Thursday, 2 February 2017

Brass tea pot /turkish pitcher


கடந்த மாதம் 10 ஆம் திகதி நமக்கு திருமணநாள் வந்தபோது வழக்கமான எந்த ஆரவாரமும் இல்லாமல் கப் கேக் (கேக் ஒரு சிறிய துண்டுக்கு மேல் யாரும் சாப்பிடாமல் 
குப்பைக்கு போவதை தடுக்க இப்படி செய்வோம்} செய்து வெட்டி இத்தாலியன் ரெஸ்ரோரண்ட் சென்று கொண்டாடிவிட்டு நிறைவு செய்ய இருந்தோம்.
எப்போதுமே வீட்டில் கொண்டாடி விட்டு எங்காவது பிக்னிக் சென்று அங்கேயே தங்கி வருவோம். முக்கியமாக அனிவேஸ்ரி நாளில் யாரையும் வீட்டுக்கு அழைக்க மாட்டோம்.
ஆனால் அன்று கதவில்
டொக் டொக் டொக்
டி வி யில் பார்த்தேன் .நமக்கு மிகவும் பிடித்த அயலவர்களான தாத்தாவும் பாட்டியும் நின்றிருந்தார்கள்.எப்பவாச்சும் என் பிள்ளைகளை பார்க்க வருவார்கள் ஆனால் இன்றுதான் சொல்லாமல் வந்திருந்தார்கள்.
கதவை திறந்தேன் .
உள்ளே வந்து என் கணவரையும் கூப்பிட்டு இருவரையும் ஆசீர்வதித்து இந்த brass tea pot /turkish pitcher ஐ எங்கள் கைகளில் கொடுத்தார்கள்.


பாட்டிக்கு 88 வயசு தாத்தாவிற்கு 89 வயசு. பெரிய வீடுகளை பிள்ளைகள் கையில் ஒப்படைத்து விட்டு நாங்கள் இருக்கும் பிளாட் ல் ஒரு ரூம் உள்ள வீடு வாங்கி தங்கி இருப்பதோடு அழகாகவும் வைத்திருக்கிறார்கள்.
கவர்மண்ட் ஆல் நிறைய உதவியும் கிடைக்கிறது.அதிக ஸ்னோ காலங்களில் சமூக சேவை செய்வோர் வந்து சொப்பிங்க் செய்து கொடுக்கிறார்கள்.
ஹாஸ்பிட்டல் க்கு அவர்களுக்குரிய வாகனம் வந்து கூட்டி போய் மறுபடி கொண்டு வந்து விடுகிறார்கள்.அழகாக ஆடை அணிவார்கள்..அன்பாக பேசுவார்கள் .
என் இரண்டாவது மகள் வயிற்றில் இருக்கும்போது என்னோடு பேசுவது போலவே அவளோடும் பேசுவார் இந்த ஜான் பாட்டி.
இப்படி வாழவேண்டும் என என் சகோதரிகளை மட்டுமே பின்பற்றும் எனக்கு இப்போதெல்லாம் இவர்களும் ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கிறார்கள்.
மிகவும் சந்தோஷமான தம்பதிகள் .இப்போதும் அதே சந்தோஷத்தோடு தங்கள் அந்திம காலத்திற்கு அடுக்குப்பண்ணுவதுதான் எனக்கு அடிக்கடி வயிற்றைக் கலக்கும்.
அந்த வகையில் தான் இதை நமக்கு திருமணநாளை ஜாபகம் வைத்து பரிசாக கொடுத்தார்கள்.
அதாவது தாங்கள் பலகாலங்களாக கட்டிக்காத்த இவ்வாறான பொருட்களை மிகவும் பிடித்தவர்களுக்கு விட்டுச்செல்வதாக கூறுகிறார்கள்.
இந்த brass tea pot /turkish pitcher அவர்கள் வீட்டில் கம்பீரமாக அழகாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.
இவாறான ஒரு pitcher என் அண்ணன் ஒருவன் துருக்கி க்கு வக்கேஷன் போனபோது வாங்கி வந்தும் பார்த்திருக்கிறேன்.
சரியான பெயர் தெரியாமல் கேக்கவும் சங்கடப்பட்டு அவர்கள் தந்துவிட்டு போன பின் போட்டோ எடுத்து கூகிள் ல் search by image இல் அப்லோட் பண்ணி இதன் விபரங்களை பார்த்தேன்.
வீட்டில் உள்ள திருநீறைக்கொண்டு கழுவினேன் பொலிஷ் பண்ணும் மருந்து தேடிக்கொண்டு இருக்கிறேன்.
மிகவும் அழகாக இருக்கிறது .அவர்கள் நினைத்தால் ஒன்லைன் ல் இதை விற்று விடலாம் அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமே எல்லாவற்றையும் கொடுக்கலாம் 
 ஆனாலும் தாம் நேசிப்பவர்களையும் மதித்து அவர்களோடு தங்கள் நினைவுகளை பதிய வைத்து செல்ல நினைக்கும் அழகும் அன்புள்ளமும் எனக்கு
மிகவும் பிடித்து போய்விட்டது.
அவர்களுக்கு முன்னே போகிறேனோ பின்னே போகிறேனோ ஏதோ ஒன்ற கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள்



No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...