Wednesday, 1 February 2017

minions decoration


குழந்தைகளுக்கு நமக்கு பிடித்ததை செய்வதை விட அவர்களுக்கு பிடித்த சின்ன சின்ன விடயங்களுக்கு நாம் மதிப்பளிக்கும்போது நம்முடன் மேலும் நெருங்கிவிடுவார்கள்.

நமக்கு சிறிதாக தெரியும் சில விஷயங்கள் அவர்கள் நடவடிக்கையையும் நம்மீது வைக்கும் மரியாதையையும் பிணைப்பையும் மாறுபடச்செய்யும்.
...
குறிப்பாக பிறந்தநாள்களுக்கு நமக்கு பிடித்ததையும் நாம் அழைப்பு விடுத்தவர்களுக்கு பிடித்தது போலும் செய்யாமல் குழந்தைகள் பாணியில் அவர்களுக்கு உவகை ஊட்டுவதை செய்தால் மனம் நிறைந்து போவார்கள்.

இதோ இந்த minions களை பிடிக்காத குழந்தைகள் இருக்கமாட்டார்கள் .(எனக்கும் ரெம்ப பிடிக்கும்} அப்பப்போ இவை மாறுபடுவதால் பின்னாளில் கூட அவர்கள் இந்த minions சீசன் ஐ அனுபவித்ததை நினைவு கூருவார்கள்.
மிகவும் சுலபமாக பழங்களை வெட்டி காயப்படுத்தாமல் இவற்றை அலங்கரித்துள்ளேன்.

தேவையானவை
ஏ4 தாள்
நீலம்,கருப்பு கலர்கள்,
கிராஃப்ட் கண்கள்ப
பழங்கள்
 டேப் அல்லது  க்ளூ



1.ஏ4 தாளை மடித்து படத்தில் காட்டியதுபோல் வெட்டி நீல வண்ணம் கொடுத்துக்கொள்ளுங்கள்.பாக்கட் ம் வரையுங்கள்
.
2.மெல்லிய நேர் கோட்டு தாளில் கண் க்கு 2 வட்டம் வரைந்து அந்த வட்டத்திற்குள் கிராப்ட் கண்களை ஒட்டுங்கள்.

3.இப்போது இவற்றை பழங்களில் படத்தில் காட்டியதுபோல் உரிய இடங்களில் வைத்து ஒட்டி விடுங்கள்.



இதேபோல் மஞ்சள் தக்காளியை ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்துள்ளேன்.



இதோடு பலூன் ல் யூஸ் போத்தல்களில் எல்லாம் இப்படி நாமே செய்து வைக்கலாம்.



fairy garden2


பூந்தொட்டியில் வைத்தால் தான் வீட்டில வைக்கும் தாவரங்கள் அழகாக இருக்கும் என்றில்லை.நாம் ,நம் குழந்தைகள் உபயோகித்த பொருட்களை பயன்படுத்தி மண் நிரப்பி தாவரங்கள் வைக்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.

பொருட்களை மறுபடியும் உபயோகிப்பதில் திருப்தியும் கிடைக்கும்.
...
இங்கே உள்ளது நான் முன்பு குருவிகள் வளர்த்த கூடு. குருவிகள் அதிகரித்து விட்டதாலும் பராமரிபிற்கு நேரமின்மையாலும் குருவிகளை கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்தாலும் இந்த கூட்டை கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

அதன் அடித்தளத்தை மண் நிரப்புவத்ற்கு ஏற்றதாக மாற்றி பூங்கன்றுகளை நட்டேன் .

அழகாக பூக்க தொடங்கியது.அதை என்னிடம் உள்ள குட்டி குட்டி பொருட்களை பயன்படுத்தி அலங்கரித்துள்ளேன்.

இதேபோல் உபயோகமில்லாத சமையல் பாத்திரங்கள் ,டயர் ,பழைய விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை இவ்வாறு அலங்கரிக்கலாம்.

விளையாட்டுப்பொருட்களை குழந்தைகளிடத்து எடுத்துக்கொள்ளும்போது அவர்கள் மீண்டும் உபயோகபடுத்த மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.ஒரு தடவை சில்லு எல்லாம் உடைந்து பிள்ளைகள் விளையாடாமல் விட்ட plastic shopping trolley யை
எடுத்து மிகவும் சிரத்தை எடுத்து மண் நிரப்பி பல வண்ணங்களால் ஆன மினி ரோஸ் வளர்த்தேன்.

நடுவில் ஒரு அடுக்குமாடி வீடும் செய்து வைத்து பார்க்க அழகாக இருந்தது.

ஆனால் trolley உரிமையாளர் பொறாமையோ என்னவோ தன் விளையாட்டு தனக்கு வேண்டும் என்று
அடம் பிடிக்க தொடங்கிவிட்டார்.

என்ன செய்ய ரோஜா செடிகளை எடுத்து இடம் மாற்றிவிட்டு கொடுத்ததுதான்.

அம்மாக்கள் உபயோகிக்கும் பாத்திரங்களும் அப்படித்தான் எவ்வளவு அடிபட்டாலும் சுலபமாக கைவிட மாட்டார்கள் .பாத்து பத்திரம்.
அதனால் இன்னொரு தடவை தேவை ஏற்படாது என்றுள்ளவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.





குடில்


தேவையானவை

ஐஸ்கிரீம் குச்சிகள்...
வெற்றுப்போத்தல்
க்ளூ
ரப்பர்பாண்ட் 4
கத்தரிக்கோல்





போத்தலை மேலும் கீழும் கொஞ்சம் வெட்டி வீசிவிடுங்கள்

கதவு போல் சதுரமாக வெட்டி விடுங்கள்



போத்தலில் கூர் முனைப்பகுதியை தாண்டி{ படத்தில் காட்டியுள்ளது போல்}
கொஞ்சம் வெளியே நிற்க கூடியதாக க்ளூ பூசி ஒட்டிக்கொள்ளுங்கள்



ஐஸ்கிரீம் குச்சிகளை சுற்றி 2 இடங்களில் ரப்பர் பாண்ட் மாட்டி விடுங்கள்
விரும்பினால் பெயிண்ட் பண்ணலாம்.



அவ்வளவேதான்.

சிறிய தாவரங்களுக்கு மத்தியில் வைத்து அலங்கரிக்க மிகவும் ஏற்றது.

சின்ன சின்ன அலங்காரங்கள்


நாம் நாளாந்தம் பாவிக்கும் கிளாஸ் ஐ எடுத்து அதற்குள் ஏதாவது அழகு பொருட்களை வைத்து கவிழ்த்து வைத்துவிட்டு மேற்பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் அழகாக இருக்கும்
.
உள்ளே விரும்பியதை மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்.விருந்து பரிமாறும்போது மெழுகுவர்த்தி யும் ஏற்றி பூங்கொத்தும் மேசையில் வைக்க இடத்தை பிடிக்கும்.அப்போதெல்லாம் நான் இப்படி உள்ளே பூக்களை
வைத்து வெளியே மெழுகு ஏத்தி வைப்பது வழக்கம்.

தேவை முடிந்ததும் கலைத்து அது அதை அந்தந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.







செஃப் தொப்பி


சமையல் வல்லுனர்கள் அணியும் இந்த தொப்பி சுகாதாராம் ,பதவி,பாதுகாப்பு என்பவற்றையும் தாண்டி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

குழந்தைகளுக்கு நாம் செய்யும் வேலைகளில் ஆர்வம் வரும். அதயே செய்ய முனைவார்கள் நாம் மறுக்கும்போது குழப்பமும் கலக்கமும் அடைவார்கள்....
அதனால் அவர்களையும் சேர்த்து சின்ன சின்ன வேலைகளை கொடுக்கும்போது தன்னம்பிக்கை வளரும்.ஆர்வம் தூண்டப்படும்,மூளை டெவலப் ஆகும்.


ஆனால் அவர்களை நம் வேலையில் சேர்த்துக்கொள்வது நமக்கு சிரமம்தான்.
உதவுகிறேன் என்று தேரை இழுத்து தெருவில் விட்டு விடுவார்கள்.இருந்தாலும் நாம் அவர்கள் ஆசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.


பணம் கொடுத்து பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷபடுத்துகிறோம் .ஆனால் கொஞ்ச மாவை வீணாக்கி விடுவார்கள் என்று
சமையல் அறையில் இருந்து விரட்டுவோம் .அவர்களையும் சேர்த்துக்கொண்டால் பிற விபரீதமான குறும்புகளையும் தவிர்க்கலாம்.

அவ்வாறு சமையலில் குழந்தைகளை இணைக்கும்போது அழுக்காகாமல் இருக்க அவர்களுக்கு அளவான தொப்பி ஏப்ரன் என்பவற்றையும் செய்து
கொடுக்கும்போது மனம் குளிர்ந்து உற்சாகமாகி விடுவார்கள். சிறுவர்கள் என்றில்லை.

நான் பார்பிக்யூ செய்யும்போது அதன் பக்கத்தில் இந்த தொப்பி இல்லாமல் போக மாட்டேன்.தலைமுடியில் மணங்கள் ஒட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.
இந்த தொப்பியை
குக்கி ஷீட் ,வெள்ளைத்தாள்,க்ளூ,ஸ்டேப்ளர் கொண்டு ஒரே நிமிடத்தில் செய்து விடலாம்.


தேவையானவை
குக்கி ஷீட்
ஏ4 பேப்பர் 2
ஸ்டேப்ளர்



1.குக்கி ஷீட் ஐ வெட்டி விசிறிக்கு வரும் அடுக்குபோல் மடிக்க வேண்டும்.



2.படத்தில் காட்டியுள்ளதுபோல் வெள்ளை ஏ4 பேப்பரை எடுத்து தலையின் விட்டத்திற்கு ஏற்ப நீளத்திற்கு தாளுடன் தாள் ஒட்டி வெட்டிக்கொள்ள வேண்டும்.



3. மேற்கூறிய வெள்ளைத்தாளை மடித்து அதற்குள் விசிறி போல் மடித்த குக்கிஷீட் ஐ வெள்ளைத்தாளின் அளவுக்கு விரித்து உள்ளே வைத்து ஸ்டேப்ளர் அடிக்க வேண்டும்.

4.இப்போது குக்கி ஷீட் ந் மேல் பகுதியை கூட்டாக்கி ஸ்டேப்ளர் அடித்துக்கொள்ள வேண்டும்.

5.ஸ்டேப்ளர் அடித்த முனை உள்ளே போகுமாறு மறுபக்கம் திருப்பி எல்ல முனைகளையும் ஒட்ட வேண்டும் .

மிகவும் அழகான தொப்பி தயாராகி விடும் .துணியில் செய்வதாயினும் இதேபோன்று செய்யலாம்.
பட் வட்டமாக வைக்கும் துணிக்குள் ஷேர்ட் காலர் க்கு உள்ளே வைக்கு ஷீட் வைக்க வேண்டும்.{collar lining}


வெங்காய குருவி

தேவையான பொருட்கள்
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 6
மிளகு 4
டுத் பிக் சில


வெங்காயமும் பச்சை மிளகாயும் நண்பர்கள் என்பது நமக்கு தெரியும் .அந்த வகையில் இன்று பகோடா செய்ய இருவரையும் எடுத்து வைத்துவிட்டு வேறு வேலை பாத்து விட்டு வர வெங்காயத்தை காணவில்லை .

என் மகள் வழக்கம் போல திருடி போய் வைத்திருந்தாள் .

எனக்கு வெங்காயம் தேவை தர முடியுமா என்றேன்.

எனக்கும் தேவை தரமுடியாது என்று அரையும் குறையுமாக பதில் வந்தது.

ஏன் தரமுடியாது என்று கேட்டேன்

 பேர்ட் என்றாள்.சரி எனக்கும் பேர்ட்
செய்ய தேவை உமக்கு 2 எனக்கு 2 என பிரித்து எடுத்து கொண்டோம்.
...
அப்பாடா என்று கொண்டு வந்தால் பின்னாலேயே வந்து என் வெங்காய பேர்ட் ஐ பார்க்க வெயிட்டிங்க்.

நாம வெட்டி திங்கிறதுக்குதானே எடுத்துட்டு வந்தோம்.இதென்னடா வம்பா கிடக்கு சரி சமாளிப்போம் அல்லது வெங்காயம் நமக்கு கிடைக்காது
என்றுவிட்டு இங்கனம் செய்து கொண்டேன்.



வெங்காயத்திற்கு தோலை உரித்து .
பச்சை மிளகாய்களில் பல் குத்தும் குச்சியை சொருகி வைத்தேன்

கத்தியால் இறகு போல் 2 பக்கமும் வெட்டி விட்டு
குச்சி குத்தி வைத்திருக்கும் முழு மிளகாய்களை வால் போல் சொருகிக்கொண்டேன்.

மிளகாயை வால்பக்கம் { இது மிளகாயின் வால் குருவியின் வால் அல்ல அல்ல அல்ல} சிறிதாக வெட்டி குருவியின் சொண்டு செய்து உரிய இடத்தில் சொருகினேன்

2 மிளகை எடுத்து கண் வைத்தேன் அவ்வளவே





.
இதோ படத்தில் அழகான வெங்காய குருவி குடும்பம்.
இதை பார்த்து மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரமிட்டது என்னுடைய குருவி.
இது ஒரு வெங்காய கண்டுபிடிப்புத்தான் இருந்தாலும் காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு.
எந்த உணவு அலங்காரத்திலும் உணவு வீணாக்கப்படக்கூடாது.அதற்கமைய இதில் எந்த வீணாகுதல் ம் ஏற்படாது.செய்து பாருங்கள்.


காரட் பூ


large pensil sharpener பயன் படுத்தி ஒரே நிமிடத்தில் இந்த பூவை செய்து விடலாம்

.காரட் ஐ சுத்தம் செய்து விட்டு பென்சில் போலவே காரட்டை சுற்றி எடுத்துக்கொண்டு ,
அதனை சுருட்டி சேர்த்தால் போதும்.



ரோஜாவின் இலைகள் செய்வதற்கு கருவேப்பிலை இலையை அப்படியே வைக்காமல் ரோஜா இலை போலவே கத்தரிக்கோலால் கத்தரித்து வைத்தால் அழகாக இருக்கும்

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...