தேவையானவை
கோழுக்கால்கள் 6
ப்ரோக்கோலி 1/4 கிலோ
குடை மிளகாய் 1/4 கிலோ
கரட் 1/4 கிலோ
பீன்ஸ் 1/4 கிலோ
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு
ஆயத்தம்
கோழியை சுத்தம் செய்து வெட்டாமல் கீறல்கள் மட்டும் போடவும்
காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
செய்முறை
1..கோழி ,உப்பு ,தனிமிளகாய் ,எண்ணெய் என்பவற்றுடன் 1 கப் தண்ணீஇர் விட்டு வேக வைக்கவும்
2..முக்கால் பதம் வெந்ததும் வெட்டி வைத்துள்ள காய்கறிகளை அதனுள் போட்டு இன்னும் 1 கப் தண்ணீர் விடவும்
3 வேகி தண்ணீர் வற்றியவுடன் இறக்கி ஆற வைக்கவும்
4. 1/2 கப் ஷவக்றீம் sour cream சேர்த்து மிக்ஸ் பண்ணவும்
சோறு ,பாஸ்தா போன்றவற்றுடன் பரிமாறலாம்.
நம் எல்லோருக்குமே விருந்தினர் வரும்போது விசேசமாக வித்தியாசமாக எதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசை வரும்.ஆனால் அவர்களின் வருகைக்காக வேறு ஆயத்தங்களும் செய்ய வேண்டி இருப்பதால் சமையலில் நினைத்த சிலவற்றை செய்ய முடியாமல் போகும் .செய்தாலும் நினைத்ததுபோல் வந்துவிடாது .அவ்வாறான வேளைகளில் இதில் கொடுக்கப்பட்டுள்ள காய்கறி கோழி வேக்காடு பார்ப்பதற்கு அழகாகவும் .காய்கறிகள் கோழியுடன் சேர்ந்து வேகுவதால் சுவையாகவும் அதே நேரம் சிறப்பு உணவாகவும் சுலபமாக செய்யவும் கைகொடுக்கும்.
No comments:
Post a Comment