Saturday, 4 February 2012

ஆரம்ப கட்ட கருச்சிதைவு

கரு உருவாகி 12 வாரத்துக்குள் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் கருச்சிதைவு ஆரம்ப கட்ட கருச்சிதைவுக்குள் அடங்கும்.
1.கருப்பையில் சினை முட்டை சரியான முறையில் பதியம் பண்ணாமல் இருக்குமிடத்து நழுவி கருச்சிதைவு ஏற்படும்

... 2.மரபுவழிக்குறைபாடுகள்

3.கருப்பைக்கழுத்து திறந்த நிலையிலும் பலவீனமாகவும் இருத்தல்.

4.இரத்த அழுத்தம். வைரஸ்களாலும் தொற்றுக்கிருமிகளாலும் தாக்கபடுதல். .

5.கரு பதிவாகியதும் தன்னிச்சையாக மாற்றத்துக்கேற்ப செயற்பாடுகளை தொடங்கும் நஞ்சுக்கொடி போன்றன சரியாக செயற்படாமல் போதல்.

இவையெல்லாம் ஆரம்ப கட்ட கருச்சிதைவுகளுக்கு காரணமாகின்றன.

Wednesday, 1 February 2012

Icsi (Intra Cytoplasmic Sperm Injection)

Icsi (Intra Cytoplasmic Sperm Injection)

ஐ வி எவ் முறையிலான கருத்தரித்தலுக்கு ஒரு முட்டையை கருவாக்க ஒரு லட்சம் உயிரணுக்கள் வரை தேவைப்படும் 5 கருக்களை உருவாக்க 5 லட்சம் தொடங்கி அதற்கும் மேற்பட்டஉயிரணு தேவைப்படும்.காரணம் ஐ வி எவ் ல் குறைந்தது 5 கருக்களாவது பதப்படுத்துவதே முறை.40 சதவீதத்துக்கும் அதிகமான அணுக்கள் ஊர்ந்து செல்லும் திறனை இழந்தைவையாக இருக்கும் பட்சத்திலும்.பரம்பரையான அணுக்குறைபாடு அல்லது தொற்றுக்கிருமிகளின் தாக்கம் இருப்பினும் ஐ வி எவ் பெருமளவு பல்ன் தருவதில்லை

.இதற்கேற்ப விந்தணு இல்லாதவர்களுக்கு மறுபடியும் மறுபடியும் ஐ வி எவ் செய்தாலும் தோல்வியில் முடிவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.

இவ்வாறானவர்களும் பயன்பெறும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டதே இக்சி மருத்துவம் Icsi (Intra Cytoplasmic Sperm Injection)

ஒரு விந்தணு கிடைத்தாலும் அதை எடுத்து கருமுட்டைக்குள் துளையிட்டு விந்தணுவை செலுத்தி கரு உண்டாக வைப்பதற்கு எடுக்கும் முயற்சியே இந்த புதிய முறையிலான மருத்துவம்.
இது ஒரு பெண்ணுக்குள்ள குறகளை நிவர்த்தி செய்து விட்டு இந்த முறையில் கருவை உருவாக்கு உட் செலுத்தும் போது பெருமளவான வெற்றி வீதத்தை அளித்து குழந்தையில்லா பெரும் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுகிறது.

Thursday, 26 January 2012

உங்கள் குழப்பங்களை தீர்க்க தமிழ் விளக்கங்கள்

FSH(Follicle-stimulating Hormone)
நேரடியாக இரத்தத்தில் கலந்திருக்கும் ஹார்மோன் கருமுட்டை வளர்ச்சியை தூண்டுகிறது.

HSG Hysterosalpingogram
கருப்பைக்குள் எக்ஸ்ரே சாயத்தை உட்செலுத்தி கருப்பைக்குழாயையும் கருப்பையையும் துல்லியமாக படம்பிடிப்பது.

Progesterone
மாதவிடாய் சுழற்சியில் சினைப்பையால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன்.இரத்தத்தில் இந்த ஹார்மோன் அளவை வைத்து ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வெளிப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறியலாம். காரணம் கருமுட்டை வெளியேறிய பின்னரே இந்த ஹார்மோன் உற்பத்தியாகிறது

Ultrasonics
சினைப்பையின் உருவத்தையும் நீர்க்கட்டிகள் ,முட்டை வெளிப்படல் ,கருத்தரித்தல் போன்றவற்றை கண்டறிதல்.

LH - Luteinizing hormone
கருமுட்டையை முதிர்ச்சி அடையச்செய்து முதிர்ந்த கருமுட்டையை விடுபட்டு வெளியேற வைக்கும் ஹார்மோன்

Saturday, 22 October 2011

கருத்தரிப்பில் ஆண்களுக்கான பிரச்சனைகள்

விந்தணு

விந்தணுக்களின் எண்ணிக்கை ,அடர்த்தி, நீந்திச்செல்லும் வேகம்,இயல்பு நிலை,பாக்டீரியாக்கள் போன்றன் கருத்தரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடியவை.ஆகவே
இவை சரியான முறையில் டாக்டரிடம் சென்று காலம் தாழ்த்தாமல் பரிசோதிப்பதே சிறந்தது.

அணுக்களின் எண்ணிக்கை
ஒவ்வொரு மில்லிலீட்டர் அணுத்திரவத்திலும் 4கோடி விந்தணுக்கள் இருத்தல் வேண்டும் .இதன் அரைவாசிக்கு குறைவாக உள்ளதெனில் அந்த நபருக்கு பிரச்சனை
உள்ளது.

நீந்திச்செல்லும் வேகம்
மொத்த அணுத்திரவத்தில் எத்தனை வீதமானவை நீந்திச்செல்கின்றன என்பது அவசியம்.நீந்திச்செல்லும் திறன் கொண்ட அணுக்களால் மட்டுமே கருத்தரிப்பை
ஏற்படுத்த முடியும்(இதில் 65 வீதமானவை நீந்திச்செல்வது இயல்பு).40சதவீத அணுக்களுக்கு கீழ் நீந்தும் திறன் கொண்டவையாக இருக்கும் பட்சத்தில் குறபாடு உள்ளது உறுதி செய்யப்படும்.

இதைவிட விந்தில் பாக்டீரியாக்கள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அந்த பக்டீரியாக்கள் விந்தின் தரத்தை கீழ்நோக்கி கொண்டுசெல்ல வழிவகுக்கும் ஒரு காரணி.
எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதுகூட விந்தை ஒரு நோய்க்கிருமிபோல் அழித்துவிட வாய்ப்புள்ளது.


மற்றும் கவலைகள், சுற்றுச்சூழல் காரணிகள்,நோய்க்கிருமிகள்,ஹார்மோன் மாற்றங்கள் என்பனவும் விந்து தரத்தில் ஆதிக்கம் செலுத்தும் காரணிகளே.

ஆனால் விந்துக்குறைபாடு என்பது கருத்தரித்தலில் மாற்றங்களை ஏறபடுத்துமே தவிர உடலுறவில் அந்த நபர் சாதாரணமாக செயல்படமுடியும் என்பதில்
தம்பதியர்கள் தெளிவாக இருத்தல் வேண்டும்.அடுத்து இந்த குறைபாட்டுக்கு விந்தணு 0 எண்ணிக்கையில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் சிகிச்சை மூலம்
கண்டிப்பாக கருத்தரித்தலை ஏற்படுத்த முடியும்.

Monday, 25 April 2011

குழந்தையின்மையும் மருத்துவமும் 2

அடிப்படை பரிசோதனைகள் எடுத்து நாம் தெளிவு பெற்ற பின் விட்டமின் மாத்திரைகள் எடுத்து அதற்கும் கருத்தரிக்கவில்லை நமக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றால்
அதன் பெயர் - காரணம் தெரியாத கருத்தரிப்பின்மை-
Unexplained Infertility

இப்போது கருமுட்டையின் வளர்ச்சியும் அது வெளியேறும் நாளையும் கிட்டத்தட்ட தெரிந்து கொண்டு முயற்சி செய்து வாய்ப்பை அதிகரிக்க அறிவுறுத்தப்படுவோம்.அதாவது 28 நாள் மாதவிடாய் சுழற்சி உள்ள ஒருவருக்கு 14வது நாள் கருத்தங்குவதற்கு ஏற்ற நாளாக கணிக்கப்படுகிறது.
தேவைப்பட்டால் இண்டர் நெட்டில் கொடுக்கப்பட்டுள்ள Ovulation Calculator மூலம் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.நாட்கள் எண்ணும் போது மாதவிடாய் தொடங்கிய அன்றைய தினத்தை *நாள் 1
என எடுத்துக்கொள்ள வேண்டும்.


அடுத்து basal-body-temperature மூலம் தினமும் நாமே காலையில் எழுந்தவுடன் உடல் வெப்பத்தை கணித்து basal-body-temperature chart ல் எழுதி வைக்க வேண்டும்.உடல் வெப்பம் சரிவடைந்து அடுத்தநாள் நன்கு அதிகரிக்கிறது எனில் அந்த நாளில் நாம் முயற்சிக்க வேண்டும்.அத்துடன் தொடர்ந்து கணித்துக்கொண்டே இருக்க வேண்டும்.உடல் வெப்பம் ஏற்றத்திலேயே இருந்தால் நாம் கருத்தரித்து விட்டோம் .அது மீண்டும் சரிவடைந்து கொண்டே போனால் கருத்தரிக்காமல் கருமுட்டை வெளியேறிவிட்டது எனலாம்.இது நாமாகவே செய்தும் கொள்ளலாம் டாக்டர்களின் மேற்பார்வையிலும் செய்யலாம்.

அடுத்து டாக்டர்களிடம் சென்றால் கருமுட்டை வளர்ச்சியை கணிப்பதற்கான அல்ராசவுண்ட் எடுப்பதற்கு சிபாரிசு செய்வார்கள்.கருமுட்டை வளர்ச்சி என்பது நாள் ஒன்றுக்கு 1-2 மில்லிமீட்டராக இருக்கும்.17 ல் இருந்து 24 மில்லிமீட்டர் சைஸ் என்பது கருத்தரித்தலை உண்டுபண்ணக்கூடியவை.

கருமுட்டை வளர்ச்சியை கணிப்பதன்மூலம் நமக்கு கருத்தரிப்பிற்கு ஏற்ற நாளை சுலபமாக கண்டு பிடித்து அந்த நாட்களில் குழந்தைக்காக முயற்சி செய்வது என்பது கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும். Ovulation Predictor வாங்கி நாமே டெஸ்ட் செய்து கண்டுபிடிக்கும் வாய்ப்பும் நமக்கு இருக்கிறது.

இதில் கருமுட்டை வளர்ச்சி வீதம் நமக்கு போதவில்லை எனும் பட்சத்தில் வளர்ச்சியை அதிகரிக்க மாத்திரை ஊசி என்பன அவரவர் தேவைக்கேற்ப பரிந்துரைக்கப்படும்.
தொடரும்.................

Saturday, 23 April 2011

குழந்தை இன்மையும் வைத்தியமும் 1

குழந்தை இன்மையும் வைத்தியமும் .....

உலக மாற்றங்களில் ஒன்றாக குழந்தையின்மை என்ற பிரச்சனையும் அதிகரித்து வருகிறது என்பது யாராலும் மறுக்கப்பட முடியாத ஒன்று.
பிற இனத்தவர்கள் வாழ்வியல் முறையில் இது ஒரு பெரிய பாதிப்பு இல்லாவிட்டாலும் நம் சமூக அமைப்பின்படி நோக்கும் போது இது நிச்சயமாக இல்வாழ்வை
பாதிக்கும் ஒரு பெரிய பிரச்சனையே.இல்லறவியலில் இருவருக்கும் குழந்தை என்பது ஆசை என்ற புள்ளியில் ஆரம்பித்து அதுவே காலத்துக்குள் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் ஏக்கமாக மாறி
பின்னர் பிரச்சனையாக உருவெடுக்கிறது.இதுவே நோய் ஆகாமல் தடுப்பது நமது கையில்தான் உள்ளது.

இந்த பிரச்சனைக்குள் வந்து விட்டவர்கள் முதலில் ஒரு விடயத்தை மனதில் அழுத்தமாக பதிய வேண்டும்.இது ஒரு தற்காலிகமான பிரச்சனை.இதிலிருந்து நாம் மீள முடியும்.மொத்தத்தில் #இதுவும் கடந்து போகும்#
இதற்காக நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.அடுத்தவர்கள் பேச்சு நமக்குத்தேவையில்லை.கணவன் மனைவி கடவுள் மருத்துவர் தவிர இங்கு வேறு யாரும் இதற்கு எதுவும் உரிமை கொள்ள முடியாது.

மருத்துவம் இந்தப்பிரச்சனைக்கு எவ்வளவோ சாதமாகி விட்டது.குழந்தைக்கு முயற்சி செய்து 6 மாதங்கள் கடந்த நிலையில் மருத்துவ ரீதியாக அடிப்படை பரிசோதனைகளை எடுத்துக்கொள்வதை எந்த சட்டமும் தடுக்கவில்லை.
இந்தப்பரிசோதனைகள் கருத்தரித்தலை பாதிக்காது.அதன்பின் நமக்கு அடிப்படையில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு நாமே முடிவெடுத்துக்கொள்ளலாம்.

அடிப்படை பரிசோதனைகள்
கருக்குழாய் அடைப்பு
விந்தணு வீதம்
கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் என்பன இவற்றுள் அடங்கும்

இதைத்தொடர்ந்து எந்த ஒரு உடல் ரீதியான பிரச்சனையும் இல்லாத நிலையிலும் கருத்தரித்தலை அதிகப்படுத்த மருத்துவர் ஆலோசனையுடன் போலிக் அசிட் ,பி12 போன்ற விட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.

உடல்,மன ரீதியாக வரும் பிரச்சனைகளும் தீர்வுக்கான வழிகளும் தொடர்ந்து எழுதுகிறேன்

Thursday, 10 September 2009

கொன்றை வேந்தன்

அன்னையும் பிதாவும்

முன்னறி தெய்வம்

ஆலயம் தொழுவது

சாலவும் நன்று

இல்லறமல்லது நல்லறமன்று

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...