Wednesday 8 March 2017

மண்னைத்தாண்டி வருவாயா??????


குளிர் நாடுகளில் வசிக்கும்  குட்டி விவசாயிகளுக்கு......


இதோ விண்டர் சீஸன் முடிவையும் ஸ்பிரிங் ஆரம்பத்தையும் அண்மித்துக்கொண்டு இருக்கிறோம்.
இது உங்களுக்கு பயிர்களை வீட்டுக்குள் முளையிட வைக்கும் தகுந்த காலம் என்பதை நினைவூட்டுகிறேன்.


மறந்தாலும் செடிகளை வாங்கி வைக்கலாம்தான் ஆனாலும் .விதைகளில் இருந்து  கொஞ்ச மண்ணை தன் மண்டைமேல் சுமந்து கொண்டு மண்ணில் இருந்து நம்மை எட்டிப்பார்க்கும் பச்சை நிற
பேபி செடியை ரசிப்பது ஒரு கலை.
குனிந்து ,நிமிர்ந்து ,சரிந்து,வளைந்து ஒரு 2 வாரம் வரைக்கும் அந்த செடிகள் கொடுக்கும் அழகே அழகு.
இவை நான் போன வாரம் விதைத்தவை.


இந்த தடவை நான் பட்டர் பீன்ஸ்,வைன் தக்காளி,குண்டு மிளகாய் , இவளவும்தான் முளைக்க வைத்திருக்கிறேன். என்னிடம் அதிக இடம் இல்லை.மேலதிகமாக வழக்கம்போல் ஸ்ராபெரி மட்டும் வாங்கி நடுவேன்.


குண்டு மிளகாய் சில வருசத்துக்கு முன் விதைகள் வாங்கினேன்.
அதன்பின் என் செடிகளில் இருந்தே விதைகள் சேமித்து செடி வளர்க்கிறேன்.


இது என் சார்ந்தவர்களுக்கான ஒரு நினைவூட்டல் .லெட்ஸ் ஸ்டார்ட் தி மியூஸிக் மக்களே

4 comments:

  1. //மண்ணில் இருந்து நம்மை எட்டிப்பார்க்கும் பச்சை நிற
    பேபி செடியை ரசிப்பது ஒரு கலை.//
    அதை அப்படியே வழிமொழிகிறேன் :) அது எவ்ளோ ஹாப்பி தெரியுமா


    போன வருஷம் ஜெசி சிறகவரை செடிங்களை மணத்தக்காளி செடிங்களா மாற்றிவிட்டுச்சே :) 

    எல்லா நாற்றுங்களையும் தோண்டி வச்சிருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ஓ ஜெஸி தோட்டமும் செய்ய ட்ரை பண்ணியிருக்கா.குழப்படி

      Delete
  2. ஆஹா சுரேக்கா ஆரம்பிச்சாச்சா.... இங்கு இன்னமும் குளிர் குறையவில்லை, இம்முறை ரெடிமேட்டாகவே வாங்கி நட நினைக்கிறேன், ஏனெனில் என் பொம்பிளைப் பிள்ளை மண்ணைக் கண்டாலே கிண்டி விட்டிடுறா கர்ர்ர்:)... சூப்பரா முளைக்குது உங்களுக்கு... ஆ டண்டணக்கா...:)

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு இண்டைக்கும் ஸ்னோவும் குளிரும் மீ இப்போதைக்கு வீட்டுக்குள்ள வச்சிருக்கன்.அவாவும் தோட்டம் செய்ய வேணும்தானே .கிண்டி விட்டால் நல்லா வளரும் எண்டு நெட் ல பாத்திருப்பா போல

      Delete

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...