Thursday 10 September 2009

பட்டம்

பட்டம் பறக்குது பட்டம் பறக்குது
பரந்த வெளியிலே
சிட்டுக்குருவி போல
பட்டம் பறக்குது திறந்த வெளியிலே
வாலை அசைக்குது வாலை அசைக்குது
வான வெளியிலே
வாலை அசைத்து மேல் தாவிப் பறக்குது
வான வெளியிலே
நூலை இழுக்குது நூலை இழுக்குது
வீசும் காற்றிலே
நூலை இழுத்து விண் கூவிப்பறக்குது
மூசும் காற்றிலே

லட்டு

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு

லட்டு மொத்தம் எட்டு
எட்டில் பாதி பிட்டு

எடுத்தான் மீ்தம் கிட்டு
மீதமுள்ள லட்டு

முழுவதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு

கிட்டு நான்கு லட்டு
பட்டு நான்கு லட்டு

மொத்தம் தீர்ந்த லட்டு
மீதம் காலி தட்டு

நாய்க்குட்டி


தோ தோ நாய்க்குட்டி

துள்ளிவா நாய்க்குட்டி

வெள்ளை நிற நாய்க்குட்டி

நான் வளர்க்கும் நாய்க்குட்டி

கள்வன் வந்தால் குரைக்கும்

லொள் லொள்



ஆட்டுக்குட்டி

ஆட்டுக்குட்டி எந்தன் குட்டி
அருமையான செல்லக்குட்டி

ஓட்டம் ஓடி வந்திடுவாய்

உனக்கு முத்தம் தந்திடுவேன்

Friday 4 September 2009

வெள்ளைப்பசு

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு
அங்கே துள்ளிக்குதிக்குது
கன்றுக்குட்டி
அம்மா என்குது
வெள்ளைப்பசு
உடன் அண்டையில் ஓடுது
கன்றுக்குட்டி

பாற்குடம் சிறுவர் பாடல்


பருத்தித்துறை ஊராம் பவளக்கொடி பேராம்

பாவைதனை ஒப்பாள் பாலெடுத்து விற்பாள்

அங்கவட்டோர் நாளில் அடுத்த கதை கேளீர்
சந்தைக்கு போம்போது தான் நினைத்தாள் மாது

பாலை இன்று விற்பேன் காசை பையில் வைப்பேன்

முருகரப்பா வீட்டில் முட்டை விற்பாள் பாட்டி

கோழி முட்டை வாங்கி குஞ்சுக்கு வைப்பேனே
புள்ளிக் கோழிக்குஞ்சு பொரிக்கும் இரண்டஞ்சு

குஞ்சுகள் வளர்ந்து கோழியாகும் விரைந்து

விரைந்து வளர்ந்திடுமே வெள்ளை முட்டை இடுமே

முட்டை விற்ற காசை முழுவதும் எடுத்தாசை
வண்ணச்சேலை சட்டை மாதுளம்பூ தொப்பி

வாசனை செருப்பு வாங்குவேன் விருப்பு

வெள்ளைப்பட்டுத்தி மினுங்கல் தொப்பி தொடுத்து

கை இரண்டும் வீசி சந்தைக்கு போவேனே
அரிய மலரும் பார்ப்பாள் அம்புஜமும் பார்ப்பாள்

பூமணியும் பார்ப்பாள் பொற்கொடியும் பார்ப்பாள்
சரிகைச்சேலை பாரீர் தாவணியை பாரீர்

பாரும் பாரும் என்று பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நிமிர்ந்தாள் தையல் என்ன செய்வாள்

பாலும் எல்லாம் போச்சு பாற்குடமும் போச்சு
மிக்கத்துயரோடு வீடு சென்றாள் மாது

கைக்கு வரும் முன்னே நெய்க்கு விலை பேசேல்


கல்லடி வேலுப்பிள்ளை

அச்சும் தாத்தா


காட்டுப்பக்கம் தாத்தாவுக்கு

காடு போல தாடியாம்

மாடி மேல நிக்கும் போது

தாடி மண்ணில் புரளுமாம்


ஆந்தை ரெண்டு கோழி மைனா

அண்டங்காக்கா குருவிகள்

பாந்தமாக தாடிக்குள்ளே

பதுங்கிக் கொண்டு நின்றன


உச்சி மேல நின்ற தாத்தா

உடல் குலுங்க தும்மினார்

அச்சும் அச்சும் என்றபோது

அவை அனைத்தும் பறந்தன

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...