Sunday, 29 January 2017

2 மினிட்ஸ் வேர்க்கடலை

தேவையானவை

வேர்க்கடலை  1 கப்
பட்டர் 1 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலையை மைக்ரோவேவ் ல் சூடு பண்ணக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அத்தோடு பட்டர் ஐ வேர்க்கடலைகள் முழுவதிலும் படுமாறு சேர்த்து ஒன்றன் மேல் ஒன்று குவிந்து இல்லாதவாறு  நன்கு பரவி உணவு சூடு பண்ணு்துபோல் 2 நிமிடங்கள் சூடு பண்ணி எடுத்து ஆறவைத்தால் மொறு மொறு வேர்க்கடலை ரெடி

கத்தரிக்காய் புரியாணி





தேவையானவை
கத்தரிக்காய் 1கிலோ
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு 
உள்ளி 2
கராம்பு 2 
ஏலக்காய்1
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மல்லி {தனியா}1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
சோறு 3கப்


1.கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக்கவும்
.2.இஞ்சி,பூடு ,மல்லி{தனியா},கரம் மசாலா,தக்காளி ,கராம்பு,ஏலக்காய்,பட்டை, விரும்பினால் 5 காய்ந்த மிளகாய் கொத்தமல்லி ,ந்ச்சீரகம் எல்லாவற்றையும் அரைக்கவும் .
3.அடுப்பில் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் கத்தரிக்காய் இரண்டையும் நன்கு வதக்கவும் தேவை பட்டால் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் .
4.அரைத்து வைத்துள்ளதை கத்தரிக்காயுடன் சேர்த்து பட்டையும் சேர்த்து விட்டு ,பசை தன்மை வந்தவுடன் வேக வைத்த சோறுடன் சேர்க்கவும் .எளிமையான சுவையான கத்தரிக்காய் புரியாணி 15 நிமிடத்தில் ரெடி







Tuesday, 24 January 2017

நடிகர்கள்

நடிகர்கள்  புகழை அடந்தவர்கள் மட்டுமல்ல .
அதன் பலனை  அடையும் வழிகளையும் அறிந்தவர்கள்.
அரசியல்வாதிகளை புறக்கணிக்க முடியாத
கட்டாயத்தில் வாழ்பவர்கள்
எறால் போட்டு சுறா பிடிக்க மட்டுமல்ல
பாம்பிற்கு வாலையும் மீனுக்கு தலையையும் காட்டி
தப்பித்து கொள்ளும் வித்தையும்  அறிந்தவர்கள்.
ஆதாயம் தேடி வரும்போது நீங்கள்
ஆகாரமாகவே அடிபணிந்தால்
அராஜகங்கள் உருவாகவே  செய்யும்
வெறுமைகளை நிரப்ப 
வெறும் சேதாரமே எஞ்சும்
வாக்கு எனும் ஆயுதத்தை வெறும் பேச்சுக்கு பலி கொடுத்தால் வரும்
ஆளுமை உங்களை பேச விடாமலே கொல்லும்
நின்று நிதானியுங்கள்
வென்று வாழுங்கள்

Monday, 23 January 2017

சொத்து



ஊனை சுருக்கி
உன்னை உருக்கி
வாழும் வாழ்வில் பயனேது?
சேர்த்ததெல்லாம் கொண்டுபோக 
கல்லறைக்குள் இடமேது?

எண்ணமே வாழ்வு




அடுத்தவர் நம்மை இகழ்வது 
போலொரு பிரம்மை 
நம்மேல் பொறாமை 
என்றெண்ணி கடுப்பு 
அப்படியே என்னை நானாகவே 
ஏற்றுக்கொண்டு விடு 
தர்க்கம் வேண்டாம் 
என்றொரு தவிப்பு 
நான் வாழும் வாழ்வே உயர்ந்தது 
எனும் இறுமாப்பு 
என்னை பற்றி உயர்வாக 
எண்ண வைக்கபடும் பெரும்பாடு 
இது என்ன எதிர்பார்ப்பு. ? 
எங்கே போகிறது எம் வாழ்வு?..

நட்பெனும் நாடகம்




பொய்யை மட்டுமே பேசும்
உன்னை
உண்மையான நண்பன் என்பதா?
அற்பத்திலும்
குற்றம் காணும் உன்னை
உற்ற நண்பன் என்றுரைக்கவா?
நான் வீழும்போது
மகிழும் உன்னை
தோழன் என்றழைக்கவா?
பொங்கிடும் பொறாமை
உன்னிடம் கண்டபின்
நட்பென்று உன்னை நாடவா?
உன் தேவைகள் முடிக்க
தேனாகப் பேசும் உன் பெயர்
ஆருயிர் நண்பனா?
நீ பெற்ற நன்மைகள் 
பெற்றுவிடக் கூடாதென்று
கூடவிருந்து குழிபறிக்கும்
நீ நண்பனா
இல்லை நரியா?
போலி உறவுக்கு 
நட்பென்ற வேலியிட்டு
காவல் செய்யும் நான் 
நாயா நண்பனா?

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...