தேவையானவை
அன்னாசி
டுத் பிக்(tooth pick)
கருப்பு திராட்சை
1.அன்னாசியை குறுக்காக பாதியாக வெட்டி அந்த பாதியை மறுபடியும் குறுக்காக வெட்டி மேலும் 2 துண்டுகள் ஆக்கவும்.
2.படத்தில் காட்டியது போல் மேல் பக்கத்தில் கூராக இருக்கும் தண்டை மெலிதாக சீவவும் .
3. இதேபோல் இன்னொரு தடவை செய்யவும்.
4.அவ்வாறு சீவிய பகுதியை படத்தில் காட்டியதுபோல் வளைத்து அதற்குள் கருப்பு திராட்சையை வைத்து குச்சியால் குத்தவும்.
5.இப்போது அன்னாசியின் சதையை தோலில் இருந்து பிரிக்கும் படியாக கீழ் பாகத்தில் வெட்டவும்.
6. அப்படியே வைத்துக்கொண்டு வரி வரியாக துண்டுகள் ஆக்கவும் .
7.துண்டுகளை இடம் வலமாக மாற்றி மாற்றி வெளியே நோக்கி தள்ளி விடவும் .
அழகான குருவிகளுக்கு வேறு பழங்களை சாப்பிட கொடுப்பதுபோல் அலங்கரிக்கவும்.
No comments:
Post a Comment