ல் இருந்து 24 மில்லிமீட்டர் சைஸ் என்பது கருத்தரித்தலை உண்டுபண்ணக்கூடியவை.

கருமுட்டை வளர்ச்சியை கணிப்பதன்மூலம் நமக்கு கருத்தரிப்பிற்கு ஏற்ற நாளை சுலபமாக கண்டு பிடித்து அந்த நாட்களில் குழந்தைக்காக முயற்சி செய்வது என்பது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். Ovulation Predictor வாங்கி நாமே டெஸ்ட் செய்து கண்டுபிடிக்கும் வாய்ப்பும் நமக்கு இருக்கிறது.

இதில் கருமுட்டை வளர்ச்சி வீதம் நமக்கு போதவில்லை எனும் பட்சத்தில் வளர்ச்சியை அதிகரிக்க மாத்திரை ஊசி என்பன அவரவர் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்படும்.
தொடரும்.................

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...