ஒவ்வொரு மாதமும் ஹார்மோன்களின் செயல்பாடுகளினால் கருமுட்டை வளர்ச்சியடைவது போல்
கருப்பை சுவரிலும் திசுவும் வளர்ச்சி அடைகிறது .மாதவிடாயின் போது கருமுட்டை உதிர்ந்து மாதவிடாயுடன் வெளிப்படுவதுபோல்
இந்த திசுக்களும் உதிர்ந்து மாதவிடாயுடன் சேர்ந்து ஒவ்வொரு மாதமும் வெளியேறிவிடும்.இந்த செயல்முறை பெண்களின் உடலுக்கு ஆரோக்கியமான ஒன்று.
ஆனால் இதற்கு மாறாக கருப்பை உள் வரிச்சவ்வு வளர்ச்சி அடைந்து உதிராமல் போவதும் மேலும் வளர்ச்சி அடைந்துகொண்டு போவதும்
மாதவிடாயிலும் கருத்தரித்தலிலும் குறைபாட்டை உண்டு பண்ணும்.
மாதவிலக்கிலும் ,உறவு கொள்ளும்போதும் வலியை ஏற்படுத்தும்
.உறவின் போதோ அல்லது சிகிச்சையின்போதோ கருப்பையில் பதியமாகும் கருவை நிராகரித்துவிடும்.
இதனால்தால்தான் கருமுட்டை வளர்ச்சியை போலிக்குள் மொனிட்டரிங்க் மூலம் கணிக்கும் போது கருப்பை சுவரின் தடிப்பையும் வளர்ச்சியையும் ஒவ்வொரு தடவையும் அளந்து குறித்துக்கொள்வார்கள் .
இதன் வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்போது முட்டை வளர்ச்சி மற்றும் முட்டை வெளியிடுதல் என்பவற்றை கட்டுப்படுத்திவிடும்.
ஐ வி எவ் போன்ற கருவேற்றம் செய்யப்படும் சிகிச்சையை ஒரு பெண் செய்யும் போது இந்த எண்டோமெட்ரியோசிஸ் ஐ வெகு அவதானமாக மருந்து மாத்திரைகள் மூலம் சரியான அளவில் வைத்துக்கொண்டுதான்
கருவேற்றம் செய்வார்கள்.இதையும் மீறி உள்வரிச்சவ்வு வளர்ச்சி வீதம் அதிகரிக்கும்போது சிகிச்சை தோல்வி அடைகிறது.கர்ப்பம் கலைகிறது.
பலருக்கு இது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரக்கூடியதாக இருக்கும். அதேபோல் பலருக்கு இந்த எண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனை சரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அழிக்க வருடங்கள் ஆகலாம்.ஓபரேஷன் மூலம் அகற்றினால் கூட அது ஒரு தடவையில் தீர்ந்து போகிற பிரச்சனை கிடையாது.
மாதாமாதம் அதேபோல் வேகமாக வளர்ச்சி அடைந்து பிரச்சனைக்கு உட்படுத்தும்.
ஆகவே இந்த பிரச்சனை உள்ள பெண்கள் அவசரமில்லாமல் மருத்துவரின் படிப்படியான சிகிச்சைக்கு ஒத்துழைத்து கருத்தரித்தலுக்கு முயல வேண்டும்.
No comments:
Post a Comment