Sunday, 12 March 2017

cabbage rolls


போனவாரம் டாக்டர் அப்பொயிண்ட்மண்ட் க்கு போய் வெயிட் பண்ணும்போது , அடடே டயட் ல இருக்கோமே வெளிய சாப்பிடாமல் வீட்டுக்கே போய் 15 நிமிஷத்தில என்ன சமைக்கலாம் ????
அப்பிடி நினைச்சுக்கொண்டே வழக்கம்போல மகஸீன்ஸ் ஐ எடுத்து புரட்டத்தொடங்கினால் இந்த ரெஸிப்பி கண்ணுல பட்டதும் சில வருஷங்களுக்கு முன்னால 
ஒரு க்றிஸ்மஸ் க்கு செய்து எல்லாருமே நல்லாயிருக்கிறதா சொன்னதும் ஞாபகம் வர வீட்டுக்கு வந்து ப்ரீஸர் ல இருக்கிற மீற் ஐ எடுத்தால் டைம் காணாது என்றதால வரும்போதே மீற் ஐ வாங்கி வந்து 15 நிமிசத்தில இது ரெடி.


நீங்களும் செய்து சாப்பிட இதோ ரெஸிப்பி

cabbage rolls
தேவையானவை


காபேஜ் 6 இதழ்கள்
விரும்பிய மீற் அரைக்கிலோ {ground beef}
வெங்காயம் 2
தனி மிளகாய்த்தூள் 2 டேபிள் ஸ்பூன் { விரும்பும் காரத்திற்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ சேர்த்துக்கொள்ளவும்}
சீரகம் 1 டீஸ்பூன்
Rosemary சிறிது 
இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன்
உள்ளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
cheddar cheese துருவல் 2 டேபிள் ஸ்பூன்
பட்டர் அரை டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
டுத் பிக் சில



செய்முறை



1. வெங்காயம் ,மிளகாய் ,ரோஸ்மெரி என்பற்றை சிறிதாக வெட்டவும்

2. மீற் க்குள் வெங்காயம் ,மிளகாய் ,சீரகம் ,ரோஸ்மெரி,இஞ்சி உள்ளி பேஸ்ட் ,தனிமிளகாய்த்தூள் ,சீஸ் , உப்பு எல்லாவற்றையும் நன்கு மிக்ஸ் பண்ணவும்

3.அடுப்பில் பாத்திரத்தை சூடுபண்ணி எண்ணெய் தண்ணி எதுவும் சேர்க்காமல் மிதமான தீயில் மீற் கலவையை வேக வைத்து எடுக்கவும்

4.காபேஜ் ஐ இதழ்களாக எடுத்து இலையின் நடு தண்டை நீக்கிவிட்டு ஆவியில் வேக வைத்து எடுக்கவும்

5.ஸ்டீம் செய்த காபேஜ் இலையை எடுத்து ரெடியாக வைத்திருக்கும் மீற் ஐ அதற்குள் வைத்து சுருட்டி டுத் பிக் ஆல் குத்தவும்

6 .மறுபடி அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமான தீயில் பட்டரை உருக்கி அதில் காபேஜ் ரோல்ஸ் ஐ ஒரு 15 செக்கன் வைத்து எடுக்கவும்


ம்ம்ம்ம் ஜம்மி






6 comments:

  1. It's a perfect gluten free dish. .will make for daughter. And I am going to try this with onion sambal instead of meat. .even carrot poriayal would be great

    ReplyDelete
    Replies
    1. ஒஹ் வெஜ் ரோல் .ஜூப்பர் ஐடியா

      Delete
  2. ஆஹா சூப்பரா இருக்கு, ஆனா அவசரத்துக்கு நாம் மட்டும் சாப்பிடுவதாயின் இதுக்குள் இக் கபேஜ் ஐ குட்டியாப்போட்டு மீற் உடன் பிரட்டிப்போட்டு சோஸ் விட்டும் சாப்பிடலாமே என ஐடியா வருது எனக்கூ:). என்னாதூஊஊஊஊஊ டயட்ல இருக்கிறீங்களோ... இது நாட்டுக்கு நல்லதில்லயே:)..

    ReplyDelete
    Replies
    1. போர்த்திகுனூம் படுத்துக்கலாம் படுத்திக்கினூஊஊஊம் போத்துக்கலாம்.யெஸ்ஸ்ஸ்ஸ் லோ கார்ப் டயட் .பிள்ளைகளுக்கு செய்யிற சாப்பாட்டை உப்பு பாக்க கூட வாயில வைக்காமல் ஓவரா மெலிஞ்சு ஹஸ் திட்டு.இப்போ கிலோ கூட வேண்டி இருக்கு ஒரு நாளுக்கு ஒரு உருளை சாப்பிடுரேன்.165 செண்டிமீட்டர் யுரத்துக்கு 50 கிலோ பாக்க நோயாளி மாதிரி இருக்காம்

      Delete
  3. நல்லா இருக்கு...

    veg ல எப்படி பண்றதுன்னு யோசிக்கும்போதே ...அஞ்சு சொல்லிட்டாங்க...

    நானும் செஞ்சு பார்க்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிஸ். ஆமா எனக்கும் அஞ்சு சொன்ன ஐடியா பிடிச்சிருக்கு.நானும் விரத நாட்களில என்ன சாப்பிடுறதுன்னு ஜோசிச்சு டயர்ட் ஆகி டே புல்லா சாப்பிடாமல் விட்ருவன்

      Delete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...