Thursday 2 February 2017

அரைத்த மீன் குழம்பு

நேற்றைய தினத்தில் என் வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது. ஆம் இதோ இந்த படத்தில் குந்தி இருக்கும் மனச்சாட்சி இல்லாத குக்கர்

சின்னதுதானே இது என்ன செய்யும் என்று வீரமாக மூடியை திறந்த என் நம்பிக்கையை உடைத்து. உள்ளே இருந்த சிவப்பரிசி உழுத்தங்கஞ்சியை
கொதிக்க கொதிக்க என்மேல் கொட்டி தீர்த்தது.

காயங்களும் எரிவுகளும் ஒருபக்கம் இருக்க ஹஸ் வேலையின் நடுவே ஆர்டர் செய்து வீடுவந்த பிஸ்ஸாவை ஓரம் கட்டிவிட்டு இதோ இந்த யாழ்ப்பாணத்து அரைத்த மீன் குழம்பு செய்தேன்.
யெஸ்ஸ்ஸ் சமையல் எனக்கு ரெம்ப பிடிக்கும் .காரணம் நான் அதை ஒரு வேலையாக நினைப்பதில்லை.சமைக்கும் வேளையில்தான் கிச்சன் ல் லாப்டப் வைத்திருந்து பேஸ்புக் வருவேன்.கிச்சனில் வைத்து ஏதாவது பெயிண்டிங் தையல் 
எல்லாம் செய்வேன்.எல்லாம் செய்து கொண்டே ரிலாக்ஸ் ஆக ஒரு கோப்பி குடிப்பேன்
.
சோ அடுப்புக்கு கிட்டே போக முடியாமல் இருந்தது இருந்தாலும் முகத்தை திருப்பி கொண்டு நீள கரண்டியை வைத்து சமைத்துவிட்டேன்.வெறும் 26 நிமிடங்களில்.
இதோ அந்த அரைத்த மீன் குழம்பு
தேவையானவை
அரைக்க
மல்லி {தனியா}2டேபிள் ஸ்யூன்
நச்சீரகம் {ஜீரகம்} 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் அரை டேபிள் ஸ்பூன்
மிளகு கால் டேபிள் ஸ்பூன்
செத்தல் மிளகாய் {வரமிளகாய்} 2
தேங்காய் ஒரு சிறு துண்டு அல்லது தேங்காய்ப்பூ
உள்ளி 2 பல்லு
இஞ்சி சிறிய துண்டு
மீன் 4 துண்டுகள்
தேங்காய்ப்பால் 1 கப்
உப்பு
தாளிக்க
வெங்காயம் 1
கருவேப்பிலை
கடுகு
மற்றும் புளி நெல்லிக்காயளவு


மல்லி,இஞ்சி,உள்ளி,தேங்காய்,செத்தல்மிளகாய்,நச்சீரகம்,மஞ்சல் ,மிளகு எல்லாவற்றையும் அரைத்து வைக்கவும் 




கடுகு வெங்காயம் ,கருவேப்பிலை தாளித்து அதனுடன் உப்பு ,புளி சேர்த்து அரைத்து வைத்துள்ளதை அத்ற்குள் கொட்டி தேவையாயின் கொன்சம் தண்ணீரும் விட்டு மீனையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும்.



கொதித்ததும் தேங்காய்ப்பால் விட்டு மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.


இது இலங்கை யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவுகளில் ஒன்று.குழந்தை பிறந்தவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் கூட குடுப்பார்கள்.ஆனால் வெளிநாடுகளில் டாக்டர்கள் கண்டிப்புடன் சொல்லி விடுவார்கள் இது சாப்பிட வேண்டாம் என்று.
காரணம் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்தில் உபயோகிக்க பட்ட இந்த மருத்துவ குணமுள்ள குழம்பை நாம் உண்டு விட்டு மாத்திரைகளையும்,விட்டமின்களையும் எடுக்கும் போது வயிற்றோட்டம் ,வயிற்று வலி,குழந்தைக்கு உபாதைகள் என ஏராளமான பிரச்சனைகள்
ஏற்பட்டு தாய் சேய் இருவர் ஆரோக்கியமும் கெட்டுபோகிறது என்கிறார்கள்.அது உண்மை என்பதும் நான் கண்டுணர்ந்தது.



No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...