Friday, 3 March 2017

paleo recipies

குடைமிளகாய் மீற்
தேவையானவை
மட்டன் அல்லது பீஃப்  1/2 கிலோ
குடைமிளகாய் 4
வெங்காயம் 2
கொத்தமல்லி 1 கட்டு
பூடு 5 பல்லு
இஞ்சி ஒரு சிறு துண்டு
உப்பு தேவையான அளவு
 செய்முறை
மீற் ஐ  எலும்பில்லாமல் சுத்தம் செய்து மிக்சியில் மேலோட்டமாக அரைக்கவும்
வெங்காயம் ,கொத்தமல்லி,இஞ்சி ,பூண்டு என்பற்றை சிறிதாக அரிந்து கொள்ளவும்
படத்தில் காட்டியது போல் குடைமிளகாயின் தலைப்பகுதியை வெட்டி எடுத்துவிட்டு உள்ளே விதகள் இல்லாதவாறு சுத்தம் செய்யவும்
குடைமிளகாய்க்குள் எடுத்த பகுதியையும் வெங்காயம் ,பூடு ,இஞ்சி ,உப்பு ,கொத்தமல்லி என்பவற்றையும் அரைத்த இறைச்சியுடன் சேர்க்கவும்.
இறைச்சிக்கலவையை குடை மிளகாய்க்குள் வைத்து  மிளகாயை மூடாமல் அவன் ல்  400 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக்ட் பண்ணவும்
மிளகாயின் தலைப்பகுதியை கடைசி 5 நிமிடங்கள்  மூடி வைத்து பேக் பண்ணவும் .
சுவை அபாரமாக இருக்கும்

மொறு மொறு வெண்டைக்காய்
தேவையானவை
வெண்டைக்காய் 1 கிலோ
தனிமிளகாய்த்தூள் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் அல்லது நெய் 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
1.வெண்டைக்காயை கழுவி அடிப்பாகத்தை வெட்டாமல் நான்காக கீறல் போடவும்
2.தனிமிளகாய்த்தூள் ,எண்ணெய்,உப்பு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல வைத்துக்கொள்ளவும்
3.கரண்டியால்  உப்பு,மிளகாய் பேஸ்ட் ஐ வெண்டைக்காய்க்கு உள்ளே பூசவும்
4.அவனில் 400 டிகிரியில் 15 நிமிடங்கள் பேக்ட் பண்ணவும்.
எனக்கு மிகப்பிடித்த மதிய உணவு இது


முட்டை பீட்ஸா
தேவையானவை
முட்டை 4
கீரை 200 கிராம்
குடைமிளகாய் 100 கிராம்
செட்டர் சீஸ் 50 கிராம்
வெங்காயம் 1
பூடு 2 பல்லு
தக்காளி 2
உப்பு தேவையான அளவு
செய்முறை
காய்கறிகளை  சுத்தம் செய்து மெலிதாக அரிந்து வைக்கவும்
தக்காளியையும் பூண்டையும்  சுடுநீரில் சிறிது வேக வைத்து எடுக்கவும்
 தக்காளிக்கு தோல் நீக்கி விட்டு பூண்டு,தக்காளி என்பவற்றை மிக்சியில் அரைத்து வைக்கவும்
செட்டர் சீஸ் ஐ துருவி வைக்கவும்

இப்போது அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில்  முட்டை நான்கையும் ஊற்றி 2 நிமிடம் மூடி வேகவைக்கவும்
பின்னர் திறந்து அதன்மேல் தக்காளி ,பூண்டு கலவையை ஊற்றி 2 நிமிடம்  மூடி வேக வைக்கவும்
காய்கறிகளை  அதன்மேல் பரவலாக தூவி மீண்டும் ஐந்தாறு நிமிடங்கள் மூடி வைக்கவும்.
கடைசியில் சீஸ் ஐ தூவி மீண்டும் மூடி வெந்ததும் பரிமாறவும்.
ஒவ்வொரு பொருட்களை சேர்க்கும்போதும் உப்பு தூவவும் .


மீற் வடை
விரும்பிய மீற் 1/2 கிலோ
வெங்காயம் 3
பூடு 6 பல்லு
இஞ்சி சிறிய துண்டு
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை கொஞ்சம்
பச்சை மிளகாய் 5
செய்முறை
1.இறைச்சியை அரைத்துக்கொள்ளவும் .{ இங்கு அரைத்த இறைச்சி கிடைக்கும்}
2.வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து வைக்கவும்
3.இஞ்சி பூண்டை அரைத்து வைக்கவும்
4. கொடுக்கப்பட்ட எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து வடைபோல் செய்து மறக்காமல் ஓட்டை போட்டு அவனில் 400 டிகிரியில் 25 நிமிடங்கள் வேக வைக்கவும்
வடைபோலவே துளை போடுவதால் நன்றாக வேகி எண்ணெயில் பொரித்தெடுத்தது போல் சுவையாக இருக்கும்

பன்னீர் உப்புமா
தேவையானவை
பன்னீர் 100 கிராம்
வெங்காயம் 2
காய்ந்த மிளகாய் 4
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை சிறிது
எண்ணெய்  டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
செய்முறை
 வெங்காயம் ,காய்ந்தமிளகாய்,சீரகம் ,கருவேப்பிலை என்பவற்றை தாளித்து உப்பு சேர்த்து உதிரியாக செய்த பன்னீரை அதனுள் சேர்த்து வறுத்து எடுக்கவும்

க்ரில் பிஷ்
தேவையானவை
மீன்
தனிமிளகாய்த்தூள்  டேபிள் ஸ்பூன்
தனியாதூள்  டேபிள் ஸ்பூன்
மிளகு தூள்  டேபிள் ஸ்பூன்
பூடு அரைத்த விழுது  டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பட்டர்  டேபிள் ஸ்பூன்

மீனை சுத்தம் செய்து குறுக்கே வரிகளாக கீறல்கள் போடவும்
மீதி எல்லாவற்றையும் பேஸ்ட் போல கலந்து மீனில் பூசி  மணிநேரம் ஊற வைக்கவும்
 அவனில் 500 டிகிரியில் 15 நிமிடம் ஒருபக்கம் என்ற ரீதியில் 30 நிமிடம்  broil பண்ணவும்

இறால் + வெஜிடபிள்ஸ் சூப்
தேவையானவை
இறால் கால் கிலோ
ப்ரோக்கோலி கால் கிலோ
brussels sprouts 100 கிராம்
மஷ்ரூம் 100 கிராம்
வெங்காயம் 1
பூடு 2 பல்லு
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
தனியா 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
கொத்தமல்லி 1 கட்டு
உப்பு தேவையான அளவு

வெங்காயம்
வெங்காயம் கொத்தமல்லி என்பவற்றை ஒரு டீஸ்பூன்  எண்ணெயில் உப்பு சேர்த்து தாளிக்கவும்
இறால் ஐ சுத்தம் செய்து ப்ரோக்கோலி,brussels sprouts மஷ்ரூம் ஆகியவற்றை  1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
காய்ந்த மிளகாய்,தனியா,மிளகு,பூடு என்பவற்றை அரைத்து 1 கப் தண்ணீர் கலந்து இறால் உடன் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்ததும்  லெமன் சேர்த்து பரிமாறவும்


கீரை சூப்
தேவையானவை
கீரை 1 கட்டு
வெங்காயம் 1
தேங்காய்ப்பால் 1 கப்
பச்சை மிளகாய் 1
பூடு 2 பல்லு
சீரகம் 1 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
1.கீரையை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்
2.வெங்காயம் ,பூடு ,பச்சை மிளகாய் என்பவற்றையும் சிறு துண்டுகளாக வெட்டி கீரையுடன்  சீரகமும் சேர்த்து  எல்லவற்றையும் 1 கப் தண்ணீரில் வேக வைக்கவும்
3.வேகியதும் ப்ளெண்டரால் மசிக்கவும்
4.தேங்காய்பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி லெமன் சேர்த்து பரிமாறவும்.


asperges bacon roll
asperges ஐ ஸ்டீம் பண்ணி  உப்பு மிளகு தூவிக்கொள்ளவும்
bacon ஐ சட்டியில் வாட்டி எடுத்து asperges ஐ ரோல் பண்ணவும்
இரண்டையும் சேர்த்து சாப்பிட சுவை பிரமாதமாக இருக்கும்.



பன்னீர் சாலட்
பன்னீரை  ஆவியில் வேக வைத்து சிறு துண்டுகளாக உதிரியாக்கவும்
தக்காளி ,செலரி,கொத்தமல்லி ,வெங்காயம் என்பவற்றை நறுக்கி எல்லாவ்ற்றையும் சேர்த்து மிளகு தூவி பரிமாறவும்

பீஃப் ரோஸ்ட்
தேவையானவை
பீஃப்  1/2 கிலோ
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெங்காயம் 4
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் 1 டேபிள் ஸ்பூன்

பீஃப் ஐ ஓரளவு பெரிய துண்டுகளாக வெட்டவும்
உப்பு ,மிளகாய்த்தூள், வெங்காயம் ,வினிகர் சேர்த்து 2 கப் தண்ணீரில் வேக வைக்கவும்
தண்ணீர் வற்றியதும் எண்ணெய் சேர்த்து கிளறி இறக்கவும்

seafood soup
தேவையானவை
நண்டு கால் கிலோ
இறால்  கால் கிலோ
கணவாய் கால் கிலோ
முட்டை 1
மஞ்சல் 1 டீஸ்பூன்
மிளகு ஒரு டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 1
பூடு 2 பல்லு
தனியா 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
நண்டு இறால் கணவாய் என்பற்றை சுத்தம் செய்து உப்பு மஞ்சல் சேர்த்து 2 கப் தண்ணீரில் வேக வைக்கவும்
மிளகாய்,மிளகு,தனியா ,பூடு என்பவற்றை அரைத்து 1 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்
வெந்ததும்  முட்டையை நன்கு அடித்து சூப் ல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்
லெமன் சேர்த்து பரிமாறவும்

சிக்கன் விங்ஸ்
சிக்கன் விங்ஸ் அரை கிலோ
தனி மிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
தயிர் 1 கப்
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் விங்ஸ் ஐ சுத்தம் செய்து fork ஆல் சுற்றி சுற்றி  குத்திக்கொள்ளவும்
உப்பு,மிளகாய்த்தூள், எண்ணெய் ,,தயிர் என்பவற்றை பேஸ்ட் போல் செய்யவும்.
எல்லாவற்றையும் சேர்த்து 4 மணித்தியாலங்கள் ஊற வைக்கவும்
அவன் ல் 500 டிகிரியில் 20 நிமிடம் ப்ரொயில் பண்ணவும்

roasted chicken
சிக்கன் 1
rosemary  1 கட்டு
செலரி 100 கிராம்
பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
கராம்பு 4
இஞ்சி சிறு துண்டு
பூடு 4
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
லெமன் 1
உப்பு தேவையான அளவு
சிக்கன் ஐ சுத்தம் செய்து வைக்கவும்
செலரியை சிறு துண்டுகளாக நறுக்கவும்
பூடு ,மிளகு ,கராம்பு,இஞ்சி,என்பவற்றை அரைத்து எடுக்கவும்
மொத்த இங்ரீடியன்ஸ் ஐயும் பட்டர் க்குள் சேர்த்து பேஸ்ட் போல் செய்யவும்
ஒரு ஸ்பூனில் இந்த கலவையை எடுத்து சிக்கன் ன்  தோல் க்குள் முடிந்தளவு பரவலாக செலுத்தவும்
மீதிக்கலவையையும் வெட்டிய செலரியையும் சிக்கன் க்குள் வைத்து 4 மணித்தியாலங்கள் ஊறவைக்கவும்
அவன் ஐ 500 டிகிரிக்கு மேல் வைத்து சிக்கன் ப்ரொய்ல் பண்ணுவதற்கான கம்பியில் மாட்டி 40 நிமிடம் சுற்ற விடவும்


ஈஸி பம்கின் சூப்
பூசணிக்காய் அரை கிலோ
வெங்காயம் 1
மஞ்சல் 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 1
sour cream அரை கப்
மிளகுப்பொடி 1 டீஸ்பூன்

பூசணிக்காயை ,வெங்காயம் ,உப்பு ,மஞ்சல்,பச்சை மிளகாய் சேர்த்து 2 கப் தண்ணீரில்  வேகவைத்து ப்ளெண்டரால் அரைக்கவும்
ஷவக்றீம் சேர்த்து  மிளகு தூவி பரிமாறவும்







பிஸ்தாஸ் மில்க் ஷேக்
பாலை கொதிக்க  ஏலக்காய் பொடி ஒரு சிட்டிகை  சேர்த்து ஆற வைக்கவும்
ஆறியதும் சிறுது பாலுடன் சேர்த்து பிஸ்தாஸ்   ஐ அரைத்து மீதி பாலுடன் சேர்க்கவும்
க்ரீமி யாக இருப்பதால் சுகர் சேர்க்காமலே நன்றாக இருக்கும்.


EGG + VEGETABLE MUFFINS
தேவையானவை
முட்டை 5
மஷ்ரூம் 50 கிராம்
குடைமிளகாய் 50 கிராம்
ப்ரோக்கோலி 50 கிராம்
கீரை 100 கிராம்
ஏதாவது ஒரு சீஸ் 50 கிராம்
உள்ளி 2 பூடு
வெங்காயம் 2
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு
விருப்பம்போல் காய்கறிகளை தெரிவு செய்யலாம் விலக்கி விடலாம்.
ஆயத்தம்
1.முட்டையை உப்பு சேர்த்து அடித்து வைக்கவும்
2.மீதி எல்லாவற்றையும் அதாவது வெங்காயம் உள்ளி மற்றும் காய்கறிகள் என்பவற்றை சிறிது சிறிதாக அரிந்து கொள்ளவும்.
3.சீஸ் ஐ துருவி வைக்கவும்
செய்முறை
1.அடுப்பில் பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு மிதமான தீயில் சிறிதாக வெட்டிய காய்கறிகளை வதக்கவும்.
2.வதக்கிய காய்கறிகளை முட்டையுடன் சேர்த்து துருவிய சீஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.
3.இப்போது இந்த கலவையினை மஃப்பின் மோல்ட் ற்குள் ஊற்றி 350 °F ல் 12 நிமிடங்கள் பேக் பண்ணவும்
மிகவும் சுவையாக இருக்கும் .நான் ப்ரேக்ஃபாஸ்ட் க்கு விரும்பி செய்வேன்.



பேக்ட் கட்லட் பஜ்ஜி
தேவையானவை
மிளகாய்கள் 6
மீன் வேக வைத்து முள்ளு நீக்கியது கால் கிலோ
வெங்காயம் 1
முட்டை 2
பச்சை மிளாகாய் அல்லது காய்ந்த மிளகாய் 2
கொத்தமல்லி
உப்பு
எண்ணெய் அல்லது பட்டர் 1 டேபிள் ஸ்பூன்
டுத் பிக் 12
1.மிளகாயின் தலைப்பகுதியை வட்டமாக வெட்டி எடுக்கவும்
2. சிறிய கத்தியை உள்ளே விட்டு வட்டமாக சுழற்றி மிளகாயின் விதைகளை வெளியே எடுக்கவும்
3. மீன் தசைக்குள் வெங்காயம் ,உப்பு,மிளகாய் ,சிறிதாக அரிந்த கொத்தமல்லி என்பவற்றோடு முட்டையையும் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணவும்
4.மிளகாய்க்குள் மீன் கலவையை வைத்து வெட்டி வட்டமாக வெட்டி எடுத்த மிளகாய் பகுதியை மறுபடியும் வைத்து டுத் பிக் சொருகி இணைக்கவும்.
5.ட்ரேயில் வைத்து எண்னெய் அல்லது பட்டர் தடவி 400 பாகை பரனைட் ல் 15 நிமிடங்கள் பேக் பண்ணவும்
ம்ம்ம் ஜம்மி



இறால் கார சாலட்
தேவையானவை
romaine salade 1
தக்காளி 1
காரட் பாதி அளவு
கியூக்கும்பர் பாதி அளவு
இறால் 1 கிலோ
வெங்காயம் அரை கிலோ
கொத்தமல்லி 1 கட்டு
மஞ்சல் ஒரு டேபிள் ஸ்பூன்
தனிமிளகாய்த்தூள் 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளாகாய் 2 விரும்பினால்
உப்பு
செய்முறை
இறால் பிரட்டல்
1.இறால் ஐ சுத்தம் செய்து உப்பு மஞ்சல் மிளகாய்த்தூள் சேர்த்து வைக்கவும்
2.சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கொத்தமல்லியை உப்பு சேர்த்து தாளிக்கவும்
3.அதற்குள் தயாராக வைத்திருக்கும் இறாலை சேர்த்து மூடி வைக்கவும்.
தேவைப்பட்டால் மட்டும் சிறிது தண்ணீர் விடவும்
4. நீர் வற்றி இறால் வேகியதும் இறக்கி ஆற வைக்கவும்
சாலட்
1.காரட் ஐயும் கியூகும்பர் ஐயும் துருவி ,தக்காளியையும் சாலட் ஐயும் அரிந்து கொள்ளவும்
இப்போது ஆறிய இரால் ஐயும் சாலட் ஐயும் சேர்க்கவும்.
மிகவும் சுவையான காரமான இறால் சாலட் ரெடி.


பன்னீர் இட்லி
தேவையானவை
பன்னீர் 100 கிராம்
தேங்காய் பாதி
பன்னீரையும் தேங்காயையும் இட்லி மா பதத்திற்கு அரைத்து உப்பு சேர்த்து 10 நிமிடம் வைக்கவும்
பின்னர் இட்லி தட்டுக்களில் ஊற்றி  10 நிமிடம் வேக வைக்கவும் .
இட்லி போலவே இருக்கும்
தேங்காய் சட்னியுடன் சுவையாக இருக்கும்

பேக்ட் கத்தரிக்காய்
தேவையானவை
பெரிய கத்தரிக்காய் 1
ஏதாவது ஒரு வகை சீஸ் 50 கிராம்
சுக்கினி 1
தக்காளி 1
கீரை கொஞ்சம்
வெங்காயம் 2
உள்ளி 4
1. கத்தரி,வெங்காயம் ,உள்ளி,தக்காளி,சுக்கினி,கீரை,எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொள்ளவும் .
2.சுக்கினி ,தக்காளி ,வெங்காயம் என்பவற்றை வட்டமாக வெட்டவும்
3.foil paperற்கு எண்ணெய் தடவி அதில் கத்தரிக்காயை வைக்கவும்
4..இப்போது எல்லா காய்கறிகளையும் சீஸ் ஐயும் கத்தரிக்காயின் வெட்டிய இடைவெளிக்குள் அடுக்கவும்.
5.உப்பு சேர்த்து கொஞ்சம் எண்ணெய் பூசவும்.{ நான் கோக்கனட் ஒயில் யூஸ் பண்ணுவேன் அதுதான் பிரிஜ் ல் இருந்து எடுத்த கத்தரியில் பட்டதும் உறைந்து விட்டது.}
6..மீண்டும் foil paper ஆல் மூடி 400 பாகை வெப்பநிலையில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
விரும்பினால் பிரஷர் குக்கருக்குள் வைத்து மூடி கொஞ்சூண்டு தண்ணீர் சேர்த்து,மிதமான தீயில் வேக வைக்கலாம் {தண்ணீர் அதிகம் அதிகம் சேர்க்க தேவை இல்லை .காய்கறிகளில் இருந்தும் தண்ணீர் வரும்.}
10 நிமிஷம் போதும். ரெம்ப வாசனையாகவும் டேஸ்ட் ஆகவும் இருக்கும் .
எனக்கும் ப்ரஷர் குக்கருக்கும் பழைய பகை அதனால் அவன் {oven} ல் செய்தேன்.


No comments:

Post a Comment

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...