Wednesday, 1 February 2017

வெங்காய குருவி

தேவையான பொருட்கள்
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 6
மிளகு 4
டுத் பிக் சில


வெங்காயமும் பச்சை மிளகாயும் நண்பர்கள் என்பது நமக்கு தெரியும் .அந்த வகையில் இன்று பகோடா செய்ய இருவரையும் எடுத்து வைத்துவிட்டு வேறு வேலை பாத்து விட்டு வர வெங்காயத்தை காணவில்லை .

என் மகள் வழக்கம் போல திருடி போய் வைத்திருந்தாள் .

எனக்கு வெங்காயம் தேவை தர முடியுமா என்றேன்.

எனக்கும் தேவை தரமுடியாது என்று அரையும் குறையுமாக பதில் வந்தது.

ஏன் தரமுடியாது என்று கேட்டேன்

 பேர்ட் என்றாள்.சரி எனக்கும் பேர்ட்
செய்ய தேவை உமக்கு 2 எனக்கு 2 என பிரித்து எடுத்து கொண்டோம்.
...
அப்பாடா என்று கொண்டு வந்தால் பின்னாலேயே வந்து என் வெங்காய பேர்ட் ஐ பார்க்க வெயிட்டிங்க்.

நாம வெட்டி திங்கிறதுக்குதானே எடுத்துட்டு வந்தோம்.இதென்னடா வம்பா கிடக்கு சரி சமாளிப்போம் அல்லது வெங்காயம் நமக்கு கிடைக்காது
என்றுவிட்டு இங்கனம் செய்து கொண்டேன்.



வெங்காயத்திற்கு தோலை உரித்து .
பச்சை மிளகாய்களில் பல் குத்தும் குச்சியை சொருகி வைத்தேன்

கத்தியால் இறகு போல் 2 பக்கமும் வெட்டி விட்டு
குச்சி குத்தி வைத்திருக்கும் முழு மிளகாய்களை வால் போல் சொருகிக்கொண்டேன்.

மிளகாயை வால்பக்கம் { இது மிளகாயின் வால் குருவியின் வால் அல்ல அல்ல அல்ல} சிறிதாக வெட்டி குருவியின் சொண்டு செய்து உரிய இடத்தில் சொருகினேன்

2 மிளகை எடுத்து கண் வைத்தேன் அவ்வளவே





.
இதோ படத்தில் அழகான வெங்காய குருவி குடும்பம்.
இதை பார்த்து மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரமிட்டது என்னுடைய குருவி.
இது ஒரு வெங்காய கண்டுபிடிப்புத்தான் இருந்தாலும் காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு.
எந்த உணவு அலங்காரத்திலும் உணவு வீணாக்கப்படக்கூடாது.அதற்கமைய இதில் எந்த வீணாகுதல் ம் ஏற்படாது.செய்து பாருங்கள்.


No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...