kids foam floor mat ல் குழந்தைகளுக்கு காலணி செய்ய
தேவையானவை
ஃபோம் மட்,
duck tape அல்லது துணி ,
சப்பாத்து கட்டும் நூல்
,க்ளூ
,கத்தரிக்கோல்,
முத்துக்கள்
அல்லது பூக்கள்
1.குழந்தையின் காலணியை எடுத்து இந்த ஃபோம் மட் ல் வைத்து படத்தில் காட்டியதுபோல் வரைந்து வெட்டவும்.
2.குழந்தைகளுக்கு பிடித்த hello kitty டக் ரேப் ,minion டக்ரேப் ,அல்லது hello kitty துணி எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள்
3.நீங்கள் வரைந்து வெட்டிய காலணியின் அடித்தளத்தை, தரையில் படும் பக்கம் தவிர்த்து ஒட்டி கவர்பண்ணுங்கள்.
4.ஏற்கனவே அளவெடுக்க எடுத்துக்கொண்ட குழந்தையின் காலணியில் உள்ள துளைகளின் படி ஒப்பிட்டு அதே இடத்தில் வருமாறு ஒரு பேனாவால் துளையிடுங்கள்.
5.சப்பாத்து நூலை எடுத்து இரண்டு முனைகளையும் க்ளூவால் ஒட்டி சுற்றி கொஞ்சம் க்ளூ பூசி மேலே உள்ள துளைக்குள் சொருகுங்கள்
6.பக்கங்களில் போட்ட துளைக்குள் நூலை சொருகி மறுபக்க எடுத்து க்ளூ பூசி பின்னால் ஒட்டி விடுங்கள்.
7. இப்போது விருப்பியதுபோல் பூவைத்தோ முத்து வைத்தோ அலங்கரியுங்கள்.
பார்ப்பதற்கு மிகவும் அழகான காலணி தயார் .நடக்க தொடங்காத குழந்தைகளுக்கு குட்டி சைஸ் ல் கடையில் கிடக்காது.இவ்வாறு செய்து அணிவிக்கலாம்.
அத்தோடு கீழே அனுப்பி ஒட்டிய சப்பாத்து நூலை விரும்பினால் வெளிப்பக்கத்தாலேயே மேலே கொண்டு வந்து முடிச்சு போட்டு விடலாம்.
No comments:
Post a Comment