Tuesday, 14 March 2017

சம்பவம் சம்பவம்


டொரண்டோ பெரும்பாகங்கள் எச்சரிக்கையுடன் கூடிய கடும் குளிரை கட்டி அணைத்துக்கொண்டு தன்இறுதி சுற்றுக்கு நகர்கிறது.
அறிவுறுத்தப்பட்டபடி நேற்றுத்தொடங்கி இரவிரவாக பூமியை நனைத்து பகல் பொழுதும் குளிரை அள்ளி வீசிக்கொண்டிருக்கும் வெண்பனியை , வீட்டுக்குள் இருந்து ஜன்னல் வழி நோக்கமுடியாமல்
கண்ணாடியை பற்றிப்பிடித்து கண்ணை அடைத்தபடி காட்சி அளிக்கிறது பனிக்கோலம் .
வழக்கமான குளிர் கால இரவுச்சுற்றுலாவில் தேனீர் உடன் அழகையும் பருகிவிட்டு 8.30 க்கு இரவுத்தூக்கத்திற்கு வீட்டில் நுழைந்தோம்.
{ஆம் இரவு சாப்பாட்டை முடித்துக்கொண்டு காரை எடுத்துக்கொண்டு ஆளுக்கொரு லார்ஜ் சைஸ் கோப்பியும் வாங்கிக்கொண்டு இரவின் அழகில் 1 மணிநேரமாவது வலம் வருவோம். திருமணமானதில் இருந்து தொடங்கிய 
இந்தப்பழக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.]
கதகதகப்பாக அமைதியாக அரவணைப்பாக இருந்தது குளிர்கால இரவுப்பொழுதை உட்கொண்ட வீடு.
தூக்கத்திற்கான ஆயத்தங்கள் முடித்து மெழுகுதிரி வெளிச்சத்தில் அரைமணிநேர உரையாடல் .
அதுவும் முடித்து ,,,,,,
தூக்கம் அன்பாக அழைத்தது.மெல்லிய வெளிச்சத்தில் ஆளுக்காள் இரவு வணக்கங்களின் பரிமாற்றம்.
அழகான தூக்கம்......அதை கலைத்தபடி அருகி வருகிறது அதைவிட அழகான விடியல் ,,,,,, ஆனால் நானோ அவசரமாக ஏதோ கனவு,,,,, கனவில் அருமையான இடம்.
இளவேனில் காலத்தின் இதழ் கொண்டு அசைந்தாடும் இலைகொண்ட மரங்கள்.
இசபாடி இசைபாடி அதன்பாட்டில் இறகுகள் அசைக்கும் பறவைகள்.
மண்ணின்கீழ் கட்டிய வீட்டில் இருந்து வெளியே விளையாடும் சாம்பல் குட்டியை எட்டிப்பார்க்கிறது அம்மா முயல்.
வாலை ஆட்டி விரட்டியபடி வரிசையாக இரண்டு அணில்கள்.
ம்ம்ம்ம் நான் எங்கே நிற்கிறேன். திடீரென்று என்மேல் சாரல் அடிக்கிறது. சல் சல் என்கிறது தண்ணீரின் தவில் இசை.
ஓ நான் அருவிப்பக்கம் குளியல் எடுத்துக்கொண்டிருக்கிறேன் போல் இருக்கிறது.தண்ணீர் இன்னும் கொஞ்சம் அதிகமாக முகத்தில் அடிக்கிறது.
அப்போது ஒரு சத்தம் .ஆம் என் கண்ணான கணவரின் கடும் குரல்தான்.
அம்மா எழும்புங்கோ எழும்புங்கோ அடோரா தண்ணி ஊத்துறாள்.
கொக்கா மக்கா ,பயபுள்ள 4 மணிக்கு எழும்பி பக்கத்தில நைட் டேபிள் ல ஹஸ் வச்சிருந்த ஒன்றை லீட்டர் தண்ணி போத்தலை எடுத்து( போத்தலை விட கொஞ்சம் வளந்துட்டோம் எங்கிற திமிர்தான்]
திறந்து எழும்பி நிண்ட படியே அம்புட்டு தண்ணியையும் நமக்கு ஊத்தி தெப்பலா நனைய வச்சுட்டு கொஞ்சம் கூட நனையாமல் நம்மை பாத்து சிரிச்சாளே என்னத்தை சொல்ல.......அவ்வ்வ்வ்வ்
சரி போனா போகுது நாளைக்கு இதைவிட நல்ல கனவு வராமலா போகுது.6 comments:

 1. Haa haaa what a beautiful dream .going to bed now will tell you tomorrow story about the dream i had and it's consequence ..its a funny one .now good night ..wish me sweet dreams,

  ReplyDelete
  Replies
  1. ம்ம் இது சமர் டைம் ல தூங்க போக முன்னம் நேரில பாக்குற காட்சி .வீட்டுக்கு கீழ உள்ள பார்க் ல நடக்கும்.விண்டர் டைம்ல ஸ்னோ மூடி இருக்கிறதை பார்க்க ஒரே அதே நினவா இருக்கும் அதனால அடிக்கடி கனவில வரும்.சின்னப்பிள்ளைல நாட்டை விட்டு வந்தா பிறகும் டெய்லி ஆர்மி சுடுவான் மீ செத்துடுவன்.ஹா ஹா ஹா

   Delete
 2. // இரவின் அழகில் 1 மணிநேரமாவது வலம் வருவோம்//
  high 5 சுரே எங்களுக்கு ஜெர்மனில இந்த பழக்கம் இருந்தது செம ஜாலி இப்போ வேலை டைம் மாறியதால் ரொம்ப கஷ்டமிங்கே யூ என்ஜோய் டியர்

  ReplyDelete
  Replies
  1. இது ரெம்ப நல்ல பழக்கமே அஞ்சு .டி வி ட்ராமா,நெட் எல்லாம் பாத்துட்டு தூங்கினால் சொய்ங்க் நு அதுவே சுத்திக்கிட்டு குடையும்.நாம இரவு 11 மணிக்கு மேல கூட பீச் க்கு போவோம் முன்னாடி.இப்ப அதை நினைச்சா ஆசை .ம்ம்ம் தடங்கல் வந்தா பிறகுதான் வால்யூ இன்னும் தெரிய வருது.

   Delete
 3. ஹாஹா :) அடோரா செல்லம் ஸோ ஸ்வீட் ..
  எனக்கு ஒரு நாள் புறா இறகை எடுத்து காது க்ளீன் பண்ணுவோமே அதே உணர்வு கனவில் அது ரொம்ப மென்மையா இருக்கும்லா :)
  அன்னிக்கு தூங்கிட்டிருக்கும்போது இந்த குட்டி ஷாரன் அப்போ 1 வயசு இருக்கும் அதோட குட்டி சுண்டு விரலை என் காதை பிடிச்சி தூங்குவா பிறகு என்ன நினைச்சாளோ காதுகுள்ளே விரலை விட்டிருக்கு நனையும் புறா இறகால் காதலி வருடறமாதிரி இருக்குனு கொஞ்சம் கவனக்குறைவா இருந்தேன் கனவுதானேன்னு .திடீர்னு குட்டி நகம் காதில் குத்திரத்தம் வந்து அம்மாடியோ அலறிட்டேன் :)
  அதுக்கு மேலே இன்பெக்ஷன் ஆகி ரொம்ப கஷ்டமாகிடுச்சி ..அதனால் உங்க குழந்தை வாட்டர் பவுண்டன் விளையாடிருக்க அதுக்கு சந்தோஷப்படுங்க :)

  ReplyDelete
  Replies
  1. ஐய்ய்ய்ய்ய் ஆமா காதைப்பிடிச்ச்சு தூங்குறது அழகு .ஹ ஹா ஹா அழகான அனுபவம்.ரெம்ப ரசிச்சேன் .ம்ம்ம் அடோரா நகமும் அப்பிடித்தான் கத்தி மாதிரி கிழிக்கும்.கட் பண்ணினாலும் 4 நாள்ள மறுபடியும்.

   Delete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...