Thursday, 2 February 2017

பூச்சி மருந்துகள்




பேஸ்புக் ல் எங்கு பார்த்தாலும் ஆளாளுக்கு இன்றுமுதல் பெப்சி வாங்க மாட்டேன் கோக் குடிக்க மாட்டேன் என்றும் சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்வதை பார்க்கிறேன்.
அப்படி எல்லாம் சொல்வதை விட்டு இவற்றை ஒருதடவை வாங்குங்கள்.வாங்கி வந்து உங்கள் வீட்டு டாய்லட் ல் 1 கப் ஊற்றி விட்டு ஒரு மணித்தியாலம் விட்டு டாய்லட் ஐ கழுவி பாருங்கள்.
கழுவவே வேணாம் பிளாஷ் பண்ணும்போதே அம்புட்டு அழுக்கையும் அடித்து போய்விடும்.
நான் 10 வருஷத்துக்கும் மேலா கிளீன் பண்ண மட்டுமே வாங்குவதுமில்லாமல், பிள்ளைகளையும், பார்பிக்யூ மஷின்{barbecue machine} அவன் {oven}எல்லாம் கழுவும்போது பக்கத்தில் நின்று பார்க்க வைப்பேன்.
என் 4 வயது மகளிடம் ஒருநாள் கிச்சன் டொப் ல் இருந்த ஒரு கோக் கான் ஐ குடுத்து இதை வை அம்மா என்றேன். பிரிஜ் ல் வைப்பாள் என்று நினைத்தேன்.
பின்னர் பார்த்தால் கிளீன் பண்ணும் பொருட்கள் அடுக்கி வைக்கும் பாஸ்கட் ல் வைத்திருக்கிறாள்.
சோ இனிமேல் யாராச்சும் குடிக்க எடுக்கும் போது நீங்கள் குடிக்கபோவது டாய்லட் மருந்து என்பதை ஞாபக படுத்தினால் போதும்.
இதுக்கு பிறகுமா இதையெல்லாம் குடிப்பீங்க???????
உவ்வேக்
பூச்சி மருந்துகள் பற்றிய பதிவுகள் அனுபவங்கள் தொடரும்........
சுரேஜினி பாலகுமாரன்

வானம்பாடியின் சூர்யோதயம்

பெட் ல் படுத்தபடியே இந்த சூரியோதயத்தை தெளிவாக பார்க்க முடிந்தாலும் கூட , தூங்க போகமுன் அடுத்த நாளைய சூரியோதயம் சரியாக 
எத்தனை மணி எத்தனை நிமிசத்தில் தோன்றும் என்பதை பார்த்து வைத்துவிடுவேன்.ஸ்பெஷலி விடுமுறை நாட்கள்.
அந்த நாள் ரெம்ப உற்சாகமா ஆரம்பிக்கிற மாதிரியும் பார்த்த படியே பருகும் கோப்பி ரெம்ப ஸ்பெஷலா இருக்கிற மாதிரியும் ஒரு பீலிங்.
அதனால பொங்கலுக்கு ரெம்ப நன்றி உணர்வோட பொங்கி எடுத்துட்டு போனால் மிஸ்டர் சண் செம பிஸி போல.வானத்தில சிவப்பு கீறல்கள்தான் தெரிஞ்சுது.
எல்லா பொங்கலும் முடிச்சு வந்துட்டார்.
சரி கோப்பி ரெடி பண்ணிக்கொண்டு பார்ப்போம் என்றால் ஹஸ் எனக்கும் கோப்பி மஷின் ல் கோப்பி ரெடி பண்ணி சூடாக இருக்கும்படி வைத்து போயிருந்தார்.வழக்கம்போலவே ரசித்தேன்.
சோ ஏதோ ரெம்ப பிடித்தவர்களை மிஸ் பண்ணுற மாதிரியே இருக்கு இந்த மிஸ்டர் சண் லீவு போட்டால்.
இது இன்றைய க்ளிக்ஸ்








பொங்கல் அன்றும் இன்றும்

ஈழத்தில்
நான் பிறந்த ஊரில் பொங்கல் மிக அழகாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.சமையல் என்றால் அம்மாக்கள் என்றுதான் பார்த்திருப்பீர்கள் ஆனால் எங்கள் ஊரில் பொங்கல் என்றால் 
அப்பாக்கள் அண்ணன்கள்தான் பொங்கலுக்கு மெயின் காரக்டர்களாக விளங்குவார்கள்.ஆனால் அவர்களுக்கு குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் ஓடி ஓடி அவர்கள் சொல்லும் வேலையை செய்ய வேணும்.

கோலம் தமிழகத்திலும் இலங்கையின் சில மாகாணங்களிலும் வழக்கத்தில் இருந்தாலும் நாம் வசிக்கும் மாவட்டத்தில் மிக அரிது.ஆனால் பொங்கலுக்கு கோலம் போடுவோம்.அதுவும் ஆண்கள்தான்.உடனே பெரிய பெரிய வண்ணக்கோலங்களை
எல்லாம் நீங்கள் கற்பனை பண்ணினால் நான் பொறுப்பல்ல .


ஒரு பெரிய சதுர கோடு.அதையும் போட தெரியாது உலக்கை வைத்து தான் நேர் கோடு போடுவார்கள்.அந்த சதுரத்தில் ஒரு மூலையில் ஒண்ணாம் வாப்பு குழந்தைபோல சூரியன் வரைந்து வைப்பார்கள்.
அதன் நட்ட நடுவில் பொங்கல் வைப்பார்கள்.
மற்றும்படி எல்லாமே மாவிலை தோரணம் என சிறப்பாகவே இருக்கும்.நம்மூரில் பொங்கல் கொண்டாட யாரும் சமயம் பார்க்க மாட்டார்கள்.எல்லோரும் பொங்குவார்கள்.ஆனாலும் குடும்பத்தில் ஏதாவது இழப்போ ஏதாவது அசம்பாவிதங்களோ நடந்தால்
மட்டும் அந்த வருடம் பொங்க மாட்டார்கள்.
பொங்காத வீட்டுக்கு எல்லோரும் பாத்திரம் நிறைய நிறைய குடுப்பார்கள்.
பொங்கினவனை விட தண்டினவனுக்குதான் பொங்கல் அதிகம் கிடைக்கும் என்று அம்மம்மா சொல்லும் பழமொழியை போல பொங்காவிட்டால் நிறைய பொங்கல் கிடைக்கும்.
அப்போதெல்லாம் நெற்கதிர்களை உரசிவிட்டு வந்த சுத்தமான காற்று எங்களை தொட்டுச்சென்றது.சொந்தங்களின் குரலை கேட்க போன் தேவைப்படவில்லை . யார் வீட்டு கதவுகளும் எங்கள் வரவிற்கு எதிராக தாள் போடவில்லை. 
.கூடும் இடம் ,நலம் விசாரிக்கும் சந்திப்புக்கள் ,புன்னகை பரிமாற்றங்கள் எல்லாவற்றுக்கும் வாட்ஸ் அப் , வைபர் ,ஸ்கைப்,மெசஞ்சர் எதையும் நாங்கள் நம்பி இருக்கவில்லை.மழைத்துளிகளை படம் பிடித்து பேஸ்புக் ல் பதிவேற்றும் 
வேலை இருக்கவில்லை. எந்த அழகையும் ஸ்டேட்டஸ் ஆக ஏற்றம் செய்யும் கண்களூடு பார்க்கவில்லை.வரப்புகளில் வழுக்காமல் வரிசையாக நாம் நடந்த சுகத்தை வெளிப்படுத்த எந்த வரிகளையும் தேடியதில்லை.
கடை,தெருகள்,கோவில்கள் விழாக்கள் எல்லாமே எங்களை இணைப்பில் அணைத்து வைத்திருந்தது.அழகான நாட்கள் அவை.
கனடாவில் என் பொங்கல் .
முதலில் ஆளுக்கொரு நாள் சொல்லுவார்கள் இலங்கை நேரப்படி சிலர் பொங்குவார்கள் அவ்வாறாயின் முதல் நாள் வரும். சிலர் பொருத்தமாக மாட்டுப்பொங்கலை அதுவே சரியான நாள் என்று கொண்டாடுவார்கள்
இன்று பொங்கல் .அதிகாலையில் எழுந்தேன்.{மிகப்பெரிய அதிசயம்.)
ரைஸ் குக்கரை எடுத்து அரிசிகழுவி , வறுத்த பயறு எல்லாவற்றையும் தண்ணீர் சேர்த்து மூடினேன்.சிறிது நேரத்தில் திறந்து வறுத்த ஏலக்காய் ,கயூ,பிளம்ஸ் சேர்த்து கரைத்த பனங்கட்டி சேர்த்து திறந்தே வைத்திருந்தேன்.

பால் பொங்கும் பச்சைத்தண்ணி எப்பிடி பொங்கும்???????
ம்ம் வெந்த பின் பால் சேர்த்து கிளறி மூடி விட்டேன் அவ்வளவேதான்.
மொத்தத்தில் பொங்கி ஊத்தி விட கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் பின்ன ஆரு ரைஸ் குக்கர் ,கிச்சன் எல்லாம் கிளீன் பண்றதாம்.
முதல் முதலாக, மேசையில் பேப்பரை ஒட்டி மகளிடம் திருடிய கலர்களை கொண்டு கோலம் வரைந்தேன்.


7.48 க்கு சூரியன் வருவார் என வெதர் சானல் ல் இருந்தது .
ஆனால் ரெம்ப குளிரில் அமுங்கி தலையை காட்டாமலே பதுங்கி இருந்தார். ஏதோ எனக்கு தெரிந்தபடி படைத்து வணங்கி விட்டு வழமையான பிஸி க்கு திரும்பி விட்டேன்.


ஒரே பொங்கல் ஈ கார்ட் ஆ வந்திருக்கு மெசேஜ் ல் .பயபுள்ளைகளுக்கு எத்தனை தடவை அட்ரஸ் க்கு மெய்யான கார்ட் அனுப்ப சொன்னாலும் ஈகார்ட் ஆ அனுப்பி வைக்கிறது என்னைப்போலவே சோம்பேறிகள்.
அவ்வளவுதான் அவசரமான நாட்கள் இவை.


நன்றி .
சுரேஜினி பாலகுமாரன்.

ஆசை ஆசை

ஒவ்வொரு கால கட்டங்களிலும் ஒவ்வொன்றில் அதிக நாட்டம் இருக்கும்.அதே போலதான் சில பொருட்கள் மீதுள்ள பற்றும்.எனக்கு எப்போதுமே மிகவும் பிடித்த இரண்டு பொருட்கள் ஒன்று கொஃப்வி மக் {coffee mug} 
இன்னொன்று மெழுகுதிரிகள்{candles}

சில சமயங்களில் நகைக்கடைக்கு போக வேண்டிய தேவை வரும் .உள்ளே போனதும் அந்த டிசைன் ,இந்த டிசைன்,? அது பாக்குறீங்களா??? நெக்லஸ் புது டிசைன் ல வந்திருக்கு ? இப்படி ஏதேதோ எல்லாம் சொல்வார்கள்.
ஆனால் நானோ எத்ற்கு போனேனோ அதை மட்டும் உடனே வாங்கிக்கொண்டு வந்துவிடுவேன். தங்கம் எபோதுமே ஆர்வமோ தேவையோ வந்ததில்லை.கிவ்ட் ஆக வந்த ஏராளமான நகைகளையே எங்கேயாச்சும் வைத்து விட்டு
என்னிடம் என்ன இருக்கிறது என்றே தெரியாமல் இருப்பேன்.

ஆனால் இந்த மக் ம் காண்டில்ஸ் ம் அந்தந்த சூழ்நிலைக்கு பொருத்தமா இருக்க வேணும் என்று ஆசைப்படுவேன்.ஸ்னோ டைம் ல snowflax டிசைன் ல இருக்குற மக் தான் வேணும் எனக்கு.

சோ இந்த தடவை க்றிஸ்மஸ் நைட் க்கு 12 .30 க்கு மேலே இருக்கும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லிவிட்டு சப்ரைஸ் கிவ்ட் எல்லாம் அடுக்கி விட்டு எனக்கும் ஹஸ் க்கும் கோப்பி போட போனேன்.அப்போது 


ரிமோட் ல் வேலை செய்யும் ஒரு ஜீப் ல் ஒரு பாசல் என்னிடம் வந்து காலில் இடித்து நின்றது .எடுத்து பார்த்தேன் உள்ளே இந்த மக் இருந்திச்சு.
அவளவு சந்தோசம் . காரணம் எனக்கு starbucks coffee யும் பிடிக்கும் ஸ்னோ சீசனில் ஸ்னோ டிஸைன் மக் ம் பிடிக்கும். சிவப்புடன் வெள்ளை நிறம் சேர்ந்தால் கொள்ளை பிரியம்.



வழக்கமானவற்றை விட கொஞ்சம் கனமாகவே இருக்கிறது இருந்தாலும் விரும்பியவர்களுடன் அருந்தும் காப்பியின் சுவையில் சுமைக்கு என்ன வேலை.


இந்த போட்டோக்களில் உள்ள அழகு கூட coffee உடன் ,கடந்த வாரங்களில் வீட்டிற்குள்ளிருந்து பருகிய தெளிவான காட்சிகளில் சிலவே.









ஸ்ரீலங்கன் மாங்காய் மீன் சொதி




தேவையானவை
மீன் துண்டுகள் அல்லது மீன் தலைப்பகுதி 2
மாங்காய் 1 அல்லது புளி{சிறிதளவு}
மஞ்சல் 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2 
தேங்காய்ப்பால் அரை கப்
தாளிக்க 
கருவேப்பிலை
பெருஞ்சீரகம்
கடுகு


கடுகு, சீரகம் கருவேப்பிலை தாளித்து அதனுள் மீன் ,மிளகாய்,மஞ்சல் ,உப்பு எல்லாவற்றையும் அதனுடன் சேர்த்து 2 கப் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவேண்டும் .


மீன் வேகும்வரை கொதித்ததும் தேங்காய்ப்பாலை விட்டு அடுப்பை அணைக்கவும்.
மிகவும் சுவையான சொதி தயாராகி விடும்.


யாராவது பிஸியில் மறந்து போய் இருந்தால் இந்த வாரம் செய்து சாப்பிடலாமே.



மிக மிக ஈஸியானது.


ஈரோப் வாழ் ஈழத்தமிழர்களுக்கு கனடா என்றதும் என்ன ஞாபகம் வருதோ இல்லியோ இங்கு 3 டொலர்களுக்கு 25 இடியப்பம் சொதியும் சம்பலும் கிடைக்கும் என்பது ஞாபகம் வந்து தொலைத்து விடும் .
நாம் வேறு நாடுகளுக்கு செல்லும்போது அதை சொல்லிக்காண்பிக்க மறக்க மாட்டார்கள் {.எல்லாம் கடும் பொறாமைதான் காரணம் கிக்க்கீ}
.இடியாப்பம் பிழிவது கஷ்டமாகையால் அதை வீட்டில் அடிக்கடி செய்ய மாட்டார்கள்.கொஞ்சம் விசேஷ சாப்பாடாகவே அதை பாவித்து வந்தோம் .ஆனால் இங்கு கைபடாமல் மஷினில் பிழிந்து சுவையாக மென்மையாக
மலிவாக கிடைப்பதால் இந்த விஷயம் உலகப்புகழ் பெற்று விட்டது.
நாங்களும் சலிப்பு ஏற்படாதவாறு தேவைக்கேற்ப மாசத்தில் 2 தடவையாவது வாங்கினாலும் ஏனோ அந்த இடியாப்பத்துடன் காம்போவாக வரும் சொதி சம்பல் பிடிப்பதில்லை.
அதற்குபதில் நானே மீன் குழம்பு அல்லது கோழிரசம அல்லது பருப்பு சொதி என செய்து கொள்வேன்.
இன்று இடியாப்பம் வாங்க வேண்டி வந்ததால் இந்த நம்மூர் பாரம்பரிய சொதியை சில நிமிடங்களில் செய்தேன்.

அரைத்த மீன் குழம்பு

நேற்றைய தினத்தில் என் வீட்டில் ஒரு சம்பவம் நடந்தது. ஆம் இதோ இந்த படத்தில் குந்தி இருக்கும் மனச்சாட்சி இல்லாத குக்கர்

சின்னதுதானே இது என்ன செய்யும் என்று வீரமாக மூடியை திறந்த என் நம்பிக்கையை உடைத்து. உள்ளே இருந்த சிவப்பரிசி உழுத்தங்கஞ்சியை
கொதிக்க கொதிக்க என்மேல் கொட்டி தீர்த்தது.

காயங்களும் எரிவுகளும் ஒருபக்கம் இருக்க ஹஸ் வேலையின் நடுவே ஆர்டர் செய்து வீடுவந்த பிஸ்ஸாவை ஓரம் கட்டிவிட்டு இதோ இந்த யாழ்ப்பாணத்து அரைத்த மீன் குழம்பு செய்தேன்.
யெஸ்ஸ்ஸ் சமையல் எனக்கு ரெம்ப பிடிக்கும் .காரணம் நான் அதை ஒரு வேலையாக நினைப்பதில்லை.சமைக்கும் வேளையில்தான் கிச்சன் ல் லாப்டப் வைத்திருந்து பேஸ்புக் வருவேன்.கிச்சனில் வைத்து ஏதாவது பெயிண்டிங் தையல் 
எல்லாம் செய்வேன்.எல்லாம் செய்து கொண்டே ரிலாக்ஸ் ஆக ஒரு கோப்பி குடிப்பேன்
.
சோ அடுப்புக்கு கிட்டே போக முடியாமல் இருந்தது இருந்தாலும் முகத்தை திருப்பி கொண்டு நீள கரண்டியை வைத்து சமைத்துவிட்டேன்.வெறும் 26 நிமிடங்களில்.
இதோ அந்த அரைத்த மீன் குழம்பு
தேவையானவை
அரைக்க
மல்லி {தனியா}2டேபிள் ஸ்யூன்
நச்சீரகம் {ஜீரகம்} 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் அரை டேபிள் ஸ்பூன்
மிளகு கால் டேபிள் ஸ்பூன்
செத்தல் மிளகாய் {வரமிளகாய்} 2
தேங்காய் ஒரு சிறு துண்டு அல்லது தேங்காய்ப்பூ
உள்ளி 2 பல்லு
இஞ்சி சிறிய துண்டு
மீன் 4 துண்டுகள்
தேங்காய்ப்பால் 1 கப்
உப்பு
தாளிக்க
வெங்காயம் 1
கருவேப்பிலை
கடுகு
மற்றும் புளி நெல்லிக்காயளவு


மல்லி,இஞ்சி,உள்ளி,தேங்காய்,செத்தல்மிளகாய்,நச்சீரகம்,மஞ்சல் ,மிளகு எல்லாவற்றையும் அரைத்து வைக்கவும் 




கடுகு வெங்காயம் ,கருவேப்பிலை தாளித்து அதனுடன் உப்பு ,புளி சேர்த்து அரைத்து வைத்துள்ளதை அத்ற்குள் கொட்டி தேவையாயின் கொன்சம் தண்ணீரும் விட்டு மீனையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவேண்டும்.



கொதித்ததும் தேங்காய்ப்பால் விட்டு மீண்டும் ஒரு கொதி வந்ததும் இறக்க வேண்டும்.


இது இலங்கை யாழ்ப்பாணத்து பாரம்பரிய உணவுகளில் ஒன்று.குழந்தை பிறந்தவர்களுக்கும் நோயுற்றவர்களுக்கும் கூட குடுப்பார்கள்.ஆனால் வெளிநாடுகளில் டாக்டர்கள் கண்டிப்புடன் சொல்லி விடுவார்கள் இது சாப்பிட வேண்டாம் என்று.
காரணம் மருந்து மாத்திரைகள் இல்லாத காலத்தில் உபயோகிக்க பட்ட இந்த மருத்துவ குணமுள்ள குழம்பை நாம் உண்டு விட்டு மாத்திரைகளையும்,விட்டமின்களையும் எடுக்கும் போது வயிற்றோட்டம் ,வயிற்று வலி,குழந்தைக்கு உபாதைகள் என ஏராளமான பிரச்சனைகள்
ஏற்பட்டு தாய் சேய் இருவர் ஆரோக்கியமும் கெட்டுபோகிறது என்கிறார்கள்.அது உண்மை என்பதும் நான் கண்டுணர்ந்தது.



ஈஸி மாங்காய் பச்சடி


தேவையானவை 
மாங்காய் 1
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன்
சுகர் 1 ஸ்பூன்
உப்பு

தாளிக்க ,எண்ணெய் ,வெங்காயம் ,கருவேப்பிலை,கடுகு ,சீரகம்




1.மாங்காயை தோல் சீவி துண்டுகளாகி வெட்டி மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி கொர கொரப்பாக வைக்கவும்



2.சட்டியை அடுப்பில் வைத்து கடுகு ,சீரகம்வெங்காயம் தாளிக்கவும்



3.அதனுள் உப்பு,மிளகாய்த்தூள்,சுகர் சேர்த்து கிளறி அதனுடன் மாங்காயையும் சேர்த்து 2 டேபில் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.



4.தண்ணீர் வற்றி திரண்டு வந்ததும் பாத்திரத்தில் எடுக்கவும்.

நான் இதை வாரக்கணக்கில் வைத்து சாப்பிடுவேன்.அவ்வளவு பிடிக்கும் இந்த சுவை.குறிப்பாக காய்கறி சமைக்கும் நாளில் இதை மிஸ் பண்ணமாட்டேன்.
சிறீலங்கன் புட்டு க்கு ஜூஊஊஊப்பரா இருக்கும்.ம்ம்ம்ம்







youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...