பாட்டி சுட்ட வடையை தூக்கி
பறந்து சென்ற காக்கையார்
காட்டிலுள்ள மரத்தின் மீது
களைத்து வந்து குந்தினார்
வாட்டுகின்ற பசியில் அங்கு
வந்து நின்ற நரியினார்
பாட்டுப்பாட வல்ல மச்சான்
பாடு பாடு என்றாராம்
சால வித்தை என்னவென்று
தானறிந்த காக்கையார்
காலில் அந்த வடையை வைத்து
கா கா என்று பாடினார்
தன்னை காக்கை வென்றதென்று
தலை குனிந்த நரியினார்
என்ன செய்வோம் என்று வெட்கி
எடுத்தார் ஓட்டம் காட்டிலே.
No comments:
Post a Comment