சுலபமாக மிகவும் அழகாக விசேசங்களுக்கு எழுத்துக்களை செய்து கொள்ள
தேவையானவை
அட்டைப்பெட்டி சில
துணி
க்ளூ
கத்தரிக்கோல்
பென்சில்
அட்டையை எடுத்து அதில் தேவையான அளவு பெரிதாக எழுத்துக்களை வரைந்து கொள்ள வேண்டும்.
எழுதிய பின் எழுத்தை வெட்டி எடுத்து துணியில் வைத்து அதே அளவு வெட்டாமல் ஒ அங்குலம் பெரிதாக வெட்ட வேண்டும்.( துணியை எழுத்தின் பின்புறமாக திருப்பி ஒட்டுவதற்கு}
வெட்டிய துணியை எழுத்தின் ஓரத்தில் பேஸ்ட் ஐ தடவி துணியை ஒட்ட வேண்டும்.
எழுத்துக்களின் நடுவே வரும் வட்டங்களுக்கு துணியில் ஒரு வெட்டு வைத்து ஓரங்களில் ஒட்டியதுபோலவே மறுபக்கம் மடித்து ஒட்ட வேண்டும்.
துணிகளில் பூக்களை வைத்தும் அலங்கரித்துக்கொள்ளலாம்
No comments:
Post a Comment