Saturday, 4 March 2017

Baby Carriers, Wraps & Slings




குழந்தைகளை வயிற்றில் சுமக்கும்போது டெலிவரி ஆனால் சுமை தீர்ந்துவிடும் என்று நினைப்போம்.க்கும் தீர்ந்துட்டாலும்
அந்த வகையில் பிஸி பேரண்ட்ஸ் க்கு கை கொடுக்கும் சுமைதாங்கிகள்தான் இந்த Baby Carriers, Wraps & Slings
இதன் தேவைகள் தெரியாமலே சிலர் கடந்து விடுவார்கள்.அப்படித்தான் எனக்கும் முதலாவது மகளுக்கு இதை யூஸ் பண்ணும் தேவை இருக்கவில்லை .ஆனால் இந்த படம் 1 ல் உள்ளது என் அக்கா யூஸ்பண்ணி அப்பிடியே வரிசையாக
மற்ற சகோதரர்களின் குழந்தைகளின் யூஸ் பண்ணியதால் சட்டத்தை மீறக்கூடாது என்று என் டேர்ன் வரும்போது அதை தரும்படி அடம்பிடித்து வாங்கி வைத்திருந்தேன்.
ப்ளைட் ல் பயணிக்கையில் குழந்தைக்கு 24 மாதம் ஆகிய திகதியின் 12 மணி முடிந்தால் சரி .ஸீட் க்கு பெரியவர்களுக்கான பணம் .
ஆனால் அந்தக்குழந்தை ஸீட் ல் கால் வைத்து எங்கள் தலையில்தான் பிரயாணிக்கும் என்பது நமக்கு மட்டும்தான் தெரியும் .
மகள் 4 மாச குழந்தையாக கையில் இருக்கும் போதே ப்ளை பண்ணினேன் ஆனாலும் இதை எங்கோ மறந்து வைத்துவிட்டு கையிலேயே அவளை சுமந்தேன்.
ஆனால் இந்த தடவை இரண்டு குழந்தைகளுடன் ப்ளை பண்ணும்போது பயணத்தில் சிரமப்பட்டதால் திரும்பி வரும்போது ஒரே சிந்தனை. 
ஆனால் என் பிள்ளைகள் 2 வயதிற்கு மேற்பட்டதால் பேபி க்கு யூஸ் பண்ணுவதை யூஸ் பண்ண முடியவில்லை. அப்போது நெட் ல் நோண்டும் போதுதான் கொஞ்சம் வளந்த வளராத ரெண்டும் கெட்டான் வயசு
பிள்ளைகளுக்கு இந்த baby carriers slings இருப்பது தெரிய வந்தது.


அதுவும் கடையில் இல்லை .கடைகளின் ஊடாக ஒன்லைன் ல் தான் இருந்தது. டெலிவரி நாள் ம் குறைந்தது 3 நாளாக இருந்தது.எனக்கோ அடுத்த நாள் பயணம்.
அப்போ என் சகோதரிக்கு இதை மேசேஜ் பண்ணியதுதான் , அவரும் பிஸி வுமன் தான் ஆனாலும் எக்ஸாட்லி படத்தில் காட்டியதை சிரத்தை எடுத்து தைத்து சாமத்தில் கொண்டு வந்து தந்தார்.


கங்காரு குட்டி மாதிரி என் சின்னவள் அதற்குள்ளே ரெம்ப குஷியாக இருப்பாள்.எங்கள் இரண்டு கைகளும் ப்ரீ .குழந்தைக்கும் எந்த சிரமமும் கிடையாது.ஆனால் சரியான துணியையும்
சரியான மெதேர்ட் இலும் தைக்க வேண்டும்.
எப்படிதைப்பது என்று இங்கு விளக்க ஆசைதான் ஆனால் எனக்குத்தான் எப்படி தைப்பது என்று தெரியாதே??????


ஆனாலும் யாருக்காவது இந்த தகவல் உபயோகப்படும் என்று பகிர்ந்து கொள்கிறேன்.உங்களுக்கு ஆர்வமும் தேவையும் இருந்தால் நெட் ல் தைக்கும் முறை வீடியோக்கள் இருக்கிறது.இப்படி ஒரு சுலப 
சுமைதாங்கி இருக்கிறது ,மிகவும் வசதியாகவும் இருக்கிறது என்று அறியத்தருகிறேன்.
இந்த வயசு குழந்தைகள் புறப்படும்போது பிஸ்தா கணக்கில் சுறுசுறுப்பாக புறப்பட்டு வந்து பாதி வழியில் நமக்கு குறுக்கே வந்து கையை நீட்டுவார்கள். அல்லது மல்லாக்க விழுந்து 
காலால் தாளம் போடுவார்கள்.பிறவு மேடு பள்ளம் எல்லாம் மூச்சு வாங்க சுமக்க வேண்டி இருக்கும்.
ஒரு தடவை சேர்ச் க்கு போயிருந்தேன் வைத்துக்கொண்டு ப்ரே பண்ண வசதியாக இருந்தது.பிக்னிக் கூட்டிப்போக செம ஐடியா 

Friday, 3 March 2017

paleo recipies

குடைமிளகாய் மீற்
தேவையானவை
மட்டன் அல்லது பீஃப்  1/2 கிலோ
குடைமிளகாய் 4
வெங்காயம் 2
கொத்தமல்லி 1 கட்டு
பூடு 5 பல்லு
இஞ்சி ஒரு சிறு துண்டு
உப்பு தேவையான அளவு
 செய்முறை
மீற் ஐ  எலும்பில்லாமல் சுத்தம் செய்து மிக்சியில் மேலோட்டமாக அரைக்கவும்
வெங்காயம் ,கொத்தமல்லி,இஞ்சி ,பூண்டு என்பற்றை சிறிதாக அரிந்து கொள்ளவும்
படத்தில் காட்டியது போல் குடைமிளகாயின் தலைப்பகுதியை வெட்டி எடுத்துவிட்டு உள்ளே விதகள் இல்லாதவாறு சுத்தம் செய்யவும்
குடைமிளகாய்க்குள் எடுத்த பகுதியையும் வெங்காயம் ,பூடு ,இஞ்சி ,உப்பு ,கொத்தமல்லி என்பவற்றையும் அரைத்த இறைச்சியுடன் சேர்க்கவும்.
இறைச்சிக்கலவையை குடை மிளகாய்க்குள் வைத்து  மிளகாயை மூடாமல் அவன் ல்  400 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக்ட் பண்ணவும்
மிளகாயின் தலைப்பகுதியை கடைசி 5 நிமிடங்கள்  மூடி வைத்து பேக் பண்ணவும் .
சுவை அபாரமாக இருக்கும்

மொறு மொறு வெண்டைக்காய்
தேவையானவை
வெண்டைக்காய் 1 கிலோ
தனிமிளகாய்த்தூள் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1.வெண்டைக்காயை கழுவி அடிப்பாகத்தை வெட்டாமல் நான்காக கீறல் போடவும்
2.தனிமிளகாய்த்தூள் ,எண்ணெய்,உப்பு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும்
3.கரண்டியால்  உப்பு,மிளகாய் பேஸ்ட் ஐ வெண்டைக்காய்க்கு உள்ளே பூசவும்
4.அவனில் 400 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக்ட் பண்ணவும்.
எனக்கு மிகப்பிடித்த மதிய உணவு இது


முட்டை பீட்ஸா
தேவையானவை
முட்டை 4
கீரை 200 கிராம்
குடைமிளகாய் 100 கிராம்
செட்டர் சீஸ் 50 கிராம்
வெங்காயம் 1
பூடு 2 பல்லு
தக்காளி 2
உப்பு தேவையான அளவு
செய்முறை
காய்கறிகளை  சுத்தம் செய்து மெலிதாக அரிந்து வைக்கவும்
தக்காளியையும் பூண்டையும்  சுடுநீரில் சிறிது வேக வைத்து எடுக்கவும்
 தக்காளிக்கு தோல் நீக்கி விட்டு பூண்டு,தக்காளி என்பவற்றை மிக்சியில் அரைத்து வைக்கவும்
செட்டர் சீஸ் ஐ துருவி வைக்கவும்

இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில்  முட்டை நான்கையும் ஊற்றி 2 நிமிடம் மூடி வேகவைக்கவும்
பின்னர் திறந்து அதன்மேல் தக்காளி ,பூண்டு கலவையை ஊற்றி 2 நிமிடம்  மூடி வேக வைக்கவும்
காய்கறிகளை  அதன்மேல் பரவலாக தூவி மீண்டும் ஐந்தாறு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
கடைசியில் சீஸ் ஐ தூவி மீண்டும் மூடி வெந்ததும் பரிமாறவும்.
ஒவ்வொரு பொருட்களை சேர்க்கும்போதும் உப்பு தூவவும் .


மீற் வடை
விரும்பிய மீற் 1/2 கிலோ
வெங்காயம் 3
பூடு 6 பல்லு
இஞ்சி சிறிய துண்டு
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை கொஞ்சம்
பச்சை மிளகாய் 5
செய்முறை
1.இறைச்சியை அரைத்துக்கொள்ளவும் .{ இங்கு அரைத்த இறைச்சி கிடைக்கும்}
2.வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து வைக்கவும்
3.இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும்
4. கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து வடைபோல் செய்து மறக்காமல் ஓட்டை போட்டு அவனில் 400 டிகிரியில் 25 நிமிடங்கள் வேக வைக்கவும்
வடைபோலவே துளை போடுவதால் நன்றாக வேகி எண்ணெயில் பொரித்தெடுத்தது போல் சுவையாக இருக்கும்

பன்னீர் உப்புமா
தேவையானவை
பன்னீர் 100 கிராம்
வெங்காயம் 2
காய்ந்த மிளகாய் 4
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை சிறிது
எண்ணெய்  டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
 வெங்காயம் ,காய்ந்தமிளகாய்,சீரகம் ,கருவேப்பிலை என்பவற்றை தாளித்து உப்பு சேர்த்து உதிரியாக செய்த பன்னீரை அதனுள் சேர்த்து வறுத்து எடுக்கவும்

க்ரில் பிஷ்
தேவையானவை
மீன்
தனிமிளகாய்த்தூள்  டேபிள் ஸ்பூன்
தனியாதூள்  டேபிள் ஸ்பூன்
மிளகு தூள்  டேபிள் ஸ்பூன்
பூடு அரைத்த விழுது  டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டர்  டேபிள் ஸ்பூன்

மீனை சுத்தம் செய்து குறுக்கே வரிகளாக கீறல்கள் போடவும்
மீதி எல்லாவற்றையும் பேஸ்ட் போல கலந்து மீனில் பூசி  மணிநேரம் ஊற வைக்கவும்
 அவனில் 500 டிகிரியில் 15 நிமிடம் ஒருபக்கம் என்ற ரீதியில் 30 நிமிடம்  broil பண்ணவும்

இறால் + வெஜிடபிள்ஸ் சூப்
தேவையானவை
இறால் கால் கிலோ
ப்ரோக்கோலி கால் கிலோ
brussels sprouts 100 கிராம்
மஷ்ரூம் 100 கிராம்
வெங்காயம் 1
பூடு 2 பல்லு
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
தனியா 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
கொத்தமல்லி 1 கட்டு
உப்பு தேவையான அளவு

வெங்காயம்
வெங்காயம் கொத்தமல்லி என்பவற்றை ஒரு டீஸ்பூன்  எண்ணெயில் உப்பு சேர்த்து தாளிக்கவும்
இறால் ஐ சுத்தம் செய்து ப்ரோக்கோலி,brussels sprouts மஷ்ரூம் ஆகியவற்றை  1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
காய்ந்த மிளகாய்,தனியா,மிளகு,பூடு என்பவற்றை அரைத்து 1 கப் தண்ணீர் கலந்து இறால் உடன் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும்  லெமன் சேர்த்து பரிமாறவும்


கீரை சூப்
தேவையானவை
கீரை 1 கட்டு
வெங்காயம் 1
தேங்காய்ப்பால் 1 கப்
பச்சை மிளகாய் 1
பூடு 2 பல்லு
சீரகம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
1.கீரையை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்
2.வெங்காயம் ,பூடு ,பச்சை மிளகாய் என்பவற்றையும் சிறு துண்டுகளாக வெட்டி கீரையுடன்  சீரகமும் சேர்த்து  எல்லவற்றையும் 1 கப் தண்ணீரில் வேக வைக்கவும்
3.வேகியதும் ப்ளெண்டரால் மசிக்கவும்
4.தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி லெமன் சேர்த்து பரிமாறவும்.


asperges bacon roll
asperges ஐ ஸ்டீம் பண்ணி  உப்பு மிளகு தூவிக்கொள்ளவும்
bacon ஐ சட்டியில் வாட்டி எடுத்து asperges ஐ ரோல் பண்ணவும்
இரண்டையும் சேர்த்து சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்.



பன்னீர் சாலட்
பன்னீரை  ஆவியில் வேக வைத்து சிறு துண்டுகளாக உதிரியாக்கவும்
தக்காளி ,செலரி,கொத்தமல்லி ,வெங்காயம் என்பவற்றை நறுக்கி எல்லாவ்ற்றையும் சேர்த்து மிளகு தூவி பரிமாறவும்

பீஃப் ரோஸ்ட்
தேவையானவை
பீஃப்  1/2 கிலோ
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெங்காயம் 4
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் 1 டேபிள் ஸ்பூன்

பீஃப் ஐ ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும்
உப்பு ,மிளகாய்த்தூள், வெங்காயம் ,வினிகர் சேர்த்து 2 கப் தண்ணீரில் வேக வைக்கவும்
தண்ணீர் வற்றியதும் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்

seafood soup
தேவையானவை
நண்டு கால் கிலோ
இறால்  கால் கிலோ
கணவாய் கால் கிலோ
முட்டை 1
மஞ்சல் 1 டீஸ்பூன்
மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
பூடு 2 பல்லு
தனியா 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நண்டு இறால் கணவாய் என்பற்றை சுத்தம் செய்து உப்பு மஞ்சல் சேர்த்து 2 கப் தண்ணீரில் வேக வைக்கவும்
மிளகாய்,மிளகு,தனியா ,பூடு என்பவற்றை அரைத்து 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
வெந்ததும்  முட்டையை நன்கு அடித்து சூப் ல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்
லெமன் சேர்த்து பரிமாறவும்

சிக்கன் விங்ஸ்
சிக்கன் விங்ஸ் அரை கிலோ
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
தயிர் 1 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் விங்ஸ் ஐ சுத்தம் செய்து fork ஆல் சுற்றி சுற்றி  குத்திக்கொள்ளவும்
உப்பு,மிளகாய்த்தூள், எண்ணெய் ,,தயிர் என்பவற்றை பேஸ்ட் போல் செய்யவும்.
எல்லாவற்றையும் சேர்த்து 4 மணித்தியாலங்கள் ஊற வைக்கவும்
அவன் ல் 500 டிகிரியில் 20 நிமிடம் ப்ரொயில் பண்ணவும்

roasted chicken
சிக்கன் 1
rosemary  1 கட்டு
செலரி 100 கிராம்
பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
கராம்பு 4
இஞ்சி சிறு துண்டு
பூடு 4
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
லெமன் 1
உப்பு தேவையான அளவு
சிக்கன் ஐ சுத்தம் செய்து வைக்கவும்
செலரியை சிறு துண்டுகளாக நறுக்கவும்
பூடு ,மிளகு ,கராம்பு,இஞ்சி,என்பவற்றை அரைத்து எடுக்கவும்
மொத்த இங்ரீடியன்ஸ் ஐயும் பட்டர் க்குள் சேர்த்து பேஸ்ட் போல் செய்யவும்
ஒரு ஸ்பூனில் இந்த கலவையை எடுத்து சிக்கன் ன்  தோல் க்குள் முடிந்தளவு பரவலாக செலுத்தவும்
மீதிக்கலவையையும் வெட்டிய செலரியையும் சிக்கன் க்குள் வைத்து 4 மணித்தியாலங்கள் ஊறவைக்கவும்
அவன் ஐ 500 டிகிரிக்கு மேல் வைத்து சிக்கன் ப்ரொய்ல் பண்ணுவதற்கான கம்பியில் மாட்டி 40 நிமிடம் சுற்ற விடவும்


ஈஸி பம்கின் சூப்
பூசணிக்காய் அரை கிலோ
வெங்காயம் 1
மஞ்சல் 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1
sour cream அரை கப்
மிளகுப்பொடி 1 டீஸ்பூன்

பூசணிக்காயை ,வெங்காயம் ,உப்பு ,மஞ்சல்,பச்சை மிளகாய் சேர்த்து 2 கப் தண்ணீரில்  வேகவைத்து ப்ளெண்டரால் அரைக்கவும்
ஷவக்றீம் சேர்த்து  மிளகு தூவி பரிமாறவும்







பிஸ்தாஸ் மில்க் ஷேக்
பாலை கொதிக்க  ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை  சேர்த்து ஆற வைக்கவும்
ஆறியதும் சிறுது பாலுடன் சேர்த்து பிஸ்தாஸ்   ஐ அரைத்து மீதி பாலுடன் சேர்க்கவும்
க்ரீமி யாக இருப்பதால் சுகர் சேர்க்காமலே நன்றாக இருக்கும்.


EGG + VEGETABLE MUFFINS
தேவையானவை
முட்டை 5
மஷ்ரூம் 50 கிராம்
குடைமிளகாய் 50 கிராம்
ப்ரோக்கோலி 50 கிராம்
கீரை 100 கிராம்
ஏதாவது ஒரு சீஸ் 50 கிராம்
உள்ளி 2 பூடு
வெங்காயம் 2
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
விருப்பம்போல் காய்கறிகளை தெரிவு செய்யலாம் விலக்கி விடலாம்.
ஆயத்தம்
1.முட்டையை உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்
2.மீதி எல்லாவற்றையும் அதாவது வெங்காயம் உள்ளி மற்றும் காய்கறிகள் என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து கொள்ளவும்.
3.சீஸ் ஐ துருவி வைக்கவும்
செய்முறை
1.அடுப்பில் பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சிறிதாக வெட்டிய காய்கறிகளை வதக்கவும்.
2.வதக்கிய காய்கறிகளை முட்டையுடன் சேர்த்து துருவிய சீஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.
3.இப்போது இந்த கலவையினை மஃப்பின் மோல்ட் ற்குள் ஊற்றி 350 °F ல் 12 நிமிடங்கள் பேக் பண்ணவும்
மிகவும் சுவையாக இருக்கும் .நான் ப்ரேக்ஃபாஸ்ட் க்கு விரும்பி செய்வேன்.



பேக்ட் கட்லட் பஜ்ஜி
தேவையானவை
மிளகாய்கள் 6
மீன் வேக வைத்து முள்ளு நீக்கியது கால் கிலோ
வெங்காயம் 1
முட்டை 2
பச்சை மிளாகாய் அல்லது காய்ந்த மிளகாய் 2
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய் அல்லது பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
டுத் பிக் 12
1.மிளகாயின் தலைப்பகுதியை வட்டமாக வெட்டி எடுக்கவும்
2. சிறிய கத்தியை உள்ளே விட்டு வட்டமாக சுழற்றி மிளகாயின் விதைகளை வெளியே எடுக்கவும்
3. மீன் தசைக்குள் வெங்காயம் ,உப்பு,மிளகாய் ,சிறிதாக அரிந்த கொத்தமல்லி என்பவற்றோடு முட்டையையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்
4.மிளகாய்க்குள் மீன் கலவையை வைத்து வெட்டி வட்டமாக வெட்டி எடுத்த மிளகாய் பகுதியை மறுபடியும் வைத்து டுத் பிக் சொருகி இணைக்கவும்.
5.ட்ரேயில் வைத்து எண்னெய் அல்லது பட்டர் தடவி 400 பாகை பரனைட் ல் 15 நிமிடங்கள் பேக் பண்ணவும்
ம்ம்ம் ஜம்மி



இறால் கார சாலட்
தேவையானவை
romaine salade 1
தக்காளி 1
காரட் பாதி அளவு
கியூக்கும்பர் பாதி அளவு
இறால் 1 கிலோ
வெங்காயம் அரை கிலோ
கொத்தமல்லி 1 கட்டு
மஞ்சல் ஒரு டேபிள் ஸ்பூன்
தனிமிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளாகாய் 2 விரும்பினால்
உப்பு
செய்முறை
இறால் பிரட்டல்
1.இறால் ஐ சுத்தம் செய்து உப்பு மஞ்சல் மிளகாய்த்தூள் சேர்த்து வைக்கவும்
2.சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லியை உப்பு சேர்த்து தாளிக்கவும்
3.அதற்குள் தயாராக வைத்திருக்கும் இறாலை சேர்த்து மூடி வைக்கவும்.
தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் விடவும்
4. நீர் வற்றி இறால் வேகியதும் இறக்கி ஆற வைக்கவும்
சாலட்
1.காரட் ஐயும் கியூகும்பர் ஐயும் துருவி ,தக்காளியையும் சாலட் ஐயும் அரிந்து கொள்ளவும்
இப்போது ஆறிய இரால் ஐயும் சாலட் ஐயும் சேர்க்கவும்.
மிகவும் சுவையான காரமான இறால் சாலட் ரெடி.


பன்னீர் இட்லி
தேவையானவை
பன்னீர் 100 கிராம்
தேங்காய் பாதி
பன்னீரையும் தேங்காயையும் இட்லி மா பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்
பின்னர் இட்லி தட்டுக்களில் ஊற்றி  10 நிமிடம் வேக வைக்கவும் .
இட்லி போலவே இருக்கும்
தேங்காய் சட்னியுடன் சுவையாக இருக்கும்

பேக்ட் கத்தரிக்காய்
தேவையானவை
பெரிய கத்தரிக்காய் 1
ஏதாவது ஒரு வகை சீஸ் 50 கிராம்
சுக்கினி 1
தக்காளி 1
கீரை கொஞ்சம்
வெங்காயம் 2
உள்ளி 4
1. கத்தரி,வெங்காயம் ,உள்ளி,தக்காளி,சுக்கினி,கீரை,எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொள்ளவும் .
2.சுக்கினி ,தக்காளி ,வெங்காயம் என்பவற்றை வட்டமாக வெட்டவும்
3.foil paperற்கு எண்ணெய் தடவி அதில் கத்தரிக்காயை வைக்கவும்
4..இப்போது எல்லா காய்கறிகளையும் சீஸ் ஐயும் கத்தரிக்காயின் வெட்டிய இடைவெளிக்குள் அடுக்கவும்.
5.உப்பு சேர்த்து கொஞ்சம் எண்ணெய் பூசவும்.{ நான் கோக்கனட் ஒயில் யூஸ் பண்ணுவேன் அதுதான் பிரிஜ் ல் இருந்து எடுத்த கத்தரியில் பட்டதும் உறைந்து விட்டது.}
6..மீண்டும் foil paper ஆல் மூடி 400 பாகை வெப்பநிலையில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
விரும்பினால் பிரஷர் குக்கருக்குள் வைத்து மூடி கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து,மிதமான தீயில் வேக வைக்கலாம் {தண்ணீர் அதிகம் அதிகம் சேர்க்க தேவை இல்லை .காய்கறிகளில் இருந்தும் தண்ணீர் வரும்.}
10 நிமிஷம் போதும். ரெம்ப வாசனையாகவும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் .
எனக்கும் ப்ரஷர் குக்கருக்கும் பழைய பகை அதனால் அவன் {oven} ல் செய்தேன்.


Tuesday, 7 February 2017

வாழ்வும் வளமும்

எல்லோருக்கும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் நின்மதியாகவும் வாழவே ஆசை. இருப்பினும் பலருக்கு அது வெகு தூரமாகவே இருக்கிறது.
சிலருக்கு பிரச்சனைகள், துன்பங்களுக்குரிய நியாயமான காரணங்கள் இருந்தாலும் பலர் தாமே சேகரித்து மீளத் தெரியாமல் சிக்கி உழல்கிறார்கள்.
அதற்கான பல காரணங்களில் ஒன்று மகிழச்சியும் நிம்மதியும் நம்மை சுற்றி உள்ளவர்கள் நமக்கு கொடுக்க வேண்டும் என நினைப்பதும்,
நம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் நம்மை சார்ந்தவர்கள் கெடுக்கிறார்கள் என நினைப்பதும் ஒரு பிரதான காரணம்.
இந்த மாயையில் சுலபமாக மாட்டிக்கொண்டு தங்கள் நிம்மதியை தாமே கெடுத்துக்கொள்பவர்கள் அதிகமாக பெண்களாகவே இருக்கிறார்கள்.
இவர்களது தலையாய பிரச்சனைகள் என்னவென்று பார்த்தால் மாமியார் சரியில்லை, என் குடும்பத்தை மதிப்பதில்லை, நான் எவ்வளவுதான் குடும்பத்திற்காக உழைத்தாலும் எனக்கு தேவையான மதிப்பு அளிப்பதில்லை,
தேவையற்ற வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்கிறார்கள், என்னை குற்றம் சொல்கிறார்கள், எனக்கு சுதந்திரமில்லை, உரிமையில்லை, பெண்களை இந்த சமூகம் ஊதாசீனப்படுத்துகிறது, வீட்டிற்கு தலைமை வகிக்கும் ஆண்கள் நம்மை ஏளனம் செய்கிறார்கள், வீட்டு வேலைகள் குழந்தைகளை பராமரிப்பதில் எனக்கு யாரும் ஒத்தாசை செய்வதில்லை ஆனால் குறை சொல்வதற்கு முன்னிற்கு நிற்கிறார்கள், என் உடல் நிலையையும் சோர்வையும் ஏறிட்டு பார்ப்பதில்லை என் ஆசைகளை நிராகரிக்கிறார்கள் இவைகள்தாம் நம்மில் அனேகமானவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்.
ஆனால் இவை எல்லாம் நாம் முன்னெடுக்கும் செயல்களாலும், சிந்தனைகளாலுமே நமக்கு இது பிரச்சனைகளாக விஷ்வரூபம் எடுக்கிறது. குறிப்பாக நம் பெண்கள் அனேகர் இங்கு கூறப்பட்ட அனேகமான பிரச்சனைக்குள்
திக்குமுக்காடுவதற்கு மூல காரணம் பொருளாதார ரீதியிலும், இன்ன பிற தேவைகளிலும் சார்ந்து வாழுதல். இதிலிருந்து மீள ஆண்களுக்கு சரியாக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதல்ல. மிக மிக குறைந்த வருவாய் வீட்டில் இருந்த படியே கூட சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொழுது போக்காக சிறு கைத்தொழில் செய்வதில் எந்த தவறும் இல்லை. இவ்வளவு படித்து விட்டு இதை செய்வதா என்று எண்ணக்கூடாது. சரி அதற்கும் நம் சூழ்நிலை ஒத்துக்கொள்ளவில்லை என்றால் வீட்டிற்கு செலவாகும் சில பொருட்களையோ காய்கறிகளையோ நாமே தயாரிப்பது மிகச்சிறந்த வழி. இதற்கு கணவர் அதிகம் சம்பாதிக்க அல்லது பிஸ்னஸ் ல் இருக்கும் போது நான் ஏன் இதையெல்லாம் செய்து சிரமப்பட வேண்டும் என்று நினைக்க கூடாது. தனித்து செய்யக்கூடிய
சில பயணங்கள் கொள்வனவுகள் வெளிவேலைகளை நாமே செய்து கொள்வது நமக்கும் குடும்பத்திற்கும் பக்க பலம்.
Blog image
அடுத்து நம் பாதிப் பிரச்சனைகளை தூக்கி முழுங்கி நம்மை அறியாமல் நம் பிரச்சனைகளை நீக்கும் ஒரு அருமருந்து பொழுது போக்கு. ஆம் சிலர் அவர்கள் இப்படி சொல்லி விட்டார்கள் இவர்கள் இப்பிடி சொன்னார்கள்
ஒரே கவலையாக இருக்கிறது என்னால் மறக்க முடியவில்லை என்பார்கள். மறக்க வேண்டுமா எதுவுமே வேண்டாம் ஒரு தக்காளியை நட்டு வையுங்கள் அது உங்கள் சிந்தனையை ஆக்கிரமிக்கும். அதன் வளர்ச்சி உங்களோடு பேசும். அழகான ஒரு பூ செய்து மேசையில் வைத்துப்பாருங்கள் உங்கள் பார்வை அடிக்கடி அதில் மோதும். சமையலில் ஏதாவது மாற்றம் செய்து அழகு படுத்தி பாருங்கள் யாரும் பாராட்டாமல் விட்டாலும் பரவாயில்லை உங்களுக்கே ஒரு பெருமிதம் தோன்றும். ஆகவே நல்ல பொழுதுபோக்குகளை உங்கள் சூழ்னிலைக்கு ஏற்றால்போல் தேர்ந்தெடுங்கள் அது உங்கள் கவலைகளை வாங்கிக்கொள்ளும்.
எல்லாவற்றையும் விட நம் சிறு சிறு பிரச்சனைகளையும் பெரிதாக நம்மில் திணிக்க வைக்கும் ஒரு விடயம் நம் புலம்பல்கள் என்பது பலருக்கு தெரியாது. அதாவது கவலைகள் பகிர்ந்து கொள்வதால் ஆறுதல் அடைவீர்கள் என்று
சொல்லப்படுவது நோய், மரணங்கள், இழப்புகள் என்பவற்றைத்தான் உங்கள் குடும்பத்தில் நாளாந்தம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளோ குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு ஏற்படும் இடையூறுகளோ அல்ல.
இதையெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவர்களிடம் புலம்புகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த பிரச்சனைகளில் நீங்கள் மூழ்கிப்போய் நிம்மதி இழப்பீர்கள். அதாவது உங்களை அறியாமலே மறக்க வேண்டியதையும்
தூக்கி போட்டு கடந்து போக வேண்டியதையும் அநியாயத்திற்கு மீள்பதிவு செய்து வைக்கிறீர்கள் என்று அர்த்தம். அவ்வாறு உங்கள் சகாக்களுடன் பேசும்போது அவர்களும் அவ்வாறுதான் பேசப் போகிறார்கள். அப்படியாயின் உங்கள் சக நண்பி சொல்கிறார் என் கணவருக்கு எப்போதும் சாப்பாட்டில் குறை சொல்வதே வேலை. எரிச்சலாக வருகிறது என்று கூறுவாராயின் நீங்களும் அதே தலைப்பில் நிச்சயம் இணைந்து கொள்வீர்கள். இவ்வாறான பேச்சுக்கள் ஆரோக்கியம் அற்றவை. உங்கள் கணவர் காது பட அவரைப்பற்றி நல்லதாக அடுத்தவர்களிடம் சொல்லிப்பாருங்கள். ஏன் உங்கள் கணவரை நேரடியாகவே பாராட்டுங்கள் என்ன என்ன நல்ல குணங்கள் உள்ளதாக சொல்கிறீர்களோ அந்த குணங்கள் இல்லாவிட்டாலும் ஏற்படுத்திக்கொள்வார்கள். அது உங்களுக்கு மிகப்பெரிய நின்மதியை கொடுக்கும். குடும்ப உறுப்பினர் யார் குறையையுமே சொல்லிக்காட்டாதீர்கள்.
நம்மிலும் பல குற்றம் குறைகள் இருக்கவே இருக்கும் பதிலுக்கு நம்மை நின்மதி இழக்கச்செய்து விடுவார்கள்.பொது விடயங்கள் பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள் பற்றிய பேச்சுக்கள் கேள்விகள் சுவாரஸ்யமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
செய்யும் ஒவ்வொரு வேலைகளையும் விரும்பி ரசித்து செய்து விட்டு நீங்களே உங்களை பாராட்டிக்கொள்ளுங்கள். யாரும் நமக்கு உதவ வேண்டும் எதையாவது வழங்க வேண்டும் ஒத்தாசை செய்தே ஆக வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்காமல் முடிந்தளவு நாமே பொறுப்பாக இருக்கும்போது சிரமப்பட்டாலும் நாளடைவில் அதில் மிகப்பெரிய நிம்மதி கிடைக்கும்.
Blog image
கிடைப்பதை மாற்ற முடியாததை விரும்பி ஏற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின்னும் நண்பர்களை இழப்பதில்லை நாம் மட்டும் இழக்க வேண்டி இருக்கிறதே என்று ஆண் வர்க்கத்தை சாடாதீர்கள்.
அதைவிட சந்தோசமாக குழந்தைகளுடன் கூடி மகிழும் பாக்கியத்தை கடவுள் பெண்களுக்கே அதிகம் தந்திருக்கிறான் என்று மகிழுங்கள். ஆண்கள் திருமணத்தின் பின் ஊரையும் குடும்பத்தையும் வளர்ந்த வீட்டையும்
பிரிவதில்லை நம்மை மட்டும் வேரோடு பெயர்க்கிறார்கள் என்று வருந்தக்கூடாது. நமக்கு மாறுபட்ட வாழ்வு மாறுபட்ட இடங்கள் மாறுபட்ட மனிதர்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்று
ஆனந்தப்படுங்கள். கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தால் அங்கு செல்வதை சந்தோசமாக ஏற்றுக்கொள்ள முடியும் என்றால் இந்த பிரிவையும் ஏற்றுகொள்ள முடியும். நிறைய ஆண்கள் திருமணத்திற்கு
முன்பே பொருளாதார நிமித்தம் பிரிகிறார்கள்.
இவை எல்லாமே நம்மை நாமே நிம்மதியாக வைக்க உதவும். நம்மைப்பற்றி நாமே அக்கறை கொள்ளாமல் மறைமுக சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு அடுத்தவர்களை சாடுவது தவறு. பெண்களுக்கான உரிமை
பெண்களிடம்தான் உள்ளது. மீறி நடக்கும் தவறுகளும் கேடுகளும் அசம்பாவிதங்களும் தவறானவர்களால் நடக்கிறது. ஆண்கள் எல்லோரும் ஆதிக்க வாதிகள் கிடையாது. அப்பாவின் தியாகங்களை போற்றியும் கணவனை
குறை சொல்லியும் வாழ்ந்துவிட்டு திரும்பிப்பார்த்தால் கால ஓட்டத்தில் நம் பிள்ளைகள் தங்கள் அப்பாவை புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்போது உணர்வதை விட இப்போதே உணர்ந்தால் வாழ்வை அழகாக வாழ்ந்து விடலாம்.
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

Saturday, 4 February 2017

under construction



கிட்ஸ் யூ ட்யூப் தவிர நான் இன்னும் ப்ளாக் ல் ப்ளாக் கு என புதிதாக எதையும் எழுதவில்லை.கொப்பி பேஸ்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் .( ஒவொரு மனநிலையில் எழுதிய வரிகள் வாசிக்கும் போது அதே மொமெண்ட் க்கு மறுபடி செல்கிறேன்

அதனால் எதையும் அழிக்க தொலைக்க விருப்பமில்லை
.
முதலில் சிதறிக்கிடக்கும் என் பழைய பதிவுகளை இங்கு இணைத்துவிட நினைக்கிறேன்.100 பதிவுகளுக்கு மேல் வருகிறது அதனால் உங்கள் லிஸ்ட் ஐ நிரப்பி நிச்சயம் உங்களுக்கு இடையூறு பண்ணும் என்றே நினைக்கிறேன்.

அதனால் என் பக்கத்தில் இருக்கும் எண்பதாயிரம் {8}நல்லுள்ளங்களையும்  என்னை தற்காலிகமாக 1 நாள்  சண்டே}அன்பலோ பண்ணிவிட்டு மீண்டும் பலோ பண்ண முடியுமா என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Friday, 3 February 2017

ஞாபக சின்னங்கள்.


நாம் எல்லோருமே சின்ன வயசில் விளையாடிய பொருட்களை தொலைத்தாலும் அந்த ஞாபகங்களை தொலைப்பதில்லை.
காரணம் சிறு வயது ஞாபகங்களுக்கு இணையில்லை என்பதை நம் சுமை மிகுந்த வாழ்வு சுட்டி நிற்பதே.

...
எத்தனை வயதானாலும் நம் அன்புக்குரியவர்களின் அதை சொல்லி சொல்லி பூரித்து போகும் செயல் இந்த உலகில் யாரையும் விட்டு வைப்பதில்லை.
அப்படியிருக்க ஏதாவது வித்தியாசமான குறும்பு படங்களோ,ஞாபக சின்னங்களோ கையில் கிடைத்து விட்டால் போதும் .அதை வைத்து அந்த வயசுக்கே போய் விடுவது மனித இயல்பு.
நம்மை சார்ந்தவர்களுக்கு அதை காண்பித்து கதை பேசியே மாய்வோம். பாவம்தான் அவர்கள் அதற்காக விட முடியாது.நம் சந்தோசத்தை திணித்தே திணறடிப்போம்.


அந்த வகையில் நம் குழந்தைகளுக்கு அவர்கள் சார்ந்த நல்ல ஞாபக சின்னங்களை கொடுப்பது மிகவும் நல்லதும் மகிழ்விக்கக்கூடியதும்.நம்மை பெருமைப்படுத்தக்கூடிய ஒன்றும் ஆகும்.
அதில் ஒன்றுதான் குழந்தைகளில் கால் பதிவு,கை பதிவு போன்றவற்றை எடுத்து பத்திரப்படுத்தி அவர்கள் வளந்ததும் கொடுப்பது.
இதற்கென கிராவ்ட் கடைகளில் ஒரு விதமான கிளே விக்கும் அதை வாங்கி கூட செய்யலாம்.

முடியாவிட்டால் நாம் சாதாரணமாக உபயோகிக்கும் கிராவ்ட் பெயிண்ட் ல் அடையாளம் எடுத்து பதிவு செய்து திகதி ஆண்டு குறிப்பிட்டு பத்திரப்படுத்தி வைக்கலாம்.



கூடவே நம்முடையை கை ,பாத அடையாளங்களுக்கு பக்கத்தில் அவர்களுடைய பிஞ்சு கை,பாத அடையாளங்களை வைக்கும்போது மிகவும் அழகாக இருக்கும்.


மிகவும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்றில்லை.இது என் முயற்சிகள் . நீங்களும் குழந்தைகளின் ஒத்துழைப்புடன் செய்து பாருங்கள்.




2. அடுத்து அவர்கள் முதல் முதல் பாவித்த பொருட்களை இங்கு படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்து வைக்கலாம்
நான் கடிதமும் கவிதையும் எழுதி இதற்குள் ஒளித்தும் வைத்திருக்கிறேன்.
என் காலத்தின் பின் அவர்களுக்கு விட்டுச்செல்ல நினைக்கிறேன்.
என் அன்பு, சந்தோஷம் ,புத்திமதி, கண்ணீர், வீரம் எல்லாவற்றையும் கலந்தே இதைசெய்து வைத்திருக்கிறேன்
அவர்களுக்காக பொருளும் பணமும் சேர்த்துக்கொடுத்தாலும் அது எப்போதும் பொதுவானதும் அடையக்கூடியதும் அவர்களும் தேடிக்கொள்வார்கள்.
ஆனால் இவ்வாறான சில சிறுவயது ஞாபகங்கள் அவர்களுக்காக பெற்றோர் நம்மால் மட்டுமே பதிவு செய்து கொடுக்க முடியும்.


அன்புக்கூடம்


இந்த பொருளுக்கு இதுதான் இடம் என்றும்
இந்த இடத்திற்கு இதுதான் பொருள் என்றும் வீட்டில் பொருட்களை தெரிவு செய்து நேர்த்தி செய்தால் தேட வேண்டிய தேவையும் இருக்காது வீடும் அடிக்கடி கலையாது.

இது எனக்கு என் கணவர் கற்றுத்தந்த பாடம் இன்று வரைக்கும் நான் தேடிய பொருட்கள் குறைவு.கடையில் ஏதாவது பொருட்களை வாங்க முற்படும்போது  தடுத்து
இதை எங்கே வைக்க போகிறாய் ? என ஒவ்வொரு தடவையும் கேட்டு  என்னை சிந்தித்து வாங்க வைப்பார்.

அத்தோடு 4 மக் வாங்கினால் ஏற்கனவே நிறைய காலமாக இருக்கும் மக் 4 ஐ டொனேட் பண்ணவோ குப்பையில் போடவோ  சொல்வார்.

ஷோ கேஸ் வாங்கி அது நிறைய அழகு பொருட்களை அடுக்குவது எல்லோரும் செய்வது .அதை நான் வாங்க முற்பட்ட போது ஷோ கேஸ் ஐ சட்டென்று தூக்கி வீச முடியாது வைத்தால் வைத்ததுதான்
வருசக்கணக்கா அந்த ஸ்டைல்லயே வீட்டை வச்சிருக்க போறியா ? என்ற ஒரு கேள்வியில் சிந்தித்து அதை  வாங்காமல் விட்டேன்
.
அதன் பலன் இன்று சீசன் க்கு ஏற்றால் போல் வீட்டு ஹால் ஐ மாற்றி விடுவேன் .
பிள்ளைகளுக்காக சிலதை அகற்ற வேண்டியும் உயரத்தில் வைக்க வேண்டியும் வந்தபோது மாறி மாறி வைத்து  கிளீனிங் செய்தும் தேடியும் களைத்து ஒரே டென்ஷன்  ல் கழிந்தது கொஞ்சநாள்.
நிறைய நிலையான பொருட்களை வாங்கி சேர்க்காத காரணத்தால் அதையும் சரி செய்யக்கூடியதாக இருந்தது.

அவ்வாறு மாறியதுதான் பிள்ளைகளுக்காக ஆசை ஆசையாக செய்து கொடுத்த  இந்த நர்சரி.

ஒரு ரூம் ஐ அவர்களுக்காக ஒதுக்கி அவர்களை விளையாட அனுமதிப்பதை விட ஹால் ஐ இவ்வாறு செய்து விட்டால் மொத்த பமிலியும் சேர்ந்து விள்ளாடலாம்.

பின்னாளிலும் அவர்களுக்கு இது ஒரு நல்ல நினைவுகளாக அமையும்.

இங்கு அதிகாலைச்சூரியன் அந்திமாலை சந்திரன் எல்லாம் நம்முடன் விளையாடத்தவறியதில்லை. {படம் ஒன்றில் சண் அடோராவை கொஞ்சிங் கொஞ்சிங்}





வளையல் ட்ரீ


க்றிஸ்மஸ் க்கு LED twig tree செய்ய ரோட்டோரம் வெட்டி இருந்த மரத்தில் இருந்து இந்த கிளையை எடுத்து வந்தேன்.


ஆனாலும் இந்த க்றிஸ்மஸ் அவ்வளவு அவகாசம் கொடுக்கவில்லை.

அதன்பின் இந்த கிளையை தூக்கி போடாமல் சும்மா வீட்ல வச்சிருந்ததால வீட்டை குப்பையாக்குவது யார் ????எனும் தலைப்பில் குடும்பத்தில் பிரச்சனை வர தொடங்கிவிட்டுது.

அதனால பாக்ஸ் பாக்ஸ் ஆ இந்தியாவில் வாங்கி கொண்டு வந்த வளையல்களில் சில பங்கை எடுத்து இந்த மரத்தை தளைக்கச்செய்து விட்டேன்.



ஐடியா நம்பர் 1 பிடித்துக்கொள்ளுங்கள்.



ஐடியா நம்ப 2 கிவ்ட் பேப்பர் முடிந்ததும் கிடைக்கும் ரோல் ஐ எடுத்து நம்முடைய ட்ரோவர் க்கு அளவாக வெட்டி இவ்வாறு வரிசையாகவும் அடுக்கி வைக்கலாம்.



youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...