Saturday, 4 March 2017

heart tree


தேவையானவை 
சிறிய மர கிளை 1
சிவப்பு அட்டை 1
பிங்க் அட்டை 1
கம்பிகள்
கத்தரிக்கோல்
பென்சில்








1.தேவையில்லாத ஒரு பழைய அட்டையில் சிறிது ,பெரிதாக இதயம் வரைந்து அதை வெட்டி எடுக்கவும்.
2.இப்போது சிவப்பு ,பிங் அட்டைகளின்மேல் முதலில் வெட்டிய இதயத்தை அளவாக வைத்து வரையவும்
3.படத்தில் காட்டியிருப்பது போல் சிறிய துளையிடவும் {சேஃப்டி பின் போதும்}
4.கம்பியின் இரு முனைகளிலும் முனைக்கு ஒன்றாக இதயத்தை கோர்த்து கம்பியை மடித்து விடவும் .


5.ஆயத்தமாக வைத்திருக்கும் மரக்கிளையில் கம்பியின் நடுப்பகுதியை வைத்து ஒரு சுற்று சுற்றி விடவும்.
குழந்தைகளூடன் சேர்ந்து இவ்வாறான அழகு வேலைகள் செய்யும் போது குழந்தைகள் பொறுமை,மூளை டெவலப்மெண்ட்,
ஆர்வம்,நேர்த்தி,டீம் வேர்க் என்பவற்றை சுலபமாக கற்றுக்கொள்வார்கள்.
இது நான் மகளுடன் சேர்ந்தே செய்தேன்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடியது.




my valentine's day 2017



இந்த காதலர் தினத்தை எப்போதுமே நாங்கள் ஆண் பெண் காதலுக்கு உரியதாக பார்த்ததில்லை.
திருமணத்திற்கு முன்னரும் தங்கைகளுடன் கிஃப்ட் பரிமாறிக்கொள்வோம்.
பிள்ளைகளுக்கு ஸ்கூல் ல் எல்லா விஷேட தினங்களையும் கொண்டாட பழக்கிக்கொடுக்கிறார்கள்.
மதர்ஸ் டே,ஃபாதர்ஸ் டே மட்டுமன்றி காதலர் தினம் ,ஹலோவீன் ,க்றிஸ்மஸ் என்று எதையும் விட்டு வைப்பதில்லை.
அவர்களின் ஆற்றல்களை விரிவு படுத்தவும் சமூகத்தோடும் குடும்பத்தோடும் பிணைப்பை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்வார்கள்.
இப்படி இருக்கும்போது நாமும் அது அதற்குரிய சிறப்பை கொடுத்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாடும்போது மிகவும் மன மகிழ்ச்சியும்
சமூக வழக்கங்களில் நாட்டமும் ,நம்மோடு அதிக நெருக்கமும் பிள்ளைகளிடத்தில் உருவாகும்.
வழக்கம் போல நாங்களும் கிவ்ட் ,பொக்கேவ்,ஹக் எல்லாம் பரிமாறிக்கொண்டோம் ,அதிலும் இங்கு கோணல் மாணலாக இருக்கும் பீட்ஸ் மாலைகள் அப்பா பிள்ளைகளுக்கும் எனக்கும் தன் கையாலேயே செய்து தந்தவை.
கோணலா இருந்தாலும் நம்மோடதாக்கும் .
சின்ன சின்ன சந்தோஷங்களை தின்று விடும் 
பெரும் பிஸி யை வென்றுவிடுவதில் இருக்கிறது
நினைவுகளை மென்று மீட்கும் அழகான சந்தோஷங்கள்.
அனைவருக்கும் அன்பு கனிந்த காதலர் தின வாழ்த்துக்கள்.

















சங்கோஜம்




அழுக்கும் பகையும் 
பிறன் மீது ஆக்ரோஷமும்
நிரம்பி இருக்கையில்
நின் வெளிப்பாடுகள் மொத்தமும் 
 அதை வாந்தி எடுக்கையில்...........
நிற்க.........
இறந்தபின் உடல் நாற்றம் 
உயிராய் இருப்பவரும் ஏற்றுக்கொளாத போது
நின்னுள் அழுகிப்போயிருக்கும் 
கறைகளின் வாந்தியை
கையேந்தி ஏற்போம் என்று
கனவு காண்கின்றாயோ?????
நழுவுதலே முறையென்று உனை 
புறந்தள்ளி புறக்கணித்துன் நினைவை
புதைத்த இடத்தில் பூமரங்கள்
பூக்கவைத்து தானும் மலர்ந்து நிதம்
வாழ்வாங்கு வாழ்வான்
வாழ்வியலின் அழகை அளந்தவன்.
சுரேஜினி பாலகுமாரன்.

வெள்ளை அழகு


கொள்ளை அழகா இல்லை
கொல்லும் அழகா எனை
மெல்ல வருடி காதல் கொள்ளும்
செல்ல அழகா
சொல்லில் இயலாச் சுடு மூச்சில் 
சொக்கி தகிக்கும் கள்ள அழகா
தொக்கிய சுமை 
தொடர் கலைத்து - உயிர் 
தொட்டுப்பேசும் கலை அழகா
உன் சிலிர்ப்பில் சுகித்து புது 
உணர்வு செழிக்கையில் 
என் இடர்களை இவ்விடமே 
 தொலைத்து இங்கனம்
தொடர்கிறேன் ஒவ்வொரு தடவையும்
சுரேஜினி பாலகுமாரன்









சட்டம்



நிர்பயா முதல் இன்று கருகிய இளந்தளிர் சேலத்து 10 வயது பெண்குழந்தை வரை
இந்த உலகில் ஒரு கொடூர ஒரு சம்பவம் எங்காவது நடந்தால் தேசத்தையே உலுக்கி போட 
சட்டம் வென்று அதேபாணிக் கொடூரம் வேரறுத்து வீழ்த்தப்படுகிறது. 
ஆனால் இன்னமும் சில விடியாத்தேசங்களின் தண்டனைகள் அதே குற்றத்தை செய்ய இன்னும் நிறைய பேருக்கு வாய்ப்பளிப்பதால்
சங்கிலித்தொடரில் அதே குற்றங்கள் அரங்கேற்றப்படுகிறது.
இரத்தத்தில் வெறிகலந்தவர்கள் செய்யும் செயல்களுக்கு தண்டனையை தூண்டாமல்,பாதகர்களை இனம் காட்டாமல் 
ஆடைகளையும் தொடைகளையும் ,இணையத்தையும் சாடிக்கொண்டிருப்பவர்கள் கூட சமூகத்தில் விஷம் விதைக்கும் குற்றவாளிகளே.
பெண்குழந்தைகளின் அம்மாவாக என் வேண்டுதல், கடவுள் இருந்தால் இந்த விதண்டாவாதிகளையும் சேர்த்தே தீ இடட்டும்.

ஈஸி பலூன் டெக்கரேஷன்


எனக்கு தெரிஞ்சு நான் கடைசி நேரத்தில் 10 நிமிஷத்தில் செய்யும் சோம்பேறி பலூன் டெக்ரேஷன் இதுதான்


1 நான்கு ஒரே நிற பலூன்களை ஒரே அளவு வரக்கூடியதாக காற்றூதி கொள்ளுங்கள்.


2. நடுவில் வைக்க ஒரு தனிப்பட்ட நிறத்தை தெரிவு செய்து அந்த பலூனை முதல் காற்று நிரப்பிய பலூனின் பாதியளவிற்கு குறைவாக காற்று நிரப்பிக்கொள்ளுங்கள்.
{அதாவது 4 ஒரே அளவாக காற்று நிரப்பிய பலூன் .ஒரு சிறிய பலூன்.}
3.இரண்டு பலூன்களை எடுத்து ஒன்றுடன் ஒன்று ஜோடியாக கட்டவும்.
அதே போல் அடுத்ததையும் செய்யவும்


4.இந்த ஜோடி பலூன்களில் ஒன்றுடன் சிறிய பலூன் ஐயும் இணைத்து கட்டவும்


5.இப்போது ஒரு செட் ல் 3 பலூன் ம் அடுத்த செட் ல் 2 பலூன் ம் இருக்குமல்லவா இதை ஒன்றுடன் ஒன்று வைத்து ஒரு சுற்று சுற்றி விடவும்


{கட்டத்தேவையில்லை]
6. டபிள் டேப் {double sided tape } 4 சிறிய துண்டுகளை வெட்டி படத்தில் காட்டியது போல் ஒவ்வொரு பலூன் இலும் நடுப்பகுதியில் ஒட்டவும்.


7.கிளியர் டேப்{ clear tape} ஒரு துண்டு வெட்டி ஓரளவு சுருள்போல் செய்து முன்பு ஒட்டிய டபிள் டேப் ல் ஒட்டவும்


8 .இப்போது விரும்பியதுபோல் சுவரில் ஒட்டவும் .





இதில் ஒரு டேப் ஐ மட்டும் உபயோகித்தால் பொசுக் பொசுக் என்று நழுவிக்கொண்டிருக்கும் .இவ்வாறு செய்தால் இறுக்கமாக பிடித்துக்கொள்ளும்

Open clothes and shoe storage


எனக்கு ஆடைகள்,ஹாண்ட் பாக்ஸ் ,பெல்ட் ,சாக்ஸ் எல்லாம் அலமாரிக்குள் {Wardrobe} திணிக்கவோ அங்கொன்றும் இங்கொன்றுமா
வேறு வேறு இடங்களில் அடுக்கி வைத்தாலோ உபயோகிக்க சிரமமாக இருப்பதுபோல் இருக்கும்.
தவிர வெளியே பெரிய இடத்தை அடைத்துக்கொண்டு இருந்தாலும் உள்ளே ஒரு கொஞ்சம் வைத்ததும் நிரம்பிவிடும்
அடிக்கடி கலைந்தும் விடும்.அப்படி கலைந்தாலும் பூட்டி விட்டா போச்சு என்று கிளீன் பண்ணும் அக்கறையில்லாமல் போய்விடுகிறது.
நான்கு சீசன் நாடுகளில் வசிக்கும் நமக்கு ஆடைகள்,காலணிகளை கொஞ்சமாக வைத்து சமாளிப்பது என்பதும் கடினம் .
அதற்கு இந்த Open clothes and shoe storage system மிகவும் பொருத்தமாக இருக்கும்.


இடத்திற்கு ஏற்ற மாதிரி அளவுகளை சரிப்படுத்தியும் கொள்ளலாம்.
நமக்கு குழந்தைகள் கிடைத்ததும் நமக்கு தேவையான அதே அளவு இடம் அவர்களுக்கும் தேவை வந்தது.
வழக்கமாக பலகை வாங்கி அளவெடுத்து வெட்டி கோப்பியும் குடித்து குடித்து இன்ரஸ்ட் ஆக நானும் ஹஸ் ம் சேர்ந்து அழகாக செய்து விடுவோம்.
ஆனால் இது தேவைப்பட்ட நேரம் பால்கணியில் ஸ்னோ நிரம்பி இருக்க வீட்டிற்குள் குழந்தைகள் இருப்பதால் பலகை வெட்டி தூசி வந்துவிடும் என்பதால் இங்கு படத்தில் இருக்கும் செல்ஃப் ஐ வாங்கி 



ஸ்டோரேஜ் செய்து கொண்டோம்.
தேவைப்பட்டவை
1.செல்ஃப் யுனிட் {Shelf unit}
2. பேப்பர் ரோல் (gift wrapping paper rolls)
3.க்ளியர் டேப் {clear tape]


முதலில் க்ளியர் டேப் ஐ ஒட்டாத {வெளிப்பக்கம்} பக்கம் உள்ளே வருமாறு இடைவெளி இல்லாமல் செல்ஃப் ஐ சுற்ற வேண்டும்
அடுத்து டேப் இன் வெளிநோக்கிய பக்கம் ஒட்டிக்கொள்ளும் ஆகையால் gift wrapping paper ஐ அதன் மேல் சுற்றவும்
அவ்வளவுதான் இதை கிழிக்க முடியாது


என் மகள் ரெம்ப ட்ரை பண்ணினாள் துவம்சம் பண்ண ஆனால் முடியவில்லை



youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...