Wednesday, 1 February 2017

கருவேப்பிலை பழுதாகாமல் இருக்க

வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தமிழ் சமையல்கள் செய்ய கருவேப்பிலை உள்ளூர் போல் பிரஷ் ஆக தினமும் வாங்கி உபயோகிக்க முடியாது.

ஒரு தடவை வாங்கினால் அதில் கடைசி இலை தீரும் வரை பிரிஜ் ல் வைத்திருந்து உபயோகிப்போம்.

இந்த கருவேப்பிலையை கடைசி இலை வரைக்கும் முடிந்தவரை வாடாமல் அழுகாமல் உபயோகிக்க வேண்டுமாயின்,
எத்தனையோ வழி இருந்தாலும் நேரத்தையும், எடுக்கும்போதும் வைக்கும்போதும் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவும்
cheese keeper box ஒன்றை எடுத்து அதற்குள் இந்த கருவேப்பிலையை தண்டுகளை நீக்கி விட்டு மூடி ப்ரிஜ் க்குள் வைத்தால் அப்படியே 2 வாரத்திற்கு பிரஷ் ஆக இருக்கும்



easy tutu skirt


மிகவும் சுலபமாக மிகவும் அழகாக குழந்தைகளுக்கு ஒரு ஆடை தைக்க முடியும் என்றால் அது இந்த tutu எனப்படும் ஆடைதான் என்பேன்.

தேவையானவை

 நெட் அல்லது மிகவும் மெல்லிய சோர்வான துணி...
கத்தரிக்கோல்
லாஸ்ரிக் அல்லது ஹெட்பாண்ட்



1.துணியை 10செண்டி மீட்டர் அகலமும் குழந்தையின் உயரப்படி உயரத்தின் இரு மடங்கும் எடுத்துக்கொள்ளுங்கள்.
{அதாவது நீளம் 2 மடங்கு ஏன் எடுக்க வேண்டும் என்றால் சரிபாதி யாக மடிக்க வேண்டி வரும்}

2.ஒரே அளவாக துணிகளை வெட்டி வைத்துக்கொள்ளுங்கள்.

3.வெட்டிய துணி ஒன்றை எடுத்துபடத்தில் காட்டி உள்ளதுபோல் இரண்டாக சுருக்கி லாஸ்டிக் ல் மேலிருந்து கீழாக கொண்டுபோய் பின் இரண்டு முனைகளையும் அந்த இடைவளி வழியாக எடுத்து இறுக்குங்கள்





அவ்வளவேதான் இதேபோல் ஒவ்வொன்றாக தேவையான சுற்றளவு வந்ததும் லாஸ்டிக் ஐ வெட்டி இணைத்து விடுங்கள்.

ஒரே வண்ணத்திலோ விரும்பிய 2 அல்லது அதற்கு மேற்பட்ட வண்ணங்களையோ தெரிவு செய்து குறைந்த நேரத்தில் செய்து முடித்துவிடலாம்.ஒரு தடவை அணிந்த பின் அல்லது இன்னொரு குழந்தைக்கு அணிவதாயின் இந்த துணிகளை
அப்படி கழற்றி எடுத்து மாறுபட்ட நிறங்களில் செய்து கொள்ளலாம்.




ஒருதடவை இந்தியா சென்றிருந்த போது பக்கத்து வீட்டு குழந்தையின் அம்மா தேவையில்லாத 4 சில்க் துப்பட்டாக்களை விளையாட கொடுத்திருந்தார்.

நான் அதை வாங்கி வெட்டி என்னுடைய ஹெட் பாண்ட் ல் அழகாக கோர்த்து ஒரு ரிப்பனை குறுக்கே வைத்து மிக அழகாக ஒரு ட்ரெஸ் செய்து கொடுத்தேன்.
குழந்தை அணிந்த போது பொம்மை மாதிரி இருந்தது .அம்மாக்கும் குழந்தைக்கும்
அளவற்ற சந்தோசம்.

யெஸ்ஸ்ஸ் இந்த ஆடையில் குழந்தைகள் மிக அழகாக தெரிவார்கள் முயன்று பாருங்கள்.

foam mat footwear



kids foam floor mat ல் குழந்தைகளுக்கு காலணி செய்ய

தேவையானவை

ஃபோம் மட்,
 duck tape அல்லது துணி ,
சப்பாத்து கட்டும் நூல்
,க்ளூ
,கத்தரிக்கோல்,
முத்துக்கள்
அல்லது பூக்கள்




1.குழந்தையின் காலணியை எடுத்து இந்த ஃபோம் மட் ல் வைத்து படத்தில் காட்டியதுபோல் வரைந்து வெட்டவும்.

2.குழந்தைகளுக்கு பிடித்த hello kitty டக் ரேப் ,minion டக்ரேப் ,அல்லது hello  kitty துணி எதையாவது எடுத்துக்கொள்ளுங்கள்

3.நீங்கள் வரைந்து வெட்டிய காலணியின் அடித்தளத்தை, தரையில் படும் பக்கம் தவிர்த்து  ஒட்டி கவர்பண்ணுங்கள்.

4.ஏற்கனவே அளவெடுக்க எடுத்துக்கொண்ட குழந்தையின் காலணியில் உள்ள துளைகளின் படி ஒப்பிட்டு அதே இடத்தில் வருமாறு ஒரு பேனாவால் துளையிடுங்கள்.

5.சப்பாத்து நூலை எடுத்து இரண்டு முனைகளையும் க்ளூவால் ஒட்டி சுற்றி கொஞ்சம் க்ளூ பூசி மேலே உள்ள துளைக்குள் சொருகுங்கள்

6.பக்கங்களில் போட்ட துளைக்குள் நூலை  சொருகி மறுபக்க  எடுத்து க்ளூ பூசி பின்னால் ஒட்டி விடுங்கள்.

7. இப்போது விருப்பியதுபோல்  பூவைத்தோ முத்து வைத்தோ அலங்கரியுங்கள்.



பார்ப்பதற்கு மிகவும் அழகான காலணி தயார் .நடக்க தொடங்காத குழந்தைகளுக்கு குட்டி சைஸ் ல் கடையில் கிடக்காது.இவ்வாறு செய்து அணிவிக்கலாம்.
அத்தோடு கீழே அனுப்பி ஒட்டிய சப்பாத்து நூலை விரும்பினால் வெளிப்பக்கத்தாலேயே மேலே கொண்டு வந்து முடிச்சு போட்டு விடலாம்.


minions decoration


குழந்தைகளுக்கு நமக்கு பிடித்ததை செய்வதை விட அவர்களுக்கு பிடித்த சின்ன சின்ன விடயங்களுக்கு நாம் மதிப்பளிக்கும்போது நம்முடன் மேலும் நெருங்கிவிடுவார்கள்.

நமக்கு சிறிதாக தெரியும் சில விஷயங்கள் அவர்கள் நடவடிக்கையையும் நம்மீது வைக்கும் மரியாதையையும் பிணைப்பையும் மாறுபடச்செய்யும்.
...
குறிப்பாக பிறந்தநாள்களுக்கு நமக்கு பிடித்ததையும் நாம் அழைப்பு விடுத்தவர்களுக்கு பிடித்தது போலும் செய்யாமல் குழந்தைகள் பாணியில் அவர்களுக்கு உவகை ஊட்டுவதை செய்தால் மனம் நிறைந்து போவார்கள்.

இதோ இந்த minions களை பிடிக்காத குழந்தைகள் இருக்கமாட்டார்கள் .(எனக்கும் ரெம்ப பிடிக்கும்} அப்பப்போ இவை மாறுபடுவதால் பின்னாளில் கூட அவர்கள் இந்த minions சீசன் ஐ அனுபவித்ததை நினைவு கூருவார்கள்.
மிகவும் சுலபமாக பழங்களை வெட்டி காயப்படுத்தாமல் இவற்றை அலங்கரித்துள்ளேன்.

தேவையானவை
ஏ4 தாள்
நீலம்,கருப்பு கலர்கள்,
கிராஃப்ட் கண்கள்ப
பழங்கள்
 டேப் அல்லது  க்ளூ



1.ஏ4 தாளை மடித்து படத்தில் காட்டியதுபோல் வெட்டி நீல வண்ணம் கொடுத்துக்கொள்ளுங்கள்.பாக்கட் ம் வரையுங்கள்
.
2.மெல்லிய நேர் கோட்டு தாளில் கண் க்கு 2 வட்டம் வரைந்து அந்த வட்டத்திற்குள் கிராப்ட் கண்களை ஒட்டுங்கள்.

3.இப்போது இவற்றை பழங்களில் படத்தில் காட்டியதுபோல் உரிய இடங்களில் வைத்து ஒட்டி விடுங்கள்.



இதேபோல் மஞ்சள் தக்காளியை ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்துள்ளேன்.



இதோடு பலூன் ல் யூஸ் போத்தல்களில் எல்லாம் இப்படி நாமே செய்து வைக்கலாம்.



fairy garden2


பூந்தொட்டியில் வைத்தால் தான் வீட்டில வைக்கும் தாவரங்கள் அழகாக இருக்கும் என்றில்லை.நாம் ,நம் குழந்தைகள் உபயோகித்த பொருட்களை பயன்படுத்தி மண் நிரப்பி தாவரங்கள் வைக்கும் போது மிகவும் அழகாக இருக்கும்.

பொருட்களை மறுபடியும் உபயோகிப்பதில் திருப்தியும் கிடைக்கும்.
...
இங்கே உள்ளது நான் முன்பு குருவிகள் வளர்த்த கூடு. குருவிகள் அதிகரித்து விட்டதாலும் பராமரிபிற்கு நேரமின்மையாலும் குருவிகளை கேட்டவர்களுக்கெல்லாம் கொடுத்தாலும் இந்த கூட்டை கொடுக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

அதன் அடித்தளத்தை மண் நிரப்புவத்ற்கு ஏற்றதாக மாற்றி பூங்கன்றுகளை நட்டேன் .

அழகாக பூக்க தொடங்கியது.அதை என்னிடம் உள்ள குட்டி குட்டி பொருட்களை பயன்படுத்தி அலங்கரித்துள்ளேன்.

இதேபோல் உபயோகமில்லாத சமையல் பாத்திரங்கள் ,டயர் ,பழைய விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை இவ்வாறு அலங்கரிக்கலாம்.

விளையாட்டுப்பொருட்களை குழந்தைகளிடத்து எடுத்துக்கொள்ளும்போது அவர்கள் மீண்டும் உபயோகபடுத்த மாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.ஒரு தடவை சில்லு எல்லாம் உடைந்து பிள்ளைகள் விளையாடாமல் விட்ட plastic shopping trolley யை
எடுத்து மிகவும் சிரத்தை எடுத்து மண் நிரப்பி பல வண்ணங்களால் ஆன மினி ரோஸ் வளர்த்தேன்.

நடுவில் ஒரு அடுக்குமாடி வீடும் செய்து வைத்து பார்க்க அழகாக இருந்தது.

ஆனால் trolley உரிமையாளர் பொறாமையோ என்னவோ தன் விளையாட்டு தனக்கு வேண்டும் என்று
அடம் பிடிக்க தொடங்கிவிட்டார்.

என்ன செய்ய ரோஜா செடிகளை எடுத்து இடம் மாற்றிவிட்டு கொடுத்ததுதான்.

அம்மாக்கள் உபயோகிக்கும் பாத்திரங்களும் அப்படித்தான் எவ்வளவு அடிபட்டாலும் சுலபமாக கைவிட மாட்டார்கள் .பாத்து பத்திரம்.
அதனால் இன்னொரு தடவை தேவை ஏற்படாது என்றுள்ளவைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.





குடில்


தேவையானவை

ஐஸ்கிரீம் குச்சிகள்...
வெற்றுப்போத்தல்
க்ளூ
ரப்பர்பாண்ட் 4
கத்தரிக்கோல்





போத்தலை மேலும் கீழும் கொஞ்சம் வெட்டி வீசிவிடுங்கள்

கதவு போல் சதுரமாக வெட்டி விடுங்கள்



போத்தலில் கூர் முனைப்பகுதியை தாண்டி{ படத்தில் காட்டியுள்ளது போல்}
கொஞ்சம் வெளியே நிற்க கூடியதாக க்ளூ பூசி ஒட்டிக்கொள்ளுங்கள்



ஐஸ்கிரீம் குச்சிகளை சுற்றி 2 இடங்களில் ரப்பர் பாண்ட் மாட்டி விடுங்கள்
விரும்பினால் பெயிண்ட் பண்ணலாம்.



அவ்வளவேதான்.

சிறிய தாவரங்களுக்கு மத்தியில் வைத்து அலங்கரிக்க மிகவும் ஏற்றது.

சின்ன சின்ன அலங்காரங்கள்


நாம் நாளாந்தம் பாவிக்கும் கிளாஸ் ஐ எடுத்து அதற்குள் ஏதாவது அழகு பொருட்களை வைத்து கவிழ்த்து வைத்துவிட்டு மேற்பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தால் அழகாக இருக்கும்
.
உள்ளே விரும்பியதை மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்.விருந்து பரிமாறும்போது மெழுகுவர்த்தி யும் ஏற்றி பூங்கொத்தும் மேசையில் வைக்க இடத்தை பிடிக்கும்.அப்போதெல்லாம் நான் இப்படி உள்ளே பூக்களை
வைத்து வெளியே மெழுகு ஏத்தி வைப்பது வழக்கம்.

தேவை முடிந்ததும் கலைத்து அது அதை அந்தந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம்.







youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...