விந்து கருமுட்டைக்குள் ஊடுருவி இரண்டும் இணைந்து 5 நாட்களாக மெது மெதுவாக நகர்ந்து சென்று கர்ப்பப்பையை அடைகிறது அங்கு ஒரு விதை வேர் விடுவதற்கு சில நாட்களை எடுத்துக்கொள்வதுபோல் ஒரு வாரக்கணக்களவில் மிதவை நிலையில் தன்னை தயார் செய்து
அதன் பின் சரியான இடத்தில் சரியான முறையில் பதியமாகி வளரத்தொடங்குகிறது .
இந்த உள்மாற்றங்களால் வெளியே என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றதோ அவையே கர்ப்பத்துக்கான அறிகுறிகளாகும்.
முதலில் மாதவிடாய் தடைப்படும்
உணர்வுகளில் மாற்றம் [குமட்டல்.வெறுப்பு.குறிப்பிட்ட உணவுகளில் ஆசை,வாசனைகளில் வித்தியாசம் உணர்தல்]
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
வெள்ளைபடுதல்
மார்பக உறுத்தல் ,வலி,அளவில் மாற்றம்,பாரமாகுதல்
மலச்சிக்கல் இருப்பதுபோல் உணர்வு
சோம்பல்
அடிவயிற்றில் லேசான வலி
இந்த அறிகுறிகள் கர்ப்பத்துக்கு மட்டுமே உரியன கிடையாது.எல்லோருக்கும் ஒரே மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்பதற்கில்லை.
அதனால் இந்த உணர்வுகள் ஏதாவ்து வெளிப்படும்போது கர்ப்பத்துக்கான பரிசோதனையை எடுத்துக்கொள்வது அவசியம்.
இங்கு கர்ப்பத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருக்குக்கும் பெண்களுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருப்பது போன்றே ஒரு பிரமை ஏற்படுவதுண்டு.வீட்டில் பரிசோதனை எடுத்து நெகட்டிவ்
என்றால் கூட அவர்கள் மனம் அதை நம்ப மறுக்கும்.அடுத்து இன்னுமொரு பரிசோதனை செய்யவோ மருத்துவ பரிசோதனை செய்தால் கூட கர்ப்பமாக இருப்பதுபோலவே உணர்ந்து கொள்வார்கள்.
ஆனால் கர்ப்ப பரிசோதனைகள் தவறாக அமைவதற்கான சாத்தியக்கூறுகள் நூற்றுக்கு 0.01 வீதமே.இது அசாதாரண உடல் மாற்றங்களால் ஏற்படுவதுண்டு.
No comments:
Post a Comment