Friday, 3 February 2017

பேக்ட் கட்லட் பஜ்ஜி


தேவையானவை
மிளகாய்கள் 6
மீன்  வேக வைத்து முள்ளு நீக்கியது கால் கிலோ
வெங்காயம் 1
முட்டை 2
பச்சை மிளாகாய் அல்லது காய்ந்த மிளகாய் 2
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய் அல்லது பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
டுத் பிக் 12





1.மிளகாயின் தலைப்பகுதியை வட்டமாக வெட்டி எடுக்கவும்



2. சிறிய கத்தியை உள்ளே விட்டு வட்டமாக சுழற்றி மிளகாயின் விதைகளை வெளியே எடுக்கவும்


3. மீன் தசைக்குள் வெங்காயம் ,உப்பு,மிளகாய் ,சிறிதாக அரிந்த கொத்தமல்லி  என்பவற்றோடு முட்டையையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்

4.மிளகாய்க்குள் மீன் கலவையை வைத்து வெட்டி வட்டமாக வெட்டி எடுத்த மிளகாய் பகுதியை மறுபடியும் வைத்து டுத் பிக் சொருகி இணைக்கவும்.



5.ட்ரேயில் வைத்து எண்னெய் அல்லது பட்டர் தடவி 400 பாகை பரனைட் ல் 15 நிமிடங்கள்  பேக் பண்ணவும்



ம்ம்ம் ஜம்மி

Thursday, 2 February 2017

இறால் கார சாலட்


தேவையானவை
romaine salade 1
தக்காளி 1
காரட் பாதி அளவு
கியூக்கும்பர் பாதி அளவு
இறால் 1 கிலோ
வெங்காயம் அரை கிலோ
கொத்தமல்லி 1 கட்டு
மஞ்சல் ஒரு டேபிள் ஸ்பூன்
தனிமிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளாகாய் 2 விரும்பினால் 
உப்பு




செய்முறை
இறால் பிரட்டல்
1.இறால் ஐ சுத்தம் செய்து உப்பு மஞ்சல் மிளகாய்த்தூள் சேர்த்து வைக்கவும்
2.சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லியை உப்பு சேர்த்து தாளிக்கவும்
3.அதற்குள் தயாராக வைத்திருக்கும் இறாலை சேர்த்து மூடி வைக்கவும்.
தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் விடவும்
4. நீர் வற்றி இறால் வேகியதும் இறக்கி ஆற வைக்கவும்


சாலட்
1.காரட் ஐயும் கியூகும்பர் ஐயும் துருவி ,தக்காளியையும் சாலட் ஐயும் அரிந்து கொள்ளவும்

இப்போது ஆறிய இரால் ஐயும் சாலட் ஐயும் சேர்க்கவும்.
மிகவும் சுவையான காரமான இறால் சாலட் ரெடி.





பேக்ட் கத்தரிக்காய்


படங்களை பார்க்க உங்களுக்கு புரிந்து விடும் அளவுகள் தேவையில்லை ஆனாலும் சட்டத்தை மீறக்கூடாது என்பதற்காக அளவுகள் கொடுக்கிறேன்.
தேவையானவை 
பெரிய கத்தரிக்காய் 1
ஏதாவது ஒரு வகை சீஸ் 50 கிராம்
சுக்கினி 1
தக்காளி 1
கீரை கொஞ்சம்
வெங்காயம் 2
உள்ளி 4


1. கத்தரி,வெங்காயம் ,உள்ளி,தக்காளி,சுக்கினி,கீரை,எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொள்ளவும் .
2.சுக்கினி ,தக்காளி ,வெங்காயம் என்பவற்றை வட்டமாக வெட்டவும்


3.foil paperற்கு எண்ணெய் தடவி அதில் கத்தரிக்காயை வைக்கவும் 
4..இப்போது எல்லா காய்கறிகளையும் சீஸ் ஐயும் கத்தரிக்காயின் வெட்டிய இடைவெளிக்குள் அடுக்கவும்.


5.உப்பு சேர்த்து கொஞ்சம் எண்ணெய் பூசவும்.{ நான் கோக்கனட் ஒயில் யூஸ் பண்ணுவேன் அதுதான் பிரிஜ் ல் இருந்து எடுத்த கத்தரியில் பட்டதும் உறைந்து விட்டது.}


6..மீண்டும் foil paper ஆல் மூடி 400 பாகை வெப்பநிலையில் 30 நிமிடம் பேக் செய்யவும்.



விரும்பினால் பிரஷர் குக்கருக்குள் வைத்து மூடி கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து,மிதமான தீயில் வேக வைக்கலாம் {தண்ணீர் அதிகம் அதிகம் சேர்க்க தேவை இல்லை .காய்கறிகளில் இருந்தும் தண்ணீர் வரும்.}
10 நிமிஷம் போதும். ரெம்ப வாசனையாகவும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் .
எனக்கும் ப்ரஷர் குக்கருக்கும் பழைய பகை அதனால் அவன் {oven} ல் செய்தேன்.


Brass tea pot /turkish pitcher


கடந்த மாதம் 10 ஆம் திகதி நமக்கு திருமணநாள் வந்தபோது வழக்கமான எந்த ஆரவாரமும் இல்லாமல் கப் கேக் (கேக் ஒரு சிறிய துண்டுக்கு மேல் யாரும் சாப்பிடாமல் 
குப்பைக்கு போவதை தடுக்க இப்படி செய்வோம்} செய்து வெட்டி இத்தாலியன் ரெஸ்ரோரண்ட் சென்று கொண்டாடிவிட்டு நிறைவு செய்ய இருந்தோம்.
எப்போதுமே வீட்டில் கொண்டாடி விட்டு எங்காவது பிக்னிக் சென்று அங்கேயே தங்கி வருவோம். முக்கியமாக அனிவேஸ்ரி நாளில் யாரையும் வீட்டுக்கு அழைக்க மாட்டோம்.
ஆனால் அன்று கதவில்
டொக் டொக் டொக்
டி வி யில் பார்த்தேன் .நமக்கு மிகவும் பிடித்த அயலவர்களான தாத்தாவும் பாட்டியும் நின்றிருந்தார்கள்.எப்பவாச்சும் என் பிள்ளைகளை பார்க்க வருவார்கள் ஆனால் இன்றுதான் சொல்லாமல் வந்திருந்தார்கள்.
கதவை திறந்தேன் .
உள்ளே வந்து என் கணவரையும் கூப்பிட்டு இருவரையும் ஆசீர்வதித்து இந்த brass tea pot /turkish pitcher ஐ எங்கள் கைகளில் கொடுத்தார்கள்.


பாட்டிக்கு 88 வயசு தாத்தாவிற்கு 89 வயசு. பெரிய வீடுகளை பிள்ளைகள் கையில் ஒப்படைத்து விட்டு நாங்கள் இருக்கும் பிளாட் ல் ஒரு ரூம் உள்ள வீடு வாங்கி தங்கி இருப்பதோடு அழகாகவும் வைத்திருக்கிறார்கள்.
கவர்மண்ட் ஆல் நிறைய உதவியும் கிடைக்கிறது.அதிக ஸ்னோ காலங்களில் சமூக சேவை செய்வோர் வந்து சொப்பிங்க் செய்து கொடுக்கிறார்கள்.
ஹாஸ்பிட்டல் க்கு அவர்களுக்குரிய வாகனம் வந்து கூட்டி போய் மறுபடி கொண்டு வந்து விடுகிறார்கள்.அழகாக ஆடை அணிவார்கள்..அன்பாக பேசுவார்கள் .
என் இரண்டாவது மகள் வயிற்றில் இருக்கும்போது என்னோடு பேசுவது போலவே அவளோடும் பேசுவார் இந்த ஜான் பாட்டி.
இப்படி வாழவேண்டும் என என் சகோதரிகளை மட்டுமே பின்பற்றும் எனக்கு இப்போதெல்லாம் இவர்களும் ஒரு எடுத்துக்காட்டாகவே இருக்கிறார்கள்.
மிகவும் சந்தோஷமான தம்பதிகள் .இப்போதும் அதே சந்தோஷத்தோடு தங்கள் அந்திம காலத்திற்கு அடுக்குப்பண்ணுவதுதான் எனக்கு அடிக்கடி வயிற்றைக் கலக்கும்.
அந்த வகையில் தான் இதை நமக்கு திருமணநாளை ஜாபகம் வைத்து பரிசாக கொடுத்தார்கள்.
அதாவது தாங்கள் பலகாலங்களாக கட்டிக்காத்த இவ்வாறான பொருட்களை மிகவும் பிடித்தவர்களுக்கு விட்டுச்செல்வதாக கூறுகிறார்கள்.
இந்த brass tea pot /turkish pitcher அவர்கள் வீட்டில் கம்பீரமாக அழகாக இருந்ததை பார்த்திருக்கிறேன்.
இவாறான ஒரு pitcher என் அண்ணன் ஒருவன் துருக்கி க்கு வக்கேஷன் போனபோது வாங்கி வந்தும் பார்த்திருக்கிறேன்.
சரியான பெயர் தெரியாமல் கேக்கவும் சங்கடப்பட்டு அவர்கள் தந்துவிட்டு போன பின் போட்டோ எடுத்து கூகிள் ல் search by image இல் அப்லோட் பண்ணி இதன் விபரங்களை பார்த்தேன்.
வீட்டில் உள்ள திருநீறைக்கொண்டு கழுவினேன் பொலிஷ் பண்ணும் மருந்து தேடிக்கொண்டு இருக்கிறேன்.
மிகவும் அழகாக இருக்கிறது .அவர்கள் நினைத்தால் ஒன்லைன் ல் இதை விற்று விடலாம் அல்லது தங்கள் பிள்ளைகளுக்கு மட்டுமே எல்லாவற்றையும் கொடுக்கலாம் 
 ஆனாலும் தாம் நேசிப்பவர்களையும் மதித்து அவர்களோடு தங்கள் நினைவுகளை பதிய வைத்து செல்ல நினைக்கும் அழகும் அன்புள்ளமும் எனக்கு
மிகவும் பிடித்து போய்விட்டது.
அவர்களுக்கு முன்னே போகிறேனோ பின்னே போகிறேனோ ஏதோ ஒன்ற கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள்



அதிசயங்கள்

இன்று எவ்வளவோ செலவு செய்து சீன சுவரையும் ஈபிள் டவரையும் உலக அதிசயங்கள் என்று நம் பிள்ளைகளிடம் காண்பித்துக்கொண்டிருந்தாலும் எந்த செலவுமின்றி நம் அம்மாக்கள் நமக்கு காட்டிய 
 ஒரு கோழிமுட்டைக்குள் இரண்டு கருவும்,குழம்பு வைக்க வாங்கிய {மீன் வயிற்றுள் } மீனை மீன் விழுங்கிய குட்டி மீனும் என்றும் 
 நம்மை கொள்ளை கொண்ட அழகான அதிசயங்களே



போராட்டம்




எனக்கும் ஈழத்தில் மிக சிறிய வயதில் ஊர்வலங்கள், உண்ணா விரதங்கள், போராட்டங்கள் என்பவற்றில் பங்கு கொண்ட ஏராளமான அனுபவங்கள் உண்டு.
நம்ம்மீதான அடக்குமுறைகளையும் உயிர்ப்பலிகளையும் இந்த உலகம் மூடி மறைக்கும் போது நமக்காக போராடியவர்கள் மட்டுமல்ல தீயில் கருகி உயிரையும் கொடுத்தவர்கள் இவர்களே.
உணர்வுடன் தெருவில் இறங்கி மனிதச்சங்கிலி நடத்தியவர்கள்.
ஆம்
அடுத்தவர்களை சாடுதல் விடுத்து
தம் மதிப்பு உணர்ந்து 
தலைமையை எதிர்பார்க்காமல் 
கொதித்து எழுந்தார்கள் இன்று
புகழ்வாய்ந்த சினிமா நடிகர்களை விட மேலானவர்கள் 
நல்வாழ்க்கை வாழும் சாதாரண மக்களாகிய தாமே என்பதை
புரிந்து கொள்ளாமல்,
தொழிலுக்காக நடிப்பவர்களை
தலைவன் என்றும் ,எடுத்துக்காட்டாளன் என்றும்
வாழ்க்கையில் மேன்மை வாய்ந்தவர்கள் என்று நினைப்பதுவும்
அவர்களுக்காக சக மனிதர்களுடன் மல்லுக்கட்டுவதுமான
எண்ணங்கள் இன்று தகர்ந்தது.
சுதந்திரமில்லாத போது அதற்காக உயிர் கொடுத்து போராடி அதை பெற்றவர்கள்.
சுதந்திர நாட்டின் உரிமைகளுக்கு போராட்டங்களை முன்னெடுக்காமல்
மேடை போட்டு பேசிக்கொண்டே இருப்பதும்
முக்கியமாக இலவச கல்விக்காக மாணவ சக்தியை பயன்படுத்தி 
எந்த எதிர்ப்பும் காட்டாமல் தம்மை வருத்துவதும். 
போராட்டம் என்றால் தீக்குளிப்பது என்று தீர்மானிப்பதும் 
இன்று தொலைந்தது.
.மக்கள் சக்தியை பயன்படுத்தி 
சமூக சேவைகள் செய்து உலகம் வியக்கவும்
எங்கோ வாழும் நம் கண்கள் குளமாகும்படியும்
ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்துவிட்டு
ரஜனி என்ன செய்தார்?விஷால் உதவி செய்ய்வில்லை என
சில்லி தனமாக பேசி
அவர்களை எல்லாம் தம்மை விட பெரிய மனிதர்கள் ஆக்குவது.
இன்றுடன் முடிந்தது.
(ஆம் களத்தில் இருந்து போராடும் நீதான் நாட்டின் பெரிய மனிதன்.பசியில் அழும் குழந்தையை நேரில் கண்டு மனமிரங்கி நீ பாலுக்கு செலவு செய்த 10 ரூபாய்தாய் மிகப்பெரிய தொகை.
இதில் அவர்களை எல்லாம் எதற்கு நடிக்க அழைக்கிறாய்???)
.
அரசியல் வாதிக்கு
செய்கையில் பயத்தை கொடுத்து படிய வைக்காமல் 
அவர்கள் எண்ணம்போல் ஆள அனுமதி கொடுப்பதும் விலைபோவதும்
இன்றுடன் ஒழிந்தது
.தங்கள் கருத்தை அப்பட்டமாக ஆணித்தரமாக முன்னிறுத்துவதை விடுத்து
அயல் நாட்டு நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்??
நடிகர்கள் என்ன சொல்கிறார்கள் ??? 
அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என
வெறும் அபிப்பிராயங்களுக்கும்
தனிப்பட்ட கருத்துக்களுக்கும் ஆத்திரப்பட்டு உனக்கு உரிமை இருக்கிறதா??? பெருமை இருக்கிறதா என 
அடித்து நொருக்கி உருவ பொம்மை செய்து எரிப்பதும் 
இன்று இன்றிப்போனது.
.
இந்த மாணவர்களுக்காகவும் அவர்கள் மனம் துவண்டு போகாமல் 
மேலும் சாதிக்கும் எண்ணங்களை விதையிலேயே அறுபட்டு போகாமல் இருப்பதற்காகவாவது இந்த போராட்டம் தோற்று விட கூடாது என்று வேண்டுகிறேன்.
சுரேஜினி பாலகுமாரன்.

பூச்சி மருந்துகள்




பேஸ்புக் ல் எங்கு பார்த்தாலும் ஆளாளுக்கு இன்றுமுதல் பெப்சி வாங்க மாட்டேன் கோக் குடிக்க மாட்டேன் என்றும் சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்வதை பார்க்கிறேன்.
அப்படி எல்லாம் சொல்வதை விட்டு இவற்றை ஒருதடவை வாங்குங்கள்.வாங்கி வந்து உங்கள் வீட்டு டாய்லட் ல் 1 கப் ஊற்றி விட்டு ஒரு மணித்தியாலம் விட்டு டாய்லட் ஐ கழுவி பாருங்கள்.
கழுவவே வேணாம் பிளாஷ் பண்ணும்போதே அம்புட்டு அழுக்கையும் அடித்து போய்விடும்.
நான் 10 வருஷத்துக்கும் மேலா கிளீன் பண்ண மட்டுமே வாங்குவதுமில்லாமல், பிள்ளைகளையும், பார்பிக்யூ மஷின்{barbecue machine} அவன் {oven}எல்லாம் கழுவும்போது பக்கத்தில் நின்று பார்க்க வைப்பேன்.
என் 4 வயது மகளிடம் ஒருநாள் கிச்சன் டொப் ல் இருந்த ஒரு கோக் கான் ஐ குடுத்து இதை வை அம்மா என்றேன். பிரிஜ் ல் வைப்பாள் என்று நினைத்தேன்.
பின்னர் பார்த்தால் கிளீன் பண்ணும் பொருட்கள் அடுக்கி வைக்கும் பாஸ்கட் ல் வைத்திருக்கிறாள்.
சோ இனிமேல் யாராச்சும் குடிக்க எடுக்கும் போது நீங்கள் குடிக்கபோவது டாய்லட் மருந்து என்பதை ஞாபக படுத்தினால் போதும்.
இதுக்கு பிறகுமா இதையெல்லாம் குடிப்பீங்க???????
உவ்வேக்
பூச்சி மருந்துகள் பற்றிய பதிவுகள் அனுபவங்கள் தொடரும்........
சுரேஜினி பாலகுமாரன்

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...