Thursday, 2 February 2017

நான் வளக்கும் ஒட்டக சிவிங்கி

என் ஒட்டகச்சிவிங்கி
என் குழந்தைகளை கட்டாய வயதிற்கு முன்னர் பாலர் பாடசாலைக்கு அனுப்ப விரும்பாத நான் அவர்களுக்கு எங்கள் வீட்டு ஹால் ஐ
நர்சரி யாக செய்திருந்தேன்.அப்போது எனக்கு ஒட்டகச்சிவிங்கி படம் ஒன்றை வாங்கி சுவரில் ஒட்டி வைக்க ஆசை வந்தது.
நெட் ல் இலும் கடைகளிலும்
தேடினேன்.அவ்வளவாக பிடிக்கவில்லை.{பேபியுடன் நிக்கும் அம்மா ஒட்டகச்சிவிங்கியேதான் வேணும் என்று தேடினேன்}

பின்னர் வேண்டாம் மரத்தில் செய்த ஒட்டகம் வாங்குவோம் என்று தேடினேன்.அதுவும் கிடைக்கவில்லை.
ஆனால் எங்களுடைய சமர் பிக்னிக் பிளான் படி இங்குள்ள ஆபிரிக்கன் சபாரி க்கு {african safari toronto} போனபோது அங்குள்ள கடைகளில் ஆவலாக தேடினேன்.நான் தேடியதோ பெரிது அவர்களிடம் சின்னதே இருந்தது.பெரிதாக வேணுமாயின் கழுத்தும் தலையும் சேர்ந்தது மட்டுமே உள்ளது என்று காட்டினார்கள்.அதுவோ நம்மூர் உலக்கை க்கு ஒட்டக சிவிங்கி தலையை வைத்ததுபோல் இருந்தது அதுவும் 70 டொலர்களுக்கு மேலாகவே இருந்தது.
பணத்துக்கு ஏற்ற பொருளாக தெரியவில்லையே என்று வந்து விட்டேன்.
மகளுக்கு விளையாட வாங்கி கொடுத்த பொருட்களில் 5 டொலர்களுக்கு குச்சியுடன் சேர்ந்த ஒட்டகசிவிங்கியும் {பிளாஸ்டிக்} வாங்கி கொடுத்திருந்தேன்.
வீட்டுக்கு வந்ததும் குச்சி எல்லாம் உடைத்து விட்டு தலையை மட்டும் வைத்திருந்தாள் அதைப்பார்த்ததும் எனக்கு வீட்டில் புத்தரின் தலையை வைத்து அலங்காரம் பண்ணியிருந்த கருப்பு நிற கட்டில் கால்கள் கண்ணில் பட,
அவ்வளவேதான் இதோ.


பெயிண்ட் பண்ணிவிட்டேன்.
இதுபோலவே ஒன்றை 110 டொலர்கள் சொன்னார்கள் கடையில்.
போட்டோவை விட நேரில் இன்னும் அழகாக இருக்கிறது .தூரமாக நின்று பார்த்தால் உண்மையாகவே ஒட்டகச்சிவிங்கி நிற்பதுபோலவே இருக்கிறது.


நீங்களும் ஒட்டகசிவிங்கி பொம்மை வத்திருந்தால் கூட அதன் தலையை இணைத்து இப்படி அழகாக செய்து வீட்டில் வைக்கலாம்.
இதன் பாதி உயரத்திற்கு இன்னொரு கட்டில்காலும் இருக்கிறது. இதோ படத்தில் காட்டி இருக்கிறேன்.
இதே போலவே செய்து பேபி ஒட்டகச்சிவிங்கியும் செய்துவிடவேண்டும் என்பதே என் ஆசை.


அதுவரை 
ஒட்ட்க சிவிங்கியின் கழுத்து மட்டும் நீண்டு போனதேன்
ஒட்டுக்கேட்கும் கெட்ட பழக்கம் அதிகமானதால் என்ற பாலர் வகுப்பில் படித்த பாடலை நினைவுபடுத்திக்கொண்டு டாட்டா சீ யூ.
படத்தில் இருப்பவை நாங்கள் பார்த்த ஒட்டக சிவிங்கிகளும் எங்களை தேடி ஓடி வந்து பார்த்த பேபி ஒட்டகசிவிங்கியாரும்.








என்னால் நான் ........


வருடங்கள் உருண்டு ஓடிக்கொண்டு இருக்கிறது
வழக்கம் போலவே என்னிடம் ஒரு கேள்வி - நான்
வாழ்ந்து கொண்டு இருக்கிறேனா??
ஆம்
சுவாசிப்பதால் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதையும் தாண்டி
சுவாரஸ்யமாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
ஆம்
வருந்தி உழைத்து வந்த 
வருமானத்தின் பெரும்பகுதியை 
சேமிப்பில் புதைக்க எண்ணி - வரும் 
நாளைய சந்தோசங்களுக்காக
என்னை 
 மேலும் வருத்தி வருத்தி 
இன்றைய வாழ்வை தொலைக்கவில்லை
ஆகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அடுத்தவரின் உடலுழைப்பில் குளிர்காயும் எண்ணம் இல்லை
யாரையும் இடையூறு பண்ணவும் நேரமில்லை
ஒப்பிட்டு பார்த்து போட்டிகள் போட்டதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இருப்பினும் வாழ்க்கை ஓட்டத்தில் 
நான் வெறுக்கவும் படுகிறேன் சிலரை
வெறுக்கவும் செய்கிறேன்
என் வார்த்தைகள் என்னை மீறுகின்றதையும்
தவறுகள் என்வழி தாண்டவம் கொள்வதையும் 
என்னால் உணர்ந்து திருத்திக்கொள்ள முடிகிறது
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
என் அன்புக்கு தகுதியானவர்கள் 
எத்தொலைவில் இருப்பினும் தினமும் என் 
மனக்கண்ணில் நிழலாடி
உறவாடிக்கொண்டே இருக்கிறார்கள்.
என் நேசத்திற்கு உரியவர்களுக்கு நான் பாசாங்கு காட்டியதில்லை
என் பாசத்தையும் நேரத்தையும் 
அர்ப்பணிக்க தயங்கியதில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
பனியில் உணவின்றி ஆங்காங்கே ஒளித்திருக்கும் 
சின்ன குருவிகள் பற்றி என் நாளாந்த சிந்தனையில் இடம் இருந்தாலும்
சில எதிர்மறை எண்ணம்கொண்ட
மனிதர்கள் குணம் கண்டு 
பயத்துடன் ஒதுங்கவே செய்கிறேன்
என் மகிழ்ச்சித் தருணங்களை அவை
மென்று விழுங்கி விட கூடாது என்பதற்காக....
ஆகவே நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
வாழ்வின் இறுக்கமான சூழல்களையும்
போராட்டங்களையும் வென்று வெளியேறவும் 
சத்தமின்றி என் கவலைகளுக்கு தாழ் போடவும் 
யாருக்கும் அச்சம் இன்றி என் வழி செல்லவும் 
இஷ்டமுடன் பழகிக்கொண்டதால் நான்
வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
பிறரை தனிப்பட்ட கேள்விகளால் குடைந்து 
விபரம் அறிவதில் ஆர்வமில்லை
வீண்பழி சொல்லவும் விளைந்ததில்லை
அடுத்தவர் பற்றிய வேண்டாத பேச்சுக்கு
என் விலையற்ற நிமிடங்களை 
செலவிட்டு மகிழ்ந்ததில்லை
ஆகவே நான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறேன்
என் ஒவ்வொரு சின்னஞ்சிறு அசைவுகளையும்
ஆர்வமுடன் மகிழ்ச்சியாக்கி கடந்து செல்லும்படி 
மாற்றி அமைக்கிறேன்
ஆம் இதே போலவே வாழ்ந்து மறைய விளைகிறேன்
நிகழ்கால மகிழ்ச்சியை அடியோடு அடகு வைக்கும்
எதிர்கால சாதனை எனக்கு வேண்டாம் எனும்
சாதாரணமானவளாகவே வாழ்ந்துவிடுகிறேன்
இல்லை வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
என் தாய் என்னை 
டாக்டர் ஆக்கியிருந்தால் மகிழ்வதை விட
என் தந்தை கோடி சொத்துக்களை 
அள்ளி வழங்கியிருந்தால் மகிழ்வதை விட
என்னுள் எதையும் திணிக்காமல் 
போட்டி பொறாமைகளை விதைக்காமல்
மகிழ்வையும் நின்மதியையும் 
உற்பத்தி செய்து 
வாழும் கலை அறியும் அணுகுமுறை 
எனுள் தன்வழியே உறைய வழிவிட்டதனால் 
சாதாரண மனுஷியாய் பெருமையுடன்
வாழ்ந்துகொண்டேதான் இருக்கிறேன்.
கரையாத சேமிப்பே வாழ்வென்று 
விடியாத விடியலுக்காய் 
களைத்து திளைத்து ஒரு நாள் விழித்து பார்க்கையில் 
எல்லாம் விலகி போனது உணர்ந்து 
நொடிந்து மீதி காலமும் கடந்து
மடிந்து போவதில் எனக்கு உடன்பாடு இல்லை ஆகவே
நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேன்.
நல்லெண்ணங்களுடனும் 
மிகுந்த புத்துணர்ச்சியுடனும்
எல்லோரும் எல்லாமும் கிடக்கப் பெறவும் 
கிடைத்ததை வைத்து மகிழ்ந்து வாழவும்
வாழ்வின் ஒரு வருடம் குறைந்தாலும் 
கடந்த வருடத்தின் 
பெற்றுக்கொண்ட இன்பங்களை, பாடங்களை 
 மனம் நிறைய எடுத்துக்கொண்டு 
அடுத்த வருடத்தை வாழ்ந்து வளமாக்க அழைக்கிறேன்.
நன்றியுடன் சுரேஜினி பாலகுமாரன்
தங்யூ 2016 அண்ட் வெல்கம் டு 2017 



மனம் ஒரு மங்கி

மனம் ஒரு மங்கி

மீ ; ம்ம்ம் மோர்னிங் என்ன பிரேக்பார்ஸ்ட் வேணும்?
மீ : ஓனியன் பக்கோடா அண்ட் பிளாக் டீ
மீ : ச்சே மோர்னிங்கா??? அதான் பிரட் சிலைஸ் இருக்கே ?
மீ : நோ ஒனியன் பக்கோடாவும் பிளாக் டீயும்
மீ : எதுக்கு காலைலயே இந்த அன்ஹெல்தி எண்ணெய் ஸ்னாக்ஸ்?
மீ :அப்போ இதையே சாயந்தரம் சாப்பிட்டா ஹெல்தியாகிடுமோ? ஒனியன் பக்கோடா வும் பிளாக் டீயும்தான் வேணும்
மீ :சரி எனக்கு ஒருத்திக்கு மட்டும் எதுக்கு இந்த மினக்கேடு பேசாமல் பேகிள் ரோஸ்ட் பண்ணி ஸ்டீம் புரோக்கோலி செய்து முழுங்கிடுவோம்
மீ ; ஓனியன் பக்கோடாவும் பிளாக் டீயும் தான் அடிக்கிற ஸ்னோ க்கு மட்ச் பண்ணும்
மீ: க்கும் அதான் 2 மாசம் வீட்ல இல்லாமல் ஏகப்பட்ட வேலை இருக்கே பிரேக்பாஸ்ட் ஏ வேணாம் வேலைய பாப்போம்
மீ : ஒனியன் பக்கோடா பர்ஸ்ட் .
மீ ; ம்ம்ம்ம் மனசில ஆர்ப்பரிக்கிற எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற எப்பவும் அமையாதெல்லோ



நம்மை நாமே அலட்சியம் செய்யலாமோ?????ஏமாற்றலாமோ? சின்ன மகிழ்ச்சிகள்தானே வாழ்க்கை.


அதனால கட்டர் ல் வெங்காயத்தை வெட்டி ,அரைகுறையாக பொடித்த மிளகாய்ப்பொடி, உப்பு ,பெருஞ்சீரகம் கருவேப்பிலை,கொஞ்ச மைதா மாவு பிசைந்து எண்ணெயில் பொரித்து வெறும் 10 நிமிஷத்தில.....
வெளியே இந்த ஸ்னோ காட்சியை பார்த்துக்கொண்டே
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பபாடா என்னை நான் மகிழ்வித்தபடி







ஈஸி க்றிஸ்மஸ் candy அலங்காரம்

ஈஸி க்றிஸ்மஸ் candy அலங்காரம்

தேவையானவை 



candy canes,விரும்பிய சொக்லட்ஸ்,கண்ணாடி போத்தல் அல்லது சாடி,ஸ்ட்ரா



1.கண்டிகான்ஸ் ஐ வரிசையாக போத்தல் விளிம்பை சுற்றி அடுக்கவும்
2.உள்ளே சொக்லட்ஸ் ஐ நிரப்பவும்
3.படத்தில் காட்டியவாறு கண்டிகான்ஸ் இரண்டை எடுத்து இதய வடிவில் இணைக்கவும்.
4.ஹாட் கண்டியை ஸ்ரா வுடன் சேர்த்து ரேப் ஆல் ஒட்டலாம் அல்லது பார்பிக்யூ குச்சியில் கண்டியை ஒட்டிவிட்டு ஸ்ராவால் கவர் பண்ணலாம்.

அவ்வளவேதான் 5 நிமிடங்களில் குழந்தைகளுக்கான அழகான கண்டி அலங்காரம் செய்துவிடலாம்





fritz box potato chipper

fritz box potato chipper
சாதாரணமா கிச்சனில் நாம் செய்யும் வேலைகளை சுலபமாக்க கடைகளில் பலதரப்பட்ட உபகரணங்கள்,மெசின்கள் கிடைக்கும் என்பது யாவரும் அனுபவித்ததே.
அவை உண்மையிலேயே நம் வேலைகளையும் நேரத்தையும் சேமித்து தருகின்றதா? என்றால்

எனக்கு நம்முடைய கைப்புள்ளையின் கொசு அடிக்கும் நவீன இயந்திரம் தான் ஞாபகத்திற்கு வரும்.
நான் கட்டிங்க் போர்ட்டில் வைத்து மிக வேகமாக வெங்காயம் அரிவேன்.ஆனாலும் வெங்காய மணம் ஒட்டாமல் இருக்கவும் கண்ணெரிவை தடுக்கவும் கடையில் இருப்பதை எல்லாம் நம்பி நம்பி வாங்கினேன்.


வெங்காயத்தை உரித்து { கொசுவை தேடி பிடித்து } கத்தி எடுத்து கழுவி கட்டிங்க் போர் ட்ல் வைத்து பாதியாக வெட்டி பின்னர் வெங்காயம் அரியும் மெஷினை எடுத்து கழுவி அதற்குள் அந்த வெங்காயத்தை வைத்து வெட்ட வேணுமாம்.
அதாவது இப்பிடி தொடுற மூக்கை செலவு பண்ணி சிரமப்பட்டு அப்டீக்கா வந்து தொடவேணுமாம்.
இது ஒரு உதாரணம் இதைப்போல ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி குவித்து மிஞ்சியது குட்டி குட்டி குடும்ப பிரச்சனைதான்.மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு கப்போர்ட் ல இடத்தை வீணாக்கி
அடுக்கி வைச்சிருக்கிறதுதான் மிச்சம்.

ஆனாலும் எல்லாவற்றையும் அவ்வாறு சொல்லிவிட முடியாது.
உருளைக்கிழங்கை சிப்ஸ் மாதுரி அரிந்து கொள்ள ஒரு மஷின் வாங்கினேன் கொஞ்சம் பாரம் .ரெண்டு உருளைக்கு இதை எடுத்து கழுவிக்கொண்டு எதற்கு என்றுவிட்டு கையால் வழக்கம்போல வெட்டி விடுவேன்.

ஆனால் இங்கு நான் காட்டி இருப்பது ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா,2 ப்ளேட் அவ்வளவே தான்.சட்டென்று எடுக்கலாம் சட்டென்று கழுவி வைக்கலாம்.பாரமும் கிடையாது ப்ளேட்ஸ் ஐயும் உள்ளே வைத்து மூடி வைக்கலாம்.

இங்குள்ள kitchen stuff plus இல் 5 டொலர்களுக்கு வாங்கினேன்
அடிக்கடி பிள்ளைகளிற்கு fries செய்து கொடுப்பேன்.என் மகள், ம்மா பொட்டக்கோ என்பாள் .உடனே இதில் உருளை வெட்டி பட்டர் பூசி 15 நிமிடம் அவனில் வைத்து கொடுத்து விடுவேன்.
அவனில் ம் வைக்கலாம் எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம் .சமயத்தில் வெங்காயம் கூட இதில் நறுக்குவேன்.
பெயர் fritz box potato chipper.
என்னை போல கண்டதையும் வாங்கி ஏமாறாமல் இப்படி தெரிந்தெடுத்து சிலதை வாங்க என் பதிவு உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி பகிர்ந்திருக்கிறேன்.
https://youtu.be/QHkdjsPFOj4
fritz box potato chipper
சாதாரணமா கிச்சனில் நாம் செய்யும் வேலைகளை சுலபமாக்க கடைகளில் பலதரப்பட்ட உபகரணங்கள்,மெசின்கள் கிடைக்கும் என்பது யாவரும் அனுபவித்ததே.
அவை உண்மையிலேயே நம் வேலைகளையும் நேரத்தையும் சேமித்து தருகின்றதா? என்றால் எனக்கு நம்முடைய கைப்புள்ளையின் கொசு அடிக்கும் நவீன இயந்திரம் தான் ஞாபகத்திற்கு வரும்.

நான் கட்டிங்க் போர்ட்டில் வைத்து மிக வேகமாக வெங்காயம் அரிவேன்.ஆனாலும் வெங்காய மணம் ஒட்டாமல் இருக்கவும் கண்ணெரிவை தடுக்கவும் கடையில் இருப்பதை எல்லாம் நம்பி நம்பி வாங்கினேன்.

வெங்காயத்தை உரித்து { கொசுவை தேடி பிடித்து } கத்தி எடுத்து கழுவி கட்டிங்க் போர் ட்ல் வைத்து பாதியாக வெட்டி பின்னர் வெங்காயம் அரியும் மெஷினை எடுத்து கழுவி அதற்குள் அந்த வெங்காயத்தை வைத்து வெட்ட வேணுமாம்.
அதாவது இப்பிடி தொடுற மூக்கை செலவு பண்ணி சிரமப்பட்டு அப்டீக்கா வந்து தொடவேணுமாம்.

இது ஒரு உதாரணம் இதைப்போல ஏகப்பட்ட பொருட்கள் வாங்கி குவித்து மிஞ்சியது குட்டி குட்டி குடும்ப பிரச்சனைதான்.மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் ஒரு கப்போர்ட் ல இடத்தை வீணாக்கி
அடுக்கி வைச்சிருக்கிறதுதான் மிச்சம்.

ஆனாலும் எல்லாவற்றையும் அவ்வாறு சொல்லிவிட முடியாது.
உருளைக்கிழங்கை சிப்ஸ் மாதுரி அரிந்து கொள்ள ஒரு மஷின் வாங்கினேன் கொஞ்சம் பாரம் .ரெண்டு உருளைக்கு இதை எடுத்து கழுவிக்கொண்டு எதற்கு என்றுவிட்டு கையால் வழக்கம்போல வெட்டி விடுவேன்.

ஆனால் இங்கு நான் காட்டி இருப்பது ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பா,2 ப்ளேட் அவ்வளவே தான்.சட்டென்று எடுக்கலாம் சட்டென்று கழுவி வைக்கலாம்.பாரமும் கிடையாது ப்ளேட்ஸ் ஐயும் உள்ளே வைத்து மூடி வைக்கலாம்.
இங்குள்ள kitchen stuff plus இல் 5 டொலர்களுக்கு வாங்கினேன்

அடிக்கடி பிள்ளைகளிற்கு fries செய்து கொடுப்பேன்.என் மகள், ம்மா பொட்டக்கோ என்பாள் .உடனே இதில் உருளை வெட்டி பட்டர் பூசி 15 நிமிடம் அவனில் வைத்து கொடுத்து விடுவேன்.
அவனில் ம் வைக்கலாம் எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம் .சமயத்தில் வெங்காயம் கூட இதில் நறுக்குவேன்.

பெயர் fritz box potato chipper.
என்னை போல கண்டதையும் வாங்கி ஏமாறாமல் இப்படி தெரிந்தெடுத்து சிலதை வாங்க என் பதிவு உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி பகிர்ந்திருக்கிறேன்.

candy -dipped strawberries

candy -dipped strawberries

தேவையானவை

candy melt அல்லது சொக்லேட் சிப்ஸ்
ஸ்ராபெரி
குக்கி ஷீட்
பார்பிக்யூ ஸ்டிக்



1.ஸ்ராபெரி கழுவி வடிய வைத்து பின் கொஞ்சமும் ஈரமில்லாதவாறு ஒவ்வொன்றாக துடைத்து பார்பிக்யூ ஸ்டிக் ல் சொருகி வையுங்கள்.

2.. உங்களிடம் chocolate fondue pot இருந்தால் சொக்லேட் ஐ உருக்குவதற்கு உபயோகியுங்கள்.அல்லது கண்ணாடி பாத்திரத்தில் வைத்து
30செக்கன் மைக்ரோவேவ் இல் வைத்து வெளியே எடுத்து ஈரமில்லாத கரண்டியால் கிளறி மறுபடி 30 செக்கன் வைத்தால் உருகும்,தவிர கொதிநீரில் இன்னொரு பாத்திரத்தை தண்ணீரில் மூழ்காதவாறு வைத்து அதற்குள் 
உருக வைக்கலாம்.



3.நன்கு உருகியதும் குச்சியில் சொருகி இருக்கும் ஸ்ராபெரியை இதனுள் அமுக்கி எடுத்து குக்கி ஸீட் ல் ஆற வைத்து விடுங்கள்
பின்னர் நன்றாக உலருமுன் விரும்பியதுபோல் அதன் மேல் அலங்காரம் செய்யுங்கள் .உலர்ந்தால் அலங்காரம் எதுவும் ஒட்டாது.



மிகவும் சுலபமாக செய்து விடலாம்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் .போட்டோ பிடித்து விட்டு தருகிறேன் என்று நீங்கள் கணவன்களிடம் மட்டுமே மிரட்டலாம்.குழந்தைகளிடம் சொன்னால் அவ்வளவுதான் போரில் ஸ்ராபெரி யூஸ் ஆகிவிடும்.
அதனால் இன்று நான் செய்த வெள்ளை 1 ,மற்றும் 2 சொக்லேட் ஸ்ராபரி ஓடிவிட்டது.மீதியை படம் பிடித்து வைத்திருக்கிறேன்.
எனக்கு பால்கனியில் வைத்து கோப்பி தயாரித்து குடிக்க மற்றும் இப்படி சின்ன வேலைகள் செய்ய ரெம்பவே பிடிக்கும்.அதனால் இயற்கையை ரசித்தபடியே வேலை முடித்த திருப்தி.நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.


youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...