தேவையானவை
வல்லரை 1 கட்டு...
தேங்காய்ப்பூ ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் 2
பச்சை மிளகாய் 1
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
லெமன் சிறிது
உப்பு
செய்முறை
1. வல்லாரையை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்.பெரிதாகவே அரியலாம்.
2.கொஞ்ச எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து கொள்ளவும் .
3.சின்னவெங்காயம், தேங்காய்ப்பூ அல்லது சிறு துண்டு தேங்காய் ,காரத்துக்கேற்ப பச்சை மிளகாய் ,உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து மிகவும் கொஞ்ச தண்ணீர் விட்டு மிக்சியில் அடித்து எடுக்கவும்
4. சாப்பிடும் போது தேசிக்காய் சேர்த்து சாப்பிடவும் .
வல்லாரை சத்துக்கள் மிகுந்தும் ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஒரு கீரையாகவும் ,குழந்தைகளும் பெரியோர்களும் கண்டிப்பாக சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் பலரும் விருப்பத்துடன் சாப்பிடுவதில்லை .
ஆனால் அரைத்து செய்யும் சம்பல் விரும்பி சாப்பிடகூடியதாக இருக்கும் .
No comments:
Post a Comment