Thursday, 11 May 2017

Polycystic Ovarian Syndrome

1.சினைப்பைக்கட்டிகள் என்றால் என்ன?
சினைப்பையில் சுரக்கும் ஆன்ரோஜன் ஈஸ்ரோஜன் எனும் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வினால் கருமுட்டை வளர்ச்சி ,கரு அணுக்கூட்டின் முதிர்ச்சி என்பன தடைப்பட்டு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகளாக தங்கிவிடுவதே சினைப்பைக்கட்டிகள் ஆகும்.
(இது ஒரு நீண்ட விளக்கம் .எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாது .விபரமாக புரிந்து கொள்ளவேண்டிய அவசியமும் கிடையாது. நாம் என்ன பரீட்சைக்கா போகப்போகிறோம் .
அதனால் இங்கனம் மிகச்சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்}
2.சினைப்பைக்கட்டிகள் கருத்தரித்தலை தாமதப்படுத்துமா?
நிச்சயமாக. கருத்தரிப்பு தள்ளிப்போவதற்கு இதுவும் ஒரு காரணம்.ஆனால் நீர்க்கட்டிகள் இருக்கும் போது கருத்தரிக்கவே முடியாது என்றும் சொல்வதற்கில்லை.எண்பது வீதமான பெண்களுக்கு
கருத்தரிப்பு தள்ளிப்போகும் ஆயினும் 20 வீதமான பெண்கள் நீர்க்கட்டி இருக்கும்போதே கருத்தரிக்கிறார்கள்.
3.இது எவ்வாறு கருத்தரித்தலுக்கு இடையூறு செய்கிறது?
இந்த நீர்க்கட்டிகள் கருமுட்டை வளர வேண்டிய இடத்தில் வளர்வதால் கருமுட்டையை வளரவிடாமல் நசுக்கும்.இதனால் கருமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளியேறாது.
ஆரோக்கியமான கருமுட்டை வெளியேறாவிட்டால் கருத்தரித்தல் நிகழாது.
4.சினைப்பைக்கட்டிகள் இருப்பதற்கான அறிகுறிகள் எவை?
ஒழுங்கற்ற மாதவிடாய்
உடல் பருமன் ஏற்படுதல்
கழுத்து,மார்புப்பகுதி போன்ற இடங்களில் தோல் கருப்படைதல்
பருக்கள் தோன்றுதல்
ரோமம் வளர்தல் { ஆண் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் முகத்தில் ரோமங்கள் வளரும்}
5.சினைப்பைக்கட்டிகள் உருவாகுவதற்கான காரணங்கள் எவை?
இதற்கென்று திட்டவட்டமான காரணங்கள் ஏதும் இல்லாவிட்டாலும் பிரத்தியேகமான காரணங்களாக சிலவற்றை கண்டுபிடித்துள்ளார்கள்
அவையாவன
உணவுப்பழக்கவழக்கங்கள் அதாவது சமச்சீரான உணவுகளை உட்கொள்ளாமை.அதிக மாச்சத்துக்களை உட்கொள்வது
உடல் பருமன் .உடல் பருமன் காரணமாக ஹார்மோன்கள் சீரற்றுப்போவதால் உருவாகலாம்
மன அழுத்தம் மன அழுத்தம் காரணமாக ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வால் ஏற்படலாம்
உடல் உழைப்பின்மை அல்லது அதிக உடலுழைப்பு
தைராயிட்
ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
Blog image
6.இதற்கான மருத்துவ ரீதியான தீர்வுகள் எவை?
இது உங்களுக்கு உருவாகி இருக்கும் கட்டிகளையும் அதன் தன்மைகளையும் பொறுத்தது.
இரத்தப்பரிசோதனை மற்றும் ஃபோலிக்குள் ஸ்கான் செய்து பார்த்து இதனை அளவீடு செய்வார்கள்
பின்னர் அதன் தன்மைக்கு ஏற்ப
.சிலருக்கு மிகச்சிறிய குறைவான எண்ணிக்கை கொண்ட நீர்க்கட்டிகள் இருப்பின் கருமுட்டை வளர்ச்சி அடைய வைக்கும் ஊக்க மாத்திரை கொடுப்பார்கள் இதில் நீர்க்கட்டிகளை மிஞ்சி கருமுட்டை
வளர்ச்சி அடைந்து வெளியேறும்போது கருத்தரிக்க வாய்ப்புண்டு
ஹார்மோன்களை மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தி நீர்க்கட்டி உருவாகுவதை தடுப்பது { ப்ரோலாக்டின் ,ஆன்ரோஜன் அளவுகளைக்குறைத்தல்}
லாப்ரஸ்கொப்பி அல்லது எலக்ரோ சர்ஜிக்கல் முறையில் நீர்க்கட்டிகளை எரித்தல்.
7.லாப்ரஸ்கொப்பி இந்த பிரச்சனையை எவ்வாறு சரிசெய்யும்?
நமக்கு மயக்க மருந்து செலுத்தி நம்முடைய தொப்புளில் ஒரு சிறிய துளையிட்டு லேசர் மூலம் நீர்க்கட்டிகளை எரித்து விடுவார்கள்.
இதை பெரிய ஆபரேஷன் என்றெல்லாம் பயப்படத்தேவை இல்லை.இங்கு கனடாவில் 5 மணிநேரத்தில் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் .சில நாடுகளில் வேறுபடலாம்.
.3 நாட்களில் வலிகளில் இருந்து மீண்டு சாதாரண நிலைக்கு வந்துவிடலாம்
ஆபரேஷன் செய்த அடுத்த மாசமே கருத்தரிக்க முயசிக்கவேண்டும் .தொடர்ந்து 3 இல் இருந்து 6 மாதங்களுக்குள் கருத்தரிக்காவிட்டால் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் உண்டு.
8. இந்த நீர்க்கட்டி பிரச்சனைக்கு மருத்துவம் சாராத தீர்வுகள் எவை?
உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டும் அதாவது அதிக மாப்பொருள் உண்ணக்கூடாது,சமச்சீரான ஊட்டத்த்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் பழங்களை அதிகம் உண்ண வேண்டும்
எடைக்கட்டுப்பாடு ,வயதிற்கும் உயரத்திற்கும் ஏற்ற எடைக்கு மாற வேண்டும்
உடற்பயிற்சி தினமும் நடைப்பயிற்சி செய்தல்
9. நீர்க்கட்டியை போக்கும் நாட்டு மருத்துவங்கள் எவை?
மலைவேம்புச்சாறு அதாவது மாதவிடாய் ஆனதில் இருந்து 3 வது நாள் தொடக்கம் 7 வது நாள் வரை காலையில் வெறும் வயிற்றில் மலை வேம்பு சாறு பருகினால் நீர்க்கட்டிகள் அற்றுப்போகும் என்கிறார்கள்.
இது அவரவர் விருப்பம்.
10 சினைப்பைக்கட்டிகள் என்பது ஒரு நோயா?
கிடையாது அதிகமானோர்களுக்கு இது இருப்பதே தெரியாது.சில நீர்க்கட்டிகளின் தன்மையை பொறுத்து உடல் உபாதைகள் இருக்கும் .அதற்கு மருத்துவர்களிடம் சென்று தீர்வு பெற்றுக்கொள்ள வேண்டும்

சிறு மாற்றம் பெரு மகிழ்ச்சி {உண்மை சம்பவம் }

அரிசியை வெயிலில் வைத்து எல்லை தாண்டி சிந்தாமல் பரவி விட்ட செல்வாம்பிகைக்கு எல்லையை தாண்டி எங்கெங்கோ சென்றுவரும் சிந்தனைகளை சிதறாமல் சேர்க்க வழிதெரியவில்லை.
ஒரு வித கலக்கமும் மகிழ்ச்சியும் சேர்ந்து சொல்லொணா உணர்வுகள் மனதில் அலைபாய ஒரு கையால் காக்கையை விரட்டியபடி மூழ்கித்தான் போனாள் சிந்தனைக்குள்.
அப்படி என்னதான் சிந்தனை.
வெளிநாட்டில் இருக்கும் மகனின் உதவியுடன் தன் ஒரே மகளை நோர்வே யில் மணம் முடித்து குடுத்திருந்தாள். மகள் கர்ப்பமாக இருப்பது அறிந்து வேண்டிய கடவுளர்களுக்கு எல்லாம் நேத்தி செலுத்தி முடிக்கு முன்னரே
''பிரசவ காலத்துக்கு உன்னை இங்கே அழைக்கிறேன் அம்மா ஆயத்தம் செய்து கொள்''
எனும் மகளின் வார்த்தைதான்
ஆம் பங்குனி பிறந்தால் 58 வயதாகப் போகிறது.அடிக்கடி இடுப்பு பிடித்துக்கொள்கிறது.சக்கரை வேறு அதிகமாகிவிட்டதை மருத்துவர் உறுதிப்படுத்திவிட்டார்.காலைப்பனியில் ஓயாமல் தும்மல் போட வேண்டி இருக்கிறது.கண்கள்வேறு அடிக்கடி புகை படிந்ததுபோல் மாயம் செய்கிறது.
என்னதான் செய்வது வயதானால் எல்லோருக்கும் பொதுவாக வரும் அசெளகரியங்கள்தானே எண்றெண்ணி மெதுவாக எழ முயன்றவளை
பலமாக அழைத்தது கணவன் ரத்தினத்தின் கனமான குரல்.
''எங்கே என் கண்ணாடி ? அரை மணிநேரம் பேப்பர் படிக்க ஒரு மணிநேரம் தேடவேண்டி இருக்கிறதே இந்த கண்ணாடியை. எடுத்து பத்திரமாக வைக்க மாட்டியா ???''
ஆமாம் செல்வாம்பிகையின் கணவணுக்கு சுமை தூக்குதல் போன்ற பெரிய வேலைகள் தான் செய்யத்தெரியும் தனக்கான சிறு சிறு வேலைகள் எல்லாமே மனைவியே செய்து பழகிப்போய்விட்ட நிலையில்
கண்ணுக்கு முன்னால் இருந்தாலும் மனைவி எடுத்துக்கொடுக்காமல் அந்த கண்ணாடியை எடுத்து மாட்ட மாட்டார்.
சுற்று முற்றும் பார்த்து ஒரே நொடியில் எடுத்துக்கொடுத்தவளின் சிந்தனை ஓட்டம் மட்டும் முடிவுக்கு வந்ததாக இல்லை.
Blog image
எல்லோரும் சொன்னார்கள் உனக்கென்ன கொடுத்து வைத்தவள் ,இந்த வயதில் வெளிநாடெல்லாம் போக கிடைத்திருக்கிறது என்று.எல்லோரும் பெருமையாக பார்ப்பதை ரசித்தாலும் சம்மந்தபட்டவளுக்குத்தானே அதன்
மறுபக்கத்தை சிந்திக்க வேண்டிய தேவை இருக்கும் .
பாட்டன் முப்பாட்டன் என்று பிறந்து வளந்த நாட்டின் காலையில் சில்லிடும் இம்மியளவு பனியே ஒத்துக்கொள்ளவில்லை, வயசான காலத்தில் நம்மையே யார் பார்ப்பார்கள் என்ன செய்ய போகிறோம் என்று இருக்க ,
மருந்தும் மாத்திரையும் அதிகமாகிக்கொண்டு போகும் இந்த நிலையில், கடல் தாண்டி அதுவும்,
64 வயதாகியும் கைக்குழந்தைபோல் இன்னும் அடம்பிடிக்கும் கணவனை சொந்தங்கள் உதவியில் விட்டு தன்னந்தனியே பழக்கமில்லாத ஊருக்கு எப்படி போவேன் அங்கே போய் எனக்கு ஏதாவது ஆகி விடுமோ என்று
இதயம் படபடக்க, தண்ணீரை எடுத்து குடித்து மறைத்துக்கொண்டாள்.
ஆயினும் செல்வாம்பிகையின் பயத்தையும் படப்டப்பையும் மகளும் கண்டு கொள்வதாக இல்லை. யாரும் கண்டு கொள்வதாகவும் இல்லை .பரபரப்பாக எல்லா வேலைகளும் நடக்க மகள் சொன்ன பொருட்கள் எல்லாவற்றையும்
ஓடி ஆடி வாங்கி பாசல் செய்து திணித்து முடிக்க எப்படி நகர்ந்தது என்று தெரியாமல் வேகமாக நகர்ந்த நாட்கள் பிடித்து தள்ளிவிட, தாய்நாட்டிற்கு தற்காலிக விடை கொடுத்து நோர்வே வந்து சேர்ந்துவிட்டாள்.
புது நாட்டில் கால் வைத்தவளுக்கு ,என்னதான் இந்த உலகில் கொட்டிக்கிடந்தாலும் மனம் என்னவோ நமக்கு பொருத்தமானவற்றில் மட்டுமே லயிக்கும் என்பது போல் ஆச்சரியத்தில் ஆழத்திய விடயம்
புதிய நாட்டின் வயோதிபர்கள்.
இவர்களுக்கு எல்லாம் என்ன வயசிருக்கும் என்று கேட்டவளுக்கு அங்குள்ளவர்கள் சொன்ன பதில் மேலும் ஆச்சரியம் .ஆம் 60 க்கு அதிகம் என்பதே .
என்றுமே எங்குமே பாத்திருக்கவில்லை.கண்களை நம்பவே முடியவில்லை. எவ்வளவு அழகாக உடை அணிந்து இருக்கிறார்கள்.எவ்வளவு சுறுசுறுப்பாக தங்கள் வேலையை செய்கிறார்கள்.உதவி இல்லை என்று உரிக்காமல் ஓரமாக
வாரக்கணக்கில் போட்டு வைத்த தேங்காய்கள் ஞாபகத்தில் வந்து போனது.
65 வயது பாட்டி காரை எடுத்துக்கொண்டு கடைக்கு போய் சாமான்கள் வாங்கி வருவதை மேலும் கீழுமாக பார்த்தாள் செல்வாம்பிகை.பேரப்பிள்ளைகளை பாடசாலை கூட்டிபோவது,தம்பதிகளாக கடற்கரைக்கு செல்வது,வேறு நாடுகளுக்கு
இடங்கள் பார்க்க செல்வது,மேலதிகமாக பொது தொண்டுகள் செய்வது என எல்லாமே ஆச்சரியப்படுத்த உடம்பில் ஒரு உற்சாகம் பரவ அன்றுதான் 58 வயது வயோதிபம் இல்லை என்பதை உணர்ந்த்தாள்.
தொடர்ந்து எந்த மாத்திரையும் தேவைப்படவில்லை.மகிழ்ச்சியுடன் ஓடியாடி வேலைகள் செய்து கலகலப்பாக இந்தவளுக்கு கண்ணீர் பீறீட்டது காரணம் கேட்ட மகளிற்கு சொன்னாள்,
''என் தாய் தந்தையர்கள் உறவினர்கள் மூதாதையர்கள் இப்பிடியும் வாழலாம் என்று தெரியாமல் வயதாகி விட்டது வயதாகி விட்டது என புலம்பி மூலையில் முடங்கி மாண்டு விட்டார்களே என்று குழந்தை போல் குலுங்கி அழுதாள்.
Blog image
இந்த பயணம் அவள் வாழ்வு முறையையே புரட்டிப்போட்டிருந்தது .சென்ற தேவைகள் சிறப்பாய் முடிய ஊர் வந்து சேர்ந்தவளுக்கு ஒரே உற்சாகம்.வயதாகி விட்டது இனி இதெல்லாம் எதற்கு என்று வைத்திருந்த கைக்கடிகாரத்தை
எடுத்து தன் கணவனிடம் பற்றி மாத்தி தரும்படி கொடுத்தாள்.
ஆச்சரியத்துடன் இது என்ன புது வினோதம் என்று வினவிய கணவனுக்கு அனைத்தையும் புரிய வைத்தாள்.ஏன் கடைசி மூச்சு வரை ரசித்து வாழக்கூடாது என்று கேள்வி கேட்டாள்.நாங்களும் சத்தான உணவுகளை எடுத்து வளர்ந்தவர்கள்தானே
சுத்தமான காற்றை சுவாசித்தவர்கள்தானே நோயும் பிணியும் அண்டிவிட்டதாக ஏன் வரையறுத்துக்கொள்ள வேண்டும் என்றாள்.
செல்வாம்பிகை வீட்டில் இப்போது எல்லாமே மாறிப்போய் இருந்தது .மாத்திரைகள் இடம் தெரியாமல் போயிருந்தது.உதவி கேட்டு அடுத்தவர்களை நச்சரிக்கும் தேவைகள் ஒழிந்து போயிருந்தது
.குட்டி குட்டி பயணங்களும் ஆரவாரங்களும் வாழ்வை நிறைத்திருந்தது.இங்கும் வயோதிபத்தை ஓரம் கட்டி வீரமாக வாழும் பலர் கண்ணுக்கு தெரிய தொடங்கினார்கள்.

மறுபடியும் வெங்காயம்




இது நான் வளர்த்த வெங்கியேதான்.இந்த மெதேர்ட் ல் ஒரு தடவை வெங்காயம் நட்டு வளர்த்தேன் .மிகவும் பிடித்து போய் விட்டது .போத்தலில் துளைகள் இட்டு வெங்காயத்தை வெளியே முளையிடுமாறு வைத்து கொஞ்சம் கொஞ்சமாக மண் நிரப்பி வைக்க வேண்டும்.
ரெம்ப செழிப்பாகவே வளரும்.


இஞ்சி செடி




எவ்வளவு வளமான மண்ணில் நட்டு வைக்கிறோமோ அவ்வளவுக்கு பலன் கொடுக்கும்.என்னிடம் எல்லா சீஸன் க்கும் இவ்வாறு முளைக்க வைத்த இஞ்சி இருக்கும்.
இஞ்சி டீ க்கு இந்த இஞ்சி அளவுக்கு கடையில் கிடைக்கும் இஞ்சி டேஸ்ட் கொடுக்காது.நட்டுப்பாருங்கள் சில நாடுகளில் வளர்வதில்லை என்கிறார்கள் வளராவிட்டாலும் மண்ணுக்குள் வைத்து எடுத்தால் 
பழுதாகாமல் கூடுதல் சுவை.


வெங்காயம்



மிக ஈஸியாக எந்த சப்போர்ட் ம் இல்லாமலே முளைக்க கூடியது இந்த வெங்காயம் .அப்படி முளைவிடுவதில் சிலதை எடுத்து இப்படி நட்டு வைத்தால் உணவை அலங்கரிக்கவும்
வாசனைக்கு சேர்க்கவும் ,முட்டை பொரிக்கவும் என்று பலவற்றிற்கு கை கொடுக்கும்.அத்தோடு வெட்ட வெட்டவும் வளரும்.


இஞ்சி உள்ளி பேஸ்ட்



அவசரத்தில் சமைக்கும் போது இஞ்சி உள்ளி அரைத்துக்கொண்டிருப்பது ஒரு வேலையாக இருக்கும்.தவிர்க்கவும் இயலாது.மணமும் சட்டென்று விட்டுப்போகாது.
சோ இப்படி மாதத்திற்கு ஒரு தடவை இரண்டையும் சேர்த்தோ அல்லது தனித்தனியாகவோ அரைத்து ஐஸ் கியூப் மோல்ட் ல் வைத்து பிரீஸர் ல் வைத்தால் வேலை சுலபம்.
ப்ரீஸ்ரில் வைப்பதால் சுவையிலும் எந்த மாற்றமும் இருக்காது.


மிளகாய் வெட்ட



மிளகாய் சிலர் கட்டிங்க் போர்ட் ல் வைத்து வெட்டுவதை பாத்திருக்கிறேன்.நான் ஒருநாளும் அப்படி வெட்டியதில்லை.
மிளகாய் காம்பில் பிடித்துக்கொண்டு கிச்சன் கத்தரிக்கோலால் வெட்டிவிடுவேன்.முக்கியமாக குழந்தைகளுடன் டீல் பண்ணுபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.
கத்தியால் வெட்டுவதை விட மிகவும் சுலபம்.


youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...