Thursday, 2 February 2017

போராட்டம்




எனக்கும் ஈழத்தில் மிக சிறிய வயதில் ஊர்வலங்கள், உண்ணா விரதங்கள், போராட்டங்கள் என்பவற்றில் பங்கு கொண்ட ஏராளமான அனுபவங்கள் உண்டு.
நம்ம்மீதான அடக்குமுறைகளையும் உயிர்ப்பலிகளையும் இந்த உலகம் மூடி மறைக்கும் போது நமக்காக போராடியவர்கள் மட்டுமல்ல தீயில் கருகி உயிரையும் கொடுத்தவர்கள் இவர்களே.
உணர்வுடன் தெருவில் இறங்கி மனிதச்சங்கிலி நடத்தியவர்கள்.
ஆம்
அடுத்தவர்களை சாடுதல் விடுத்து
தம் மதிப்பு உணர்ந்து 
தலைமையை எதிர்பார்க்காமல் 
கொதித்து எழுந்தார்கள் இன்று
புகழ்வாய்ந்த சினிமா நடிகர்களை விட மேலானவர்கள் 
நல்வாழ்க்கை வாழும் சாதாரண மக்களாகிய தாமே என்பதை
புரிந்து கொள்ளாமல்,
தொழிலுக்காக நடிப்பவர்களை
தலைவன் என்றும் ,எடுத்துக்காட்டாளன் என்றும்
வாழ்க்கையில் மேன்மை வாய்ந்தவர்கள் என்று நினைப்பதுவும்
அவர்களுக்காக சக மனிதர்களுடன் மல்லுக்கட்டுவதுமான
எண்ணங்கள் இன்று தகர்ந்தது.
சுதந்திரமில்லாத போது அதற்காக உயிர் கொடுத்து போராடி அதை பெற்றவர்கள்.
சுதந்திர நாட்டின் உரிமைகளுக்கு போராட்டங்களை முன்னெடுக்காமல்
மேடை போட்டு பேசிக்கொண்டே இருப்பதும்
முக்கியமாக இலவச கல்விக்காக மாணவ சக்தியை பயன்படுத்தி 
எந்த எதிர்ப்பும் காட்டாமல் தம்மை வருத்துவதும். 
போராட்டம் என்றால் தீக்குளிப்பது என்று தீர்மானிப்பதும் 
இன்று தொலைந்தது.
.மக்கள் சக்தியை பயன்படுத்தி 
சமூக சேவைகள் செய்து உலகம் வியக்கவும்
எங்கோ வாழும் நம் கண்கள் குளமாகும்படியும்
ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்துவிட்டு
ரஜனி என்ன செய்தார்?விஷால் உதவி செய்ய்வில்லை என
சில்லி தனமாக பேசி
அவர்களை எல்லாம் தம்மை விட பெரிய மனிதர்கள் ஆக்குவது.
இன்றுடன் முடிந்தது.
(ஆம் களத்தில் இருந்து போராடும் நீதான் நாட்டின் பெரிய மனிதன்.பசியில் அழும் குழந்தையை நேரில் கண்டு மனமிரங்கி நீ பாலுக்கு செலவு செய்த 10 ரூபாய்தாய் மிகப்பெரிய தொகை.
இதில் அவர்களை எல்லாம் எதற்கு நடிக்க அழைக்கிறாய்???)
.
அரசியல் வாதிக்கு
செய்கையில் பயத்தை கொடுத்து படிய வைக்காமல் 
அவர்கள் எண்ணம்போல் ஆள அனுமதி கொடுப்பதும் விலைபோவதும்
இன்றுடன் ஒழிந்தது
.தங்கள் கருத்தை அப்பட்டமாக ஆணித்தரமாக முன்னிறுத்துவதை விடுத்து
அயல் நாட்டு நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்??
நடிகர்கள் என்ன சொல்கிறார்கள் ??? 
அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என
வெறும் அபிப்பிராயங்களுக்கும்
தனிப்பட்ட கருத்துக்களுக்கும் ஆத்திரப்பட்டு உனக்கு உரிமை இருக்கிறதா??? பெருமை இருக்கிறதா என 
அடித்து நொருக்கி உருவ பொம்மை செய்து எரிப்பதும் 
இன்று இன்றிப்போனது.
.
இந்த மாணவர்களுக்காகவும் அவர்கள் மனம் துவண்டு போகாமல் 
மேலும் சாதிக்கும் எண்ணங்களை விதையிலேயே அறுபட்டு போகாமல் இருப்பதற்காகவாவது இந்த போராட்டம் தோற்று விட கூடாது என்று வேண்டுகிறேன்.
சுரேஜினி பாலகுமாரன்.

No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...