தேவையானவை
வாழைக்காய் 2
கடலை மா 1 கப்
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
செய்முறை
1.வாழைக்காயை தோல் நீக்கி படத்தில் காட்டியதுபோல் மெலிதாக சீவிக்கொள்ளவும்
2. கடலைமா , தனிமிளகாய்த்தூள்,உப்பு மூன்றையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தோசைமா பதத்திற்கு குழைக்கவும்.
3. எண்ணெய் கொதித்ததும் வாழைக்காயை இந்த கலவையில் முக்கி எடுத்து பொரித்து எடுக்கவும்.
மா உப்பியது போல் வாழைக்காய் தெரியாமல் மூடி இருந்தால் சரியாக செய்து விட்டீர்கள் என்று கொள்ளவும்
No comments:
Post a Comment