Thursday, 10 September 2009

கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும்

முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது

சாலவும் நன்று

இல்லறமல்லது நல்லறமன்று

ஆத்திசூடி

அறம் செய்ய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுதிகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டுண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அஃகஞ் சுருக்கேல்

பூனைக்குட்டி

மியா மியா பூனை
வீட்டை சுற்றும் பூனை
பாலை குடிக்கும் பூனை
பாய்ந்து செல்லும் பூனை
இடறு செய்யும் எலிகள்
இதனை கண்டால் நடுங்கும்
அடுத்த வீடும் ஓடும்
அங்கும் திருடித்தின்னும்
மடியில் அமர்ந்து கொண்டு
வாஞ்சையுடனே பார்க்கும்
பாப்பாவோடும் புரளும்
பாசம் காட்டி கொஞ்சும்

நிலா

வட்ட நிலா வா வா
வண்ண நிலா வா வா
பட்டு நிலா வீசி வா
பாடுகிறேன் ஓடி வா
வெள்ளி நிலா வா வா
விண்வெளியில் ஓடி வா
அள்ளி நிலா வீசி வா
ஆடுகிறேன் ஓடி வா

நிலா நிலா ஓடிவா

நிலா நிலா ஓடி வா
நில்லாமல் ஓடிவா
மலைமேல் ஏறி வா
மல்லிகைப்பூ கொண்டு வா
வட்ட நிலா வா வா
வண்ண நிலா வா வா
பட்டம் போல பறந்து வா
பம்பரம் போல் சுற்றி வா
பாடுகிறேன் ஓடி வா

சின்னத்தம்பி

சின்னத்தம்பி சின்னத்தங்கை நித்திரையோ
நித்திரையோ நித்திரையோ
மணி அடிக்கிறது மணி அடிக்கிறது
எழும்புங்கோ எழும்புங்கோ

கைவீசம்மா

கைவீசம்மா கைவீசு
கடைக்கு போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு
கோவிலுக்கு போகலாம் கைவீசு
கும்பிட்டு வரலாம் கைவீசு
கண்னே மணியே கைவீசு

பாட்டி வீட்டு பழம்பானை

பாட்டியின் வீட்டு பழம் பானை - அந்தப்
பானையில் ஓர்புறம் ஓட்டையடா
ஓட்டை வழி ஓரு சுண்டெலியும் - அதன்
உள்ளே புகுந்து நெல் தின்றதடா
உள்ளே புகுந்து நெல் தின்று தின்று் - வயிறு
ஊதிப்புடைத்து பருத்ததடா
மெல்ல வெளியே வருவதற்கு ஓட்டை
மெத்தச்சிறிதாகி போச்சுதடா
பானையை காலையில் திறந்தவுடன் வெளிப்
பக்கமாய் சுண்டெலி பாய்ந்ததடா
பூனை எலியினை கண்டதடா
ஓடிப்போய் அதை கவ்வியே சென்றதடா

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...