Wednesday, 30 May 2012

குழந்தை பிறப்பதற்கான நாளை கணக்கெடுத்தல்



கடைசியாக மாதவிலக்கான நாளுடன் 7 நாட்களை கூட்ட வேண்டும்.
அதிலிருந்து 3 மாதங்களை கழித்து வருவதே டாக்டர்களால் கணிக்கப்படும் நாள்.
இது 280 நாட்களை உள்ளடக்கும்.
இதுவே குழந்தை பிறக்கும் நாளை கணக்கிடும் மிக சுலபமான வழி.

இதற்கான உதாரணம்

கடைசி மாதவிலக்கு தேதி செப்டம்பர் 18 என்று வத்துக்கொள்ளுங்கள்
தேதி +7 அதாவது 18+7=25
செப்டம்பரில்   இருந்து 3 மாதங்களை கழியுங்கள் அதாவது செப்டம்பர் ,ஆகஸ்ட்,யூலை மாதங்களை கழித்தால் வருவது யூன்.
உங்கள் பிரசவ தேதி அடுத்த வருடம் யூன் 25

ஆகவே தேதி+7
மாதம் - 3
= பிரசவதேதி

கர்ப்ப அறிகுறிகள்




விந்து கருமுட்டைக்குள் ஊடுருவி இரண்டும் இணைந்து 5 நாட்களாக மெது மெதுவாக நகர்ந்து சென்று கர்ப்பப்பையை அடைகிறது அங்கு ஒரு விதை வேர் விடுவதற்கு சில நாட்களை எடுத்துக்கொள்வதுபோல் ஒரு வாரக்கணக்களவில் மிதவை நிலையில் தன்னை தயார் செய்து
அதன் பின் சரியான இடத்தில் சரியான முறையில் பதியமாகி வளரத்தொடங்குகிறது .

இந்த உள்மாற்றங்களால் வெளியே என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றதோ அவையே கர்ப்பத்துக்கான அறிகுறிகளாகும்.

முதலில் மாதவிடாய் தடைப்படும்
உணர்வுகளில் மாற்றம் [குமட்டல்.வெறுப்பு.குறிப்பிட்ட உணவுகளில் ஆசை,வாசனைகளில் வித்தியாசம் உணர்தல்]
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
வெள்ளைபடுதல்
மார்பக உறுத்தல் ,வலி,அளவில் மாற்றம்,பாரமாகுதல்
மலச்சிக்கல் இருப்பதுபோல் உணர்வு
சோம்பல்
அடிவயிற்றில் லேசான வலி

இந்த அறிகுறிகள் கர்ப்பத்துக்கு மட்டுமே உரியன கிடையாது.எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதற்கில்லை.
அதனால் இந்த உணர்வுகள் ஏதாவ்து வெளிப்படும்போது கர்ப்பத்துக்கான பரிசோதனையை எடுத்துக்கொள்வது அவசியம்.

இங்கு கர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்குக்கும் பெண்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருப்பது போன்றே ஒரு பிரமை ஏற்படுவதுண்டு.வீட்டில் பரிசோதனை எடுத்து நெகட்டிவ்
என்றால் கூட அவர்கள் மனம் அதை நம்ப மறுக்கும்.அடுத்து இன்னுமொரு பரிசோதனை செய்யவோ மருத்துவ பரிசோதனை செய்தால் கூட கர்ப்பமாக இருப்பதுபோலவே உணர்ந்து கொள்வார்கள்.

ஆனால் கர்ப்ப பரிசோதனைகள் தவறாக அமைவதற்கான சாத்தியக்கூறுகள் நூற்றுக்கு 0.01 வீதமே.இது அசாதாரண உடல் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு.

Friday, 11 May 2012

Diagnostic Pelvic Laparoscopy Exam

எண்டோமெட்ரியோசிஸ் Endometriosis கருப்பை சுவர் திசு வளர்ச்சி




ஒவ்வொரு மாதமும் ஹார்மோன்களின் செயல்பாடுகளினால் கருமுட்டை வளர்ச்சியடைவது போல்
கருப்பை சுவரிலும் திசுவும் வளர்ச்சி அடைகிறது .மாதவிடாயின் போது கருமுட்டை உதிர்ந்து மாதவிடாயுடன் வெளிப்படுவதுபோல்
இந்த திசுக்களும் உதிர்ந்து மாதவிடாயுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் வெளியேறிவிடும்.இந்த செயல்முறை பெண்களின் உடலுக்கு ஆரோக்கியமான  ஒன்று.

ஆனால் இதற்கு மாறாக கருப்பை உள் வரிச்சவ்வு வளர்ச்சி அடைந்து உதிராமல் போவதும் மேலும் வளர்ச்சி அடைந்துகொண்டு போவதும்
மாதவிடாயிலும் கருத்தரித்தலிலும் குறைபாட்டை உண்டு பண்ணும்.


மாதவிலக்கிலும் ,உறவு கொள்ளும்போதும்  வலியை ஏற்படுத்தும்

.உறவின் போதோ அல்லது சிகிச்சையின்போதோ கருப்பையில் பதியமாகும் கருவை நிராகரித்துவிடும்.

இதனால்தால்தான் கருமுட்டை வளர்ச்சியை போலிக்குள் மொனிட்டரிங்க் மூலம் கணிக்கும் போது கருப்பை சுவரின் தடிப்பையும் வளர்ச்சியையும் ஒவ்வொரு தடவையும் அளந்து  குறித்துக்கொள்வார்கள் .

இதன் வளர்ச்சி  வீதம் அதிகரிக்கும்போது முட்டை வளர்ச்சி மற்றும் முட்டை வெளியிடுதல் என்பவற்றை கட்டுப்படுத்திவிடும்.

ஐ வி எவ் போன்ற கருவேற்றம் செய்யப்படும் சிகிச்சையை ஒரு பெண் செய்யும் போது இந்த எண்டோமெட்ரியோசிஸ் ஐ வெகு அவதானமாக மருந்து மாத்திரைகள் மூலம் சரியான அளவில் வைத்துக்கொண்டுதான்
கருவேற்றம் செய்வார்கள்.இதையும் மீறி உள்வரிச்சவ்வு வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்போது சிகிச்சை தோல்வி அடைகிறது.கர்ப்பம் கலைகிறது.


பலருக்கு இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடியதாக இருக்கும். அதேபோல் பலருக்கு இந்த எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனை சரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அழிக்க வருடங்கள் ஆகலாம்.ஓபரேஷன் மூலம் அகற்றினால் கூட அது ஒரு தடவையில் தீர்ந்து போகிற பிரச்சனை கிடையாது.

மாதாமாதம் அதேபோல் வேகமாக வளர்ச்சி அடைந்து பிரச்சனைக்கு உட்படுத்தும்.

ஆகவே இந்த பிரச்சனை உள்ள பெண்கள் அவசரமில்லாமல் மருத்துவரின் படிப்படியான சிகிச்சைக்கு ஒத்துழைத்து கருத்தரித்தலுக்கு முயல வேண்டும்.

Thursday, 10 May 2012

கருமுட்டை வளர்ச்சியின்மைக்கான காரணங்கள்



ஒரு பெண் தாயாகுவதற்கு மூலக்கூறாக விளங்குவது கருமுட்டை.பெண் குழந்தை தாயின் வயிற்றில் 5 மாதமாக இருக்கும் போதே இந்த செயற்பாடுகள் ஆயத்தமாகிறது  என்பது நாம் அறிந்ததே.

பியூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும்  எவ் எஸ் எச் ( FSH)  எல் எச்Luteinizing Hormone (LH) ஹார்மோன்கள் போதுமான அளவு தூண்டப்பட்டு ஈஸ்டோஜன்  சினைப்பைக்கு கிடைக்கும்போதுதான் முட்டை வளர்ச்சி சரியானதாக அமைந்து .

சரியான காலத்தில் முதிர்ச்சி ஏற்படும்.

மாதவிலக்கு ஒழுங்கற்று போதல் ,மிக குறைந்த அளவிலான மாதவிடாய், உடல் பருமன் போன்றவை முட்டை வெளியாகதற்கான அறிகுறிகளாகும்,
இனி இதற்கான காரணங்களை பார்ப்போம்

சினைப்பைக்கட்டிகள்
தொற்றுக்கிருமிகள்
நீர்க்கட்டிகள்
அதிக உடல்பருமன்
ப்ரோலக்டின் அதிகாக இருத்தல்
ஊட்டச்சத்துக்குறை
எடை குறைவு
மன இறுக்கம்
முந்தைய அறுவைச்சிகிச்சைகளின் பாதிப்பு
நச்சுப்பொருட்களின் தாக்கம் உடலுக்கு சென்றிருத்தல்
கருத்தடை மாத்திரைகள்
வலி நிவாரண மாத்திரைகள்
சினைப்பை செயலிழப்பு

என்பன கருமுட்டையின் வளர்ச்சியியை பாதிப்புக்குள்ளாக்குகிறது. நாள்தோறும் 2 தடவை நடைப்பயிற்சி மேற்கொள்வது.போலிக் ஆசிட் அதிகம் உள்ள பச்சைத்தாவரங்களை உணவில் சேர்த்துக்கொள்வது,
விரதங்களை தவிர்ப்பது,மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பது.போன்றவற்றால் கருமுட்டை வளர்ச்சியை தூண்டலாம் .காரணம்
pituitary ,Hypothyroidism சினைப்பை ஆகியவை தங்களுக்குள் ஹார்மோனை சமப்படுத்தி ஒரேமாதிரியாக கட்டுப்பாட்டுடன் சுரப்பிகளை சீராக இயங்க வைக்கின்றன.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு கருமுட்டை வளர்ச்சியின்மையின் முதல் படி ஆகையால் ஹார்மோன்களை குழப்பமடைய செய்யும்படியான காரணிகளை தவிர்த்து மனக்கட்டுப்பாட்டையும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வதும்
ஹார்மோன்களை சீர்குலைக்காமல் இயங்கவைக்க உதவும்.


இருப்பினும் கருமுட்டை வளர்ச்சியின்மை கண்டுபிடிக்கப்பட்டால் அதை ஊக்குவிக்கும் மருந்து மாத்திரைகள் ஊசிகள் அறுவைச்சிகிச்சைகள் என்பவற்றை மேற்கொள்வது அவசியம்.

வீணே காலத்தை போக்குவது இதற்கு தீர்வாகாது.


Wednesday, 9 May 2012

ivf மருத்துவம் எவ்வாறு செய்யப்படுகிறது



மாதம் ஒரு தடவை பெண்ணின் கருமுட்டை முதிர்ந்து கருக்குழாய் வழியாக பயணம் செய்யும் அதே வேளையில் ஆண் விந்தணுவும் அந்த இடத்துக்கு சென்றால் சதாரணமாகவே கருத்தரிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.இது இயற்கையான நிகழ்வு.

 இதையே செயற்கை முறையில் இரண்டையும் இணைய வைத்து கருவை ஏற்றுவதே ivf . இதில் பெண்ணுக்கும் ஆணுக்கும் உரிய பரிசோதனை செய்து ivf க்கு தகுதியானவர்களா என்று உறுதிப்படுத்தப்படும்.இல்லையெனில் தகுதியானவர்களாக மாற்ற லாப்ரஸ்கொப்பி.டி அண்ட் சி, ஊசிகள் மாத்திரைகள் போன்ற சில சிகிச்சைகள் அழித்து
 அடுத்த கட்டமாக பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வர மாத்திரைகள் கொடுக்கப்படும்.சிலருக்கு ஊசியும் மாத்திரையும். மாத்திரைகளின் பின் குறிப்பிட்ட சில நாட்களில் மாதவிடாய் ஆனதும் போலிக்குள் மொனிட்டரிங் அல்ராசவுண்ட் follicle monitoring ultrasound மூலம் கருமுட்டையை அளப்பதும் எண்ணுவதும் கர்ப்பப்பை சுவரின் தடிப்பை அளப்பதுமாக அந்த மாதம் அடிக்கடி கணிப்பு நடத்தப்படும்.

 அதேவேளை பல கருமுட்டைகள் உருவாகவும் சரியான முறையில் வளர்ச்சி அடையவும் மாத்திரை ஊசி என்பன கொடுக்கப்படும்

. அதன் பின் பெண்ணுக்கு கருமுட்டைகள் தேவையான அளவு முதிர்கிறது என்று ஸ்கானில் தெரிந்ததும் சரியான அளவில் முதிர்ந்து வெளியேற hcg ஊசி ஏற்றப்படும்.

 ஊசி ஏற்றப்பட்டு 32 இலிருந்து 36 மணித்தியாலங்களுக்குள் பெண்ணை மயக்கத்துக்குள்ளாக்கி முதிர்ந்த கருமுட்டைகளை அல்ரா சவுண்ட் ல் பார்த்துக்கொண்டு ஊசிக்குழாயை உட்செலுத்தி ஒவ்வொன்றாக சேகரிக்கப்படும்.

 இதேபோல் ஆண் விந்தணுக்களை சேகரித்து ஒப்படைக்க வேண்டும்.

சில குறைபாடுகளை கருத்தில் கொண்டு மருத்துவ முறையில் குழாய்மூலம் உறிஞ்சி எடுப்பதும் உண்டு.பின்னர் விந்து சுத்தப்படுத்தி தரப்படுத்தப்படும்.

 இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருமுட்டையையும் விந்தணுக்களையும் ஒன்றாக கலந்து வைக்கப்படும்
.இந்த வேளையில் தரமான விந்தணு உடலுக்குள் நிகழ்வதைப்போலவே இங்கும் கருமுட்டையின் கருக்கூட்டை உடைத்துக்கொண்டு உட் சென்றால் ,கருமுட்டையும் விந்தும் சேர்ந்து கருவாகிவிடும்

.முட்டை விந்து என்பவற்றின் தகுதிக்கேற்ப 3 அல்லது 5 அல்லது 10 என்று கருக்கள் உருவாகும்
.சில அவ்வாறு கருவாக சேர்ந்த பின்பு கூட பழுதடைந்து விடும்,3 இலிருந்து 5 நாட்கள் வளர்ச்சியை அவதானித்து அதன்பின் இவற்றில் நல்ல கருக்களை தெரிவு செய்து 2 அல்லது 3 கருக்களை கருப்பைக்குள் செலுத்தப்படும்,மீதி கருக்கள் இருந்தால் பதப்படுத்தி வைத்து மீண்டும் அல்லது அடுத்த குழந்தைக்கு உபயோகிக்கலாம்.

கருவை உட்செலுத்தும் போது மயக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.பெண் விரும்பினால் மயக்க நிலையில் கருவேற்றம்   செய்து கொள்ளும்படி கேட்டால் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்,

 கருவேற்றம் செய்து 15 நாட்களின் பின் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

Monday, 7 May 2012

IVF-Assisted Reproductive Techniques or Test Tube Baby -Principles & Pro...



தாய்மை

விந்து வடிவம்

இயல்பான ஆரோக்கியமான விந்தின் வடிவம் இதுவே

.வித்தியாசமான தோற்றங்களில் வாலும் பெருத்த தோற்றத்துடன் தலையும் மாறுபட்ட உருவங்களையும் கொண்ட விந்துக்கள் குறைபாடுகள் கொண்டவை .
வடிவத்தை நம் கண்களால் கண்டுகொள்ள முடியாது.மைக்ரோஸ்கோப் மூலமே கண்டு கொள்ளலாம்.

வீட்டை மாற்றினால் குழந்தை கிடைக்குமா?


குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வுகாண முதலில்  முன்னோர்கள் பெரியோர்கள் வழங்கும் ஆலோசனை வீட்டை மாற்று.
இருக்கும் வீட்டை விட்டு இன்னொரு வீட்டில் வாழ்ந்துபார் கண்டிப்பாக குழந்தை கிடைக்கும் என்பார்கள்.
நமது முன்னோர்க எதையும் காரணமின்றி சொல்லி வைத்ததில்லை என்ற நிரூபிக்கப்பட்ட பல ஆதாரங்களின் அடிப்படையில் தற்போதைய விஞ்ஞானமும் மருத்துவமும் இதற்கு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

ஒரே மாதிரியான வாழ்க்கை ஒரே மாதிரியான சூழல் ஒரே மாதிரியான நடவடிக்கைகள்  என்பன நம்மை அறியாமலே நமக்குள் ஒரு மன இறுக்கத்தையும் சலிப்பையும் ஏற்படுத்துகிறது என்பது உண்மை.

மன அழுத்தங்களால் தாம்பத்தியம் தடைப்படவும் தாம்பத்தியம் தடைப்படுவதால் மன அழுத்தங்கள் தோன்றவும் கூடும்.
அதாபோல் மூளக்கும் அதாவது சிந்தனைக்கும் ஆண் விறைப்புத்தன்மைக்கும் உள்ள தொடர்பால் சில பிரச்சனைகள் வரலாம்.
மூளையால் குறிப்பாக சிந்தனைகளால் அனுப்பப்படும் ஹார்மோன்களால் பெண்ணின் கருமுட்டை வளர்ச்சி சிதைவடையவும் வாய்ப்புண்டு.
அதனால்தான் ஏற்கனவே வாழும் சூழலை மாற்றி அமைப்பதால் பிரச்சனைகள் சீராகி குழந்தைப்பாக்கியம் ஏற்படும் என்பது விஞ்ஞானமும் மருத்துவமும் கூறும் கருத்து.

ஆனால் வீட்டை மாற்றித்தான் இந்த சூழலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கில்லை.
பிடித்த ரம்மியமான இடங்களுக்கு தம்பதியர்  சென்று சில நாட்கள்  தங்கி வித்தியாசமான அனுபவங்கள் காட்சிகள் என்பவற்றை மனதில் பேச்சுக்களில் நினைவுகளில் பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்த ஒரே சூழ்நிலையால் ஏற்படும் மன இறுக்கத்தை களையலாம்.

அதவிட முக்கியமாக  உடல் ரீதியாக உள்ள பிரச்சனைகளுக்கு பரிசோதனைகளை மேற்கொண்டு குறைகளை நிவர்த்தி செய்வதே குழந்தையின்மைக்கு நல்ல தீர்வாக அமையும்

ஆகவே வீட்டை மாற்றத்தேவையில்லை.
மனதிலுள்ள சுமைகளை கோவங்களை தேவையற்ற கெட்ட எண்ணங்களை பேச்சுக்களை களையவும் நல்ல நினைவுகளை மனங்களில் புதுப்பிக்கவும் சுற்றுலா .நல்ல சிந்ததனைகளை உருவாக்குவது,பிறருக்கு தீங்கும் செலவும் விளைவிக்காத வகையில் எண்ண ஓட்டங்களை சீர்செய்வது என்பன மகப்பேறு அடைவதற்கு மட்டுமல்ல நல்ல வாழ்வுக்கு நிம்மதியான வாழ்வுக்கும் இட்டுச்செல்லும் சிறந்த கருவிகள்

Sunday, 6 May 2012

வயது அடிப்படையிலான ஐ வி எவ் வெற்றி வீதம்

• 32 வீதம் வயது 35க்குள்
• 27 வீதம் வயது 35 இலிருந்து 37க்குள்
• 19 வீதம் வயது 38 இலிருந்து 39க்குள்
• 13 வீதம் வயது 40 இலிருந்து 42க்குள்
• 5 வீதம் வயது 43 இலிருந்து 44க்குள்
• 2வீதம் வயது 45 க்கு மேல்
இது எல்லோருக்கும் பொதுவானது இல்லை.ஆண் பெண் இருபாலருக்கும் உள்ள பிரச்சனைகள் ஒவ்வொன்றும் வெற்றியளிக்கும் வீதத்தை வீழ்ச்சி அடையச்செய்யும்.

உடல் எடையும் கருத்தரிப்பும்


கருத்தரிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும் இன்னுமொரு காரணி உடற்பருமன்.
உடற்பருமன் கட்டுப்பாட்டை மீறும் போது ஹார்மோன்கள் மாற்றமடைகிறது.சினைப்பையால் சுரக்கப்படும்
ஆண் ஹார்மோன்களும் Androgen (ஆன்ரோஜன்). பெண் ஹார்மோன்களும் Estrogen (ஈஸ்ட்ரோஜன் ஏற்றத்தாழ்வு அடைந்துஆன்ரோஜன் ஈஸ்ரோஜனாக மாற்றமடையும்போது முட்டை வெளியாவதில் கடின நிலை ஏற்பட்டு மாதவிடாயிலும் மாற்றங்கள் உருவாக ஆரம்பிக்கும்.

மாதவிடாயில் பிரச்சனை ஏற்படாவிட்டால்கூட உடல் எடை என்பது கொழுப்பு செல்களால் ஈஸ்ரோஜனை அதிகமாக்கி கருத்தரிப்பில் தாமதத்தை ஏற்படுத்தும் காரணியே.

ஆகவே எடை அதிகமானவர்கள் எடையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொழுப்பு செல்களை குறைப்பதன் மூலம் ஈஸ்ரோஜன் அதிகமாவதை தடுத்து கருவுறும் வீதத்தை அதிகரிக்கலாம்.

அவ்வாறு கருவுற்றாலும் கூட அதிக எடையுள்ளவர்கள் கர்ப்பகாலத்தில் பல அசெளகரியங்களை எதிர்கொள்ளவும் நேரிடும்.

ஆகவே ஆரோக்கியமான கர்ப்பத்துக்கும் தாய் சேய் நலனுக்கும் எடைக்கட்டுப்பாடு அவசியம்

.சில மிகவும் குண்டான பெண்கள் எந்த சிக்கலும் இன்றி கருத்தரிப்பதும் எவ்வித சிக்கலும் இன்றி குழந்தை பெற்றெடுப்பதையும் உதாரணமாக எடுத்து எடையை அலட்சியம்பண்ணுவது ஆரோக்கியமான கருத்தரித்தலுக்கு ஏற்புடையதல்ல.

Pelvic ultrasound

கர்ப்பப்பையின் நிலையை அறியவும் கர்ப்பப்பை சுவரின் தடிப்பை அளவிடவும். நீர்க்குமிழிகளை கண்டறியவும் அழற்சிகள், கட்டிகள் என்பவற்றை கண்டுபிடித்து தீர்வுகாண எடுக்கப்படும் பரிசோதனை.

Friday, 4 May 2012

Gamete Intrafallopian Transfer (GIFT)


 இது ஐ வி எவ் போன்ற இன்னுமொரு குழந்தை இன்மைக்கான சிகிச்சை.

வெளியே எடுக்கப்பட்ட கருமுட்டையையும் விந்தையும் இணைத்து உடனேயே லாபரஸ்கொப்பி மூலம் கருப்பைக்குழாயில் பதிய வைப்பதாகும்.

கருப்பைக்கழுத்துச்சுரப்பில் கிருமித்தொற்றுள்ளவர்கள்,விந்தணுக்கள் எண்ணிக்கை மிகக்குறைந்தவர்கள் iui ,ivf முறைகளில் கருத்தரிக்க முடியாதவர்கள் போன்றோருக்கு இந்த சிகிச்சை 25வீதத்துக்கு மேற்பட்ட பலனை அளிக்கிறது.பெண்ணுக்கு கருத்தரித்தலுக்கான குறபாடுகள் இல்லாத பட்சத்தில் அல்லது அகற்றப்பட்ட பட்சத்தில் ஸ்பேம் கடன்பெற்று கருவை உருவாக்குபவர்களுக்கு இந்த மருத்துவமுறை நல்ல பலனைக்கொடுக்கும்.

கருத்தரிப்பதற்கு Basal Body Temperature/பி பி டி

Basal Body Temperature/பி பி டி
உடல் வெப்பநிலை உள் மாற்றங்களுக்கேற்ப கூடிக்குறைந்து கொண்டே இருக்கும் என்பது நாம் அறிந்ததே.

இந்த வெப்ப மாற்றத்தை வைத்து உடலில் ஏற்படும் மாற்றத்தை கணித்து நமக்கு சாதகமாக்கிக் கொள்ளவே கருவுறுதல் சம்மந்தப்பட்ட பிரச்சனைக்கு இந்த கணிப்பை உபயோகப்படுத்த விளைகிறோம்.

அதாவது கரு உருவாகும் சந்தர்ப்பத்தை குறைக்கவும் அதிகரிக்கச்செய்யவும் இதனை ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்படும் ...முறை இருந்து வருகிறது.

உடல் வெப்பநிலையை தினமும் காலையில் படுக்கையை விட்டு எழுந்துகொள்வதற்கு முன்பு தினமும் ஒரே நேரத்தில் அதாவது காலை 6 மணியாக இருந்தால் தினமும் காலை 6 மணிக்கு அளவெடுத்து குறித்துக்கொள்ள வேண்டும்.
அதே நேரம் படுக்கையை விட்டு எழும்போதோ சிறிது தூரம் நடந்து சென்று இந்த பிபிடி யை எடுத்து வந்து சோதிப்பதோ தண்ணீர் குடித்து விட்டோ அல்லது சிறுநீர் கழித்து விட்டு வெப்ப அளவு எடுப்பதென்பதோ கூடாது.
இவ்வாறு செய்து அளவெடுப்பின் இதை செய்வதில் தரப்படும் வெப்பநிலை தரவு சரியானதாக இருக்காது
உடல் செய்கைகளிற்கு ஏற்ப வெப்பநிலை மாறுபடும்.
நாக்கிற்கு அடியில் வத்து வெப்பநிலை எடுத்துக்கொள்ளவேண்டும்.சிலருக்கு பிறப்புறுப்புக்களில் எடுக்கும்படி டாக்டரால் பரிந்துரைக்கப்படும்.ஆனால் எந்த முறையில் எடுக்கிறோமோ அதையே மாதம் முழுவதும் தொடர வேண்டும்.
அளவெடுத்தபின் உங்கள் பி பி டி ல் வெப்ப அளவு பதியப்பட்டிருக்கும் .பின்னர் அதை நீங்கள் குறித்து வத்துக்கொள்ளுங்கள்.

உபயோகிக்கும் முறை விளக்கம்***
1.தூங்கும் இடத்தில் பிபிடி யை மறக்காமல் வைத்திருக்கவும்
2.தினமும் காலையில் ஒரே நேரத்தில் பி பி டி யை நாக்கிற்கு அடியில் வைத்து அளவெடுங்கள்.
3.அளக்கப்பட அளவை அட்டவணையில் குறித்துக்கொள்ளுங்கள்
4. பின்னர் அதை கோடுகளால் இணைத்து வரை படமாக்குங்கள்.
5.இதை தொடர்ந்து 3, அல்லது 6 மாதங்களுக்கு செய்து கருமுட்டை முதிரும் நாளை அறிந்து உறவு கொள்ளுங்கள்.
6.சரியான நாளை அறிந்து கொள்ள ஒவ்வொரு மாதமும் செய்த அட்டவணையை ஒப்பீடு செய்யுங்கள்.

******
உடல் வெப்பநிலை மாதம் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் இன்றி இருந்தால் கருமுட்டை வெளியாகவில்லை.
வெப்பநிலை குறைந்து அதிகரிப்பதற்கு இடைப்பட்ட காலமே குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும்.
வெப்பநிலை அதிகரித்தபின் முயற்சி செய்வதில் பலனில்லை.

Intrauterine insemination (IUI), IUTPI, the new method of insemination v...

ovulation detector kits

Wednesday, 2 May 2012

ovulation detector kits


ovulation detector kits
கருமுட்டை வெளியேறும் நாளை அதாவது ஹார்மோன் சுரப்பதை துல்லியமாக அறிந்து அதிலிருந்து 36 மணித்தியாலங்களுக்குள் உறவை ஏற்படுத்தி கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்க வைக்கலாம்.


இது கிடத்தட்ட நமக்கு 14வது நாளில் கருமுட்டை வெளியேறுகிறது என்று வைத்தோமானால் 10வது நாளில் இருந்து தினமும் அதே நேரத்தில் யூரினில் பரிசோதனை செய்ய வேண்டும்.
கருமுட்டை வெளியாகாத வரை நெகட்டிவ் என்ற ஒரு கோட்ட...ையும் கருமுட்டை வெளியாகிவிட்டது என்பதற்கு பொசிட்டிவ் என்ற இரு கோடுகளையும் குறிக்கும்.


பொசிட்டிவ் என்ற கோடுகள் வந்ததும், 24 மணித்தியாலங்கள் வரை வெளியாகும் கருமுட்டை காத்திருப்பதால் அதற்குள் நீங்கள் உறவு கொள்ளும் போது கருத்தரித்தலுக்கான வாய்ப்பு ஏற்படுகிறது.

நெகட்டிவ் என்ற கோடு மாதம் முழுவது வந்தால் கருமுட்டை வெளியாகவில்லை என்பது அர்த்தம் அதற்கான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
ஒழுங்கற்ற மாதவிடாயாக இருப்பின் முதலில் மாதவிடாயை டாக்டர்கள் உதவியுடன் சீர் செய்ய வேண்டும்.

இது கர்ப்பத்தை உறுதிப்படுத்தும் Predictor Kit போல் அல்லாமல் 5 ற்கு மேற்பட்டவை ஒரு box இல் வைத்து விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு

Saturday, 4 February 2012

ஆரம்ப கட்ட கருச்சிதைவு

கரு உருவாகி 12 வாரத்துக்குள் ஏற்படும் அல்லது ஏற்படுத்தப்படும் கருச்சிதைவு ஆரம்ப கட்ட கருச்சிதைவுக்குள் அடங்கும்.
1.கருப்பையில் சினை முட்டை சரியான முறையில் பதியம் பண்ணாமல் இருக்குமிடத்து நழுவி கருச்சிதைவு ஏற்படும்

... 2.மரபுவழிக்குறைபாடுகள்

3.கருப்பைக்கழுத்து திறந்த நிலையிலும் பலவீனமாகவும் இருத்தல்.

4.இரத்த அழுத்தம். வைரஸ்களாலும் தொற்றுக்கிருமிகளாலும் தாக்கபடுதல். .

5.கரு பதிவாகியதும் தன்னிச்சையாக மாற்றத்துக்கேற்ப செயற்பாடுகளை தொடங்கும் நஞ்சுக்கொடி போன்றன சரியாக செயற்படாமல் போதல்.

இவையெல்லாம் ஆரம்ப கட்ட கருச்சிதைவுகளுக்கு காரணமாகின்றன.

Wednesday, 1 February 2012

Icsi (Intra Cytoplasmic Sperm Injection)

Icsi (Intra Cytoplasmic Sperm Injection)

ஐ வி எவ் முறையிலான கருத்தரித்தலுக்கு ஒரு முட்டையை கருவாக்க ஒரு லட்சம் உயிரணுக்கள் வரை தேவைப்படும் 5 கருக்களை உருவாக்க 5 லட்சம் தொடங்கி அதற்கும் மேற்பட்டஉயிரணு தேவைப்படும்.காரணம் ஐ வி எவ் ல் குறைந்தது 5 கருக்களாவது பதப்படுத்துவதே முறை.40 சதவீதத்துக்கும் அதிகமான அணுக்கள் ஊர்ந்து செல்லும் திறனை இழந்தைவையாக இருக்கும் பட்சத்திலும்.பரம்பரையான அணுக்குறைபாடு அல்லது தொற்றுக்கிருமிகளின் தாக்கம் இருப்பினும் ஐ வி எவ் பெருமளவு பல்ன் தருவதில்லை

.இதற்கேற்ப விந்தணு இல்லாதவர்களுக்கு மறுபடியும் மறுபடியும் ஐ வி எவ் செய்தாலும் தோல்வியில் முடிவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம்.

இவ்வாறானவர்களும் பயன்பெறும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டதே இக்சி மருத்துவம் Icsi (Intra Cytoplasmic Sperm Injection)

ஒரு விந்தணு கிடைத்தாலும் அதை எடுத்து கருமுட்டைக்குள் துளையிட்டு விந்தணுவை செலுத்தி கரு உண்டாக வைப்பதற்கு எடுக்கும் முயற்சியே இந்த புதிய முறையிலான மருத்துவம்.
இது ஒரு பெண்ணுக்குள்ள குறகளை நிவர்த்தி செய்து விட்டு இந்த முறையில் கருவை உருவாக்கு உட் செலுத்தும் போது பெருமளவான வெற்றி வீதத்தை அளித்து குழந்தையில்லா பெரும் பிரச்சனைக்கு தீர்வு காண உதவுகிறது.

Thursday, 26 January 2012

உங்கள் குழப்பங்களை தீர்க்க தமிழ் விளக்கங்கள்

FSH(Follicle-stimulating Hormone)
நேரடியாக இரத்தத்தில் கலந்திருக்கும் ஹார்மோன் கருமுட்டை வளர்ச்சியை தூண்டுகிறது.

HSG Hysterosalpingogram
கருப்பைக்குள் எக்ஸ்ரே சாயத்தை உட்செலுத்தி கருப்பைக்குழாயையும் கருப்பையையும் துல்லியமாக படம்பிடிப்பது.

Progesterone
மாதவிடாய் சுழற்சியில் சினைப்பையால் உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன்.இரத்தத்தில் இந்த ஹார்மோன் அளவை வைத்து ஒரு பெண்ணுக்கு கருமுட்டை வெளிப்பட்டு இருக்கிறதா என்பதை கண்டறியலாம். காரணம் கருமுட்டை வெளியேறிய பின்னரே இந்த ஹார்மோன் உற்பத்தியாகிறது

Ultrasonics
சினைப்பையின் உருவத்தையும் நீர்க்கட்டிகள் ,முட்டை வெளிப்படல் ,கருத்தரித்தல் போன்றவற்றை கண்டறிதல்.

LH - Luteinizing hormone
கருமுட்டையை முதிர்ச்சி அடையச்செய்து முதிர்ந்த கருமுட்டையை விடுபட்டு வெளியேற வைக்கும் ஹார்மோன்

youtube to usb converter

எல்லோருக்குமே தெரிந்த விஷயம்தான் .முக்கியமாக சிறுவர்களுக்கு நன்கே பழக்கப்பட்ட ஒரு விஷயம் இந்த , யூடியூப் இல் இருந்து யு எஸ் பி ட்ரைவ் ல்...