Monday, 23 January 2017

நட்பெனும் நாடகம்




பொய்யை மட்டுமே பேசும்
உன்னை
உண்மையான நண்பன் என்பதா?
அற்பத்திலும்
குற்றம் காணும் உன்னை
உற்ற நண்பன் என்றுரைக்கவா?
நான் வீழும்போது
மகிழும் உன்னை
தோழன் என்றழைக்கவா?
பொங்கிடும் பொறாமை
உன்னிடம் கண்டபின்
நட்பென்று உன்னை நாடவா?
உன் தேவைகள் முடிக்க
தேனாகப் பேசும் உன் பெயர்
ஆருயிர் நண்பனா?
நீ பெற்ற நன்மைகள் 
பெற்றுவிடக் கூடாதென்று
கூடவிருந்து குழிபறிக்கும்
நீ நண்பனா
இல்லை நரியா?
போலி உறவுக்கு 
நட்பென்ற வேலியிட்டு
காவல் செய்யும் நான் 
நாயா நண்பனா?

நீயிலாத நான்



சோரும் விழி நோகும் வலி 
தேடுகின்றேன் உன் முக(ம்)வரி 
எத்தனை நாட்களை உன் 
நினைவிற்காய் பலி கொடுத்தும் 
என் மாளும் உயிர் மீட்க 
இன்னுமேன் வரவில்லை 
நீ நின் நினைவுகளை வென்றெடுக்க 
என் இரவுகள் விழித்திருக்க 
வெறுமை எனை தத்தெடுக்க 
சூரியோதயம் பார்க்கையில் கூட 
உன் விரல் கோர்க்க தவிக்கும் 
என் மனசுக்கு உன் பதில் வேண்டும் 
மழை தரும் இரவில் உன் ஸ்பரிஷம் 
தொலைத்த பரிதவிப்பில் 
கரைந்து மடியும் என் வாழ்வுக்கு 
உடனடியாய் நீ வேண்டும் 
நீயற்ற என் வாழ்வு சீரற்று 
தடுமாற வேண்டாம் 
இடைவெளி வந்துவிடு.....

நேசிக்கப்பிறந்தவள்



அளவற்ற நேசம் 
அதை வெளிப்படுத்த 
வார்த்தைகளை தேடாத சிறப்பு
உரிமைகளில் தலையிடாத 
வெறுக்க வைக்காத வார்த்தைகள்

ஆபத்தில் நீட்டும் கரங்கள் 
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு 
ஏளனம் செய்யாத தெளிவு. 
தமக்கு நிகராய் கொடுக்கும் மதிப்பு. 
எவரையும் தூற்றாத பணிவு .

தோழமையாய் தாயாய்
தந்தையாய் சிகரங்களாய் 
உடன்பிறப்புகள் இருக்கையில் 
எனக்கில்லை வாழ்வில் சலிப்பு 
யாரும் வம்பிழுக்க நினைத்தால் 
அவர்கள் என் கால் செருப்பு .

எதுக்கு இந்த முறைப்பு . 
எனக்கில்லவே இல்லை செருக்கு. 
கழட்டி போட்டு 
எடுப்பேன் ஓட்டம் அடுத்த தெருக்கு.

வரம் அம்மா



அம்மா 
கவலைகள் என்னை முள்
கிளைகளாய் துளைக்கும் போது
உனை கட்டி அழ ஆசைப்படுகிறேன்
நீயில்லை
உயரத்தில் பறந்து நான்
தூரத்தில் வந்தாலும்
துயரத்தில் உன் குரல்
இதயத்துள் இன்னும்
இதமாய் ஒலிக்கிறது
அம்மா
நான் முதல் முதலாக 
உச்சரித்த அதே வார்த்தை
சின்ன வலிக்கும்
வாய்விட்டு
கதறி அழைக்கிறேன்
அருகில் நீ 
இல்லையென்று தெரிந்தும் கூட.......
என்னை பிரிந்தததில்
உனக்கு ஆனந்த வேதனை
உன்னை பிரிந்ததில் எனக்கு
ஆனந்தம் விடை பெற்றுவிட்டதம்மா
போலி முகங்கள் பல
நான் கண்டுணர்ந்த போது
கபடமில்லா உன் முகம் - என்னை 
தோழில் சாய அழைக்கிறது
நிர்ப்பந்தங்கள் சிலவற்றால் 
நம் பந்தத்தை நாமே
சிறைக்குள் 
அடைத்துவிட்டோம் அம்மா
நான் கண்ணீர் வடிக்கையில் 
துடைத்த உன்கரம்
இறைவனிடம் எனக்காக தினம்
கூப்புகின்ற உன் கரம்
எனை அள்ளி அணைத்த உன் கரம்
என் அருகில்  இருந்தாலே அது வரம்
இந்த கவி வரையும் நேரத்தில் நான்
அழுது துடைக்கொண்டேன்
அறிவாயா நீ இந்த உண்மை.

வாழாத வாழ்வு




முந்தை நாள்
எஞ்சியதை உண்டு
மிஞ்சிய பணத்தை எண்ணி
எனக்குள் சந்தோஷம்
பலர் கூடிக் களிக்கும்
உறவுகள் வருகை 
வெட்டி செலவென்று
எதையோ சொல்லி ஒதுங்கி
வென்று விட்டதாய் புளாங்கிதம்
எங்கோ மலிவென்று 
யாரோ சொன்னதை கேட்டு
மணிக்கணக்காய்  செலவிட்டு
ஒற்றை ரூபாய்
சேமித்த  பூரிப்பு
காலையில் பசித்த பசிக்கு
மாலையில் வீடு வந்து
சிக்கனாமாய் புசித்ததில் 
ஒரு திருப்தி
அடுத்தவர் செலவைக்கேட்டு
அப்பாடா நமக்கு
அற்றுப்போனது இந்த
மேலதிக செலவு என்று
உள்ளூர ஆனந்தம்
பயணங்களை ஒதுக்கி
மகிழ்வுகளை சுருக்கி
பணத்தை பெருக்கிய
பெருமிதம்
ஆசைப்பட்டதெல்லாம் 
அடக்கியே வைத்து விட்டு
சொத்து சேர்த்த பெருமை
தேவைப்பட்டதையெல்லாம்
கொஞ்சநாள் உபயோகம் அவை
வேண்டாம் வேண்டாம் என்று
எல்லோர் தேவைகளையும்
அடகு வைத்து
வாழ்ந்த வாழ்க்கையில் சேர்த்த சொத்து
இன்று பிள்ளைகள் கையில்
தேவைக்கு அதிகமாய் 
கிடைத்த போது
கட்டுக்கடங்கா உல்லாசம்
ஊதாரி செலவுகள் 
ஒவ்வாத பழக்கங்கள்
நம்மை வருத்தி 
கண்ட பலன்
நம்மை வருத்தும்போது 
வலி தாங்க முடியாமல்
தினம் மாளாமல்
மனம் போல் வாழ்ந்து விடுங்கள்.
வாழக்கற்றுக் கொடுப்பதை விடுத்து
உங்கள் வாழ்வை தத்துக்கொடுத்து 
கெடுத்துவிடாதீர்...

வாழ விடு





மாறிக் கொண்டிருக்கும்
காலங்களில்
ஆறிக் கொண்டிருக்கும்
காயங்களில்
கீறிக் கொண்டிருக்கும்
சில கூர் முனைகளைத் தாண்டி
பேசிக் கொண்டிருக்கும்
என் மூச்சு
இன்றும் நின்றுவிடலாம்
ஆகவே 
வாழும்வரை வாழ 
வழிவிடு என்கிறேன் நீயோ 
வலிகளை என் மீது
வாரி எறிகிறாய்
என் சமூகமே.

மெளன விளம்பரம்



வெற்றி மொழி
கற்றுக்கொள்ள 
கடினமாகத்தான் இருக்கிறது
தற்காப்பு ஆயுதம்
தருணத்தில் மறந்து போவதால் - பின்
வருந்தும் வேளைகள் ஆயிரம்
அர்த்தம்
எதை வேண்டினும் சொருகிக்கொள்ள
விட்டுவைக்கும் இடைவெளி
தொகை
எழுதப்படாமல் கையொப்பமிட்ட
காசோலை
மெளனம்
சில நேரம்  வளர்க்கும் பகை
இருப்பினும் நன்மைகள் ஏராளம்
உபயோகி
இது
இலவசம்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...