தேவையானவை
சின்ன வெங்காயம் 15 கிராம்
வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன்
புளி 1 மேசைக்கரண்டி
மிளகாய்த்தூள் 2 மேசைக்கரண்டி
தாளிக்க
கடுகு ,கருவேப்பிலை,சீரகம்
ஆயத்தம்
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சுத்தம் செய்யவும் .வெட்டக்கூடாது.
புளியை கரைத்து வைக்கவும்
செய்முறை
கடுகு, சீரகம் ,கருவேப்பிலை ,வெந்தயம் தாளித்து அதனுடன் சேர்த்து வெங்காயத்தையும் வதக்கவும்
வதங்கியதும் தூள் ,உப்பு சேர்த்து கிளறி கரைத்து வைத்துள்ள புளியையும் சேர்க்கவும்
1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்து ஓரளவு வற்றியதும் இறக்கவும்.
வெங்காயத்தை எப்போதும் குழம்புக்கு பயன் படுத்துவோம்.ஆனால் வெங்காயத்தையே குழம்பாக செய்து பார்த்தால் அதன் சுவை எப்போதுமே நாவை விட்டு போகாது .எல்லா உணவுகளுக்கும் சுவையை கொடுக்கும் வெங்காயம் அதுக்கென்று தனி மரியாதை கொடுக்கும்போது ஏமாற்றுமா என்ன?
No comments:
Post a Comment