நம் சின்ன சின்ன நாளாந்த வேலைகளை அழகாக்குவதும் சுலபமாக்குவதுமான பொருட்களை தேடித்தேடி வாங்குவதில் எனக்கு ஆர்வம் என்றும் அவை எல்லாமே பயனளிப்பதில்லை என்பதும் அவ்வாறு பயனளிக்கும் பொருட்கள் சில பிடித்துப்போனால்
நான் மற்றவர்களுடன் பகிர்ந்து செல்வதும் என் சார்ந்தவர்களுக்கு தெரிந்ததே.அந்த வகையில் இன்றைய பகிர்வு pineapple corer.
நான் மற்றவர்களுடன் பகிர்ந்து செல்வதும் என் சார்ந்தவர்களுக்கு தெரிந்ததே.அந்த வகையில் இன்றைய பகிர்வு pineapple corer.
பைனாப்பிள் சாப்பிட விருப்பம் வந்தாலும் யாராச்சும் கிளீனா வெட்டி தந்தால் நல்லாயிருக்கும் என்றிருக்கும்.அத்தோடு நான் வழக்கமாக கத்தியால் வெட்ட தொடங்கினால் எல்லா பக்கமும் வெட்டிக்கழித்து சாப்பிட கொஞ்சூட்டுதான்
வரும்.கை வேற பிசு பிசு ஆகீடும்.
வரும்.கை வேற பிசு பிசு ஆகீடும்.
ஆனால் இந்த pineapple corer ஐ உபயோகிக்க பைனாப்பிளின் மேல் பக்கத்தை வெட்டி எடுத்து விட்டு corer ஐ நடுவில் வைத்து கொஞ்சம் அழுத்திக்கொண்டு சுழற்றினால் அழகாக வட்டமாக வெட்டி எடுக்கலாம்.
எடுத்தபின் அன்னாசிக்குள் தண்ணீர் விட்டு சுகர் சிறுது சேர்த்து கரண்டியால் உள்ளே சுற்றி இருக்கும் அன்னாசி தசைகளை கொஞ்சமாக சுரண்டி தண்ணீருடன் கலந்து fresh அன்னாசி யூஸ் எடுத்துக்கொள்ளலாம்.
எல்லாவற்றிற்கும் பின் வெளிப்புற அன்னாசியை உடனே குப்பையில் தூக்கி போடாமல் 2 நாள் கிச்சன் ல் வைத்திருந்தால் கிச்சன் சமையல் மணங்களை விடுத்து கம கம அன்னாசி வாசனையுடன் இருக்கும்.
No comments:
Post a Comment