தேவையானவை
சிறிய கடலை ரின் 1
கத்தரி 1
வெங்காயம் 1
மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உள்ளி 4 பல்லு
புளி 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க
கடுகு,சீரகம்,கருவேப்பிலை
செய்முறை
1.அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு கடுகு சீரகம் ,கருவேப்பிலையை,வெங்காயம்,உள்ளி என்பவற்றை தாளிக்கவும்
2.அதனுள் சிறு துண்டுகளாக வெட்டிய கத்தரிக்காயை சேர்க்கவும்
3.கத்தரிக்காய் வேகியதும் கழுவிய ரின் கடலையை சேர்க்கவும்
4.உப்பு ,தூள் சேர்த்து கிளறி 1 கப் தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
5.தண்ணீர் வற்றி வரும்போது புளியை கரைத்து விட்டு கொதித்த பின் இறக்கவும்.
விரதம் இருக்கும் போது வீட்டில் உள்ள
எல்லோருமே விரதமாக இருப்பதில்லை .எலோரும் அசைவம் சாப்பிட நாம் அவர்களுக்கு அசைவம் செய்து விட்டு தனி ஒருவருக்கு சைவம் செய்ய வேண்டி வரும் .கூடவே ஒற்றை ஆளுக்கு எதுக்கு ?அட நமக்கு மட்டும்தானே எதயாவது சாப்பிடுவோம் என்று கூடவே சோம்பல் ம் சேர்ந்துவிடும்.அவ்வாறான வேளைகளிலும் ,அடுத்து வீட்டுக்கு விருந்தினர்களை குடும்பத்தோடு கூப்பிட்டு மாங்கு மாங்கு என்று நடப்பன பறப்பன எல்லாம் சமைத்து வைக்க அப்போதுதான் அந்த குடும்பத்தில் ஒருவர் நான் இன்று விரதம் அசைவம் சாப்பிட மாட்டேன் என்று ராகம் போடுவார்.உண்மையில் பூரிக்கட்டையை எடுத்து தலையில் நங் என்று போட வேண்டும் போலதான் இருக்கும் ,ஆனால் விருந்துக்கு கூப்பிட்டு அவ்வாறு போட முடியாது.அதனால் எரிச்சலை வெளியே காட்டாமல் சிரித்த படியே என்ன சமைப்பது என்று தேட தொடங்குவோம் அவ்வாறான வேளைகளிலும் ரின் கடலை இருந்தால் கத்தரியோடு சேர்த்து இந்த திடீர் குழம்பை வைத்து சிறப்பாக பரிமாறலாம்.
No comments:
Post a Comment