Wednesday, 1 February 2017

செஃப் தொப்பி


சமையல் வல்லுனர்கள் அணியும் இந்த தொப்பி சுகாதாராம் ,பதவி,பாதுகாப்பு என்பவற்றையும் தாண்டி பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

குழந்தைகளுக்கு நாம் செய்யும் வேலைகளில் ஆர்வம் வரும். அதயே செய்ய முனைவார்கள் நாம் மறுக்கும்போது குழப்பமும் கலக்கமும் அடைவார்கள்....
அதனால் அவர்களையும் சேர்த்து சின்ன சின்ன வேலைகளை கொடுக்கும்போது தன்னம்பிக்கை வளரும்.ஆர்வம் தூண்டப்படும்,மூளை டெவலப் ஆகும்.


ஆனால் அவர்களை நம் வேலையில் சேர்த்துக்கொள்வது நமக்கு சிரமம்தான்.
உதவுகிறேன் என்று தேரை இழுத்து தெருவில் விட்டு விடுவார்கள்.இருந்தாலும் நாம் அவர்கள் ஆசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.


பணம் கொடுத்து பொருட்களை வாங்கி கொடுத்து சந்தோஷபடுத்துகிறோம் .ஆனால் கொஞ்ச மாவை வீணாக்கி விடுவார்கள் என்று
சமையல் அறையில் இருந்து விரட்டுவோம் .அவர்களையும் சேர்த்துக்கொண்டால் பிற விபரீதமான குறும்புகளையும் தவிர்க்கலாம்.

அவ்வாறு சமையலில் குழந்தைகளை இணைக்கும்போது அழுக்காகாமல் இருக்க அவர்களுக்கு அளவான தொப்பி ஏப்ரன் என்பவற்றையும் செய்து
கொடுக்கும்போது மனம் குளிர்ந்து உற்சாகமாகி விடுவார்கள். சிறுவர்கள் என்றில்லை.

நான் பார்பிக்யூ செய்யும்போது அதன் பக்கத்தில் இந்த தொப்பி இல்லாமல் போக மாட்டேன்.தலைமுடியில் மணங்கள் ஒட்டிக்கொள்வதை தவிர்க்கலாம்.
இந்த தொப்பியை
குக்கி ஷீட் ,வெள்ளைத்தாள்,க்ளூ,ஸ்டேப்ளர் கொண்டு ஒரே நிமிடத்தில் செய்து விடலாம்.


தேவையானவை
குக்கி ஷீட்
ஏ4 பேப்பர் 2
ஸ்டேப்ளர்



1.குக்கி ஷீட் ஐ வெட்டி விசிறிக்கு வரும் அடுக்குபோல் மடிக்க வேண்டும்.



2.படத்தில் காட்டியுள்ளதுபோல் வெள்ளை ஏ4 பேப்பரை எடுத்து தலையின் விட்டத்திற்கு ஏற்ப நீளத்திற்கு தாளுடன் தாள் ஒட்டி வெட்டிக்கொள்ள வேண்டும்.



3. மேற்கூறிய வெள்ளைத்தாளை மடித்து அதற்குள் விசிறி போல் மடித்த குக்கிஷீட் ஐ வெள்ளைத்தாளின் அளவுக்கு விரித்து உள்ளே வைத்து ஸ்டேப்ளர் அடிக்க வேண்டும்.

4.இப்போது குக்கி ஷீட் ந் மேல் பகுதியை கூட்டாக்கி ஸ்டேப்ளர் அடித்துக்கொள்ள வேண்டும்.

5.ஸ்டேப்ளர் அடித்த முனை உள்ளே போகுமாறு மறுபக்கம் திருப்பி எல்ல முனைகளையும் ஒட்ட வேண்டும் .

மிகவும் அழகான தொப்பி தயாராகி விடும் .துணியில் செய்வதாயினும் இதேபோன்று செய்யலாம்.
பட் வட்டமாக வைக்கும் துணிக்குள் ஷேர்ட் காலர் க்கு உள்ளே வைக்கு ஷீட் வைக்க வேண்டும்.{collar lining}


வெங்காய குருவி

தேவையான பொருட்கள்
வெங்காயம் 2
பச்சை மிளகாய் 6
மிளகு 4
டுத் பிக் சில


வெங்காயமும் பச்சை மிளகாயும் நண்பர்கள் என்பது நமக்கு தெரியும் .அந்த வகையில் இன்று பகோடா செய்ய இருவரையும் எடுத்து வைத்துவிட்டு வேறு வேலை பாத்து விட்டு வர வெங்காயத்தை காணவில்லை .

என் மகள் வழக்கம் போல திருடி போய் வைத்திருந்தாள் .

எனக்கு வெங்காயம் தேவை தர முடியுமா என்றேன்.

எனக்கும் தேவை தரமுடியாது என்று அரையும் குறையுமாக பதில் வந்தது.

ஏன் தரமுடியாது என்று கேட்டேன்

 பேர்ட் என்றாள்.சரி எனக்கும் பேர்ட்
செய்ய தேவை உமக்கு 2 எனக்கு 2 என பிரித்து எடுத்து கொண்டோம்.
...
அப்பாடா என்று கொண்டு வந்தால் பின்னாலேயே வந்து என் வெங்காய பேர்ட் ஐ பார்க்க வெயிட்டிங்க்.

நாம வெட்டி திங்கிறதுக்குதானே எடுத்துட்டு வந்தோம்.இதென்னடா வம்பா கிடக்கு சரி சமாளிப்போம் அல்லது வெங்காயம் நமக்கு கிடைக்காது
என்றுவிட்டு இங்கனம் செய்து கொண்டேன்.



வெங்காயத்திற்கு தோலை உரித்து .
பச்சை மிளகாய்களில் பல் குத்தும் குச்சியை சொருகி வைத்தேன்

கத்தியால் இறகு போல் 2 பக்கமும் வெட்டி விட்டு
குச்சி குத்தி வைத்திருக்கும் முழு மிளகாய்களை வால் போல் சொருகிக்கொண்டேன்.

மிளகாயை வால்பக்கம் { இது மிளகாயின் வால் குருவியின் வால் அல்ல அல்ல அல்ல} சிறிதாக வெட்டி குருவியின் சொண்டு செய்து உரிய இடத்தில் சொருகினேன்

2 மிளகை எடுத்து கண் வைத்தேன் அவ்வளவே





.
இதோ படத்தில் அழகான வெங்காய குருவி குடும்பம்.
இதை பார்த்து மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரமிட்டது என்னுடைய குருவி.
இது ஒரு வெங்காய கண்டுபிடிப்புத்தான் இருந்தாலும் காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு.
எந்த உணவு அலங்காரத்திலும் உணவு வீணாக்கப்படக்கூடாது.அதற்கமைய இதில் எந்த வீணாகுதல் ம் ஏற்படாது.செய்து பாருங்கள்.


காரட் பூ


large pensil sharpener பயன் படுத்தி ஒரே நிமிடத்தில் இந்த பூவை செய்து விடலாம்

.காரட் ஐ சுத்தம் செய்து விட்டு பென்சில் போலவே காரட்டை சுற்றி எடுத்துக்கொண்டு ,
அதனை சுருட்டி சேர்த்தால் போதும்.



ரோஜாவின் இலைகள் செய்வதற்கு கருவேப்பிலை இலையை அப்படியே வைக்காமல் ரோஜா இலை போலவே கத்தரிக்கோலால் கத்தரித்து வைத்தால் அழகாக இருக்கும்

fruits and vegetables carving


பழங்கள் காய்கறிகள் அலங்காரம் மிக குறைந்த நேரத்தில் அழகாக நேர்த்தியாக செய்யவேண்டுமாயின் அதற்கென்று பிரத்தியேகமாக கடைகளில் கிடைக்கும் இவ்வகையான ரூல்ஸ் களை வாங்கி வைத்துக்கொண்டால் மிக நல்லது

எல்லாவற்றையும் வாங்கியாக வேண்டும் என்றில்லை நமது தேவைக்கும் ஆர்வத்திற்கும் ஏற்ப இதில் சிலவற்றையாவது வாங்கி வைத்துக்கொள்ளலாம்.

தவிர நாம் நாளந்தம் உபயோகிக்கும் கத்தி ,large pensil sharpener,shaving blade,குக்கி கட்டர் போன்றவற்றால் கூட இந்த அலங்காரங்களை செய்து கொள்ளலாம்

பிரத்தியேக ரூல்ஸ் மற்றும் பொதுவான ரூல்ஸ் மூலம் சுலபமாக அலங்காரம் செய்து கொள்வதையும் சில நுணுக்கங்களையும் படிப்படியாக தெரிந்து கொள்ள தொடர்ந்து சோம்பேறி கிச்சனுடன் இணைந்திருங்கள்
https://www.facebook.com/somperykitchen/

candy apple


தேவையானவை:

ஆப்பிள்கள் 5
குச்சிகள் 5...
சுகர் 2 கப்
கோன் சிறப் அரை கப்
தண்ணீர் கால் கப்
பாதியளவு லெமன்
சிவப்பு நிற கலர் 5 துளி
குக்கி ஷீட் அல்லது பட்டர் பூசிய தட்டு




1.அப்பிள்களை கழுவி உலர்த்தி அதன் காம்பை எடுத்து விட்டு அதே இடத்தில் குச்சியை சொருகி கொள்ளுங்கள்(barbecue sticks,lollipop or popsicle sticks}

2.அடி கனமான பாத்திரம் ஒன்றினுள் சுகர்,கோன் சிறப்,தண்ணீர்,லெமன்,கலர் ஆகிய தேவையான எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் சேர்த்து மீடியம் ஹீட் ல் அடுப்பில் வைக்கவும்.

3.உங்களிடம் candy thermometer இருப்பின் தெர்மோமீட்டர்
290 இலிருந்து 300 பாகை பரனைட் {143°C (290°F) காண்பிக்கும் வரை சூடு பண்ணவும்

அல்லது கரண்டியால் ஒரு துளி எடுத்து குளிர் தண்ணீரில் விட்டு பார்த்தால் கட்டியானால் சரியான பதம் என்று கருதி உடனே அடுப்பில் இருந்து இறக்கவும்

4.முடிந்தளவு வேகமாக ஆப்பிளை அதனுள் வைத்து அமுக்கி சுழற்றி எடுத்து குக்கி ஷீட் ல் வைக்கவும்.

ஆறினால் ஆப்பிளில் ஒட்டாது அதனால் அதிகம் தேவைப்பட்டாலும் ஒரே தடவையில் 10 ஆப்பிள்களுக்குமேல் போக கூடாது.

5. நன்கு ஆற வைத்து சாப்பிடவும்


முயல் தலகாணி



தேவையானவை
ஏ4 பேப்பர் 1
தலகாணி கவர்
கத்தரிக்கோல்
நூல்
வண்ண துணி




1.ஏ4 பேப்பரை எடுத்து படத்தில் காட்டியது போல முயல்கள் வரைந்து வெட்டிக்கொள்ளவும்.

2.அதை துணியின்மேல் வைத்து அதேபோல் துணியையும் வெட்டவும்.

3.சிறிய வட்ட துண்டுகள் வெட்டி அதற்குள் சில எஞ்சிய துணிகளை வைத்து பொட்டலம் போல் குவித்து தைக்கவும்.{முயல் வால்}

4.விரும்பினால் பூக்கள் இலைகள் வெட்டி வைக்கவும்



5.இப்போது தலகாணி கவர் ல் இந்த துணிகளை வைத்து தைக்கவும் .

6.குட்டி பந்துபோல் செய்த வால்களை உரிய இடத்தில் வைத்து தைக்கவும்



7.விரும்பினால் பூக்கள் ,புற்கள் போல் வெட்டி அதையும் தைக்கவும்.

அவ்வளவேதான் அழகான முயல்கள் தலகாணியில் உட்கார்ந்து இருக்கும்.



fairy garden

எவளவுதான் பிஸியாக இருந்தாலும் வெளி வேலைகளை விட வீட்டுக்கு வந்த உடன் இருக்கும் அடுக்கடுக்கான வேலைகளும்,வீட்டிலேயே இருந்து கொண்டு செய்யும் வேலைகளும் ரிலாக்ஸ் ஆ தான் இருக்கும்.

காரணம் விரும்பின மாதிரி 4,5 வேலைகளை சேத்து செய்யலாம்.
ஆளாளுக்கு இருக்கிற பிஸி க்கு ஒரு வேலை முடிய அடுத்த வேலை செய்யிறதா இருந்தால் எப்பவுமே வேலை இருந்து கொண்டே இருக்கிறமாதிரியும் பொழுது போக்குக்கு நேரம் இல்லாத மாதிரியும் இருக்கும்.
...
அதிலும் அதிகமா நமக்கு நேரமில்லாமல் போறதுக்கான காரணம் டி வி யை நாள்முழுக்க ஓட விட்டு எது போனாலும் அதுல மூழ்கிறது.இதை தவிர்த்தால் அல்லது முக்கியமானதுக்கு மட்டும் சரியான நேரத்தில்
டிவி யை ஆன் பண்ணி முடிந்ததும் ஆப் பண்ணீட்டு அடுத்த வேலைக்கு போனால் நிறைய நேரம் நமக்கே நமக்கென்று கிடைக்கும்.


கிடைக்கும் நேரத்தில் ஒரு சொற்ப நேரத்தையாவது நம் பொழுதுபோக்குக்கு ஒதுக்குவதால் நாம் செய்யும் மற்றைய வேலைகள் எல்லாவற்றிலும் சோர்வின்றி செயற்பட கூடிய புத்துணர்ச்சி கிடைக்கும்.

fairy garden எனக்கு ரெம்ப பிடிச்ச பொழுதுபோக்கு.அதிலும் இந்த mini plantes and mini cactus போத்தல் கள் கிளாஸ் களில வைச்சு இதுமாதிரி செய்தால் பாக்க அழகா கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும்.

பட் இப்போதைக்கு மினி பிளாண்ட்ஸ்அவ்வளவாக வீட்டில் இல்லை.{கிட்ஸ் சேவ்டிக்காக.}

.இருந்தாலும் ஐடியாக்களை சொல்லியிருக்கிறேன் .

இந்த சிறிய வகை தாவரங்கள் அவ்வளவு சுலபமாக வாடிப்போகாது.மண் இல்லாமல்,தண்ணீருக்குள் மட்டும்,கற்கள் மத்தியில் இவ்வாறு பலவகையாக இதை வளர்க்கலாம்.தண்ணீர் கூட தினமும் தேவை என்றில்லை.

அவற்றை இவ்வாறு அலங்கரிக்க உங்களுக்கு தேவையானவை குழந்தைகள் விளையாடும் சிறிய சிறிய பொருட்கள் போதுமானது இவற்றை சேகரித்தோ வாங்கியோ அழகாக அலங்கரித்துக்கொள்ளுங்கள்.



youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...