மாதம் ஒரு தடவை பெண்ணின் கருமுட்டை முதிர்ந்து கருக்குழாய் வழியாக பயணம் செய்யும் அதே வேளையில் ஆண் விந்தணுவும் அந்த இடத்துக்கு சென்றால் சதாரணமாகவே கருத்தரிப்பு ஏற்படும் என்பது நாம் அறிந்ததே.இது இயற்கையான நிகழ்வு.
இதையே செயற்கை முறையில் இரண்டையும் இணைய வைத்து கருவை ஏற்றுவதே ivf . இதில் பெண்ணுக்கும் ஆணுக்கும் உரிய பரிசோதனை செய்து ivf க்கு தகுதியானவர்களா என்று உறுதிப்படுத்தப்படும்.இல்லையெனில் தகுதியானவர்களாக மாற்ற லாப்ரஸ்கொப்பி.டி அண்ட் சி, ஊசிகள் மாத்திரைகள் போன்ற சில சிகிச்சைகள் அழித்து
அடுத்த கட்டமாக பெண்ணுக்கு மாதவிடாயை கட்டுக்குள் கொண்டு வர மாத்திரைகள் கொடுக்கப்படும்.சிலருக்கு ஊசியும் மாத்திரையும். மாத்திரைகளின் பின் குறிப்பிட்ட சில நாட்களில் மாதவிடாய் ஆனதும் போலிக்குள் மொனிட்டரிங் அல்ராசவுண்ட் follicle monitoring ultrasound மூலம் கருமுட்டையை அளப்பதும் எண்ணுவதும் கர்ப்பப்பை சுவரின் தடிப்பை அளப்பதுமாக அந்த மாதம் அடிக்கடி கணிப்பு நடத்தப்படும்.
அதேவேளை பல கருமுட்டைகள் உருவாகவும் சரியான முறையில் வளர்ச்சி அடையவும் மாத்திரை ஊசி என்பன கொடுக்கப்படும்
. அதன் பின் பெண்ணுக்கு கருமுட்டைகள் தேவையான அளவு முதிர்கிறது என்று ஸ்கானில் தெரிந்ததும் சரியான அளவில் முதிர்ந்து வெளியேற hcg ஊசி ஏற்றப்படும்.
ஊசி ஏற்றப்பட்டு 32 இலிருந்து 36 மணித்தியாலங்களுக்குள் பெண்ணை மயக்கத்துக்குள்ளாக்கி முதிர்ந்த கருமுட்டைகளை அல்ரா சவுண்ட் ல் பார்த்துக்கொண்டு ஊசிக்குழாயை உட்செலுத்தி ஒவ்வொன்றாக சேகரிக்கப்படும்.
இதேபோல் ஆண் விந்தணுக்களை சேகரித்து ஒப்படைக்க வேண்டும்.
சில குறைபாடுகளை கருத்தில் கொண்டு மருத்துவ முறையில் குழாய்மூலம் உறிஞ்சி எடுப்பதும் உண்டு.பின்னர் விந்து சுத்தப்படுத்தி தரப்படுத்தப்படும்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருமுட்டையையும் விந்தணுக்களையும் ஒன்றாக கலந்து வைக்கப்படும்
.இந்த வேளையில் தரமான விந்தணு உடலுக்குள் நிகழ்வதைப்போலவே இங்கும் கருமுட்டையின் கருக்கூட்டை உடைத்துக்கொண்டு உட் சென்றால் ,கருமுட்டையும் விந்தும் சேர்ந்து கருவாகிவிடும்
.முட்டை விந்து என்பவற்றின் தகுதிக்கேற்ப 3 அல்லது 5 அல்லது 10 என்று கருக்கள் உருவாகும்
.சில அவ்வாறு கருவாக சேர்ந்த பின்பு கூட பழுதடைந்து விடும்,3 இலிருந்து 5 நாட்கள் வளர்ச்சியை அவதானித்து அதன்பின் இவற்றில் நல்ல கருக்களை தெரிவு செய்து 2 அல்லது 3 கருக்களை கருப்பைக்குள் செலுத்தப்படும்,மீதி கருக்கள் இருந்தால் பதப்படுத்தி வைத்து மீண்டும் அல்லது அடுத்த குழந்தைக்கு உபயோகிக்கலாம்.
கருவை உட்செலுத்தும் போது மயக்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.பெண் விரும்பினால் மயக்க நிலையில் கருவேற்றம் செய்து கொள்ளும்படி கேட்டால் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்,
கருவேற்றம் செய்து 15 நாட்களின் பின் பரிசோதனை மூலம் கர்ப்பத்தை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment