Saturday, 4 March 2017

ஈஸி ஊறுகாய்


தேவையானவை
லெமன் 2 கிலோ
உப்பு 5 டேபிள் ஸ்பூன்
மஞ்சல் 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 100கிராம்
நச்சீரகம் 1 டேபிள் ஸ்பூன்


ஆயத்தம்
லெமன்ஸ் கழுவி வடிய வைக்கவும்
போத்தல் ஒன்று கழுவி ஈரமில்லாமல் துடைத்து வைக்கவும்


செய்முறை
1.ஒருகிலோ லெமன்ஸ் ஐ எடுத்து 4 துண்டுகளாக வெட்டி போத்தலுக்குள் போடவும்
2.மீதி ஒரு கிலோ லெமன்ஸ் ஐ பிழிந்து சாற்றை எடுத்து வெட்டிய லெமன்ஸ் அதற்குள் மூழ்குமாறு சேர்க்கவும்.


3. இதற்குள் உப்பு மஞ்சல் இரண்டையும் சேர்க்கவும்
4. வெயில் அல்லது லைட் வெளிச்சம் படும் இடத்தில் வைத்து தினமும் குலுக்கி விடவும்.
5. 1 வாரத்தின் பின் கலவை நிறம் மாறி தண்ணீர் வற்றி வந்ததும் காய்ந்த மிளகாய் ,நச்சீரகம் இரண்டையும் மெல்லிய தீயில் வறுத்து
பொடித்து சேர்க்கவும்.
சாப்பிட எடுக்கும்போது ஈரமில்லாத கரண்டியை உபயோகிக்கவும்.



எப்போ இந்த costco க்கு போனாலும் இதோ இந்த அணில் கூடுகள் இருக்கும் வியூ தான் நம்முடைய பார்க்கிங் ஆக இருக்கும்.
சில நேரம் அதுக்காவே சில ரவுண்ட்ஸ் அடிப்போம். எங்களுக்கு கோப்பி அவர்களுக்கு பாப்கோன் எல்லாம் கொண்டுபோய் நேரம் செலவிடுவோம்.
நான் தனியே அவசரமாக போனால் கூட அங்கேயே பார்க் பண்ணி 1 நிமிடமாவது ரசித்துவிட்டுத்தான் கிளம்புவேன்.

அவ்வளவு பிஸியாகவும் சந்தோஷமாவும் இருப்பார்கள் இந்த அணில் குடும்பங்கள்
குளிர் காலத்திலும் அதிக ஸ்னோ நாட்களிலும் போனால் ஏதோ ஒரு வெறுமை .
கோப்பியை ருசிக்கவும் முடிவதில்லை
அவர்களின் வெறும் கூடுகளை
ரசிக்கவும் முடிவதில்லை

ஆனால் வாழத்தெரிந்தவர்கள்.சேமித்ததை சாப்பிட்டோ இடத்தை மாற்றியோ இந்தக்காலநிலையை கடந்து அடுத்த மாதம் ஓடோடி வந்துவிடுவார்கள் என்ற நின்மதியிலும் எதிர்பார்ப்புடன் நாமும் அவர்களும் 
வாழும் போராட்டத்தில் நாட்களை நகர்த்தியபடி......
















ஆயா சுட்ட வடை

ஒரு ஊரில ஒரு ஆயா ஒரு பெரிய ஆலமரத்து நிழல்ல உக்காந்து 33 வருஷமா வடையா சுட்டுகிட்டு இருந்திச்சாம்.
திடீர்னு அடிச்ச மர்ம புயல்ல ஆலமரம் அடியோட சாய்ஞ்சிரிச்சாம்.
அப்போ ஆலமர நிழல் க்கு பதில் அரக்கர்கள் கூட்டம் ஊசிக்காத்தும் நுழையாமல் மொய்ச்சுகிட்டுதாம்.
அப்போ அங்குட்டு இடையிடையே ஒத்த வடைய ருசிபாத்து திரிஞ்ச நரி ஓண்ணு இனிமேல் வடை பிஸினஸ் நாந்தான் பண்ணுவேன், ஆலமரத்து ஆன்மா சொல்லிகிச்சு நு அடம்புடிச்சுதாம்.
ஆயா க்கு வந்த கோவத்தில வடை சட்டிகளை தூக்கிட்டுபோய் ஏசி ரூம் ல வச்சு பூட்டிகிச்சுதாம்
இதுல கடையும் இல்லாமல் வடையும் இல்லாமல் இடிக்கு மேல இடி விழுந்த வாடிக்கையாளர்களில
ஆயா வடைக்கு உமிழ்நீர் சுரந்தபடி குடையை எடுத்துக்கிட்டு சிலர் ஓட
இப்போதைக்கு கடையை காப்பாற்றியாகவேண்டுமே என்று நரியை தேடி பலர் ஓட...............
கச்சிதமாக கவ்விக்கொண்டாய் போ
இதுல படிப்பினை என்னன்னா சுவர் இருந்தாதான் சித்திரம் வரையலாம். கடை முக்கியம்லே மக்கா
சுரேஜினி பாலகுமாரன்

heart tree


தேவையானவை 
சிறிய மர கிளை 1
சிவப்பு அட்டை 1
பிங்க் அட்டை 1
கம்பிகள்
கத்தரிக்கோல்
பென்சில்








1.தேவையில்லாத ஒரு பழைய அட்டையில் சிறிது ,பெரிதாக இதயம் வரைந்து அதை வெட்டி எடுக்கவும்.
2.இப்போது சிவப்பு ,பிங் அட்டைகளின்மேல் முதலில் வெட்டிய இதயத்தை அளவாக வைத்து வரையவும்
3.படத்தில் காட்டியிருப்பது போல் சிறிய துளையிடவும் {சேஃப்டி பின் போதும்}
4.கம்பியின் இரு முனைகளிலும் முனைக்கு ஒன்றாக இதயத்தை கோர்த்து கம்பியை மடித்து விடவும் .


5.ஆயத்தமாக வைத்திருக்கும் மரக்கிளையில் கம்பியின் நடுப்பகுதியை வைத்து ஒரு சுற்று சுற்றி விடவும்.
குழந்தைகளூடன் சேர்ந்து இவ்வாறான அழகு வேலைகள் செய்யும் போது குழந்தைகள் பொறுமை,மூளை டெவலப்மெண்ட்,
ஆர்வம்,நேர்த்தி,டீம் வேர்க் என்பவற்றை சுலபமாக கற்றுக்கொள்வார்கள்.
இது நான் மகளுடன் சேர்ந்தே செய்தேன்.
மிகவும் சுலபமாக செய்யக்கூடியது.




my valentine's day 2017



இந்த காதலர் தினத்தை எப்போதுமே நாங்கள் ஆண் பெண் காதலுக்கு உரியதாக பார்த்ததில்லை.
திருமணத்திற்கு முன்னரும் தங்கைகளுடன் கிஃப்ட் பரிமாறிக்கொள்வோம்.
பிள்ளைகளுக்கு ஸ்கூல் ல் எல்லா விஷேட தினங்களையும் கொண்டாட பழக்கிக்கொடுக்கிறார்கள்.
மதர்ஸ் டே,ஃபாதர்ஸ் டே மட்டுமன்றி காதலர் தினம் ,ஹலோவீன் ,க்றிஸ்மஸ் என்று எதையும் விட்டு வைப்பதில்லை.
அவர்களின் ஆற்றல்களை விரிவு படுத்தவும் சமூகத்தோடும் குடும்பத்தோடும் பிணைப்பை ஏற்படுத்தவும் இவ்வாறு செய்வார்கள்.
இப்படி இருக்கும்போது நாமும் அது அதற்குரிய சிறப்பை கொடுத்து அவர்களுடன் சேர்ந்து கொண்டாடும்போது மிகவும் மன மகிழ்ச்சியும்
சமூக வழக்கங்களில் நாட்டமும் ,நம்மோடு அதிக நெருக்கமும் பிள்ளைகளிடத்தில் உருவாகும்.
வழக்கம் போல நாங்களும் கிவ்ட் ,பொக்கேவ்,ஹக் எல்லாம் பரிமாறிக்கொண்டோம் ,அதிலும் இங்கு கோணல் மாணலாக இருக்கும் பீட்ஸ் மாலைகள் அப்பா பிள்ளைகளுக்கும் எனக்கும் தன் கையாலேயே செய்து தந்தவை.
கோணலா இருந்தாலும் நம்மோடதாக்கும் .
சின்ன சின்ன சந்தோஷங்களை தின்று விடும் 
பெரும் பிஸி யை வென்றுவிடுவதில் இருக்கிறது
நினைவுகளை மென்று மீட்கும் அழகான சந்தோஷங்கள்.
அனைவருக்கும் அன்பு கனிந்த காதலர் தின வாழ்த்துக்கள்.

















சங்கோஜம்




அழுக்கும் பகையும் 
பிறன் மீது ஆக்ரோஷமும்
நிரம்பி இருக்கையில்
நின் வெளிப்பாடுகள் மொத்தமும் 
 அதை வாந்தி எடுக்கையில்...........
நிற்க.........
இறந்தபின் உடல் நாற்றம் 
உயிராய் இருப்பவரும் ஏற்றுக்கொளாத போது
நின்னுள் அழுகிப்போயிருக்கும் 
கறைகளின் வாந்தியை
கையேந்தி ஏற்போம் என்று
கனவு காண்கின்றாயோ?????
நழுவுதலே முறையென்று உனை 
புறந்தள்ளி புறக்கணித்துன் நினைவை
புதைத்த இடத்தில் பூமரங்கள்
பூக்கவைத்து தானும் மலர்ந்து நிதம்
வாழ்வாங்கு வாழ்வான்
வாழ்வியலின் அழகை அளந்தவன்.
சுரேஜினி பாலகுமாரன்.

வெள்ளை அழகு


கொள்ளை அழகா இல்லை
கொல்லும் அழகா எனை
மெல்ல வருடி காதல் கொள்ளும்
செல்ல அழகா
சொல்லில் இயலாச் சுடு மூச்சில் 
சொக்கி தகிக்கும் கள்ள அழகா
தொக்கிய சுமை 
தொடர் கலைத்து - உயிர் 
தொட்டுப்பேசும் கலை அழகா
உன் சிலிர்ப்பில் சுகித்து புது 
உணர்வு செழிக்கையில் 
என் இடர்களை இவ்விடமே 
 தொலைத்து இங்கனம்
தொடர்கிறேன் ஒவ்வொரு தடவையும்
சுரேஜினி பாலகுமாரன்









youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...