வாழ்க்கை அழகானது.ஒவ்வொருவர் எண்ணங்களும் தனியானது.இது என் மொழிகள். பிடித்துக் கொண்டால் ரசித்துக் கொண்டும் பிடிக்காவிட்டால் சகித்துக்கொண்டும் கடந்து செல்லுங்கள்.
Monday, 30 January 2017
ஈஸி கப் கேக்
தேவையானவை
மைதா மா 2 கப்
சுகர் 1 கப்
பட்டர் 1 கப்
வெஜிடபிள் ஆயில் கால் கப்
பால் கால் கப்
பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
மைதா மா 2 கப்
சுகர் 1 கப்
பட்டர் 1 கப்
வெஜிடபிள் ஆயில் கால் கப்
பால் கால் கப்
பேக்கிங் பவுடர் 1 டீஸ்பூன்
மிக்சியில் சுகர் ஐ கொட்டி பால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து அடிக்கவும்
அதை தொடர்ந்து பட்டர் , முட்டை, எண்ணெய் என்பவற்றை அடிக்கவும்
பின்னர் மாவையும் பேக்கிங்க் சோடாவையும் சேர்த்து அடித்து கப்கேக் மோல்ட் இல் ஊற்றவும்
அவொனை 350 பாகையில் சூடுபண்ணி 14 நிமிடங்களில் ஒரு குச்சியை உள்ளே செலுத்தி பார்க்கவும்
குச்சியில் கேக் ஒட்டாவிட்டால் மேலதிக நேரம் தேவையில்லை ஒட்டினால் மேலும் 2 நிமிடங்கள் விடவும்.
.பட்டர் சேர்க்கும் எல்லா கேக் வகைகளுக்கும் பட்டரை குறைத்து அதற்கு பதில் எண்ணெய் சேர்த்தால் மிகவும் மென்மையாக பஞ்சு போல் வரும்.
Sunday, 29 January 2017
தற்புகழ்ச்சியில் மட்டு வாசம் செய்யும் நாகரீகர்
அடுத்தவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் இடையூறு செய்தால் தவிர நீங்களும் அடுத்தவர்களின் பொதுவான நடைமுறைகளுக்கு வலிய வலிய கல்லெறியாமல் இருப்பது நாகரீகமான மனிதர்களுக்கு அழகு.
தவிர நீங்கள் எறியும் கற்கள் தகர்க்க போவது உங்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளையே
அன்றி அதிகம் பேசும் வாயும் இரவில் ஊளையிடும் நாயும் அடிவாங்காமல் போனதாக சரித்திரம் இல்லை என்பதுபோல் அவமானபடுவதை தவிர்க்க இயலாது.
ஈஸி தக்காளி சட்னி
தேவையானவை
தக்காளி1
வெங்காயம் பாதி
காய்ந்த மிளகாய் 6
தேங்காய் சிறுதுண்டு அல்லது தேங்காய்ப்பூ 1 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் பாதி
காய்ந்த மிளகாய் 6
தேங்காய் சிறுதுண்டு அல்லது தேங்காய்ப்பூ 1 டேபிள் ஸ்பூன்
அடுப்பில் சட்டி வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் தாளித்து அதனுடன் சேர்த்து தக்காளி, மிளகாய்,தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி மிக்சியில் நன்கு அரைக்க வேண்டும்.
மறக்காமல் உப்பு போடவும் .புளி தேவையில்லை.தக்காளி சேர்த்திருப்பதால்.
2 மினிட்ஸ் வேர்க்கடலை
தேவையானவை
வேர்க்கடலை 1 கப்
பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
வேர்க்கடலையை மைக்ரோவேவ் ல் சூடு பண்ணக்கூடிய ஒரு பாத்திரத்தில் போட்டு அத்தோடு பட்டர் ஐ வேர்க்கடலைகள் முழுவதிலும் படுமாறு சேர்த்து ஒன்றன் மேல் ஒன்று குவிந்து இல்லாதவாறு நன்கு பரவி உணவு சூடு பண்ணு்துபோல் 2 நிமிடங்கள் சூடு பண்ணி எடுத்து ஆறவைத்தால் மொறு மொறு வேர்க்கடலை ரெடி
கத்தரிக்காய் புரியாணி
தேவையானவை
கத்தரிக்காய் 1கிலோ
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு
உள்ளி 2
கராம்பு 2
ஏலக்காய்1
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மல்லி {தனியா}1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
சோறு 3கப்
வெங்காயம் 2
தக்காளி 1
இஞ்சி ஒரு சிறிய துண்டு
உள்ளி 2
கராம்பு 2
ஏலக்காய்1
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
மல்லி {தனியா}1 டேபிள் ஸ்பூன்
பட்டை 1 துண்டு
சோறு 3கப்
1.கத்தரிக்காயையும் வெங்காயத்தையும் சிறிதாக நறுக்கிக்கவும்
.2.இஞ்சி,பூடு ,மல்லி{தனியா},கரம் மசாலா,தக்காளி ,கராம்பு,ஏலக்காய்,பட்டை, விரும்பினால் 5 காய்ந்த மிளகாய் கொத்தமல்லி ,ந்ச்சீரகம் எல்லாவற்றையும் அரைக்கவும் .
3.அடுப்பில் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம் கத்தரிக்காய் இரண்டையும் நன்கு வதக்கவும் தேவை பட்டால் கொஞ்ச தண்ணி சேர்க்கவும் .
4.அரைத்து வைத்துள்ளதை கத்தரிக்காயுடன் சேர்த்து பட்டையும் சேர்த்து விட்டு ,பசை தன்மை வந்தவுடன் வேக வைத்த சோறுடன் சேர்க்கவும் .எளிமையான சுவையான கத்தரிக்காய் புரியாணி 15 நிமிடத்தில் ரெடி
Wednesday, 25 January 2017
Subscribe to:
Posts (Atom)
youtube to usb converter
எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...
-
பாட்டியின் வீட்டு பழம் பானை - அந்தப் பானையில் ஓர்புறம் ஓட்டையடா ஓட்டை வழி ஓரு சுண்டெலியும் - அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே பு...
-
தேவையானவை சிவப்பு அரிசிமா 1/4 கப் அவித்த மைதா மா 1/4 கப் பயறு 5 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப்பால் 2 கப் சிறு தேங்காய் துண்டுகள் 2 டேபிள் ...
-
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு" (நா...