Wednesday, 1 February 2017

பாப்கான்




எல்லோருக்கும் பிடித்த பாப்கான் ஐ மிகவும் சுலபமாக 5 நிடங்களில் செய்வதற்கு ,

தேவையானவை

சோளம் 1 கப்
எண்ணெய்  2 டேபிள் ஸ்பூன்
அல்லது பட்டர்  2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
1.மூடக்கூடிய ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஈரம் காய்ந்ததும்  எண்ணெய் அல்லது பட்டர் போடவும்

2.அதற்குள்  சோளன் ஐ சேர்த்து மிதமான நெருப்பில் மூடி விடவும் .

3.வெடிக்க தொடங்கி சத்தம் வரும்போது மூடியை திறக்காமலே குலுக்கி விடவும்

.அவ்வளவு சோளன் ம் மிகவும் அருமையாக பூத்து மூடியை தானே தள்ளும் .அல்லது வெடிக்கும் சத்தம் குறைந்ததும் திறந்து உப்பு ,சுகர் ,சீஸ் என்று நமக்கு பிடித்ததை சேர்த்து குலுக்கி சாப்பிடலாம்

பூசணி சூப்



தேவையானவை
பூசணி அரை கிலோ
பச்சை மிளகாய் 1
உள்ளி 1 பல்லு
மிளகு 5
ஷவ க்ரீம் sour cream 1 கப்




செய்முறை


1பூசணியை தோல் விதை நீக்கி கழுவி சுத்தம் செய்து ,துண்டுகளாக நறுக்கவும்


2. பூசணித்துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு ,பச்சை மிளகாய், பூடு ,மிளகு, 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

3. இவற்றுடன்  ஷவ கிறீம் சேர்த்து  ப்ளெண்டாரால்  அல்லது மிக்சியில் 1சுத்து சுத்தி எடுத்தால் மிகவும் சுவைகொண்ட கிரீமி பூசணி சூப் சில நிமிடங்களில் தயாராகிவிடும்.









ப்ரிஜ் கிளீனிங்

குளிர்சாதன பெட்டியை [பிரிட்ச்] சுலபமாக அதேநேரம் தேவையற்ற மணங்களையும் கிருமிகளையும் அறவே ஒழித்து சுத்தம் செய்ய


பேக்கிங் சோடா  கால் கப்
 லெமன் யூஸ் கால் கப்
 வினிகர் கால் கப்
 பாத்திரம் தேய்க்கும் சோப்  2துளி




 இவற்றை கலந்து இந்த கலவையை ஒரு துணியில் தோய்த்து பிரிட்ச் ன் உள்பாகம் வெளிப்பாகம்
எல்லாவற்றையும் நன்கு துடைத்து இன்னுமொரு துணியால் அந்த ஈரத்தை துடைத்து விட்டால் போதும் மாசக்கணக்காக பிரிட்ச் மணங்கள் அழுக்குகள் நீங்கி பார்க்க பளிச் என்று இருக்கும்.







...
இத்துடன் அடிக்கடி பிரிட்ச் அசுத்தமாகாமல் இருக்க உள்ளே வைக்கும் எல்லாவற்றையும் டப்பாக்குள் அடைத்து வைத்தால் போதும்.




காய்கறி ,மீதமுள்ள உணவு ,எதுவாக இருப்பினும் அதுக்கேற்ப டப்பாக்களில் உள்ளே இருப்பது தெளிவாக தெரியும்படி வைத்தால் பார்ப்பதற்கும் அழகாக இருக்கும்.
எந்த அவசர நேரத்திலும் அந்த அடுக்கையும் அழகையும் கலைக்க மனசு வராது.
அப்படி அடுக்கு கலைந்தால் கூட சில நிமிடங்களில் மீண்டும் அழகாக அடுக்கிவிடலாம்.




அரைத்த வல்லாரை சம்பல்







தேவையானவை

வல்லரை 1 கட்டு...
தேங்காய்ப்பூ ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் 2
பச்சை மிளகாய் 1
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
லெமன் சிறிது
உப்பு



செய்முறை
1. வல்லாரையை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்.பெரிதாகவே அரியலாம்.

2.கொஞ்ச எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து கொள்ளவும் .

3.சின்னவெங்காயம், தேங்காய்ப்பூ அல்லது சிறு துண்டு தேங்காய் ,காரத்துக்கேற்ப பச்சை மிளகாய் ,உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து மிகவும் கொஞ்ச தண்ணீர் விட்டு மிக்சியில் அடித்து எடுக்கவும்

4. சாப்பிடும் போது தேசிக்காய் சேர்த்து சாப்பிடவும் .



வல்லாரை சத்துக்கள் மிகுந்தும் ஞாபகசக்தியை அதிகரிக்கும் ஒரு கீரையாகவும் ,குழந்தைகளும் பெரியோர்களும் கண்டிப்பாக சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டி இருந்தாலும் பலரும் விருப்பத்துடன் சாப்பிடுவதில்லை .
ஆனால் அரைத்து செய்யும் சம்பல் விரும்பி சாப்பிடகூடியதாக இருக்கும் .

என் கிச்சன் ட்ரோவர்

கிச்சன் ட்ரோவர் க்குள் பொருட்களை வைக்கும்போது ஒரே மாதிரியான போத்தல்களில் பொருட்களை அடைத்து,

ட்ரோவரை திறக்கும்போதே ஒவ்வொரு போத்தலுக்குள்ளும் என்ன இருக்கிறது என்பது தெளிவாக தெரியக்கூடியதாக வைத்தால் வீண் சிரமங்களை தவிர்க்கலாம்.

அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியதில்லை.பார்க்கவும் அழகாகவும் தெளிவாகவும் இருக்கும்.
...
முக்கியமாக ஜாம் ,சோஸ் போன்று ஏதாவது பொருட்கள் அடைத்து வரும் போத்தல்களை தவிர்ப்பதே நல்லது.

ஒவ்வொன்றும் ஒரு விதமாக இருந்து அழகையும் கெடுத்து சமயத்தில் திறப்பதற்கும் கடினத்தை சிரமத்தை கொடுக்கும்
 .
சில போத்தல்கள் எவ்வளவு கழுவினாலும் முன்னர் உள்ளே அடைக்கப்பட்டிருந்த பொருளின் வாசனை விட்டு போகாது .முக்கியமாக அடுத்து நாம் அதற்குள் போட்டு வைக்கும் பொருளின் மணத்தையும் சுவையையும் கூட மாற்றிவிடும் .

ஆகவே புதிய வெற்று போத்தல்களையோ டப்பாக்களையோ தெரிவு செய்வதே சிறந்தது

என் ப்ரீஷர் freezer

பிரீசர் க்குள் மீன், கோழி , காய்கறிகள் மற்றும் பிற உணவு வகைகளை வைக்கும் போது இவ்வகையான ஸிப் பாக் களில் போட்டு வைத்தால் பிரிட்ச் பார்க்க அழகாக இருக்கும்.

எடுக்க வைக்கவும் சுலபமாக இருக்கும்.

நிறம் மாறாமல் ,பையுடன் சேர்ந்து ஒட்டமல் பார்க்க சுத்தமாக இருக்கும்.
...
எல்லா அளவுகளிலும் கடைகளில் கிடைக்கும் .அடிக்கடி வாங்கத்தேவையில்லை.
உதாரணமாக ஒரு பாக் ல் உள்ள மீனை எடுக்கும் போது பாக் ஐ வெறும் நீரினால் கழுவி ஊற்றி விட்டு மறுபடியும் வெற்று பாக் ஐ பிரீசருக்குள் வைத்து மீண்டும் மீண்டும் இதே போல் உபயோகிக்கலாம்



என் கிச்சன்

கிச்சன் கபினட் க்குள் பொருட்கள் அடுக்கும் போது ஒரே அளவான ஒரே மாதிரியான போத்தல்கள் அல்லது டப்பாக்கள் க்குள் பொருட்களை அடைத்து அடுக்கி வைப்பது கிச்சன் சுத்தமாக இருப்பது மட்டுமன்றி உபயோகிக்கவும் சுலபமாக இருக்கும்.பொருட்கள் தீர்ந்து போனால் கூட சுலபமாக கண்டு கொள்ளலாம் .

எல்லாவற்றையும் விட வேலை குறைவாக இருப்பது போல் இருக்கும்.
கிச்சனுக்குள் வேலை பார்ப்பதும் சுமையாக தெரியாது.போத்தல் ,டப்பா உள்ளே என்ன வைத்திருக்கிறோம் என்று வெளியே தெரிய கூடியதாக இருந்தால் நல்லது தெரியாவிட்டால் எழுதி... ஒட்டி வைத்துக்கொள்ளலாம்.
எப்பவுமே கபினட் க்குள் கை வைத்து எதையாவது எடுக்கும் போது சட்டு சட்டென்று பக்கத்தில் உள்ள பொருட்கள் விழுந்து உருளாமல் தேவையான இடைவெளி விட வேண்டும்.

கிச்சனுக்குள் இடம் போதவில்லை என்றால் அளவான சிறிய போத்தல் மற்றும் டப்பாக்களை தெரிவு செய்து பொருட்களை அடைத்து வைத்துவிட்டு மீதி பொருளை பையில் ஒரு ரப்பர்பாண்ட் ஆல் இறுக சுற்றி ஒரு பெரிய, பொருட்கள் வெளியே
தெரிய கூடிய பெட்டியில் போட்டு வைத்து அந்தந்த பொருட்கள் முடியும்போது கபினட் க்குள் உள்ள போத்தல் டப்பாக்களில் அழகாக போட்டு வைத்து உபயோகிக்கலாம்.

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...