Thursday 2 February 2017

fritz box potato chipper
சாதாரணமா கிச்சனில் நாம் செய்யும் வேலைகளை சுலபமாக்க கடைகளில் பலதரப்பட்ட உபகரணங்கள்,மெசின்கள் கிடைக்கும் என்பது யாவரும் அனுபவித்ததே.
அவை உண்மையிலேயே நம் வேலைகளையும் நேரத்தையும் சேமித்து தருகின்றதா? என்றால் எனக்கு நம்முடைய கைப்புள்ளையின் கொசு அடிக்கும் நவீன இயந்திரம் தான் ஞாபகத்திற்கு வரும்.

நான் கட்டிங்க் போர்ட்டில் வைத்து மிக வேகமாக வெங்காயம் அரிவேன்.ஆனாலும் வெங்காய மணம் ஒட்டாமல் இருக்கவும் கண்ணெரிவை தடுக்கவும் கடையில் இருப்பதை எல்லாம் நம்பி நம்பி வாங்கினேன்.

வெங்காயத்தை உரித்து { கொசுவை தேடி பிடித்து } கத்தி எடுத்து கழுவி கட்டிங்க் போர் ட்ல் வைத்து பாதியாக வெட்டி பின்னர் வெங்காயம் அரியும் மெஷினை எடுத்து கழுவி அதற்குள் அந்த வெங்காயத்தை வைத்து வெட்ட வேணுமாம்.
அதாவது இப்பிடி தொடுற மூக்கை செலவு பண்ணி சிரமப்பட்டு அப்டீக்கா வந்து தொடவேணுமாம்.

இது ஒரு உதாரணம் இதைப்போல ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி குவித்து மிஞ்சியது குட்டி குட்டி குடும்ப பிரச்சனைதான்.மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு கப்போர்ட் ல இடத்தை வீணாக்கி
அடுக்கி வைச்சிருக்கிறதுதான் மிச்சம்.

ஆனாலும் எல்லாவற்றையும் அவ்வாறு சொல்லிவிட முடியாது.
உருளைக்கிழங்கை சிப்ஸ் மாதுரி அரிந்து கொள்ள ஒரு மஷின் வாங்கினேன் கொஞ்சம் பாரம் .ரெண்டு உருளைக்கு இதை எடுத்து கழுவிக்கொண்டு எதற்கு என்றுவிட்டு கையால் வழக்கம்போல வெட்டி விடுவேன்.

ஆனால் இங்கு நான் காட்டி இருப்பது ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா,2 ப்ளேட் அவ்வளவே தான்.சட்டென்று எடுக்கலாம் சட்டென்று கழுவி வைக்கலாம்.பாரமும் கிடையாது ப்ளேட்ஸ் ஐயும் உள்ளே வைத்து மூடி வைக்கலாம்.
இங்குள்ள kitchen stuff plus இல் 5 டொலர்களுக்கு வாங்கினேன்

அடிக்கடி பிள்ளைகளிற்கு fries செய்து கொடுப்பேன்.என் மகள், ம்மா பொட்டக்கோ என்பாள் .உடனே இதில் உருளை வெட்டி பட்டர் பூசி 15 நிமிடம் அவனில் வைத்து கொடுத்து விடுவேன்.
அவனில் ம் வைக்கலாம் எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம் .சமயத்தில் வெங்காயம் கூட இதில் நறுக்குவேன்.

பெயர் fritz box potato chipper.
என்னை போல கண்டதையும் வாங்கி ஏமாறாமல் இப்படி தெரிந்தெடுத்து சிலதை வாங்க என் பதிவு உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி பகிர்ந்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...